Election bannerElection banner
Published:Updated:

10 லட்சம் பட்ஜெட்... மஹிந்திரா மராஸோவை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக்கூடாது!?

10 லட்சம் பட்ஜெட்... மஹிந்திரா மராஸோவை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக்கூடாது!?
10 லட்சம் பட்ஜெட்... மஹிந்திரா மராஸோவை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக்கூடாது!?

10 லட்சம் பட்ஜெட்... மஹிந்திரா மராஸோவை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக்கூடாது!?

ஹிந்திராவின் புது எம்பிவி விற்பனைக்கு வந்துவிட்டது. 4 ஆண்டுகள் தொடர்ந்து டெஸ்டிங்கில் இருந்த மஹிந்திரா கார் இது. சுறாவின் டிசைனை இன்ஷ்பிரேஷனாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் 7/8 சீட் மராஸோ சுறா படம் போல இருக்குமா இல்லை துப்பாக்கி, கத்தி போல விற்பனையில் மாஸ் காட்டுமா என்பது இனிமேல்தான் தெரியவரும். மராஸோவை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக்கூடாது என்பதைச் சுருக்கமாக பார்ப்போம்.

மராஸோவில் மாஸ் காட்டும் அம்சங்கள்

டிசைன் - மஹிந்திராவின் கார்களிலேயே வித்தியாசமான டிசைனைக் கொண்டது மராஸோ. மஹிந்திரா லோகோவை எடுத்துவிட்டால் அமெரிக்கா, ஐரோப்பிய கார் போலத்தான் இருக்கும். டாடா ஹெக்ஸா போல கட்டுமஸ்தான டிசைன் இல்லை என்றாலும். மராஸோவின் டிசைன் சலிப்புதட்டாத டிசைன் என்பது உறுதி.

ஸ்பேஸ் -   MPV செக்மென்ட்டின் விற்பனையை ஸ்பேஸ்தான் முடிவுசெய்கிறது. மராஸோ கேபின் ஸ்பேஸில் ஸ்கோர் செய்துவிட்டது. 2-ம் வரிசை சீட்டை முழுவதுமாக முன்பக்கம் தள்ளிய பின்னும் சௌகரியமாகக் கால்களை வைப்பதற்கு அதிக இடம் உள்ளது. மூன்றாம் வரிசையில் சீட் பெல்ட், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதிகளும் உள்ளது. எல்லா வரிசையிலும் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. சீட் போவே கதவு கண்ணாடிகளும் பெரிதாகவே உள்ளது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் என்பதால் காரின் பின் பகுதியில் எக்கச்சக்க இடத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.

வசதிகள் மற்றும் பில்டு குவாலிட்டி -  மஹிந்திராவின் பில்டு குவாலிட்டி இன்னும் உயர்ந்துள்ளது. பியானோ பிளாக்-பீஜ் இன்டீரியர்கள் அழகைக் கூட்டுகிறது. கேபின் குவாலிட்டியும் நன்றாக இருக்கிறது. ஆனால், லக்ஸூரி ஃபீல் கொஞ்சம் குறைவுதான். USB சார்ஜர், சன்ஷேட் போன்ற வசதிகள் கொடுத்தாலும் இந்த செக்மென்ட்டில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆப்பிள் கார்பிளே ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள் இல்லை. கூடுதல் காற்றுப் பைகள் கொடுத்திருக்கலாம்.

ஏசி - ரூஃப் ஏசி வென்டுகள் வருவதால் காரில் எல்லா பக்கமும் கூலிங் சரிசமமாக இருக்கிறது. மூன்றாம் வரிசை சீட்டில் இருப்பவர்களுக்குக் கூட சமமான கூலிங் கிடைக்கிறது.

சஸ்பென்ஷன் - மராஸோவின் சஸ்பென்ஷனை மறந்துவிட முடியாது. பெரும்பாலான ப்ரீமியம் காரில் வரும் ஃபோர்ஜ்டு அலுமினியம் சஸ்பென்ஷன் மராஸோவில் உள்ளது. சஸ்பென்ஷன் சாஃப்ட் செட்டப் என்பதால் பின் சீட்டில் சொகுசான பயணம் உறுதி. 

மராஸோவில் இதெல்லாம் மைனஸ்

3-ம் வரிசை சீட்டில் சைலோவை விட இடம் அதிகம் இருந்தாலும் இன்னும் இந்த இடம் குழந்தைகளுக்கானதுதான். பெரியவர்கள் 2 மணி நேரத்துக்கு மேல் சீட்டில் உட்கார முடியாது.

இன்ஜின் -  மஹிந்திராவின் இன்ஜின்களிலேயே வைப்ரேஷன் குறைவான, கடுப்பேற்றக்கூடிய சத்தம் போடாத இன்ஜின். டார்க்கை எல்லா ரெவ் ரேஞ்சிலும் சமமாக வெளிப்படுத்தினாலும் பவரை மந்தமாகவே வெளிப்படுகிறது. இந்த 4 சிலிண்டர் இன்ஜினில் பன்ச் போதவில்லை. பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இரண்டுமே தற்போது இல்லை. டீசல்-மேனுவல் மட்டுமே.

ஸ்டோரேஜ் - காரில் எங்குத் திரும்பினாலும் பாட்டில் ஹோல்டர்கள், கப்பிஹோல், USB சார்ஜர் போன்ற வசதிகளைப் பார்க்கலாம். ஆனால், இதைப் பயன்படுத்துவதற்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். உதாரணத்துக்குப் பின் பக்க கதவுகளில் பாட்டில் ஹோல்டர்கள் வருகிறது. பெரிய பாட்டிலை வைத்து எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கதவைத் திறக்க வேண்டும். டேஷ் போர்டுக்கு மேல் இருக்கும் இடம் மொபைல் ஃபோன்களை வைக்க வசதியாக இருந்தாலும் ஆழமாக இருப்பதால் ஒவ்வொரு முறை மொபைலை வைத்து எடுக்கச் சீட்டில் இருந்து கொஞ்சம் நகர வேண்டியுள்ளது.

எடை - லேடர் சேஸி பயன்படுத்தியுள்ளதால், போட்டியாளர்களை விட காரின் எடை அதிகமாக இருக்கிறது.  இன்ஜின் ஏற்கெனவே மந்தமாக இருப்பதால் 1600 கிலோ எடைகொண்ட மராஸோவை ஃபுல் லோடில் இழுப்பது இன்ஜினுக்கு கஷ்டமாகவே இருக்கும். இதன், பாடிரோலையும் குறைத்திருக்கலாம். சில பெரிய திருப்பங்களில் கார் அன்டர் ஸ்டீர் ஆகிறது. மஹிந்திரா கார்களைப் பிடித்து வாங்குபவர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. ஆனால், ஜப்பானிய கார்களில் இருந்து வருபவர்களுக்கு வித்தியாசம் பெரிதாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு