வெயில் காலத்தில், தண்ணீருக்குத் தட்டுப்பாடு என்றால், மழைக்காலத்தில் தண்ணீருக்குக் கட்டுப்பாடே இல்லை. மழை நேரங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு, அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் ‘தண்ணி பட்ட’ பாடாகி விடுகிறது. அதுவும் டூ வீலர்களில் செல்பவர்களுக்கு இது மிகப் பெரிய டாஸ்க். நடுவே குண்டு குழிகள், சைலன்ஸருக்குள் தண்ணீர் புகுந்து பைக் ஆஃப் ஆவது என்று இந்த டாஸ்க்கில் சிக்கல் அதிகம். மழை நேரங்களில் பைக் விஷயத்தில் அசால்ட்டாக இல்லாமல் செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை.

1. சைடு ஸ்டாண்ட் போடாதீங்க!

பலருக்கு எப்போதுமே சென்டர் ஸ்டாண்ட் போடும் பழக்கம் இருக்காது. ‘சென்டர் ஸ்டாண்ட் இருக்குங்கிறதே மறந்து போச்சு’ என்று சிரித்துக்கொண்டே சொல்பவர்கள், சிந்திக்க வேண்டிய நேரம் இது. சைடு ஸ்டாண்ட் போடும்போது, வலது பக்க ஹேண்டில்பார் வழியாக மழை நீர் கீழிறங்கி, கார்புரேட்டர் மழைநீர் சேகரிப்புத் தொட்டியாகிவிடும். தண்ணீரில் எப்படி பாஸ் பைக் ஸ்டார்ட் ஆகும்? எப்போதுமே சென்டர் ஸ்டாண்ட்தான் நல்லது. இது பேட்டரிக்கும் ஃப்யூல் டேங்க் ஃப்ளோட்டுக்கும் ஆயுளைக் கூட்டும்.

2. நீரில் மூழ்கிய இன்ஜின்!

நிறுத்தி வைத்திருந்த பைக், நீரால் சூழ்ந்துவிட்டால்... ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். சைலன்ஸர் வரை மூழ்கியிருந்தால், பைக்கை முன்பக்கமாக உயர்த்தி, சைலன்ஸரில் இருக்கும் நீரை வடியவிடுங்கள். பிறகு ஸ்டார்ட் செய்யுங்கள். கியர்பாக்ஸ், இன்ஜின் வரை மூழ்கியிருந்தால், ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று, இன்ஜின் ஆயிலை முழுவதும் மாற்றிய பிறகுதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

3. திடீரென ஆஃப் ஆகிவிட்டதா?

சென்னை சாலைகளை டாப் ஆங்கிளில் போட்டோ எடுத்தால், நிலவில் உள்ள மேடு பள்ளங்கள்போல் தெரியும். இதில் நீங்கள் பயணிக்கும்போது, உங்களை அறியாமலே ஒரு பெரும்பள்ளத்தில் பைக்கை இறக்கி பேலன்ஸை இழந்து பைக் சாயலாம். அந்த நேரத்தில் பைக் உடனே ஸ்டார்ட் ஆகாது. மிதி மிதி என மிதித்து கிக் ஸ்டார்ட் செய்யாமல், செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்தி எடுக்காமல் சில நிமிடங்கள் ரிலாக்ஸ் பண்ணுங்கள். வேக்யூம் லாக் ஆகியிருப்பதால், பைக் உடனே ஸ்டார்ட் ஆகாது. ஒரு நிமிடம் கழித்து முயற்சித்தால், பைக் ஸ்டார்ட் ஆகும். அடுத்து பள்ளத்தில் இறக்காமல் கிளம்புங்க!

4.சைலன்ஸர் மூழ்கும் அளவு வெள்ளத்தில் போகலாமா?

சிலர் சைலன்ஸரில், பிளாஸ்டிக் கவரைச் சுற்றிவிட்டு, வெள்ள நீரில் செல்வார்கள். பைக்கை ஸ்டார்ட் செய்யாமல், உருட்டியபடி செல்லலாம் என்பது ஆப்ஷன். அதையும் தாண்டி பெருவெள்ளத்தில் செல்ல வேண்டிய பட்சத்தில், சைலன்ஸர் மூழ்காது என்று உறுதி செய்த பின்பு, உங்கள் பைக்கின் கியரிங் செட்-அப்புக்கு ஏற்ப முதலாவது அல்லது இரண்டாவது கியரிலேயே ஆக்ஸிலரேட்டரை படிப்படியாகத் திருகிக்கொண்டு செல்லலாம். த்ராட்டில் விஷயத்தில் ஜென்டில்மேனாக நடக்க வேண்டும்.

