‘இந்த மழையில எங்கிட்டுப் போறது?’ என்று மண்டையைச் சொறிந்து கொண்டு ஒரு குளிர் இரவில் தூங்கியபோது... வேலுநாச்சியார், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர்கள் என்று வரலாற்று வீரர்களாகக் கனவில் வந்துபோனார்கள்.

அட! ‘இந்த முறை கிரேட் எஸ்கேப்புக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் போயிடலாமே’ - இந்த ஐடியாவை வாட்ஸ்-அப் செய்ததும், ‘‘ஹிஸ்ட்ரினா எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் பாஸ்... அவங்கதான் நிஜமான தலைவர்கள். கிளம்புங்க’’ என்று பதிலுக்கு ‘தம்ஸ்-அப்’ ஸ்மைலி அனுப்பினார்கள் பார்த்திபனும், திருமுருகனும்.

விருத்தாசலத்தில் டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தும் பார்த்திபன், ‘i20 ஆக்டிவ்’ வாங்கிய புதிதில் கிரேட் எஸ்கேப் பகுதிக்காக நமக்கு வாய்ஸ்-ஸ்நாப் செய்திருந்தார். இப்போது கிட்டத்தட்ட 40,000 கி.மீ வரை ஓடியிருந்தது i20 ஆக்டிவ். ‘‘பழசா இருந்தாலும் பறக்கும் பாஸ்’’ என்று காரின் சாவியை நம்மிடம் ஒப்படைத்தார் பார்த்திபன். ஆக்டிவாகக் கிளம்பினோம் ஆக்டிவ்-வில்.

ஹூண்டாய், வசதிகளில் சொல்லியடிக்கிறது. வெறும் ஒன்பது லட்ச ரூபாய் கார்தான். பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா, ஏபிஎஸ், 2 காற்றுப் பைகள், புரொஜெக்டர் LED என்று எத்தனை வசதிகள்! i20 காரின் ரிவர்ஸ் கேமராவில் ஒரு ஸ்பெஷல் - நமது ஸ்டீயரிங் அசைவுக்கு ஏற்ப கேமரா லைனும் லேன் மாறுவது ஜாலியாகவும் தன்னம்பிக்கையாகவும் இருக்கும். ‘‘இந்த வசதிகள்தான் என்னை ஸ்விஃப்ட்டில் இருந்து i20-க்கு மாற வெச்சது’’ என்றார் பார்த்திபன்.

டீசல் கார் என்பதால், லேசான அதிர்வுகளுடன் கிளம்பினோம். நெடுஞ்சாலையில் நம்பவே முடியவில்லை. ஸ்கோடா, ஃபோக்ஸ் வாகன் போன்ற செடான் கார்களெல்லாம் i20-ன் ரியர்வியூ மிரரில் ரிவர்ஸில் போக ஆரம்பித்தன. கிட்டத்தட்ட 140 கி.மீ வரை i20 ஆக்டிவ், செம ஆக்டிவ். ‘‘150 வரைக்கும் அழுத்தியிருக்கோம்’’ என்றார்கள் இருவரும். ஆனால், ஹூண்டாய் கார்களில் ஸ்டீயரிங்கை மட்டும் கவனமாகக் கையாள வேண்டும்.

திருச்சி வழியாகப் புதுக்கோட்டைக்கு வந்து புகைப்பட நிபுணரை ஏற்றிக்கொண்டு, மறுபடியும் பறந்தது i20. தொண்டைமான் அரசர் ஆண்ட பகுதி புதுக்கோட்டைக்குப் பெரிய வரலாறு உண்டு. அதைவிடப் பெரிய விஷயம் - சித்தன்னவாசல். ஓவியக் கலையைப் பறைசாற்ற `தமிழ்நாட்டில் நான் இருக்கேன்’ என்று சித்தன்னவாசல் ஒற்றையாய்க் கைத்தூக்குகிறது.

மலையைக் குடைந்து கோயில் உருவாக்கி, அதில் இருக்கும் அற்புதமான ஓவியங்களை விவரிப்பதற்கென்றே ஒரு செக்யூரிட்டி கைடு இருக்கிறார். குளம், தாமரையின் வளர்ச்சி, சமணர்கள், பறவைகள், விலங்குகள், நடன மங்கைகள் என்று 1,400 ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்ட குடைவரை ஓவியங்கள், `அப்பவே எப்படி இப்படி வரைஞ்சிருப்பாங்க' என்று மனசைக் குடைந்தது. கி.பி 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனிபாதசேகரன் ஸ்ரீவல்லபன் எனும் அரசன் காலத்தில் இந்தக் கோயிலைக் குடைந்திருப்பதாகச் சொல்கிறது வரலாறு. கிட்டத்தட்ட அஜந்தா, எல்லோரா ஓவியங்களுக்கெல்லாம் சீனியர், நம் சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள். இதை சமணர் குடைவரைக் கோயில் என்றும் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் சமணர்கள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளம்.

உள்ளே இருக்கும் கருவறையின் ஸ்பெஷல் அம்சம்; இதில் எதிரொலி இல்லை. ஆனால், உள்ளே அமர்ந்து மூச்சை இழுத்து மறுபடியும் விட்டால், மூச்சு வெளிவருவதற்கு முன்பே ‘ஓம்’ என்று ஒலி கேட்பது ‘இன்ஜினீயரிங் மிராக்கிள்’. திரும்பத் திரும்ப இதை முயன்று வியந்தனர் பார்த்திபனும் திருமுருகனும். தரை, சுவர், படிகள் என்று எல்லா இடங்களிலும் ஓவியங்கள் வரைந்ததற்கான தடங்கள் தெரிகின்றன. ஆனால், காலப்போக்கில் நிறைய ஓவியங்கள் அழிந்து போனது, வரலாற்றுச் சோகம்.

சமணர் கோயிலுக்கு சல்யூட் அடித்து விட்டுக் கிளம்பினோம். செல்லும் வழியில் திருமயம் கோட்டை வந்தது. ரொம்பச் சின்ன ஊர் திருமயம். ஆனால், எக்கச்சக்க வரலாறும் கலையம்சமும் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் ஆன்மிகவாதி என்றால் பாக்கியவான். ஒரு பக்கம் சிவனையும் ஒரு பக்கம் திருமாலையும் குடைந்து வைத்திருக்கிறார்கள். சிவனே என்று சரண் புகலாம். நீங்கள் கலா ரசிகர் என்றால், அதற்கும் திருமயம் சரியான இடம். வெறும் பாறையை மட்டும் வைத்து, துப்பாக்கி சுடுவதற்காகச் சுற்றிலும் துளைகள் உண்டாக்கி, இம்மாம் பெரிய கோட்டையை ரசித்து ரசித்துக் கட்டிய அந்தக் கட்டடக் கலையை நினைத்தால்... புல்லரிக்கிறது. நீங்கள் வரலாற்றுப் பிரியர் என்றால், திருமயம் உங்களைத் திரும்பிப்போக விடாது. கோட்டையில் உள்ள ஒவ்வொரு பாறையிலும் ஓராயிரம் கதைகள் ஒளிந்து கிடக்கின்றன.

அத்தனையும் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை மென்று தின்கிறது. இதற்கு ஊமையன் கோட்டை என்று இன்னொரு பெயரும் உண்டு. இன்னமும் அங்கிருந்த ஓர் ஆயுதக் கிடங்கு பாழடைந்து கிடந்தது. உள்ளே செல்போனில் டார்ச் அடித்து ‘இங்கதான் வெடிபொருள்கள் வெச்சிருப்பாங்களோ...’ என்று பார்த்துப் பார்த்து வியந்தார் பார்த்திபன். இங்கிருந்த சுரங்கப்பாதை வழியாக, தஞ்சாவூருக்கே செல்லலாம் என்றார்கள். சில வருடங்களுக்கு முன்புதான் இந்தப் பாதையை அடைத்து விட்டார்களாம்.

இப்போது ஷூட்டிங் ஸ்பாட் ஆகவும் மாறிவிட்டது திருமயம். ‘திருமயமா... அது எங்கே இருக்கு?’ என்பவர்களுக்கு, ‘பாண்டிய நாடு’ திரைப்படப் பாடலைச் சொன்னால், சட்டென நினைவு வந்துவிடும். கோட்டையின் மேலுள்ள பீரங்கிக்குப் பக்கத்தில் செல்ஃபி எடுக்கும்போது உடல் சிலிர்க்கிறது. கோட்டைக்குக் கீழே இன்னமும் வற்றாத அகழி ஒன்று இருக்கிறது. அகழி சிலருக்கு ஆபத்தாக மாற, சுற்றிலும் வேலி போட்டிருந்தார்கள்.

திருமயத்துக்கும் ஒரு சல்யூட். அடுத்தநாள் காலை, செட்டிநாட்டு உணவுடன் வரலாற்றுப் பயணம் தொடர்ந்தது. சிவகங்கை என்றாலே அரண்மனைதானே. வெள்ளையர்கள் காலத்தில் இந்த சிவகங்கை சீமையைக் காக்க எத்தனை உயிர் இழப்புகள்? மருதுபாண்டியர்களின் ரத்த சொந்தங்கள் என்று சொல்லிக் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோரை ஒரே நேரத்தில் தூக்கில் இடப்பட்ட சிவகங்கை அரண்மனை, இப்போது ட்ரெண்டுக்கு ஏற்ப பெரிய மால் மாதிரி ஆகிவிட்டிருந்தது. உள்ளே அனுமதி இல்லை என்றார்கள். அரண்மனைக் கதவு வழியே எட்டிப் பார்த்ததில், ஸ்விஃப்ட் கார் ஒன்று நின்றிருந்தது. ‘‘எப்போவாச்சும் ராணியம்மா வெளிய வருவாங்க’’ என்றனர் ஊர்க்காரர்கள்.

