‘‘ண்ணா... புது மாடலா? பழசுக்கும் புதுசுக்கும் என்ன வித்தியாசம்? எவ்வளவு ரேட் வருது? என்ன சொல்றீங்கண்ணா... எக்ஸ்ட்ராவா லோடு அடிக்கலாமா?’’

- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் புது மாடல் தோஸ்த்தை ஓட்டிச் சென்றபோது, இப்படித்தான் இருந்தன விசாரிப்புகள். பெரிய லக்ஸூரி காரில் மார்க்கெட்டுக்குள் போனால்கூட, இப்படி வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்கள்! சில லோடுமேன்கள்,வேலையைப் பாதியில் விட்டுவிட்டு, சுற்றிநின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். லக்ஸூரி கார்களில் டிரைவ் போனால், டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு விசிட் அடிக்கலாம். சரக்கு வாகனமான தோஸ்த்தை மார்க்கெட்டுக்குள் விடுவதுதானே சரி?!

அசோக் லேலாண்டின் தோஸ்த் LCV, இதுவரை 1.7 லட்சம் வாகனங்கள் விற்பனையாகிவிட்டது. உத்தேசமாக, மாதந்தோறும் 3,000 தோஸ்த். லோடுமேன்கள், வியாபாரிகளுக்கு செம தோஸ்த்தாக இருந்து வந்த தோஸ்த், இப்போது கூடுதல் வசதிகளுடன் அப்டேட் ஆகி வந்திருக்கிறது. இதற்குப் பெயர் தோஸ்த் ப்ளஸ்.

பழசுக்கும் புதுசுக்கும் ஏராளமான வித்தியாசங்களை ஓட்டும்போதே உணர முடிந்தது. டார்க்கில் மாற்றம் இல்லை. அதே 17kgm. ஆனால், சட் சட் என டிராஃபிக்கில் பிக்-அப் கிளப்பியது. இரண்டாவது கியரில் இருந்தே எடுக்க முடிவது வசதியாக இருந்தது. முன்பைவிட வீல்பேஸ் அதிகம்; நீளமும் அதிகம். திருப்பங்களில் கவனமாக இருக்க வேண்டும். ரிவர்ஸ் எடுக்கும்போது லோடு இல்லையென்றால் சாலை தெளிவாகத் தெரிகிறது. லோடு மறைக்கும் பட்சத்தில், ரிவர்ஸ் எடுக்க க்ளீனர் உதவி தேவை. உள்ளே சீட்டுகள் வசதியாக இருந்தன. இருவர் நன்றாக உட்காரலாம். வேண்டுமென்றால், மூன்றாவது ஆளுக்கும் நடுவில் இடம் உண்டு. பரவாயில்லை; டூயல் டோன் டேஷ்போர்டு. லோடு வாகனங்களில் பெரிய ப்ளஸ் - முன் பக்கச் சாலை நன்றாகத் தெரிவது. தோஸ்த் ப்ளஸ்ஸிலும் அப்படியே! ஆனால், சீட்களில் ஹெட்ரெஸ்ட் இல்லை. இது நெடுந்தூரப் பயணங்களில் கழுத்துக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பது சிரமம். உள்ளே ஏ.சி, பவர் ஸ்டீயரிங் இருந்தன. தேவைப்பட்டால் மியூசிக் சிஸ்டம் பொருத்திக் கொள்ளலாம்.

ஹைவேஸிலும் தோஸ்த் ஓட்டுதல் உற்சாகம் தருகிறதா என்று பார்க்க, ஒரு ஹைவே ரைடு கிளம்பினோம். பழசைவிட பவர் கூடியிருப்பதால், ஹைவேஸில் 90 கி.மீ வேகம் வரை பறந்தேன். லோடு வாகனங்களில் ஸ்பீடு கவர்னர் இன்ஸ்டால் செய்வது வழக்கம். அப்படியென்றால், 80-க்கு மேல் போக முடியாது. லோடு ஏதும் ஏற்றாததால், கொஞ்சம் அலைபாய்வதுபோலவே இருந்தது. லோடு அடிக்கும்போது மஹிந்திரா பிக்-அப் ட்ரக் போல் அத்தனை ஸ்டேபிளாக இருக்கிறது என்பதுதான் தோஸ்த்துக்குக் கிடைத்துவந்த ஃபீட்பேக். தோஸ்த் ப்ளஸ்ஸும் சூப்பர். டயர்களும் இப்போது பெரிதாக மாறியிருக்கின்றன. 15 இன்ச்.

