மனிதனுக்குக் கால்கள் எப்படியோ, வாகனங்களுக்கு டயர்கள் அப்படி! ஆம், ஒரு மனிதனின் எடையை எப்படிக் கால்கள் இரண்டும் தாங்குகின்றனவோ, அதுபோலவே வாகனத்தின் எடை - அதில் பயணிப்பவர்கள் மற்றும் அவர்களது உடைமைகள் ஆகியவற்றைச் சேர்த்துச் சுமப்பவை டயர்கள். அவற்றின் பக்கவாட்டுப் பகுதியில் (SideWall) பார்த்தால், அதில் டயரின் பிராண்டைத் தவிர்த்து 155/65 R13 73H, 165/80 R14 85T, 185/65 R15 88S என பிரின்ட் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். ஒருவரது கால்களின் அளவைப் பொறுத்து, அவரது காலணியின் அளவு மாறுபடும். அதைப்போலவே, கார்களின் இன்ஜின் திறன் மற்றும் அளவைப் பொறுத்து, அதில் பொருத்தப்படும் டயர்களின் அளவும் மாறுபடும். முன்னே சொன்ன எண்கள், நமக்குச் சொல்ல வருபவை என்ன? உதாரணத்துக்கு, பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் பயன்படுத்தப்படும் 195/55 R16 87V என்று குறிப்பிடப்பட்டுள்ள டயரை எடுத்துக்கொள்வோம்.

195 - Section Width

காரை முன்பக்கத்தில் இருந்து பார்த்தால், அதில் தெரியும் டயரின் குறுக்குவெட்டுப் பகுதிதான் Section Width. மில்லிமீட்டரில் சொல்லப்படும் இது, வீலின் வெளிப்புற SideWall-ல் இருந்து உட்பகுதியின் SideWall வரையிலான அகலத்தைக் குறிக்கிறது.

55 - Aspect Ratio

காரில் இருக்கும் டயரின் ப்ரொஃபைலைக் குறிப்பதுதான் Aspect Ratio. சதவிகிதத்தில் சொல்லப்படும் இது, டயரின் SideWall உயரத்திற்கும் - Section Width-க்குமான விகிதத்தை விளக்குகிறது. இந்த எண் குறைவாக இருந்தால், டயரின் SideWall குறைவு (Low Profile) என்றும், அதிகமாக இருந்தால் SideWall அதிகம் (High Profile) எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

R - Radial

கார் டயரின் கட்டமைப்பை விளக்கும் எழுத்து இதுதான். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பெரும்பான்மையானவை, Radial டயர்களையே பயன் படுத்துகின்றன. தற்போது FZ, ஜிக்ஸர், டியூக் போன்ற சில நேக்கட் பைக்குகளிலும், இவை தலைகாட்ட ஆரம்பித்துவிட்டன. ஸ்டைலான Tread டிசைன், அசத்தலான ரோடு கிரிப் மற்றும் நிலைத்தன்மை, சிறப்பான சொகுசு மற்றும் ஆயுள் ஆகியவையே இதற்கான காரணங்கள்.

16 - Rim Diameter

இது வீல் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் டயரின் விட்டத்தைக் குறிக்கும் எண். இன்ச்சில் சொல்லப்படும் இது, 4 வீல்களும் ஒரே சைஸில்தான் இருக்கும். ஆனால், கார் தயாரிப்பாளர்கள் பலரும், ஆரம்ப மற்றும் மிட் வேரியன்ட்களில் இருக்கும் ஸ்டீல் வீல்களுக்கு ஒரு சைஸும், டாப் வேரியன்ட்டில் இருக்கும் அலாய் வீல்களுக்கு ஒரு சைஸ் என பிரிப்பது வாடிக்கை.

87 - Load Index:

காரின் டயர், எந்த அளவு எடையைச் சுமக்கலாம் என்பதை, இந்த எண் குறிக்கிறது. காரின் GVW (Gross Vehicle Weight) நான்கால் பிரித்தாலே இது கிடைத்துவிடும். ஒருவேளை கார் அதிக எடையைச் சுமக்க வேண்டுமென்றால், அதில் இருக்கும் டயர்கள் அதிகக் காற்றழுத்தத்தைக் (Psi) கொண்டிருக்கும். இதுபோன்ற கார்களில் இருக்கும் டயர்களில், RF (Reinforced) அல்லது XL (Extra Load) என்ற குறியீடு இருப்பதைக் காணலாம்.

V - Speed Symbol:

காரின் எடையை, அதிகபட்ச வேகத்தில் கொண்டுசெல்வதைக் குறிக்கும் எழுத்துதான் இது. தவிர, காரில் டயர்களை மாற்றும் நேரத்தில், பலர் சைஸில் கவனமாக இருந்தாலும், தவறவிடும் விஷயம் இதுதான். எனவே, குறிப்பிட்டிருக்கும் வேக அளவைவிட, அதிக வேகத்தைத் தாங்கக்கூடிய டயர்களை வாங்குவதில் தவறேதும் இல்லை.