ஹீரோ மோட்டோகார்ப்

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இம்பல்ஸ் பைக்குக்கு மாற்றாக, ‘எக்ஸ்-பல்ஸ்’ என்னும் கான்செப்ட் பைக்கை மிலன் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது ஹீரோ. முன்பக்க 21 இன்ச் ஆஃப் ரோடு டயர் மற்றும் Long Travel டெலிஸ்கோபிக் ஃபோர்க், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், விண்ட் ஸ்கிரீன் உடனான LED ஹெட்லைட், குறைவான பாடி பேனல்கள், நீளமான சிங்கிள் பீஸ் சீட், க்ராஷ் கார்டு, இன்ஜினுக்குக் கீழே Bash Plate, மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்ஸ் என ஒரு அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் அனைத்தையும்கொண்டிருக்கிறது, எக்ஸ்-பல்ஸ். இந்த பைக்கில் புதிய 200சிசி இன்ஜின் பொருத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம்! இது 2018-ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும்.

ராயல் என்ஃபீல்டு

தனது சரித்திரப் பின்னணிகொண்ட Interceptor பெயரை, புதிய Interceptor INT 650 ரெட்ரோ ரோட்ஸ்டர் பைக் மூலமாக மீட்டெடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. மேலும், கான்டினெட்டல் GT Twin எனும் கஃபே ரேஸர் மாடலையும் காட்சிப்படுத்திய இந்த நிறுவனம், தற்போது ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்குகளின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இவை இரண்டிலும் இருப்பது, 47bhp பவர் மற்றும் 5.2kgm டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய 648சிசி ஏர்-ஆயில் கூல்டு, பேரலல் ட்வின் ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின்; ஸ்லிப்பர் கிளட்ச் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - S&S ட்வின் எக்ஸாஸ்ட் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது. டபுள் க்ரெடில் ஸ்டீல் ஃப்ரேம், டெலிஸ்கோபிக் - ட்வின் கேஸ் ஷாக் அப்ஸார்பர், ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்ஸ், பைரலி டயர்கள் என இந்த இரு பைக்குகளுக்கும் ஒற்றுமைகள் அதிகம் என்றாலும், தோற்றம் மற்றும் வசதிகளில் இவை வேறுபடுகின்றன. ஏப்ரல் 2018-ல் ஐரோப்பியச் சந்தைகளில் அறிமுகமாகவிருக்கும் இவை, இந்தியாவில் சுமார் 3.5 லட்சத்துக்குக் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

பெனல்லி

TRK 251, 302S, இம்பீரியல்-400, 402S, 752S என ஒரு புதிய படையையே காட்சிப்படுத்தியிருந்தது பெனெல்லி. இதில் TRK 251, TNT-25 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் அட்வென்ச்சர் பைக். ஆனால், இது பார்ப்பதற்கு TRK 502 பைக்கின் தம்பி போலவே இருக்கிறது, தற்போது விற்பனையில் இருக்கும் TNT-300 பைக்கின் பேஸ்லிஃப்ட்தான் 302S. இது அடுத்த ஆண்டில் வெளிவரும் எனத் தெரிகிறது. மேலும், ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் பைக்குக்குப் போட்டியாக, தனது இம்பீரியல்-400 பைக்கை பொசிஷன் செய்திருக்கிறது பெனெல்லி! இது, இந்த பைக்கின் டெக்னிக்கல் விவரங்களில் நன்கு பிரதிபலிக்கிறது. டுகாட்டி டயாவெல் பைக்கின் மினியேச்சர்போலக் காட்சியளிக்கும் 402S, முற்றிலும் புதிய 399.3சிசி பேரலல் ட்வின் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. தவிர, இந்த நிறுவனத்தின் வரலாற்றிலே, பவர்ஃபுல்லான பேரலல் ட்வின் இன்ஜினுடன் (754சிசி - 81.6bhp பவர் & 6.7kgm டார்க்) களமிறங்கி இருக்கிறது 752S. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இவை குறித்த அதிக விவரங்கள் தெரியவரும்.

கேடிஎம்

முற்றிலும் புதிய டியூக் 790 மற்றும் 790 அட்வென்ச்சர் R Prototype பைக்குகளைக் காட்சிப்படுத்தியது கேடிஎம். இவை இரண்டிலும் இருப்பது, 105bhp பவர் மற்றும் 8.6kgm டார்க்கை வெளிப்படுத்தும் 799சிசி, பேரலல் ட்வின் இன்ஜின். டியூக் 790 பைக்கில் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், WP 43மி.மீ USD ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்ஸ், குறைவான 174 கிலோ எடை, LED ஹெட்லைட், LED டெயில் லைட், TFT டிஸ்ப்ளே என கேடிஎம் பைக்குகளுக்கே உரித்தான அம்சங்கள் இருந்தாலும், Super Moto மோடு உடனான கார்னரிங் ஏபிஎஸ் - Lean Angle Sensing ட்ராக்ஷன் கன்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், ரைடிங் மோடுகள், பை-டைரக்ஷனல் க்விக்-ஷிஃப்டர், WP ஸ்டீயரிங் டேம்பர், அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பார் எனப் போட்டியாளர்களில் இல்லாத வசதிகளையும் இது கொண்டிருக்கிறது. டியூக் 790 பைக்கை, இந்தியாவில் 2019-ல் கேடிஎம் விற்பனைக்குக் கொண்டுவரலாம். இதே பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் 790 அட்வென்ச்சர் R Prototype, ஆஃப் ரோடு பைக்காக அசத்துகிறது.

லாம்ப்ரெட்டா

இத்தாலியைச் சேர்ந்த ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான இது, இந்தியாவில் 2019-ல் மீண்டும் கால்பதிக்கிறது! V-Special எனும் புதிய சீரிஸில், மூன்று ஸ்கூட்டர்களை (V50, V125, V200) இந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது. பெயரில் இருப்பது, இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின்களின் திறன்தான்! LED ஹெட்லைட்ஸ், முன்பக்க 220மி.மீ டிஸ்க் பிரேக் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஆகியவை, இந்த மூன்று மாடல்களுக்கும் பொதுவான அம்சங்கள். V125-ல் CBS இருந்தால், V200-ல் ஏபிஎஸ் இருக்கிறது. இந்தியாவில் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்பட உள்ள V-Special ஸ்கூட்டர்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திட்டத்தில் இருக்கிறது லாம்ப்ரெட்டா.