சின்ன வயதில் பார்த்த குழந்தையை, நீண்ட நாள் கழித்து மீண்டும் பார்க்கும்போது, ‘என்னமா வளர்ந்துட்ட’ என்று ஆச்சரியம் வெளிப்படுமே... அதேபோல்தான், டிவிஎஸ் XL 100 மொபெட்டைப் பார்த்ததும் உற்சாகமாக இருக்கிறது. ‘நம்ம ஊரு வண்டி’ என்று பள்ளியில் படிக்கும்போது விளம்பரங்களில் பார்த்த அதே மொபெட், இப்போது 100 சிசி-யாகி வந்திருக்கிறது, நிறைய மாற்றங்களுடன்.

ட்ரெண்டுக்கு ஏற்ப டேங்க்கின் டிசைன்கூட மாறியிருக்கிறது. இரண்டு பேர் தனித்தனியாக உட்கார ஸ்ப்ளிட் சீட்டுகள். ஹெவி டியூட்டி மாடல் என்பதால், பின் பக்க சீட்டை, தேவைப்பட்டால் அகற்றிக்கொள்ளலாம். டபுள்ஸ் அடிக்கும்போது, திரும்பவும் இணைத்துக்கொள்ளலாம். 130 கிலோ வரை ‘Pay Load’ ஏற்றலாம் என்கிறது டிவிஎஸ்.

மொபெட்டுக்கு, ‘ஆல் டைம் LED’ ஸ்ட்ரிப் இருப்பது செம பந்தாவாக இருக்கிறது. கிராஃபிக்ஸும் அருமை. இப்போது 100 சிசி. அதனால் ஓட்டும்போது, 4 ஸ்ட்ரோக் பைக்கின் சத்தத்தை உணர முடிகிறது. பழைய மொபெட்டுகளில், ‘50 மில்லி ஆயில்; 1 லிட்டர் பெட்ரோல்’ என்று தனித்தனியாக நிரப்பும் வேலை இப்போது மிச்சம். சத்தியமாக இதற்குத் தனியாக 2T ஆயில் ஊற்ற வேண்டியதில்லை. டேங்க் கொள்ளளவு வெறும் 4 லிட்டர்தான். 1.3 லிட்டரில் ரிஸர்வ் ஆகிவிடுகிறது.

99.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் BS-IV இன்ஜினின் பவர் 4.2 bhp. இந்த 75 கிலோ மொபெட்டுக்கு இது ஓகேதான். டர்னிங் ரேடியஸ்ஸும் ரொம்பக் குறைவு என்பதால், சட்டென 'U' டர்ன் அடிக்க முடிகிறது. 0.63 kgm டார்க். ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் சூர்யா சுவரைத் துடைப்பதுபோல், சாலைக்கு வலிக்காமல் சிக்னலில் இருந்து கிளம்புகிறது.

65 கி.மீ வரை டாப் ஸ்பீடு போகலாமாம். நான் 62 வரை விரட்டினேன். ரியர்வியூ மிரரில், பின்னால் வரும் வாகனங்கள் போட்டோ ஷாப் எஃபெக்ட் பண்ணியதுபோல் 'Blur' அடித்தது.

4 ஸ்ட்ரோக் என்பதால், நிச்சயம் அதிக மைலேஜ் கிடைக்க வாய்ப்பு உண்டு. லிட்டருக்கு 67 கி.மீ தரும் என்கிறது டிவிஎஸ். நிச்சயம் 47 ஆவது தரலாம். சஸ்பென்ஷனும் ஓகே ரகம்தான்.

சினிமா, ஹோட்டல் என்று பொழுதுபோக்குக்கே ஜிஎஸ்டியோடு சேர்த்து ஆயிரம் ஆயிரமாகச் செலவழிக்கும்போது, ரொம்பவும் மலிவாக 39,665 ரூபாய் ஆன் ரோடு விலைக்கு, ஒரு மொபெட் கிடைப்பது லக்கிதான்.