ஹாய்! நான் இன்பநாதன். புதுக்கோட்டையில் சுயதொழில் செய்றேன். நாலு வருஷமா ஹோண்டா ஷைன் ஓட்டி அலுத்துப்போச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க... சிட்டிக்குள் ஓட்ட மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். இருக்கிறதுலேயே பெஸ்ட் மைலேஜ் பைக் - பஜாஜ் பிளாட்டினாதான்னு கேள்விப்பட்டேன். சரின்னு புக் பண்ண ஷோரூம் போனபோதுதான் NS160-ஐ பார்த்தேன். கண்டதும் காதல்னு சொல்வாங்கள்ல? மைலேஜெல்லாம் மறந்தே போயிட்டேன். அந்த அளவு என்னை இம்ப்ரஸ் பண்ணிடுச்சு!

ஏன் பல்ஸர் NS 160?

காலேஜ் படிக்கும்போது என்னோட ஆல் டைம் ஃபேவரைட் பைக், பல்ஸர் NS200. 2015-ல் நான் புக் பண்ணலாம்னு போனப்போ,அதோட தயாரிப்பை நிறுத்திட்டாங்க. மறுபடியும் 2017-ல் ரிலீஸ் ஆனப்போ, நான் என் வேலையில் பிஸியாயிட்டேன். சிட்டிக்குள் மட்டும்தான் பைக்கை ஓட்ட வேண்டியிருக்கும்கிறதால, 200 சிசி பைக் எதுக்குன்னு விட்டுட்டேன். ரொம்பப் பிடிச்சுப்போனதால பல்ஸர் NS160 வாங்கினேன்.

ஷோரூம் - சர்வீஸ் அனுபவம்:

புதுக்கோட்டை கிருஷ்ணா பஜாஜ் ஷோரூம்லதான் பைக்கை புக் பண்ணினேன். சொன்ன மாதிரியே ஆயுத பூஜைக்கு டெலிவரி கொடுத்துட்டாங்க. முதல் சர்வீஸில் வழக்கமான ஆயில் மற்றும் வாட்டர் வாஷுடன் கையைக் கடிக்காத பில்தான் வந்தது. ஆயில் கூல்டு இன்ஜினாமே? இனிமேல்தான் தெரியும்.. எவ்வளவு செலவாகுதுன்னு?

எப்படி இருக்கிறது NS 160?

பல்ஸர்னா பவர்.. பவர்னா பல்ஸர்! இதை உறுதி செய்யுது NS160. எல்லாரும் யமஹா FZ, ஹோண்டா சிபி ஹார்னெட், சுஸூகி ஜிக்ஸர் ஆகிய பைக்குகளை இதுக்குப் போட்டியா சொல்றாங்க. ஆனா, இதோட போட்டியாளரா நான் நினைக்கிறது பல்ஸர் 150-ஐ தான். சிக்னலில் இருந்து பல்ஸர் 180-க்கு முன் சீறிப் பாய்கிறது NS160. அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது - பல்ஸர் 150-யைவிட பவரும் டார்க்கும் இதில் அதிகம்! இது எனக்கே தெரியாம நடந்த சர்ப்ரைஸ்!

பிடித்தது:

சந்தேகமே இல்லை. இதன் ஸ்போர்ட்டியான டிசைன்தான் என்னை மைலேஜையெல்லாம் யோசிக்கவிடாம இதை புக் பண்ண வெச்சது. அதுக்கப்புறம் இதோட பவர்(15.5 bhp). ஹைவேஸில் பைக் பறக்குது பாஸ். டார்க்கும் சூப்பர். சிக்னலில் சீறிக் கிளம்புது. இதோட ஹேண்ட்லிங்கும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. காரணம் - நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷன். இதோட ஹெட்லைட் செம பவர்ஃபுல் (55/60W). கிரவுண்ட் கிளியரன்ஸை சொல்லியே ஆகணும். 176 மிமீ. ஸ்பீடு பிரேக்கர் பிரச்னை இல்லவே இல்லை.

பிடிக்காதது:

பின்பக்கம் இருக்கிற டிரம் பிரேக்கில் ஃபீட்பேக் சுத்தமாக இல்லை. ஆப்ஷனலாகவாச்சும் டிஸ்க் பிரேக் கொடுத்திருக்கலாம். ஒரு ஸ்போர்ட்டி பைக்கில் இதுதான் ரொம்ப முக்கியம். அதேமாதிரி, 110 செக்ஷன் டயர், வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சுறது மாதிரி கார்னரிங் செய்யத் தேவையான கிரிப் இல்லாமல் சோதிக்குது. NS200 போல் 130 செக்ஷன்கூட வேண்டாம். குறைந்தபட்சம் 120 செக்ஷன் டயர்களையாவது பஜாஜ் கொடுத்திருந்தால், ஒரு முழுமையான ஸ்ட்ரீட் பைக்காக NS160 இருந்திருக்கும்.

சிட்டிக்குள்ள மட்டுமே ஓட்டுறதால, எனக்கு லிட்டருக்கு 36 கி.மீ மட்டுமே மைலேஜ் தருது. பல்ஸர் 180 பைக்கே இதைவிட அதிகம் தரும்னு நினைக்கிறேன். அட்லீஸ்ட் - ஒரு 40 ஆவது தந்தா நல்லா இருக்கும்.

என் தீர்ப்பு

பிரேக்கைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பட்ஜெட் விலையில் நல்ல பர்ஃபாமென்ஸ் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு செம சாய்ஸ், இந்த பல்ஸர் NS160.