Published:Updated:

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!
ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

ஸ்கூட்டர் போட்டி-கிராஸியா VS ஆக்ஸஸ் 125தொகுப்பு: தமிழ்

பிரீமியம் ஸ்டோரி

கிராஸியா, சிங்கம்போல் தனியாகக் களமிறங்கியிருக்கிறது. 125சிசி செக்மென்ட்டில் வேறு எந்த ஸ்கூட்டரும் 2017-ல் ரிலீஸாகவில்லை. தனியாக வந்ததால் தனித்துவமாகி விடுமா? ‘நாங்களும் இருக்கோமே’ என்று மற்ற ஸ்கூட்டர்களும் போட்டிக்கு நிற்கின்றன. ஜூபிட்டர், ஆக்டிவா, மேஸ்ட்ரோ என்று வெரைட்டியாக ஸ்கூட்டர்கள் இருந்தாலும், முக்கியமாக கிராஸியா போட்டி போடுவது ஆக்ஸஸுடன்தான். இரண்டுமே 125சிசி. சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. இரண்டிலும் ஒரு ஜாலி ஸ்கூட்டரிங் கிளம்பினேன்.  

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

வசதிகள் வேணுமா?

வசதிகளில் கைவைத்துப் பணத்தை மிச்சப்படுத்துவதுதான் ஹோண்டாவின் வழக்கம். ஆனால், கிராஸியாவில்? அந்த LED டூயல் ஹெட்லைட்டே பசங்க, பொண்ணுங்க என்று எல்லோர் மனசையும் மயக்க வாய்ப்பிருக்கிறது. முன் பக்க டிஸ்க் பிரேக், (டீலக்ஸ் வேரியன்ட்டில் மட்டும்) டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்டெப் எக்கோ இண்டிகேட்டர், முன் பக்க அப்ரானில் திறந்து மூடும் வசதிகொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸ், 12V பவர் ஸாக்கெட், (500 ரூபாய் எக்ஸ்ட்ரா) CBS பிரேக்கிங் சிஸ்டம் என்று அத்தனையும் அருமை. டிஜிட்டல் டேக்கோ மீட்டர்கொண்ட முதல் ஸ்கூட்டர் - கிராஸியாதான். இதன் கீ-ஸ்லாட்... இக்னிஷன் ஆன், சைடு லாக், சீட் ரிலீஸ், சென்ட்ரல் லாக்கிங் என்று 4-இன்-1 வசதி கொண்டது. வெல்டன் ஹோண்டா.   

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!
ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

சுஸூகியும் சளைக்கவில்லை. டிஸ்க் பிரேக், அலாய் வீல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், (ஃப்யூல் கேஜ் மட்டும் டிஜிட்டல்), முன்பக்க அப்ரானில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், (கிராஸியா போல் இல்லாமல், மூடி இல்லாமல் இருக்கிறது), 12V பவர் ஸாக்கெட். (இதற்கு 50 ரூபாய்தான் எக்ஸ்ட்ரா) வசதிகளில் கிட்டத்தட்ட கிராஸியாவை நெருங்குகிறது. LED ஹெட்லைட்டில்தான் கிராஸியா, ஆக்ஸஸை முந்துகிறது.

ஷார்ப் டிசைனிங்கா? மேட் ஃபினிஷிங்கா?

கிராஸியா, நிச்சயம் ஆண்களுக்குப் பிடிக்கும். இதன் ஷார்ப்பான டிசைனை வைத்துத்தான் இப்படிச் சொல்கிறேன். ஆண்களுக்காகவே வடிவமைத்ததுபோல இருக்கிறது. ஏனென்றால், அந்தப் பின் பக்க ஸ்ப்ளிட் கிராப் ரெயில், ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இருக்கும் அம்சம். ஃபுட் பெக்கில் இருந்து ஹெட்லைட் வரை எல்லாமே ஸ்டைலிஷ். ஆனால், 125 ஸ்டிக்கரிங்கை எங்கேயாவது வைத்திருக்கலாமே ஹோண்டா? இன்னும் கெத்தாக இருந்திருக்கும். ஸ்டைலிங்கில் கிட்டத்தட்ட ஏப்ரிலியாவை நெருங்குகிறது. இது ஆண்களுக்கு ஓகே! மற்றபடி பெண்களே, கிராஸியா உங்கள் சாய்ஸ்!

ஆக்ஸஸ், கிராஸியா அளவு ஷார்ப்னஸ் இல்லை. லேசாக வழித்தெடுத்துச் சீவி அலுவலகம் போகும் மரியாதைக்குரிய நபர் மாதிரி இருக்கிறது ஆக்ஸஸ். நிச்சயம் இது ஃபேமிலி ஸ்கூட்டர்தான். இதன் சீட்டின் இடவசதியும் அதிகம். ஸ்டைலுக்காக சில அம்சங்களைச் சேர்த்திருக்கிறார்கள். வட்ட வடிவ க்ரோம் மிரர்கள், ஹேண்டில்பாரிலேயே அமைந்திருக்கும் ஹெட்லைட் ஓகேதான். மேட் ஃபினிஷிங்கூட ஸ்டைலாகத்தான் இருக்கிறது. நமக்குக் கொடுத்த மாடலில் சீட் மட்டும் சிவப்பு கலரில் அசத்தியது. சுருக்கமாகச் சொன்னால், ஓவர் மேக்-அப் போட்டு அலட்டாமல் இயல்பாக இருக்கிறது ஆக்ஸஸ்.

சொகுசு... எது ரவுசு?


ஸ்கூட்டர்கள் இப்போது கம்யூட்டிங் என்று மட்டுமில்லாமல், லாங் ரைடிங்குக்கும் என்றாகிவிட்டது. எனவே, சீட்டிங் பொசிஷன் ரொம்ப முக்கியம். ஆக்ஸஸின் சீட் உயரம் 780 மிமீ. கிராஸியாவில் 766 மிமீ. ஆனால், ஆக்ஸஸின் சீட் அகலமாகவும் நீளமாகவும் இருக்கிறது. உயரமான ரைடர்களுக்கு கிராஸியா கஷ்டமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஆக்ஸஸை நான் முழுவதுமாக ஒடித்துத் திருப்பியபோது, அதன் ஹேண்டில்பார் என் முழங்கால்களுக்கு அருகில்தான் வந்தது. இதுவே கிராஸியாவில் நான் கால்களை வெளியே தள்ள வேண்டியிருந்தது. இல்லையென்றால் ஹேண்டில்பார் இடிக்கிறது.   

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!
ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

மற்றபடி இரண்டிலுமே தரமான சுவிட்சுகள். ஆக்ஸஸின் ஒன்-டச் புஷ் பட்டன் ஸ்டார்ட்டை நான் ரசித்தேன். கிராஸியாவில் ஸ்கூட்டர் உறுமும் வரை அழுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த பிரேக் லாக் லீவருக்கு, இத்தனை முரட்டுத்தனம் ஆகாது. ஆக்டிவாவிலேயே இந்தப் பிரச்னை இருக்கிறது என நினைக்கிறேன். பிரீமியம் ஸ்கூட்டர் என்கிற தகுதியை இதனாலேயே இழந்துவிட வாய்ப்பு உண்டு. கவனம் ஹோண்டா! இடவசதி, கம்ஃபர்ட் என்று எர்கானமிக்ஸ்படி பார்த்தால், ஆக்ஸஸ்தான் அனைவரையும் அரவணைக்கிறது.

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்

சுஸூகியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ரிஃபைன்மென்ட்டிலும் பர்ஃபாமென்ஸிலும் எப்போதும் வொய்ட் காலர் ஜென்டில்மேன். 124 சிசி இன்ஜின், 8.7 bhp பவரையும் 1.05 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டிராஃபிக்கில் அத்தனை ஸ்மூத். 0-60 கி.மீ வேகப்போட்டி வைத்துப் பார்த்தேன். 9.5 விநாடிகள் எடுத்துக்கொண்டது ஆக்ஸஸ். 30-60 கி.மீ-க்கு 3.9 விநாடிகள், 50-70 கி.மீ-க்கு 7.5 விநாடிகள். இது ஆக்ஸஸ் வாங்கிய பாஸ் மார்க். பன்ச் என்று சொல்வார்களே... அது ஆக்ஸஸில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ரிலாக்ஸ்டு டிரைவிங்கும் இருக்கிறது.  

