Published:Updated:

ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...
ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...

சாதனை-ரேஸ்தமிழ்தென்றல்

பிரீமியம் ஸ்டோரி

ந்த மோட்டோ ஜிபியில் ஹோண்டாவின் மார்க் மார்க்யூஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே நேரத்தில், சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டு வந்திருக்கிறார்கள் ரெஹானாவும் கல்யாணியும். பெண்களுக்குப் பெரும் சவாலாக இருந்த இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு, இந்தியாவின் பெயரை ஹைலைட் செய்திருக்கிறார்கள் இவர்கள்.  

ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...

தாய்லாந்து, தாய்வான், டெல்லி - என மூன்று சுற்றுகளாக நடக்கும் Asian Cup of Racing-ல் ஜெயித்த பிறகு, Asian Cup Road Racing Championship. அடுத்து மோட்டோ 3, மோட்டோ 2... ஃபைனலாக மோட்டோ ஜிபி என்று இவர்கள் முன்னேறியிருக் கிறார்கள். மோட்டோ 3-ல் கலந்துகொள்வதே மோட்டோ ஜிபியில் கலந்து கொள்வதற்கு இணையான விஷயம். இதுவரை இந்தியா சார்பில் அந்தச் சாதனையைச் செய்தவர், சரத்குமார். இப்போது பெண்கள் சார்பாக அந்தச் சாதனையைச் நிகழ்த்தவிருக்கிறார்கள் ரெஹானா ரியாவும், கல்யாணியும்.

ரெஹானாவுக்கு அறிமுகம் தேவையில்லை. கலந்துகொண்ட முதல் ரேஸிலேயே, முதலாவதாக வந்து போடியம் ஏறிய பெருமை ரெஹானாவுக்கு உண்டு.

இப்போது பைக் ரேஸின் உச்சம் தொடவிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்யாணியும் சளைத்தவரல்ல. நேஷனல் சாம்பியன்ஷிப்பில் ஆண்களைக் கலங்கடித்தவர். இருவருக்கும் பைக்தான் முதல் மற்றும் கடைசிக் காதலன்.

சாம்பியன்ஷிப் ரேஸ் முடிந்தது. அடுத்து நடக்கும் ஆசியன் கப் சாம்பியன்ஷிப்புக்கு, பெண்கள் சார்பில் யாரை அனுப்பலாம் என்று FMSCI தேடிக்கொண்டிருந்தபோது, நம்பிக்கையை விதைத்து முன்னால் வந்தவர்கள் ரெஹானாவும் கல்யாணியும். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள் இருவரும். ‘‘நாங்க மட்டும் இல்லை. எங்ககூட ரேஸ் ஓட்டின ராஹில், இஸ்ரேல்... அவங்களுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. இது எங்களோட டீம் ஒர்க்!’’ என்று தங்கள் அணியை விட்டுத் தராமல் பேசினார்கள்.   

ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...

இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையை விதைக்கும் விதமாக, ரேஸ் போட்டிகள் நடக்கும். அதுதான் ‘ஆசியா கப் ஆஃப் ரேஸிங்.’ ஆசியாக் கண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்கள் இரண்டு பேர், பெண்கள் இரண்டு பேர் கலந்துகொள்வார்கள். மொத்தம் மூன்று ரவுண்டுகளாக நடக்கும் இதில், பாயின்ட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பவர்கள், அடுத்த இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்புக்குத் தகுதி பெறுவார்கள். கல்யாணியும், ரெஹானாவும் அதற்காக இப்போதே தங்கள் பைக்கை முறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதற்குமுன்,‘‘வெளிநாடுகளில் சாம்பியன்ஷிப் பைக் ஓட்டிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்’’ என்றதும், ஒரு ‘வ்வ்ர்ர்ரூம்’ பேட்டி கொடுத்தார்கள்.

