மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இது, மோட்டார் விகடன் விருதுகள் சீஸன். ஓர் ஆண்டில் எத்தனை கார் - பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், அவற்றில் ஒரு சிலதான் வாடிக்கையாளர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும். ஸ்டைல், இன்ஜின், பர்ஃபாமென்ஸ், ஹேண்ட்லிங், சஸ்பென்ஷன், இடவசதி, சிறப்பம்சங்கள், தரம், சர்வீஸ், விலை என்று ஏராளமான அளவுகோல்களை வைத்துத்தான் வாடிக்கையாளர்கள் வெற்றிக்கோப்பையைக் கொடுக்கிறார்கள். எந்தெந்த வாகனங்கள் எதில் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன என்பதை, வாடிக்கையாளர்கள் இனம்காண உதவிசெய்ய வேண்டிய கடமை, மோட்டார் விகடனுக்கு உண்டு. அதேபோல், மோட்டார் விகடன் விருதுக்கான நிபுணர் குழுவுக்கு உதவிசெய்ய வேண்டிய கடமை, வாசகர்களாகிய உங்களுக்கும் உண்டு.

சென்ற ஆண்டில் வெளிவந்த கார்களின் எண்ணிக்கை மட்டும் 20. இதில், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கார்களையும் சேர்த்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிடும். அதேபோல, புதிதாக அறிமுகமான பைக்குகளின் எண்ணிக்கையும் இருபதுக்கும் மேல். இந்த எல்லா கார் மற்றும் பைக்குகள் பற்றிய நமது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட், டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட், கம்பாரிஸன் ரிப்போர்ட் ஆகியவற்றைப் படித்ததைத் தாண்டி, இதில் பல கார் மற்றும் பைக்குகளை ஓட்டிய அனுபவமும் உங்களில் பலருக்கு உண்டு.

இந்த இதழில் அளிக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டில், நடப்பு ஆண்டில் வெளியான முக்கியமான கார் மற்றும் பைக்குகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம். இந்த வாக்குச்சீட்டில் உங்கள் தேர்வின்படி மிகச் சிறந்த கார், மிகச் சிறந்த பைக் ஆகிய இரண்டைத் தேர்ந்தெடுத்து, டிக் செய்து எங்களுக்குத் தபால் மூலம் அனுப்பிவையுங்கள். மோட்டார் விகடனின் நிபுணர் குழுவின் முடிவும் உங்கள் முடிவும் ஒன்றாக இருந்தால், உங்களுக்குச் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

அன்புடன்

ஆசிரியர்