தோஸ்த் மாற்றம் கண்டதற்குக் காரணமே - ‘எக்ஸ்ட்ரா லோடு அடிக்க முடியவில்லை; சஸ்பென்ஷன் இன்னும் மெருகேற்ற வேண்டும்’ என்று வாடிக்கையாளர்கள் குறைபட்டதுதான். இதைச் சொல்லித்தான் தோஸ்த் ப்ளஸ்ஸை அறிமுகப்படுத்தினார், அசோக் லேலாண்ட் LCV பிரிவின் தலைவர் நிதின்சேத். ஆம், இப்போது 1.5 லன் (1,475 கிலோ) வரை இதன் பே லோடு ஏற்றலாம். அசோக் லேலாண்ட் என்றாலே, வெயிட் லோடிங்தான். ‘‘நாங்க பழசுல 3 டன் வரை ஏத்திட்டுப் போயிருக்கோம். இந்தத் தொட்டியில் 4 டன் அடிக்கலாம் போலயே!’’ என்று சொன்னார் பழைய தோஸ்த்தின் உரிமையாளர் ஒருவர்!

இதில் பாராட்டப்பட வேண்டிய மாற்றம், இதன் லீஃப் ஸ்ப்ரிங்குகள். பழசில் பின்னால் 3, முன் பக்கம் 2 லீஃப் ஸ்பிரிங்குகள் இருந்தன. இதில் 6:3 என்ற விகிதத்தில் மாற்றியிருக்கிறார்கள். சஸ்பென்ஷன், சூப்பர் சாஃப்ட். இதனால், மேடு பள்ளங்களெல்லாம் தோஸ்த்துக்கு தோஸ்த்தான். ‘‘இந்த ஸ்ப்ரிங்குகளில் இரும்பு மட்டுமில்லை; பாரபோலிக் எனும் உலோகக் கலவையும் சேர்ந்திருப்பதால், எத்தனை லோடு அடித்தாலும் பள்ளத்தில் இறக்கும்போது, ‘டம்’ என்ற சத்தம் வந்து பயமுறுத்தாது. ஃப்ளெக்ஸிபிளாக இருக்கும்’’ என்கிறது அசோக் லேலாண்ட். ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கி, மேட்டில் ஏற்றி செக் செய்து பார்த்தேன். ‘ஜல் ஜல்’ எனச் சுதியோடு இறங்கி ஏறியது ஜாலியாக இருந்தது. ஸ்பீடு பிரேக்கர்களிலும் கவலை இல்லை. ஆனால், வேகமாக ஸ்பீடு பிரேக்கர்களில் ஏற்றும்போது, குலுங்கல்கள் கவனம். இந்த வாகனங்களைப் பொறுத்தவரை மைலேஜும் ரொம்ப முக்கியம். பழைய தோஸ்த், 20 கி.மீ மைலேஜ் கொடுப்பதாகச் சொன்னார்கள். ‘‘சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 6,000 ரூபாய் வாடகை கொடுப்பாங்க. 30 லிட்டர் டீசல் போட்டால் ஒரு ஸ்ட்ரெட்ச் அடிக்கலாம். இது அந்தளவு தருமா?’’ என்றார் இன்னொரு உரிமையாளர் ஒருவர். பவர், சிசி என்று எல்லாமே மாறியிருப்பதால், நிச்சயம் லேசான மாற்றம் இருக்கும். நாம் ஹைவேஸில் ஓட்டிப் பார்த்தவரை லிட்டருக்கு, கிட்டத்தட்ட 17 தர வாய்ப்பு இருந்தது.

கார்போல் ஓட்டுவதற்கு அம்சமாக இருக்கிறது தோஸ்த் ப்ளஸ். பர்ஃபாமென்ஸில் மஹிந்திரா, டாடாவுடன் போட்டிபோட முடியவில்லையென்றாலும், கொடுக்கிற காசுக்கு மனநிறைவைத் தருகிறது தோஸ்த் ப்ளஸ். இதன் விலை LS மாடல் 5.82 லட்சம், டாப் மாடலான LX 6.11 லட்சம். (ஆன்ரோடு, சென்னை) மற்றபடி நம்பகத்தன்மை மற்றும் கடினமான வேலைத்திறனில் அசோக் லேலாண்டைச் சந்தேகப்பட முடியாது.