தாய்லாந்து

‘‘முதல் சுற்று தாய்லாந்தில். நாங்க ரெண்டு பேருமே பைக் எக்ஸ்பர்ட்ஸ். இங்கே நடந்தது அண்டர்போன். அதாவது, ஸ்கூட்டர்போல் முன் பக்கம் டேங்க் இருக்காது. ஆனால், கியர் இருக்கும். இதைப் பழகுவதற்கே எங்களுக்கு ரொம்பச் சிரமமாக இருந்தது. புது இடம்; புது பைக்; புது நண்பர்கள். எங்களுக்கு ரொம்ப டஃப் கொடுத்தவங்க, ஜப்பானில் இருந்து வந்த ரெண்டு பொண்ணுங்க. என்னமா பைக் ஓட்டுறாங்க! மொத்தமே ஆறு பொண்ணுங்கதான். தாய்லாந்தில் இருந்து ரெண்டு பேர்; ஜப்பானில் இருந்து ரெண்டு பேர்; நாங்க ரெண்டு பேர். மத்த நாட்ல எல்லோருமே பிறக்கும்போதே பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்க ஆரம்பிச்சிடு வாங்கபோல! பசங்களோட ஓட்டும்போது இன்னும் டஃப்பா இருந்துச்சு. இங்கே கம்ப்யூட்டர் கேம் மாதிரி ரியலாகவே ஃபைட்டெல்லாம் நடக்கும். என்னை ட்ராக்குக்கு வெளியில தள்ளியே விட்டுட்டாங்கன்னா பார்த்துக்கோங்க! க்ராஷ் ஆகி வெளில போனா பாயின்ட்ஸ் கிடைக்காது. ஆனா, ரேஸ் ஃபினிஷ் பண்ணினாலே போதும். எங்களாலேயே நம்ப முடியலை. க்ராஷ் ஆகி ட்ராக் விட்டு வெளியே போயும், 11-வது இடத்தில் வந்து பாயின்ட்ஸை ரெக்கவர் பண்ணினேன். ஸோ, அடுத்த ரவுண்டுக்கு நாங்க செலெக்ட் ஆகிட்டோம். 

ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...

தாய்வான்

இதுவும் ஒரு வித்தியாசமான ரேஸ். இங்கே பைக் இல்லை. நம் ஊர் ஆக்டிவாவைவிட வெயிட்டாக இருக்கும் ஸ்கூட்டர். கியர் இருக்காது. முன் பக்கம் டேங்க்கும் இருக்காது. வெறும் பிரேக் மட்டும்தான். நினைக்கும்போது இது ஈஸியாக இருக்கும்னு நினைச்சோம். ஆனா, ட்ராக்கில் ஓட்டும்போதுதான் தெரிஞ்சுது - இதை கன்ட்ரோல் பண்றது எவ்வளவு கஷ்டம்னு. நம்ம ஊர் R15, KTM-மை விட செம வேகமா இருந்துச்சு. தாய்வானில் இந்த ஸ்கூட்டர்தான் ஃபேமஸ். பிராக்டிஸ் செய்யும்போது, தாய்வான் நாட்டு மக்கள்கிட்ட ஸ்கூட்டர் பற்றிப் பேசி நல்லா தெரிஞ்சுக்கிட்டு ரேஸில் கலந்துக்கிட்டோம். திமுதிமுனு மொத்தம் 40 பேர் கலந்துக்கிட்டாங்க. நான் ஆறாவதா வந்தேன். மொத்த பாயின்ட்களையும் கணக்குப் பண்ணி, டீம் இந்தியா சார்பில் எங்களுக்கு 3-வது பொசிஷன் கொடுத்தாங்க.

டெல்லி

இதுதான் ஃபைனல். இங்கே ஒரு நாட்டுக்கு ஒரு பொண்ணு மட்டும்தான் ரேஸ் ஓட்ட முடியும். நான் நல்லா பர்ஃபார்ம் பண்ணினதால, என்னையே கலந்துக்கச் சொன்னாங்க. இங்கே கல்யாணி கலந்துக்
கலை. மொத்தம் 30 பேர். எல்லோரும் வெறித்தனமா இருந்தாங்க. இதைவிட எனக்கு டஃப் கொடுத்தது - புது பைக். சுஸூகி 160 சிசி. நான் ஹோண்டாதான் ஓட்டியிருக்கேன். எல்லாமே GP சிஸ்டம். அதாவது, 1-அப், 4- டவுன்... இப்படி ரிவர்ஸ் சிஸ்டத்தில் கியர் பாக்ஸ் இருக்கும். மண்டை குழம்பிடுச்சு. பிராக்டிஸிங்கில கீழே விழுந்து செம அடி. எனக்கே சந்தேகமாகிடுச்சு. ஆனா, ராஹில் விடலை. ரேஸ்-1 ரேஸ்-2 ரெண்டு ரவுண்ட்லேயும் ஃபர்ஸ்ட் வந்து ஃபினிஷ் பண்ணிட்டார். நானும் டாப்-5-க்குள்ள வந்ததால, பாயின்ட்ஸ் எங்களுக்கு லம்ப்பா கிடைச்சுது. இப்போ நாங்க வின்னர்ஸ்! அடுத்து, ஆசியா இன்டர்நேஷனல் வேர்ல்டு கப் ஆஃப் ரேஸிங்குக்கு நாங்க ரெடி!’’

சீக்கிரம் மோட்டோ ஜிபி உங்களை அழைக்கட்டும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு