பதினோறு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு மார்க்கெட்டில், இரவு - பகல், வெயில் - மழை பாராது நகரச் சாலைகளில் பம்பரமாகச் சுழன்றுகொண்டு, சரக்குகளை ஏற்றுவதும் இறக்குவதும் எனப் பரபரப்பாக உழைத்துக்கொண்டிருந்த 23 வயது இளைஞர், சுப்ரமண்யா.

அதே சுப்ரமண்யா, அதே ஊரில், இப்போது, மூன்றுக்கும் மேலான சொந்தத் தொழில்கள்; சொந்தமாக 450 ட்ரக்குகள்; சென்னை, புனே, பரோடா, கோவை, கர்நாடகா ஆகிய இடங்களில் கிளைகள்; ஆண்டுக்கு 40 கோடி வியாபாரம் செய்யும் மிஸ்டர் சுப்ரமண்யா ஆகியிருக்கிறார். அவருக்கு தற்போது வயது 32.

ரிலையன்ஸ் நிறுவனம் இவரது வாடிக்கையாளர். ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் டெலிவரி சர்வீஸ் பார்ப்பதால், சொந்தமாகச் சேமிப்புக் கிடங்கும் உண்டு. கான்ட்ராக்டர், லாஜிஸ்டிக்ஸ், மேன் பவர் ஏஜென்ஸி என்று இவரது தொழில்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

சரி, 23-க்கும் 32-க்கும் நடுவில் என்ன நடந்தது? பெங்களூரு ஹெப்பாலில் இருக்கும் அவரது எல்.சி.எம் லாஜிஸ்டிக்ஸ் அலுவலகம் சென்றேன். நம்மை வரவேற்ற சுப்ரமண்யாவின் நண்பர் சுப்பையா, ஒரே ஒரு ட்ரக் 450 ட்ரக்குகளாக வளர்ந்த கதையைச் சுருக்கமாகப் பகிர்ந்தார்.

“கடுமையான உழைப்பாளி சுப்ரமண்யா. இரவு பகல்னு பார்க்காம, தீயா வேலை வேலைன்னு அலைஞ்சுகிட்டே இருப்பார். அப்போ, சுப்ரமண்யா ட்ரக் ஓட்டிக்கிட்டு இருந்த கம்பனியில நானும் வேலை செஞ்சுட்டு இருந்தேன். ஒரு தடவை சரக்கைக் கவனிக்கணும்னு சொல்லி என்னையும் இவரோட ட்ரக்குல அனுப்பினாங்க. இரவு முழுக்கப் பேசிக்கிட்டே டிராவல் பண்ணினோம். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊருங்கிறதால, அந்தப் பயணத்துல ரொம்ப நெருக்கமாயிட்டோம். அந்த கம்பெனியில நான் வேலையை விட்ட பிறகு, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, அதாவது 2009-ம் வருஷம் சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிச்சோம். அதுதான் எல்.சி.எம். லாஜிஸ்டிக்ஸ்” என்றார்.

கொஞ்சும் தமிழில் மிக நிதானமாகப் பேசினார், சுப்ரமண்யா. “என்னோட சொந்த ஊர் கூர்க் மாவட்டம் மடிக்கேரி. பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். என்னோட 16-வது வயசுல பெங்களூர் வந்தேன். ஏதாவது வேலை கிடைக்குமான்னு தேடி அலைஞ்சப்போதான் மார்க்கெட்ல லாரி கிளீனர் வேலை கெடச்சுது. அப்போ, சாப்பாடு மட்டும்தான் என்னோட ஒரே தேவையா இருந்துச்சு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டிரைவிங் கத்துக்கிட்டேன். என்னுடைய ஓனர் என்னை நம்பி வண்டியை ஓட்டக் கொடுக்கிற அளவுக்கு டிரைவராயிட்டேன். அப்படியே கொஞ்ச வருஷம் போச்சு. சுப்பையாவுடைய நட்பு கிடைச்சதுக்கு அப்புறமா சொந்தமா வண்டி வாங்கணும்ங்கிற வெறி வந்துச்சு. இரவு பகல்னு பார்க்காம வண்டி ஓட்டினேன். கொஞ்சம் காசு சேர்ந்தது. வாடகைக்கு ஓட்டின டாடா ஏஸ் மினி ட்ரக்கை சொந்தமா வாங்கினேன். தொழில்ல கிடைச்ச வருமானம், தவணை கட்டினதுபோக மீதமானது முதலீடா மாற ஆரம்பிச்சுது. இப்போ இருக்கிற நிலைமை போதாது பிரதர். இன்னும் நிறைய கனவுகள் இருக்கு” என்கிறார் சுப்ரமண்யா.

‘சூர்யவம்சம்’ படத்தில் வரும் ஐந்து நிமிடப் பாடல்போல இது தோன்றலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் எதுவும் அவ்வளவு சுலபம் இல்லை. 450 வாகனங்கள் வைத்திருப்பது விளையாட்டு அல்ல. அது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டபோது, “2009-ல டாடா ஏஸ் வாங்கினேன். அதே வருஷத்துலதான் கம்பெனியும் ஆரம்பிச்சோம். அந்த வண்டி சம்பாதிச்சுக் கொடுத்த லாபம் மொத்தமும் வெச்சு, 2011-ல ரெண்டு வண்டி வாங்கினோம். மொத்தம் மூன்று வண்டிகள். அந்த மூணும் சேர்ந்து சம்பாதிச்சுக் கொடுத்ததை வெச்சு, அப்படியே அடுத்தடுத்த வருஷங்கள்ல எண்ணிக்கை அதிகமாயிக்கிட்டே போச்சு. இப்போ 2017-ல என்கிட்ட 450 வண்டிங்க இருக்கு. என்னதான் இருந்தாலும் என்னோட முதல் வண்டி இன்னும் என்கிட்டதான் இருக்கு. யாருக்கும் கொடுக்க மனசில்லாம என்கூட இருந்த டிரைவர் ஒருத்தர்தான் இப்பவும் அதை ஓட்டிட்டு இருக்கார்’’ என்று பழைய நினைவலைகளில் மூழ்கியவரிடம், தொழில் துவங்க முதலீட்டின் முக்கியத்துவம் குறித்துக் கேட்டேன். “நிச்சயமா லாபத்தைத் திரும்பத் திரும்ப முதலீடு செய்றதுதான் தொழிலை வளர்க்க உதவும். நாங்க சம்பாதிக்கிறதை மறுபடியும் எங்க தொழில்லதான் போடுறோம். பிசினஸ் ஆரம்பிச்சு ஐந்து வருஷத்துக்குப் பிறகுதான், சொந்தமா கார் வாங்கினோம். இப்பவும் வாடகை வீட்டுலதான் இருக்கோம். லாபம் வந்தவுடனே பங்கு பிரிக்கணும்ங்கிற உணர்வு என்னைக்குமே வந்ததில்லை. அதனாலதான் பார்ட்னர்ஷிப்புக்குள்ள எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. எங்களுக்குள்ள நட்புடன் நம்பிக்கையும் நிறையவே இருக்கு’’ என்றார் சுப்ரமண்யா.

‘‘ஸ்டார்ட் அப் துவங்கி இளைஞர்கள் வேகமாக வளர்கிறார்கள். ஆனால், அதே வேகத்தில் காணாமல் போய்விடுகிறார்களே. அதற்கு என்ன காரணமாக இருக்கும்’’ என்று கேட்டபோது, “அவசரம் கூடாது; பொறுமை வேணும். ஆரம்பம் இன்வெஸ்ட்மென்ட்தான். அதுல இருந்து டர்ன் ஓவர் லாபம் ட்ராக் ரெக்கார்ட் கிளையன்ட் மறுபடியும் முதலீடுன்னு ஒவ்வொரு படியா ஏறணும். கிரவுண்ட் லெவல்ல இருந்து ஒரு தொழிலைக் கத்துக்கணும். காத்திருந்து அதை ஸ்டடி பண்ணணும். தொழில்ல முக்கியமான நபர்களுடைய தொடர்புகள் ரொம்ப முக்கியம். அதுக்குப்பின் முதலீடு செஞ்சு உங்க தொடர்புகள் மூலம் கிளையன்ட்ஸ் பிடிக்கணும். நேர்மையா வேலை செஞ்சு நம்பிக்கையான ஆளா இருக்கணும். அந்தத் தொடர்புகள் உங்களுக்கு இன்னும் சில புதிய தொடர்புகளை உண்டாக்கித் தரும். கொஞ்ச காலம் அநாவசியமான செலவுகள் செய்யாம லாபங்களைச் சேர்த்து வெச்சு, சரியான நேரத்துல மீண்டும் முதலீடு செய்யுங்க. உங்களோட ட்ராக் ரெக்கார்டைப் பார்த்துட்டுப் பெரிய நிறுவனங்கள் உங்ககிட்ட வருவாங்க. அதுக்குப் பிறகு வர்றதெல்லாம் லாபம்தான்.”

‘‘40 கோடி வியாபாரம் பார்த்துவிட்டீர்கள். இன்னும் என்னென்ன திட்டங்கள் கைவசம் இருக்கின்றன’’ என்றதற்கு, இருவர் முகத்திலும் டன் கணக்கில் வெளிச்சம் பிரகாசிக்கிறது.

“அடுத்த மாசத்தில் இருந்து 20 சதவிகிதம் வரைக்கும் டர்ன்ஓவர் அதிகமாக்கணும். 2020-ம் வருஷம் இந்தியா முழுக்கக் கிளை திறந்து 100 கோடி டர்ன்ஓவர் செய்யணும்கிறதுதான் டார்கெட். 2030-ல 1,000 கோடியா அது வளர்ந்து நிக்கணும். அவ்ளோதான்” என்றார் சுப்ரமண்யா.

கனவு காண வயது வரம்பில்லை; அண்டம் எல்லையில்லை என்பதை உழைப்பின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள், இந்த இளம் தொழிலதிபர்கள்.

வாழ்த்துகள்!