எந்த காரை வாங்குவது? அதை எப்படி வாங்கலாம்? காய்கறி வாங்குவதற்கே தடுமாறும் நாம், நமக்கு ஏற்ற காரைத் தேர்ந்தெடுப்பதற்கும், சரியான விலையில் வாங்குவதற்கும் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். ‘ஷோ ரூம் போனோம்; புக் செய்தோம்; வாங்கினோம்’ என்பதல்ல கார் வாங்குவது. கார் வாங்குவதற்குப் பணமோ அல்லது இ.எம்.ஐ கட்டும் தகுதியோ மட்டும் இருந்தால் போதாது. அதையும் தாண்டி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். இந்த இதழில், உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து எந்த கார் வாங்குவது, எப்படித் தேர்வு செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

பட்ஜெட் என்ன?

கார் வாங்கும் ஆசை துளிர் விட்டவுடன், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான். பேப்பர், பேனா அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு போனில், மெமோ பேடை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மாதச் சம்பளக்காரர் என்றால், உங்கள் சம்பளத்தில் எவ்வளவு மிச்சம் பிடிக்க முடியும்; வங்கிக் கடனில் வாங்கப் போகிறீர்கள் என்றால், மாதத் தவணை எவ்வளவு செலுத்த முடியும்; டவுன் பேமென்ட் எவ்வளவு திரட்ட முடியும்; மாதந்தோறும் கார் பராமரிப்புக்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்க முடியும் - எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள்.

அதைவிட முக்கியம், நீங்கள் எதற்காக கார் வாங்கப் போகிறீர்கள்? வீக் எண்டில் டூர் அடிக்கவா? அலுவலகம் போய்வரவா? பொதுவாக, காரில் எத்தனை பேர் பயணிப்பீர்கள்? இப்போது மேட்டருக்கு வருவோம்.

எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

உதாரணத்துக்கு, உங்கள் வங்கி கையிருப்பு ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெரும்பாலும் கணவன், மனைவி, குழந்தைகள்தான் காரில் பயணிப்பீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மாதந்தோறும் 10,000 ரூபாய் தவணை செலுத்த முடியும் என்றால், உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹேட்ச்பேக் கார் போதுமானது. கையிருப்பும் தவணைத் தொகையும் அதிகமானால் பரவாயில்லையெனில், உங்களுக்கு செடான் கார் சரியான சாய்ஸாக இருக்கும். ஆனால், பட்ஜெட் சற்றே அதிகரிக்கும்.

கம்பீரமான கார் வேண்டும் என்றால், காம்பேக்ட் எஸ்யூவிகளை டிக் அடிக்கலாம். இதுவே ஏழு பேர்கொண்ட குடும்பம் என்றால் ஹேட்ச்பேக்கோ, செடானோ எப்படிச் சரியாகும்? யோசிக்கவே தேவையில்லை; எஸ்யூவி அல்லது எம்பிவிதான். ஆனால், பட்ஜெட் அப்படியே டபுள் ஆகிவிடும்.

பெட்ரோலா, டீசலா?

‘டீசல் கார் வேண்டாம்; பராமரிப்புச் செலவு அதிகமாகும்...’ ‘பெட்ரோல்தான் செம ஸ்மூத்’. ‘டீசல்தான் விலை கம்மி’ என ஏராளமான ஆலோசனைகள் எல்லா வழிகளிலும் வரும். நமக்கு என்ன தேவை? பெட்ரோலா, டீசலா... எப்படித் தெரிந்துகொள்வது?

ஏற்கெனவே சொன்னதுபோல், எதற்காக கார் வாங்கப் போகிறீர்கள்? மாதம் ஒன்றுக்கு சராசரியாக எவ்வளவு கி.மீ-க்கு காரைப் பயன்படுத்துவீர்கள் போன்ற கேள்விகளுக்கான விடையில் இருக்கிறது, பெட்ரோலா - டீசலா என்ற குழப்பத்துக்கான தீர்வு. உதாரணத்துக்கு, 15 கி.மீ தூரத்தில் இருக்கும் அலுவலகம் போய்வருவதற்காக காரைத் தேர்வு செய்திருக்கிறீர்கள் என்றால், தினமும் 30 கி.மீ - மாதத்துக்கு 900 கி.மீ - ஆண்டுக்கு சுமார் 11,000 கி.மீ தூரம்தான் காரைப் பயன்படுத்தப்போகிறீர்கள். அப்படியென்றால், உங்களுக்கு பெட்ரோல் கார்தான் சிறந்தது. ‘நான் அடிக்கடி அலுவலக விஷயமாகவோ, ஜாலி ட்ரிப்புக்காகவோ நெடுஞ்சாலைப் பயணம் செல்வேன்’ என்பவர்கள், கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும். அதாவது, மாதம் 2,000 கி.மீ-யைத் தாண்டி கார் ஓடும் என்றால், டீசல் கார்தான் சரியான ஆப்ஷன்.

