ஒரு முடிவோடுதான் இருக்கிறது ஃபோர்டு. சென்ற மாதம் எக்கோஸ்போர்ட்டில் ‘டிராகன் சீரிஸ்’ எனும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுவந்து மிரட்டியது. அதே எக்கோஸ்போர்ட்டில், இந்த மாதம் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் மேனுவல் மாடல்களையும் கொடுத்து டெஸ்ட் டிரைவ் போகச் சொன்னது ஃபோர்டு. டிசைன், வசதிகள் அதே! அதனால், பர்ஃபாமென்ஸில் மட்டும்தான் என் கவனம் இருந்தது. முதலில் பெட்ரோல். 1.5 லி இன்ஜின். 123 bhp பவர் என்றார்கள். 1.0லி எக்கோ பூஸ்ட் இன்ஜின் ஞாபகம் இருக்கிறதா? அதைவிட 2 bhpதான் குறைவு.

3 சிலிண்டரை ட்ரெண்டிங் ஆக்கிவிடும் போலிருக்கிறது ஃபோர்டு. பேலன்ஸர் ஷாஃப்ட், பேலன்ஸ்டு ஃப்ளை வீல் என்று இன்ஜின் மவுன்ட்டில் ஏகப்பட்ட வேலை பார்த்திருக்கிறது. அதனால், 3 சிலிண்டர் இன்ஜின் என்றால் நம்பவே முடியவில்லை. டிராகனில் அதிர்வுகள்... மூச்! ஆனால், மேனுவலைவிட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்தான் சத்தம் போடுகிறதோ என்று தோன்றியது.

ஏனென்றால், சமீபத்தில் மேனுவலில் ஓட்டிய உற்சாகம், ஆட்டோமேட்டிக்கில் லேசாகக் குறைந்ததுபோல் தெரிந்தது. ‘ஆட்டோமேட்டிக்கில் ஏன் இப்படி?’ என்று ஒருவேளை ‘மோடு’ பிரச்னையாக இருக்குமோ என்று ‘ஸ்போர்ட்ஸ் மோடில்’ வைத்து ஓட்டினேன். அப்படியும் திருப்தியில்லை. 70 கிலோ எடை கூடியது காரணமாக இருக்கலாம் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸில் ஏதோ சுணக்கம் இருக்கலாம்.

இது டிராஃபிக்கில் அப்படியே தலைகீழாக இருந்தது. செம ஸ்மூத். பேடில் ஷிஃப்டர்கள் பயன்படுத்தி மேனுவலாக டிராஃபிக்கில் ஓட்டுவதும் ஜாலியாக இருந்தது. அப்படியென்றால், டிராஃபிக்கில்தான் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் நல்லதோ என்று தோன்றுகிறது. 'சட் சட்' என க்விக் ஷிஃப்ட் ஆகும் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்தான் ஹைவேஸுக்குச் சரியோ? கடுமையான டிராஃபிக்கில், ரிலாக்ஸ்டு டிரைவிங்குக்கு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் செமயாக இருந்தது.

அடுத்து, டீசல். 1.5 லிட்டர், 100 bhp பவர். குட்டி காரான ஃபிகோவுக்கே இந்த இன்ஜின்தான். இங்கே இன்னும் கொஞ்சம் பவர் கூட்டியிருக்கலாம். டார்க், 20.5kgm. பவர் டெலிவரி சீராகக் கிடைத்தது. த்ராட்டில் ரெஸ்பான்ஸும் சூப்பர். இன்ஜின் சத்தமும் அவ்வளவாக இல்லை. கியர்பாக்ஸ்? கியர் போட கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறதோ? சிட்டிக்குள் சிக்கல்தான். ஆனால், கிளட்ச்சைப் பற்றிக் குறையொன்றும் இல்லை.

சஸ்பென்ஷனில்தான் பெரிய மாற்றமே! அதனால், ஓட்டுதல் தரத்தில் பெரிய முன்னேற்றம். டாப் வேரியன்ட்டில் 17 இன்ச் டயர்கள். வாவ்! இந்த செக்மென்ட்டில் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ள ஒரே கார் - எக்கோஸ்போர்ட்தான்.

டீசலுக்கும் பெட்ரோலுக்கும் இதுதான் ஒருவரித் தீர்ப்பு. வழக்கம்போல், ஹைவேஸில் ரொம்ப ஜாலியான டிரைவுக்கு டீசல். சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டுவர பெட்ரோல் ஆட்டோமேட்டிக்.