ஹார்லி பைக்குகளுக்கு இணையான ரசிகர்களைக்கொண்டது, சுஸூகியின் க்ரூஸர் பைக்கான இன்ட்ரூடர் M1800. ஜிக்ஸர் பைக்கின் 155 சிசி இன்ஜின் மற்றும் சேஸியை அடிப்படையாகக் கொண்டு, இன்ட்ரூடர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது சுஸூகி. அதாவது, இது சுஸூகி M1800 பைக்கின் மினி வெர்ஷன்.

டிசைன்

ஸ்டைலான ஹெட்லைட், நீளமான பெட்ரோல் டேங்க், வித்தியாசமான இடத்தில் பொசிஷன் செய்யப் பட்டிருக்கும் கீ-ஸ்லாட் என இன்ட்ரூடர் பைக் முழுவதும் அசத்தலான டிசைன் அம்சங்கள் கவர்கின்றன. இதையெல்லாம் இதன் மூத்த அண்ணன்களான இண்ட்ரூடர் M1800 மற்றும் M800 ஆகிய XL சைஸ் க்ரூஸர் பைக்குகளில் இருந்து எடுத்துள்ளது சுஸூகி. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு 300-400சிசி பைக்கின் தோற்றத்தைக்கொண்டுள்ளது இன்ட்ரூடர். ஆனால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது கவரும் அளவுக்கு, அருகில் இருந்து பார்க்கும்போது இது ஆச்சர்யப்படுத்தவில்லை. டிஜிட்டல் மீட்டர், அலாய் வீல்கள், டயர்கள், ரியர்வியூ மிரர்கள், சுவிட்ச் கியர், சஸ்பென்ஷன், இன்ஜின், பிரேக்ஸ் போன்ற பாகங்களை அப்படியே ஜிக்ஸர் பைக்கில் இருந்து கட் அண்டு பேஸ்ட் செய்திருப்பதே இதற்குக் காரணம். ஆனால் ஜிக்ஸர் பைக்குடன் ஒப்பிடும்போது, ரியர்வியூ மிரர்களில் கூடுதலாக க்ரோம் பூச்சும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் கூடுதலாக ஏபிஎஸ் லைட்டும், கறுப்பு நிற டிஸ்க் பிரேக் காலிப்பர்களும் இடம்பெற்றுள்ளன.

விலை ரூ 98,340 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

இன்ட்ரூடர் பைக்கின் பின்புறம் உள்ள அகலமான பாடி பேனல்களால், ஜிக்ஸரில் நமக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த 140/60 R17 டயர், இதில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. அதாவது ஒரு பாடி பில்டர், ஒல்லியான கால்களைக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இதனால், டூயல் போர்ட் எக்சாஸ்ட் மற்றும் ஹயபூஸா பைக்கில் இருப்பதுபோன்ற LED டெயில் லைட் ஆகியவை அட்டகாசமான டிசைனாக இருந்தாலும், பைக்கின் பின்புறம் அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். ஜிக்ஸரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்ற பிரச்னையை, இன்ட்ரூடரில் 10 மி.மீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸைக் (169மி.மீ) கொடுத்து சரிசெய்துவிட்டது சுஸூகி.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

நாம் முன்பு சொன்னதுபோலவே, ஜிக்ஸரில் இருக்கும் அதே 154.9 சிசி, கார்புரேட்டட் - ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இன்ட்ரூடரிலும். இது வெளிப்படுத்தும் பவர் மற்றும் டார்க்கில் மாற்றம் இல்லை; இருப்பினும் ஒரு க்ரூஸர் பைக்குக்குத் தேவையான மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸுக்காக, செயின் ஸ்ப்ராக்கெட் - கியர் ரேஷியோ, இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்திருக்கிறது சுஸூகியின் பொறியாளர்கள் குழு.

இது ஜிக்ஸரைவிட 13 கிலோ கூடுதலாக வெய்ட் போட்டு கட்டுமஸ்தாக மாறியிருக்கிறது (148 கிலோ). இதனால் அதிகபட்சமாக மணிக்கு 115 கி.மீ வேகம் வரை சீறிய ஜிக்ஸரின் இன்ஜின், இன்ட்ரூடரில் 90 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகு, கொஞ்சம் மூச்சுவாங்க ஆரம்பித்துவிடுகிறது. எனினும், ஜிக்ஸரில் இருந்த அதே பட்டர் ஸ்மூத் கியர் பாக்ஸ் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ், இன்ட்ரூடரிலும் தொடர்வது ப்ளஸ்.

ஓட்டுதல் அனுபவம்

நேக்கட் பைக்கான ஜிக்ஸரில் இருந்ததைவிட 20 மி.மீ கூடுதல் நீளத்தில் ஸ்விங் ஆர்ம் - 75 மி.மீ கூடுதல் வீல்பேஸ் என ஜிக்ஸரின் சேஸியில் புகுந்து விளையாடியதன் விளைவு, க்ரூஸர் பைக்குகளுக்கே உரிய ரைடிங் பொசிஷனைப் பெற்றுள்ளது இன்ட்ரூடர். இதனால், உயரமான ரைடர்களும், பைக்கில் நீண்ட தூரம் செல்வது சொகுசாக இருக்கிறது. அதே சமயம், இதன் 740 மி.மீ சீட் உயரம், குள்ளமானவர்களுக்கும் வசதியாக இருக்கும் என்றே தெரிகிறது.

பெரிய ஏர் பாக்ஸினால் கொஞ்சம் ஆஃப் செட்டாக சேஸியில் மவுண்ட் செய்யப்பட்டிருக்கும் பின்பக்க மோனோ சஸ்பென்ஷன், சாலையின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது ஏற்படும் குலுங்கல்களை உள்வாங்கிக்கொள்கிறது என்றாலும், சிலவற்றை ரைடரால் உணர முடிகிறது. மேலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் மற்றும் அகலமான டயர்கள், பைக்கின் சிறப்பான நிலைத்தன்மைக்குத் துணை நிற்கின்றன.

இன்ஜின் I 154.9சிசி பவர் I 14.8bhp டார்க் I 1.4kgm கியர்பாக்ஸ் I 5 ஸ்பீடு எடை I 148 கிலோ

இன்ட்ரூடர் என்றால், ‘அத்துமீறி நுழைபவன்’ என்று பொருள். இத்தனை நாள் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த பஜாஜின் அவென்ஜர் ட்வின்ஸ்களுக்கு, உத்தரவின்றி உள்ளே வந்திருக்கும் சுஸுகியின் இந்த பைக் தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்களிடம் இதன் ‘தனி ஒருவன்’ பாணியிலான டிசைன் எடுபடும் எனத் தோன்றுகிறது. மேலும், அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கைவிட அதிக வசதிகளைக்கொண்டிருந்தாலும், அதற்காகச் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் வெளிவந்திருக்கும் இன்ட்ரூடர் பைக், இளைஞர்களை ஈர்க்குமா என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.