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

கிராஸியா இதில் ஜெயிக்குமா என்ற சந்தேகத்தில்தான் ஸ்கூட்டரைக் கிளப்பினேன். காரணம், ஆக்ஸஸைவிட 0.1bhp மட்டும் கிராஸியாவில் பவர் குறைவு. மேலும் எடையும் 5 கிலோ அதிகம். அதற்கேற்ப ஆரம்பத்தில் கொஞ்சம் லேஸியாக இருந்ததுபோல் தெரிந்தது கிராஸியா. ஆனால், டாப் எண்டில் ஆக்ஸஸை, பின்னால் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. இத்தனைக்கும் ஆக்ஸஸைவிட 0.3 kgm கிராஸியாவில் அதிகம். திரும்பவும் ஓட்டிப் பார்த்ததில், கிராஸியா வேகமாக இருந்ததுபோல் தெரிந்தது. இதன் பர்ஃபாமென்ஸ் மார்க் - 0-60 கி.மீ - 9.2 விநாடிகள், 30-60 கி.மீ - 3.7 விநாடிகள், 50-70 கி.மீ - 7.4 விநாடிகள். அப்படியென்றால், பர்ஃபாமென்ஸ் விஷயத்தில் ஆக்ஸஸுக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறது கிராஸியா.

ஹேண்டிலிங்கில் எது?

இரண்டிலுமே ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ் ஃபன்னாக இருந்தன. இரண்டுக்குமே டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷன்; இரண்டிலுமே 12 இன்ச் முன் பக்க வீல்-10 இன்ச் பின் பக்க வீல், ட்யூப்லெஸ் டயர்கள், டிஸ்க் என்று எல்லாமே இரண்டுக்கும் பொதுவாக இருந்ததால்தான் இந்த ஃபன் ரைடிங். கிராஸியா ஒரு படி மேலே போய், சிபிஎஸ்-ஸில் நம்மை மயக்குகிறது. பிரேக் பிடித்தால், இரண்டு வீல்களும் கிச்சென நிற்கிறது கிராஸியாவில். 102 கிலோ எடை கொண்ட சுஸூகி ஆக்ஸஸுக்கு டிஸ்க் பிரேக் ஓகேதான். ஆனால், 107 கிலோ எடை கொண்ட கிராஸியாவுக்கு, CBS (combined Braking System) நல்ல பார்ட்னர்ஷிப்தான்.

மோசமான சாலைகளை நன்றாக உள்வாங்குகிறது ஆக்ஸஸ். இருந்தாலும், கிராஸியாவின் ஷார்ப் டிசைன், காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்க, வளைவுகளில் ஒடித்துத் திருப்ப ஃபன்னாக இருக்கிறது. ஆக்ஸஸில் கொஞ்சம் ரிலாக்ஸ்டு டிரைவிங் இருந்தால்தான் சரிப்பட்டு வரும். ஒருவேளை நீங்கள் ஆக்ஸஸ் வாங்கினால், சியட்டைவிட MRF டயர்களைத் தேர்ந்தெடுப்பது பெஸ்ட்.

மைலேஜ்

கிராஸியாவில் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்தான். ஆக்ஸஸில் 5.6 லிட்டர். இரண்டுக்கும் மைலேஜ் டெஸ்ட் வைத்தால்தானே சரியாக இருக்கும்? இரண்டையும் சிட்டியில் டெஸ்ட் செய்தபோது நமக்குக் கிடைத்த மைலேஜ். ஆக்ஸஸ் - 52.6 கி.மீ. கிராஸியா - 50.6 கி.மீதான் கிடைத்தது. இதுவே நெடுஞ்சாலையில் விரட்டிப் பார்த்தபோது கிடைத்த மைலேஜ், ஆக்ஸஸ் - 54.5 கி.மீ. கிராஸியா - 57.6 கி.மீ.

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

ரண்டிலுமே விரும்பக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. இன்ஜின் ஸ்மூத்னஸ், பிராக்டிக்காலிட்டி, பில்டு குவாலிட்டி, மைலேஜ் என்று எதிலும் ஆக்ஸஸைக் குறை சொல்ல முடியவில்லை. ஸ்டைல்கூட அலட்டவில்லை. ஆனால், இந்த டிசைன் இனிமேல் இளசுகளுக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே! , கிராஸியாவைவிட ஆக்ஸஸ் கிட்டத்தட்ட 3,000 ரூபாய் குறைவு என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது!

கிராஸியா, அடுத்த லெவலுக்குப் போய் LED ஹெட்லைட், 4-இன்-1 கீ ஸ்லாட், CBS என்று மிரட்டுகிறது. பர்ஃபாமென்ஸில்கூட ஆக்ஸஸைப் பின்னுக்குத் பின்னுக்கு தள்ளிவிடுகிறது. மைலேஜும் அருமை. ‘ஆக்டிவா வாங்கப் போறேன்’ என்பவர்கள், இனி கிராஸியாவையும் பரிசீலிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு