``முதலில் ரசிகனாக வேண்டும்; அப்புறம்தான் கலைஞனாக முடியும்!’’ என்கிறார் தீரன். ‘நோ ஷேவ் நவம்பரை’ வருடம் முழுவதும் கொண்டாடுவதுபோல் பெரிய தாடியுடன் இருக்கும் தீரன்தான் - கமல், ரஜினி, விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா என்று எக்கச்சக்க செலிபிரிட்டிகளைத் தனது கேமராவுக்குள் அழகாக அடக்குபவர். அடக்கமாகவே பேசுகிறார். ‘‘யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம். ஆனால், அதற்கு உங்களிடம் காஸ்ட்லியான கேமரா இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நல்ல புகைப்படங்கள் எடுக்க ரசனை மிக்க கண்கள்தான் முக்கியம்’’ எனும் தீரனிடம் இருப்பது, சாதாரண Canon 600D எனும் 30,000 ரூபாய் கேமராதான் என்றால் நம்புவீர்களா? இன்று பலரது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இருக்கும் பல வி.ஐ.பி-க்களின் போட்டோ, தீரன் எடுத்தவை.

தமிழ் சினிமா செலிபிரிட்டிகளின் ஆஸ்தான போட்டோகிராபர்களில் முக்கியமானவர் தீரன். இப்போது ஆட்டோமொபைல் பக்கமும் தன் கேமராவைத் திருப்பியிருக்கிறார். ‘தீரன் போட்டோகிராபி’ என்ற லோகோவில், சினிமாக் கலைஞர்களைப்போலவே தீரனின் கேமராவுக்குள் பைக்குகளும் இப்போது ஜொலிக்க ஆரம்பித்துவிட்டன. சாம்பிளுக்கு சில! (இவை எல்லாமே சாதாரண கேமராவில், சாதாரண லொக்கேஷனில், ஸ்டுடியோ லைட்டிங் போன்ற சிறப்பம்சங்கள் இல்லாமல் எடுக்கப்பட்டது என்பதுதான் ஸ்பெஷல்.)

எனது நண்பர் சுரேஷ் ரீ-மாடல் செய்து கொடுத்த புல்லட் இது. இந்த இடம் சென்னை அயனாவரம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். எப்போதுமே ஆப்ஜெக்ட்டின் கண்கள், கேமராவைப் பார்ப்பது ஒரு ஸ்டைல்; தவிர்ப்பது அதைவிட ஸ்டைலாக இருக்கும். எல்லாவற்றையும் விட, புல்லட்டின் இந்த மேட் ஃபினிஷிங், எந்த இடத்திலும் ரிஃப்ளெக்ஷன் ஆகாமல் உதவியது.

புல்லட் என்றால், அதன் கம்பீரம்தான் ஸ்பெஷல். அதன் கம்பீரத்தை ஒரு பெண்ணால் கட்டுப்படுத்தவும் முடியும். கூட்டவும் முடியும். அதனால்தான் ஒரு பெண்ணை வைத்து புல்லட்டில் இந்த போட்டோ ஷூட். தாம்பரம் செல்லும் பைபாஸில், இந்த மாடலை வைத்து கான்ட்ராஸ்ட் உடையில் எடுத்தேன். ‘பொண்ணும் அழகு; புல்லட்டும் அழகு’ என்று கமென்ட் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு தேங்க்ஸ்!

இது ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுத்தது. ‘மாயா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக வரும் லஷ்மிப்ரியா எனும் இந்த நடிகைதான், இந்த அவென்ஜர் பைக்குக்கு ஏற்ற சரியான உயரத்தில் எடுப்பாக இருந்தார். இந்தப் பெண்ணின் கனிவான பார்வையும், பைக்கின் கணிசமான எடையும்தான் இந்த போட்டோவை எடுப்பாகக் காட்டியது.

முதல் பக்கத்தில் உள்ள அதே மாடல்தான். ‘என்னை வேறு மாதிரிக் காட்ட முடியுமா?’ என்று கோரிக்கை வைத்தார். சன் கிளாஸ், உடை போன்றவை மட்டும்தான் வேறு. மற்றபடி எல்லாமே அதே! எப்போதுமே வாகனத்துக்கும் உடைக்கும் எதிர்ப்பதமாக கான்ட்ராஸ்ட்டோடு இருந்தால், நீங்கள்கூட இது மாதிரி செல்ஃபி எடுத்து போஸ்ட் செய்துகொள்ளலாம்.

என் நண்பரின் பெங்களூரு வீட்டின் பின்புறத்தில் இந்தப் படம் எடுத்தேன். இந்த யமஹா RD350 பைக் அவருடையதுதான். பைக்கின் புரொஃபைலும் தெரிய வேண்டும்; மாடலின் புரொஃபைலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எடுத்தது. பிளாக் அண்டு வொயிட்டும் கலர்தானே?

எதிரெதிரான கான்ட்ராஸ்ட் கலர் ஒரு ஸ்டைல் என்றால், இதுவும் ஒரு ஸ்டைல். அதாவது, மேட்ச்சிங் கலர். இந்த மாடலின் உடையும் வெஸ்பாவின் உடையும் கிட்டத்தட்ட ஒரே கலர். ஆனால், எங்கேயும் மிஸ் மேட்ச் ஆகிவிடாதபடி எடுப்பதிலும் ஒரு த்ரில் இருக்கிறது.