5. ஸ்பார்க் ப்ளக் கைவசம் வைத்திருங்கள்!

ஸ்டார்ட்டிங் ட்ரபிளுக்கு உற்ற நண்பன், ஸ்பார்க் பிளக்தான். மழை நேரங்களில் பைக் ஓடும்போது, குளிரும் வெப்பமும் சேர்ந்து ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். சில பிளக்குகளில் பாயின்ட்கள் தேய்ந்திருக்கும் பட்சத்தில் ஸ்டார்ட் ஆகாது. இந்த நேரத்தில் புதியதை மாட்டிவிட்டுப் பறக்கலாம். எனவே, ஸ்பார்க் பிளக் கைவசம் இருந்தால் நல்லது.

6. லோ பேட்டரி அலெர்ட்டில் பைக் ஓட்ட வேண்டாமே!

பேட்டரி கடைசிக் கட்டத்தில் இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் வலுக்கட்டாயமாக செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவார்கள்; ஹார்ன் அடிப்பார்கள்; ஹைபீம் ஹெட்லைட் அடிப்பார்கள். ‘பைக்தான் ஓடுதே; ஓடுற வரைக்கும் ஓட்டுவோம்’ என்று ஓட்டுவார்கள். இது ஒரு கட்டத்தில் உங்களை நடுரோட்டில் நிறுத்திவிடும். பேட்டரி சார்ஜில் இருந்தால் மட்டுமே இப்போதுள்ள பைக்குகள் ஸ்டார்ட் ஆகும் என்பதை நினைவில் கொள்க. எனவே தம்பி, தினமும் பேட்டரியைக் கவனி!

7. ஹெல்மெட் வைஸரை ஏற்றிவிடுங்கள்!

ரெயின் கோட், ஹெல்மெட் எல்லாம் போட்டு உடம்பை ஃபுல் கவர் செய்வது எல்லாம் ஓகே. மழையில் பைக்கில் செல்லும்போது, உங்கள் ஹெல்மெட்டின் வைஸர், பார்வைக் குறைபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும். விண்ட்ஷீல்டில் வைப்பர் பயன்படுத்தாமல், உங்களால் மழையில் கார் ஓட்ட முடியுமா? அதே கதைதான் ஹெல்மெட்டுக்கும். ஹெல்மெட் வைஸரின் மேல் மழைத்துளிகள் விழுந்து, திட்டுத் திட்டாகத் தெரியும்போது, சாலை அரைகுறையாகத்தான் தெரியும். இரவு நேரங்களில் இது ரொம்பவும் டேன்ஜர். எனவே, வைஸரை ஏற்றிவிடுங்கள். மழை நீரை முகத்தில் வாங்கி, குறைவான வேகத்தில் போனால் தப்பில்லை.

8. செயின் ஸ்ப்ரே இருக்கிறதா?

மழை முடிந்திருக்கும். ஆனால், பைக்கின் பின் பக்கத்திலிருந்து ‘கரகர’வென ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பைக் ஓட்டும்போது இது எரிச்சல்தானே... அது, நிச்சயம் செயின் ஸ்ப்ராக்கெட்டில் இருந்து வரலாம். (இது செயின் கார்டு இல்லாத பைக்குகளுக்குத்தான் பொருந்தும்.) மழை நீரில் பயன்படுத்திவிட்டு, ஈரம் காய்ந்ததும் தூசி படிந்து அது தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். அதனால், செயின் ஸ்ப்ரே அடித்துவிட்டு, சத்தமில்லாப் பயணத்தைத் தொடரலாம்!

9. டயர்கள் ரொம்ப முக்கியம்!

சாதாரண நேரங்களிலேயே சில பைக்குகளில் கிரிப் கிடைக்காது. காரணம், தேய்ந்துபோன டயர்கள்தான். மழைக்காலம் வருவதற்கு முன்பே உங்கள் டயர்கள் எந்த அளவு தேய்ந்திருக்கிறது என்பதைச் சோதனையிடுங்கள். காற்றும் சரியான அளவில் இருப்பது அவசியம். டயரில் பட்டன்கள் தேய்ந்திருந்தால், பள்ளங்களில் ஸ்லிப் ஆவது நிச்சயம். புதிய டயர் மாற்றி மழையில் ஓட்டிப் பாருங்கள்; அத்தனை தன்னம்பிக்கை கிடைக்கும்.

10. யோசிக்கவே வேண்டாம்.

மழை வெள்ளம் முடிந்ததும் பைக்கை ஒரு தடவை சர்வீஸுக்கு விட்டுப் பயணத்தை நிம்மதியாகத் தொடருங்கள்.