‘நாங்க எதைச் செய்தாலும் வித்தியாசமாத்தான் செய்வோம்’ என்று சொல்லும் டெஸ்லா நிறுவனம், புதிய டிரக்கான செமியை அறிமுகப்படுத்தியதும் அப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் மேடைக்கு வருவதுபோல, இசையுடன் பந்தாவாக மேடைக்கு வந்தது 18 வீல் செமி டிரக். டிரக்கிலிருந்து இறங்கிய எலான் மஸ்க்குக்கு விசில் பறந்தது.

டிரக்கைப் பற்றிக் கூற ஆரம்பித்த எலான், ‘‘டெஸ்லாவின் செமி டிரக், 0-60 மைல் வேகத்தை ஐந்து விநாடிகளில் தொட்டுவிடும். அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் உச்சபட்ச எடையான 3,600 கிலோ எடையைச் சுமந்துகொண்டு 0-60 மைல் வேகத்தை 20 விநாடிகளில் தொடும்’’ என்று கூறினார். ‘‘செமியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மைல் தூரம் செல்லலாம். அதுமட்டுமா... 30 நிமிட சார்ஜுக்கே 400 மைல் சென்றுவிடலாம். சார்ஜ் செய்வதெல்லாம் பெரிய வேலை இல்லை. எடையைக் கீழே இறக்கும்போதே சார்ஜ் செய்துவிடுங்கள். இதில், ஆட்டோ பைலட் டெக்னாலஜியும் உண்டு” என்று எலான் மஸ்க் முடிவுரையாகச் சொல்ல... மேடையில் விளக்குகள் அணைந்துவிட்டன. ‘கிளம்புவோம்... வேற என்ன இருக்கு’ என்று நினைத்த அனைவருக்கும் இன்னும் ஓர் இன்ப அதிர்ச்சி. காதைக் கிழிக்கும் கிடார் இசை கேட்க... அசத்தலாக வந்தது இரண்டாம் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டர். மைக்கை எடுத்து மறுபடியும் ஆரம்பித்தார் எலான் மஸ்க். ‘வெகு காலமாக எங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி, எப்போது அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் காரை உருவாக்குவீர்கள் என்பதுதான். இதோ தயாராகிவிட்டது அடுத்த ரோட்ஸ்டர்.’’

பார்வையாளர்களையும் பத்திரிகையாளர்களையும் அசத்தும்விதமாக இருந்த ரோட்ஸ்டர் பற்றி எலான் கூறுகையில், “இதுவரை தயாரிப்பில் உள்ள கார்களிலேயே வேகமானது புதிய ரோட்ஸ்டர். இந்த இரண்டாம் தலைமுறை ரோட்ஸ்டர் 0-60 மைல் வேகத்தை 1.9 விநாடிகளில் தொடும். 0-100 மைல் வேகத்தை 4.2 விநாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்ச வேகத்தை இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், 250 மைல் வேகத்தைவிட அதிகம்தான்” என ட்விஸ்ட் வைத்தார். ரோட்ஸ்டர் 10,000 Nm டார்க் தரும் என்று கூறியது, அன்று இரவு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிக்கும் நிறுவனங்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடுவதாக இருந்தது.

புதிய ரோட்ஸ்டரில் 200 கிலோ வாட் பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டு 1,000 கி.மீ வரை பயணிக்கலாம். அதுவும், இதுவரை தயாரிப்பில் உள்ள எந்த காரும் ஒரே சார்ஜில் 1,000 கி.மீ செல்லலாம் என்ற வாக்குறுதியைத் தந்ததில்லை. ‘‘முன்பக்க வீல்களுக்கு ஒன்றும் பின்பக்க வீல்களுக்கு இரண்டும் என இந்த காரில் மூன்று மோட்டார்கள் உள்ளன’’ என்று கூறிய எலான், ‘‘இது 2 சீட்டர் கார் இல்லை; நான்கு பேர் செல்லக்கூடிய கார்’’ என்றதும் கைத்தட்டல்கள் பறந்தன.

‘‘2020-ம் ஆண்டுக்கு மேல்தான் இந்த காரின் வர்த்தக ரீதியான உற்பத்தி துவங்கும், வேண்டுமென்றால், இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்” என்று கிளம்பிவிட்டார் எலான். செமி டிரக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டு, ரோட்ஸ்டரையும் சேர்த்து அறிமுகப்படுத்தி, பெரிய இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது டெஸ்லா!