புதிதாக கார் ஓட்டப் பழகுபவர்கள், புது காரைவிட பழைய காரை வாங்குவதே நல்லது. அதிலும் கணவன்-மனைவி என்று வரும்போது, இருவருக்குமே ஆட்டோமேட்டிக் ஆப்ஷன், பெஸ்ட் சாய்ஸ். ‘‘நாங்க ரெண்டு பேருமே இப்போதான் டிரைவிங் கிளாஸ் போயிக்கிட்டிருக்கோம். கார் ஓட்டப் பழகணும். 3.5 லட்சம் பட்ஜெட்டில் ஆட்டோமேட்டிக்கில் எது வாங்கலாம்?’’ என்று வாட்ஸ்-அப் செய்திருந்தனர் ரங்கநாதனும், அவர் மனைவி லட்சுமியும்.

இப்போதைக்கு இந்த பட்ஜெட்டில் வரும் பழைய கார்கள் - கிராண்ட் i10, செலெரியோ, பிரியோ, க்விட், டியாகோ போன்றவைதான். இதில் க்விட், டியாகோ போன்றவை புது மாடல்கள் என்பதால் பழைய கார் மார்க்கெட்டில் வந்திருக்காது. மேலும், டியாகோவில் இருப்பது பெரிய இன்ஜின். கிராண்ட் ஐ10 மற்றும் செலெரியோதான் இவர்களுக்கு இருக்கும் ஆப்ஷன். ‘‘மாருதிதான் பார்த்துக்கிட்டிருக்கேன். சர்வீஸ் காஸ்ட் பிரச்னை இல்ல பாருங்க!’’ என்று மாருதியை டிக் அடித்தார் ரங்கநாதன்.

சென்னை ராயப்பேட்டையில் 2015 மாடல் செலெரியோ AMT கார் இருப்பதாகத் தகவல் வர, கிளம்பினோம். சிவப்பு நிற செலெரியோ AMT மாடல், மொத்தம் 4,700 கி.மீதான் ஓடியிருந்தது. ‘3.15 லட்சம்’ என்று விலை நிர்ணயித்திருந்தார் பிலால் என்னும் கார் உரிமையாளர். ‘அப்போ புது காரா? இந்த ரேட் பரவாயில்லையே...’ என்று ஆசைப்பட்டபடி காரைச் சோதனையிட்டார் ரங்கநாதன். விசாரித்ததில் இரண்டாவது ஓனர் என்று தெரிந்தது. அப்படிப் பார்த்தால்கூட, இந்த விலை கிட்டத்தட்ட ஓகேதான். ஏனென்றால், மாருதி செலெரியோ VXI AMT-யின் புது மாடலின் சென்னை ஆன்ரோடு விலை 5.65 லட்சம் ஆகிறது.

ஏ.சி. வேலை செய்யவில்லை, ஸ்டீரியோ சிஸ்டம் பாடவில்லை; ரிமோட் கீ ஃபங்ஷன் ஆகவில்லை போன்ற சின்னச் சின்னக் குறைகள் தெரிந்தன. ‘‘எல்லாமே டெலிவரியின்போது சரிசெய்துதான் தருவேன்’’ என்றார் பிலால். AMT கார்களில் கிளட்ச் இல்லாததால், பிரேக்குக்குப் பெரிய பெடல் இருக்கும். ‘‘டிராஃபிக்கில் கிளட்ச் மிதிக்க வேண்டியதில்லைதானே’’ என்றார் லட்சுமி. சிட்டி டிராஃபிக்கில் ஒரு ரவுண்டு அடித்துப் பார்த்தார் ரங்கநாதன்.

‘‘சூப்பர் பிக்-அப். ஹில்ஸ்லாம் நல்லா ஏறுமா?’’ என்றார். பொதுவாக, AMT கார்களில் மலைப் பயணங்கள் ரொம்பவும் ஈஸி. கிளட்ச், கியர் மாற்றும் தொந்தரவு இல்லை என்பதால், மலை ஏற்ற-இறக்கங்களில் மேனுவல் கார்கள்போல் இன்ஜின் ஆஃப் ஆகும் பிரச்னை இருக்காது. பிரேக்கில் மட்டும் கவனம் வைத்திருந்தால் போதும். பெண்களுக்கும் இது நம்பிக்கை கொடுக்கும். மேனுவல் விரும்பிகளுக்கு, மேனுவல் கியர்பாக்ஸும் உண்டு என்பது செலெரியோவின் ஸ்பெஷல்.

1.0 லிட்டர் மாதிரியே தெரியவில்லை. ஹைவேஸில் பெரிய கார்களுடன் அசால்ட்டாகப் போட்டி போடலாம். 67 bhp பவர் இருப்பதால், நெடுஞ்சாலையில் சூப்பர் அனுபவம் கொடுக்கும். ஏனென்றால், சில காம்பேக்ட் செடான் டீசல் கார்களுக்கே இந்த பவர்தான். மற்றபடி 9 kgm டார்க், இந்த 850 கிலோ காருக்கு இது ஓகேதான். ‘‘முதல்ல நல்லாப் பழகிட்டு, அப்புறம் பறக்க வேண்டியதுதான்’’ என்றார் ரங்கநாதன்.

பின் பக்க இடவசதியையும் சோதனை செய்தார்கள் தம்பதியர். ‘‘பரவாயில்லை; இடவசதி ஸ்விஃப்ட்டைவிட நல்லா இருக்கும் போல’’ என்றார் லட்சுமி. ‘‘இது எப்படி இருந்தா என்ன? நம்ம ரெண்டு பேருக்கும் முன் பக்க சீட் நல்லா இருந்தாலே போதும்’’ என்று சிரித்தார் ரங்கநாதன். செலெரியோவின் பூட் இடவசதி 235 லிட்டர். ஸ்விஃப்ட்டைவிட இது அதிகம் என்பதை நினைவில் கொள்க.

பகலில் கார் வாங்கும்போது, முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஹெட் லைட், ஃபாக் லேம்ப், பிரேக் லைட் போன்றவை. பிரேக் லைட்டில் ஒரு பல்ப் இல்லாததைக் கண்டுபிடித்து நோட் பண்ணிக் கொண்டார் ரங்கநாதன். அதேபோல், வைப்பர் செக் செய்யவும் மறந்து விடாதீர்கள். இந்த செலெரியோவில் வைப்பர் நன்றாகவே வேலை செய்தது. காரின் ஓடோ ரீடிங் அதிகம் இல்லை என்பதால், டயர் அதிகமாகத் தேய்ந்திருக்கவில்லை. ‘‘ஏங்க, ரெண்டு வருஷத்துக்கு டயர் மாத்துற வேலை இருக்காதில்ல?’’ என்றார் லட்சுமி.

வெளியே விசாரித்தில் செலெரியோ AMT, நகரத்துக்குள் கிட்டத்தட்ட 16 கி.மீ தரும் என்றார்கள். ‘‘எனக்கு ஹைவேஸ்ல 18-க்கு மேலயே வரும்’’ என்று சொல்லியிருந்தார் பிலால். எனவே, மைலேஜைப் பொறுத்தவரையிலும் செலெரியோ திருப்தி அளித்தது. வெள்ளத்தில் மூழ்கிய காரா என்பதையும் விசாரித்து உறுதி செய்துகொண்டார் ரங்கநாதன். எல்லாமே ஓகே.

2-வது ஓனர் என்பதால், விலை இன்னும் குறைத்துப் பேசப்பட்டது. நாம் விற்கும்போது, 3-வது ஓனர் ஆகிவிடும். எனவே, டிப்ரிஸியேஷன் ‘சர்’ரென நிகழும். மூணு லட்சம் என்றால், கொடுக்கும் விலைக்குச் சரியான கார் என்பதுதான் இந்தப் பழைய செலெரியோவுக்கு எழுதப்படும் தீர்ப்பு.