‘அடுத்த அரைமணி நேரப் பயணத்தில் திருப்பத்தூர் வந்திருந்தது. திருப்பத்தூரில்தான் 1801-ம் ஆண்டு அக்டோபரில் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மரங்கள் இருந்த அந்த இடம் இப்போது ஓட்டல்கள், ஆட்டோ ஸ்டாண்டு, காவல் நிலையம் என்று பரபரப்பாக இருந்தது. அந்த இடத்தைச் சுற்றி இரும்பு கேட் போடப்பட்டிருந்தது. பெரிய தூணை எழுப்பி நினைவுச் சின்னமாக்கி இருந்தார்கள். சுற்றிலும் பாதுகாப்புக்காக இரும்பு கேட் போட்டிருந்தார்கள். ‘‘இப்போதான் இந்த கேட் போட்ருக்காங்க’’ என்றார்கள்.

பக்கத்துத் தெருவில் நினைவிடம். இங்கே மருது சகோதரர்களின் உடலை மட்டும் புதைத்திருக்கிறார்கள். ஏதோ கோயிலுக்கு வந்ததுபோல் இருந்தது.

திருப்பத்தூரில் இருந்து காளையார் கோவிலுக்குச் செல்லும் வழியில், வலதுபுறம் திரும்பினால் ஏரியூர் என்றொரு இடம் வருகிறது. ஜன நடமாட்டம் அவ்வளவாக இல்லாத, மாசுபடாத இடம். இதுவும் சிவகங்கை ராணியின் கட்டுப்பாட்டில் வருவதாகச் சொன்னார்கள். நாம் சென்ற
போது, ஆட்டுக்கூட்டம் மற்றும் எங்களைத் தவிர யாருமே இல்லை. பங்குனி உத்திரம் அன்று இங்குள்ள முருகனையும் சிவனையும் தரிசிப்பதற்காகக் கிட்டத்தட்ட லட்சம் பேர் மலையேறி வருவார்களாம். மைசூர், கொடைக்கானல்போல் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி, மலை உச்சியில் இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடம் அத்தனை அழகு + அமைதி.

மறுபடியும் இறங்கி வலதுபுறம் திரும்பினால், காளையார்கோவிலுக்குப் போகும் சாலை. வழி நெடுக வரலாற்று வாசம் அடித்தது. காளையார்கோவில் வந்திருந்தது. மிகப் பெரிய இரண்டு கோபுரங்கள். சாதாரணமாகப் பார்த்தால் இது கோயில். கொஞ்சம் உள்ளார்ந்து கவனித்தால், இதன் வரலாறு புல்லரிக்க வைக்கும். காளையார் கோவில் என்றாலே, தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியார்தான் நினைவுக்கு வருவார். வளரி என்ற ஆயுதக்கலை தெரிந்த முதல் வீராங்கனை; ஆறு மொழிகளில் எழுதப் பேசத் தெரிந்த அரசி; முதன்முதலில் தற்கொலைப் படையை அறிமுகப்படுத்திய தைரியம் என்று வேலுநாச்சியாருக்கு ஏகப்பட்ட அடையாளங்கள்.

1772-ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளிக் கிழமை காளையார்கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்திருந்தபோது, தனது கணவர் முத்துவடுகநாதரை ஆங்கிலேயத் தளபதி ஒருவர் சூழ்ச்சியால் கொன்றுவிட, அதைப் பழிவாங்கும் நோக்கில் தளபதியைப் போட்டுத் தள்ளிய வீரமங்கைதான் வேலுநாச்சியார். ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்த இடத்தைச் சிறைப்படுத்தி ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்திய பிறகு, குயிலி எனும் பெண் மூலம் தற்கொலைப் படை அமைத்து ஆயுதங்களை அழித்தது என வேலுநாச்சியாரின் வரலாறு பிரமிக்க வைக்கும்.

காளையார்கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில்தான் மருதுபாண்டியர்களின் தலை புதைக்கப்பட்டுள்ளது. ‘‘கோபுரத்தை நாங்கள் பார்ப்பதுபோல் எங்கள் தலையைப் புதைத்து விடுங்கள்’’ என்ற மருது சகோதரர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

பக்தியில் முக்தியடைந்தவர்களுக்குக் காளையார்கோவில் அத்தனை பரவசத்தைக் கொடுக்கும். உள்ளேயும் அத்தனை கலையம்சம். ‘‘நான் நாத்திகன். எனக்கே இந்தக் கோயில் பிடிச்சிருக்கு’’ என்று வியந்தார் திருமுருகன். இந்தப் பழைமை வாய்ந்த ராஜகோபுரத்தில்தான் அண்மையில் தீப்பிடித்ததாகச் சொன்னார்கள். இப்போது அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறதாம். ‘‘கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்கே போன மாசம்தான் நீதி கிடைச்சது. கோபுரத்துக்கெல்லாம் என்னைக்குத் தீர்ப்பு கிடைக்க?’’ என்றார் பார்த்திபன்.

இப்படி வலிகளும் வரலாறுகளும் நிறைந்த இடம் காளையார்கோவில். ‘தமிழன் அகதியாகக்கூடப் போவான்; ஆனால் அடையாளம் மாற மாட்டான்’ என்பதற்கேற்ப, அடையாளத்தை அழிக்க முடியாத இடத்துக்குப் பயணித்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!