ஃப்யூல் செல் வெஹிக்கிள்... இது கேட்பதற்கு மர்மமாகத் தெரிந்தாலும், ஹோண்டாவின் க்ளாரிட்டி (Clarity) காரைப் பார்க்கும்போது, இது வழக்கமான பெட்ரோல் செடான் கார் போலவே இருக்கிறது. முன்பக்க இருக்கைகள் சொகுசாக இருப்பதுடன், பின்பக்க இருக்கையில் மூன்று பேருக்கு இடவசதி இருக்கிறது. க்ளாரிட்டியின் கட்டுமானத் தரம், காரின் கதவுகளை மூடும்போதே தெரிகிறது. இப்படி ஒரு பெரிய விஷயத்தைச் சர்வசாதாரணமாகச் செய்திருக்கும் ஹோண்டாவின் பொறியாளர் குழுவுக்கு ஒரு லைக்! ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளாக, ஃப்யூல் செல் வெஹிக்கிள்களைத் தயாரிப்பதில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. இவர்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்தான், இங்கே நீங்கள் படத்தில் பார்ப்பது! முதலில் ஜப்பான், பின்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், FCX Clarity காரின் அடுத்த தலைமுறை மாடலாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது.

காரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஹைட்ரஜன், செல்களில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் இணைபுரியும்போது, மின்சாரம் உற்பத்தியாகிறது. இது டிரைவ் மோட்டாரை இயக்குவதுடன், இதன் வெளிப்பாடாகத் தண்ணீர் மட்டுமே வெளியாகிறது. க்ளாரிட்டி காரில் ஃப்யூல் செல்லின் அளவைக் குறைத்து, அதன் செயல்திறனில் முன்னேற்றத்தைக் காட்டுவதற்காக மெனக்கெட்டிருக்கிறது ஹோண்டா. அதன் எதிரொலியாக, முந்தைய FCX Clarity காருடன் ஒப்பிடும்போது, FCV Clarity காரின் ஃப்யூல் செல்லின் அளவு, மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கிறது. இதை இன்ஜின் இருக்கும் இடத்தில் வைத்திருப்பதால், நடுவரிசை இடவசதி சிறப்பாக இருக்கும் எனலாம். ஃப்யூல் செல் அமைப்பு, ஹைட்ரஜன் மற்றும் காற்றை வெளிப்படுத்தும் அமைப்பு, டிரைவ் மெக்கானிசம் ஆகிய மொத்தமும் ஒரு சிங்கிள் பேக்கேஜாக இருப்பதுடன், இது அளவுகளில் ஒரு பெட்ரோல் V6 இன்ஜின் போலவே இருக்கிறது.

அதிகக் காற்றழுத்தத்தில், வித்தியாசமான அளவுகளில் இருக்கும் இரண்டு டேங்க்கில் ஹைட்ரஜன் அடைக்கப்பட்டிருக்கிறது. காரின் அடிப்பகுதியில் இருக்கும் லித்தியம் ஐயான் பேட்டரி, ஃப்யூல் செல் மற்றும் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமித்துவைக்கிறது. 177bhp பவர் மற்றும் 30kgm டார்க்கை வெளிப்படுத்தும் க்ளாரிட்டி, ஒரு எலெக்ட்ரிக் காரை ஓட்டுவதுபோலவே இருக்கிறது. இதனால் ஆரம்பக் கட்டத்தில் ஆக்ஸிலரேஷன் அதிரடியாக இருந்தாலும், வேகம் செல்லச் செல்ல பவர் குறைபாட்டை உணர முடிகிறது. ஏர் கம்ப்ரஸர் இயங்கும் சத்தத்தைத் தவிர, காருக்குள் எந்தச் சத்தமும் கேட்கவில்லை. க்ளாரிட்டி உற்சாகமான அனுபவத்தைத் தராவிட்டாலும், இதன் ரேஞ்ச் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். ஆம், வெறும் மூன்று நிமிட ஃபில்லிங் டைமில், உத்தேசமாக 750 கி.மீ தூரம் பயணிக்க முடிகிறது. இது சில டர்போ-சார்ஜிங் அமைப்பைக்கொண்ட எலெக்ட்ரிக் கார்களைவிடவும் அதிகம்!

அதிக ரேஞ்ச், நீரை மட்டுமே வெளியிடுவதால் மாசுப் பிரச்னை இல்லை, பூமியில் அதிகமாக இருக்கும் ஹைட்ரஜன்தான் எரிபொருள் என இந்த காருக்குப் பல ப்ளஸ்கள் இருக்கின்றன. என்றாலும், ஒரு கலவையில் இருக்கும் ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தெடுப்பது மிகவும் காஸ்ட்லியான செய்முறை. தவிர, செய்முறை பின்பற்றப்படும் விதத்தைப் பொறுத்து, அது சுற்றுச்சூழல் மாசுக்கும் வழிவகுக்கும். மேலும் ஹைட்ரஜனை ஓர் இடத்தில் அடைத்து வைப்பது மற்றும் அதனை விநியோகிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், உலகின் ஒருசில பகுதிகளில்தான் க்ளாரிட்டி போன்ற ஃப்யூல் செல் வெஹிக்கிள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஒரு ஹைட்ரஜன் பம்ப்புக்காக, ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். நிகழ்காலம் இப்படி இருந்தாலும், இன்னும் 10 ஆண்டுகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில், எலெக்ட்ரிக் கார்களை, இப்படித்தான் நாம் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தோம்!