ரேடியல் டயர் என்றால் என்ன? கடந்த இதழில், டயரின் அளவுகள் குறித்துப் பார்த்தோம். தற்போது அதிகப் புழக்கத்தில் இருக்கும் ரேடியல் டயர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓர் ஆண்டு முன்பாக, அதாவது 1946-ல்தான் ரேடியல் டயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மிஷ்லின் நிறுவனம்தான் இதனை முதன்முறையாகத் தயாரித்ததுடன், அதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தது.

ரேடியல் டயரின் கட்டமைப்பு

பயாஸ்-ப்ளை டயர்களின் பீடிங், நைலான்/பாலியஸ்டர்/ஃபைபர் க்ளாஸ் இழைகளால் செய்யப்பட்டிருக்கும். இவை ஒன்றன்மீது ஒன்று இருக்கும் என்பதுடன், இவற்றின் பாதுகாப்புக்காக டயரின் த்ரெட்டுக்கு 30-45 டிகிரியில் நைலான்/பாலியஸ்டர்/ஃபைபர் க்ளாஸால் ஆன Breaker இருக்கும். இதுவே ரேடியல் டயர்கள் என்றால், ஸ்டீல் பெல்ட்களால் ஆன பீடிங் குறுக்குவசத்தில் இருக்கும். மேலும் ஸ்டீல் பெல்ட்கள், ரேடியல் டயர்களின் சுற்றளவில் இருக்கும் Tread-க்கு அடியிலும் காணப்படும். இதனால் டயர் தாங்கும் எடைக்கு ஏற்ப, அதன் சைடுவால் பகுதி வளைந்து கொடுக்கும் தன்மையைக்கொண்டிருக்கிறது. ஆனால், சாலையில் பதியும் த்ரெட்-ன் அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், நீங்கள் காரை ஓட்டும் விதத்துக்கு ஏற்ப டயர் செயல்படும். டிரக் போன்ற கனரக வாகனங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும் வழக்கமான பயாஸ்-ப்ளை டயர்களுடன் ஒப்பிடும்போது, ரேடியல்-ப்ளை டயர்களின் ப்ளஸ்பாயின்ட்களைப் பார்ப்போம்.

உறுதியான கட்டுமானம்: டயரின் நடுப்புறத்துக்கு செங்குத்தான திசையில், ஸ்டீல் கேபிள்கள் பொருத்தப்பட்டிருக்கும். பின்னர் டயரில் இருக்கும் ரேடியல்-ப்ளை மற்றும் த்ரெட்டுக்கு நடுவே ஸ்டீல் பெல்ட்கள் புனையப்பட்டிருக்கும். முன்னே சொன்ன அனைத்தும் ஒரு யூனிட்டாகவும், சைடுவால் பகுதி ஒரு தனி யூனிட்டாக இருக்கும். எனவே வழக்கமான பயாஸ்-ப்ளை டயர்களைவிட இவற்றின் நம்பகத்தன்மை அதிகம்.

பஞ்சரைத் தவிர்க்கும்: பல அடுக்குகளால் ஆன ஸ்டீல் பெல்ட்கள் இருப்பதால், டயரின் த்ரெட் அவ்வளவு சீக்கிரத்தில் பஞ்சர் ஆகாது. இரண்டு பகுதிகளாக இருக்கும் கட்டுமானத்தால், திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது, சைடுவால் பகுதி மட்டுமே எடைக்கு ஏற்ப வளைந்துகொடுக்கிறது. இதனால் த்ரெட் பகுதி முழுவதும் சாலையில் பதிந்திருப்பதால், சைடுவால் பகுதி பஞ்சர் ஆவது தவிர்க்கப்படும்.

சிறப்பான ட்ராக்ஷன்: பயாஸ்-ப்ளை டயர்கள் என்றால், அதிக எடையைத் தாங்க நேரிடும்போது, அவை சாலையின் தொடர்பில் இருந்து சற்று விலகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரோடு க்ரிப் குறைந்துவிடுவதுடன், வாகனமும் அதன் நிலைத்தன்மையை இழந்துவிடுகிறது. இதுவே முன்னே சொன்ன அதே காரணத்தால், எவ்வளவு எடை சுமந்தாலும், ரேடியல் டயர்களின் ரோடு க்ரிப் மிகச் சிறப்பாக இருக்கிறது.

குறைவான வெப்பம்: பயாஸ்-ப்ளை டயர்களை நீண்ட நேரம் (அதாவது நெடுஞ்சாலைப் பயணங்களில்) பயன்படுத்தும்போது, அவை வெப்பத்தைத் தாங்கிப்பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. எனவே, சில சந்தர்ப்பங்களில், அவை வெடித்துவிடுவதை நம்மால் பார்க்க முடியும். இந்த டயர்களுடன் ஒப்பிடும்போது, ரேடியல் டயர்களில் ஸ்டீல் கேபிள்கள் இருக்கின்றன. அது டயர் இயங்குவதால் உற்பத்தியாகும் வெப்பத்தின் அளவைக் குறைக்கிறது.

முன்னேற்றப்பட்ட ஓட்டுதல் தரம்: ரேடியல் டயர்களின் இரு பகுதி கட்டுமானத்தால், கரடு முரடான சாலைகளில் வாகனம் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை, அவை சம அளவில் உள்வாங்கிக்கொள்கின்றன. எனவே, பயாஸ்-ப்ளை டயர்களைவிடக் குறைவான ரோலிங் ரெஸிஸ்டன்ஸ்கொண்டிருப்பதால், ரேடியல் டயர்கள் கூடுதல் மைலேஜைத் தரவல்லது என்பதுடன், ஓட்டுதல் தரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.