‘ஸ்கார்ப்பியோ பிடிச்சவங்க கை தூக்குங்க’ என்றால், கன்னாபின்னாவெனக் கைகள் உயரும். முரட்டுத்தனமான தோற்றமும், ஆஃப்ரோடிங் தன்மையும், சாஃப்ட்டான சஸ்பென்ஷனும்தான் ஸ்கார்ப்பியோவுக்கு இத்தனை லைக்ஸை அள்ளிக் குவிக்கின்றன. ஆனால், ஒரே ஒரு குறை - இதன் டாப் எண்டு பர்ஃபாமென்ஸ். இதை ஸ்கார்ப்பியோ ஓட்டுபவர்களிடம் கேட்டால் தெரியும். ‘‘டாப் ஸ்பீடில் போகும்போது ஓவர்டேக்கிங்ல ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்று சொல்வார்கள்.
அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகத்தான் புதிய ஸ்கார்ப்பியோவை அறிமுகம் செய்திருக்கிறது மஹிந்திரா. புதுசு என்றால் புதுசில்லை; ஃபேஸ்லிஃப்ட்தான். அதே 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினின் பவரிலும் டார்க்கிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். பழசைவிட 20bhp பவர் மற்றும் 4kgm டார்க் அதிகமாகக் கிடைக்கிறது. அதாவது, 140bhp பவர் மற்றும் 32kgm-லும் களமிறங்கி உள்ளது புதிய ஸ்கார்ப்பியோ. கிட்டத்தட்ட XUV 500-வை ஓட்டும் அனுபவத்தை இதில் பெறலாம் என்கிறது மஹிந்திரா. புதுசை அறிமுகப்படுத்திய கையோடு, வேரியன்ட்களையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். S11 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டாப் வேரியன்ட்டில் மட்டும்தான், 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆரம்ப வேரியன்ட்டான S3-ல் இருப்பது 2.5 லிட்டர் M2DiCR இன்ஜின். இதில் 75bhp பவரும், 20kgm டார்க்கும்தான். மற்ற வேரியன்ட்களான S5, S7-ல் இருப்பது 2.2 லிட்டர் mHawk 120bhp பவர், 28kgm டார்க் கொண்ட இன்ஜின். இப்போது டாப் வேரியன்ட்டை, மஹிந்திராவின் டெஸ்ட் டிராக்கில் டெஸ்ட் செய்து பார்த்தேன்.

இதற்குப் பெயரே mHawk140 இன்ஜின். பவர் கூடி இருப்பதை நன்கு உணர முடிகிறது. அதைவிட ஒரு பெரிய லைக் பட்டன் - இதன் டார்க்குக்கு. (32kgm). (இருந்தாலும், டாடா ஹெக்ஸாவை நெருங்க முடியவில்லையே?) புல்லிங் பவருக்கு ஒரு ஸ்மைலி. டர்போ லேக் விஷயத்தில், ஸ்கார்ப்பியோ எப்போதுமே படுத்தாது. புதுசில் இன்னும் ஒருபடி மேலேபோய், ‘இந்தா பிடி’ என்று புதிய போர்க் வார்னர் டர்போ சார்ஜரைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. 1,500 rpm-ல் இருந்தே படமெடுக்கும் பாம்புபோல் கார் சீறுகிறது. அதாவது, லோ எண்டிலேயே அளவுக்கதிகமான டார்க் கிடைப்பதுபோல் தெரிந்தது. ஆம். இனிஷியல் ஆக்ஸிலரேஷன் அருமை. மிட் ரேஞ்ச்? அதிலும் முன்னேற்றம் இருக்கிறது. பழசை ஓட்டிவிட்டு mHawk 140-ஐ ஓட்டும்போது இதை என்னால் நன்கு உணர முடிந்தது. இதைத்தானே மஹிந்திரா ஆரம்பத்தில் சொன்னது. மிட் ரேஞ்ஜும் டாப் எண்டும் திருப்தியாக இருக்கும் பட்சத்தில்தான் ஓவர்டேக்கிங் திருப்தியாக இருக்கும்.

மிட் ரேஞ்ஜைவிட, டாப் எண்டில் கார் அருமை. இதுவே பழைய ஸ்கார்ப்பியோவாக இருந்தால், மராத்தான் ரன்னர்போல் மூச்சு வாங்கும். புதுசில் அந்தக் குறை தெரியவில்லை. நெடுஞ்சாலை க்ரூஸிங்கில் ஆறாவது கியருக்குத்தான் இந்த கிரெடிட்ஸ் எல்லாம் போய்ச் சேர வேண்டும். பழசைவிட இதில் கியர் மாற்றுவதும் ஈஸியாக இருக்கிறது. கியர் ஷிஃப்ட் தரத்தில் வேலை பார்த்துள்ளதால் இந்த மாற்றம். ஆனால், ரிவர்ஸ் கியர் போடுவதற்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி தேவைப்படுகிறது.

ஸ்கார்ப்பியோவின் பிரேக்ஸுக்கும் தேங்க்ஸ். பிரேக் பூஸ்டர் அளவுகளில் மாற்றம் செய்துள்ளது மஹிந்திரா. கிளட்ச் பிளேவிலும் நல்ல மாற்றம். ஈஸியாக அழுத்த முடிந்தது.

ஸ்கார்ப்பியோ என்றாலே சத்தம் போடும்தானே! இதில் கூடுதல் சவுண்ட் டெட்டனிங் மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளதால், NVH (Noise Vibration Harshness) லெவல் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆரம்பத்தில் அதிர்வு தெரிந்தாலும், போகப் போக குறைந்துவிடுகிறது. டிரைவர் பக்கத்தில் இருக்கும் அந்த ‘A’ பில்லரில் ஏன் இவ்வளவு காற்றுச் சத்தம்?

அதே சாஃப்ட் சஸ்பென்ஷன்தான். ஆனால், அதிகரிக்கப்பட்ட எடை மற்றும் பர்ஃபாமென்ஸைச் சமாளிப்பதற்காக, ஸ்பிரிங் மற்றும் டேம்ப்பர் செட்டிங்குகளில் வேலை பார்த்துள்ளதாகச் சொல்கிறது மஹிந்திரா.

வெளிப்பக்கத்தைப் பொறுத்தவரை, கிரில் மாறியிருக்கிறது. எண்ணிப் பார்த்தால் 7 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷிங் பிளேடு தெரியும். பம்பர், பனிவிளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் எல்லாமே சூப்பர். அட, சைடு மிரரில் இண்டிகேட்டர் ஒளிர்கிறதே! பெரிய காருக்கு இது அவசியம் என்பதை இப்போதாவது உணர்ந்ததே மஹிந்திரா?

S11-க்கு உள்ளே லெதர் மயம். லெதர் சீட்டுகள், கியர் லீவருக்கும் ஸ்டீயரிங்குக்கும்கூட லெதர் ஃபினிஷிங். மற்றபடி கேபின் அப்படியே பழைய ஸ்கார்ப்பியோதான். பிளாஸ்டிக் பாகங்களில் மாற்றமில்லை. அந்த கதவு ஹேண்டில்கள், கோபத்தில் இழுத்தால் கையோடு வந்துவிடும் போலிருக்கிறது. ஃபிட் அண்டு ஃபினிஷில் இன்னும் முன்னேற்றம் வேண்டும் மஹிந்திரா.

நல்லவேளையாக ரிவர்ஸ் கேமரா கொடுத்திருக்கிறார்கள். டச் ஸ்கிரீனும் இருக்கிறது. ஆனால், முக்கியமான ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோவுக்கான கனெக்ட்டிவிட்டி இல்லை. மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் என்று பிராக்டிகலாகவும் சில விஷயங்கள். முக்கியமாக கியர் லீவருக்குப் பக்கத்தில் போன் வைத்துக்கொள்ளலாம்; ரியர்வியூ மிரருக்குப் பக்கத்தில் இருக்கும் பவுச்சில் சன் கிளாஸ் வைத்துக்கொள்ளலாம்.

S3 வேரியன்ட்டைத் தவிர எல்லாவற்றிலும், ABS-ம் இரண்டு காற்றுப் பைகளும் ஸ்டாண்டர்டாக வருகிறது. S11-ன் சென்னை ஆன்ரோடு விலை 18.43 லட்சம். ஹெக்ஸா, சஃபாரி, எக்ஸ்யூவி கார்களில் இருக்கும் பன்ச் மிஸ் ஆகிறது என்று, ஸ்கார்ப்பியாவில் இனி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.