ஏன் பெட்ரோல்?

‘டீசல்தான் விலை குறைவு; அதனால், டீசல்தான் என்னோட சாய்ஸ்’ என்பவர்களும் உண்டு. எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் பெட்ரோல் கார், டீசல் காரைவிட சுமார் ஒரு லட்சம் வரை விலை குறைவு. இதுவே டாப் எண்ட் மாடலுக்குப் போகும்போது, சுமார் 1.5 லட்சம் வரை விலை குறையும் மாடல்களும் உண்டு. ஆண்டுக்கு 12,000 கி.மீ-க்கு உள்ளாக ஓடும் குறைவான ஓட்டம்கொண்ட கார்கள், பெட்ரோலாக இருந்தால்
தான் உங்கள் பர்ஸுக்குப் பாதுகாப்பு. ஏனென்றால், நீங்கள் டீசல் மாடலுக்குக் கொடுக்கும் ஒரு லட்ச ரூபாயை ஈடுகட்ட, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிடும். இதுதான் லாஜிக்.

ஏன் டீசல்?

டீசல் விலை குறைவு என்பதற்காக மட்டுமே, டீசல் காரைத் தேர்ந்தெடுப்பது சரியல்ல. ஆனால், ‘காரின் ஓட்டம் எப்படியும் மாதம் 2,000 கி.மீ தாண்டும்’ என்பவர்கள், ‘டீசல் கார், பெட்ரோலைவிட விலை அதிகமா இருக்கே’ என்று யோசிக்க வேண்டியதில்லை. டீசல் கார்தான் சரியான ஆப்ஷன். இங்கேதான் டீசல் - பெட்ரோல் விலை வித்தியாசத்தை நீங்கள் கணக்கிட வேண்டும். இன்றைய தேதியில் பெட்ரோலைவிட டீசல் விலை சுமார் 11 ரூபாய் குறைவு. உங்கள் காரின் அதிக ஓட்டத்தையும், இந்த விலையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாக வரும்! அதிலும் டிராவல்ஸுக்கு வாடகைக்கு விடுபவர்கள், யோசிக்கவே வேண்டியதில்லை. டீசல் கார்தான் சரி.

அடுத்த டாஸ்க், கடனில் கார் வாங்குவது பெஸ்ட்டா... நெட் கேஷா?

- கார் வாங்கலாம்

கார்களைப் பற்றி...

* ஹேட்ச்பேக்

டிக்கி இடவசதி அவ்வளவாக இல்லாத, 4 மீட்டருக்குட்பட்ட 4 பேர் வசதியாகப் பயணிக்கக் கூடிய சிறிய கார்.

* செடான் (அ) சலூன்

டிக்கி இடவசதி கொண்ட 4 மீட்டருக்குட்பட்ட கொஞ்சம் பெரிய கார்.

* லக்ஸூரி செடான்

4 மீட்டருக்கும் அதிகமான, அதிக இடவசதி மற்றும் டிக்கி கொண்ட சொகுசான கார்.

* காம்பேக்ட் எஸ்யூவி

4 மீட்டருக்குட்பட்ட காம்பேக்ட் செடான்களுக்கு மாற்று ஆப்ஷன். கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கும்.

* க்ராஸ்ஓவர்

‘ஹேட்ச்பேக் ஓட்டி போர் அடிச்சுடுச்சு; எஸ்யூவி லுக்கில் ஹேட்ச்பேக் வேண்டும்’ என்பவர்களுக்கானது.

* எம்பிவி

7 பேர் கொண்ட பெரிய குடும்பங்களுக்கான மல்ட்டி பர்ப்பஸ் வெஹிக்கிள்.

* எஸ்யூவி

ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வெஹிக்கிள். அதாவது, கெத்தான தோற்றம் மற்றும் அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு.