பிரீமியம் ஸ்டோரி

பைக் ஆர்வலர்களுக்கு, 2018-ம் ஆண்டில் செம விருந்து காத்திருக்கிறது. ஆம், அட்வென்ச்சர் பைக்குகள் டாப் ட்ரெண்டிங்காக இருக்கும் நிலையில், அந்த செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகள் அணிவகுக்க உள்ளன. இதனுடன் ஸ்கூட்டர்கள், பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் பைக்குகள் ஆகிய வழக்கமான புது வரவுகளுடன், எலெக்ட்ரிக் வாகனங்களும் களமிறங்கயிருக்கின்றன! 

பைக்ஸ் 2018

பிஎம்டபிள்யூ G310R I அறிமுகம்: *Q4 2018 I விலை: ரூ 2.25 லட்சம் முதல் ரூ 2.5 லட்சம்

டந்த ஆண்டே வரும் என எதிர்பார்க்கப்பட்ட G310R பைக், 2018-ன் பிற்பாதியில் களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ. இதன் டிமாண்டை மனதில் வைத்து, டீலர் நெட்வொர்க் மற்றும் உற்பத்தியைத் தீர்மானிப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதில், 33.6bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 4 வால்வ், சிங்கிள் சிலிண்டர், DOHC, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான 313சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு கொண்டுள்ளது. 158 கிலோ எடையுள்ள நேக்கட் ஸ்ட்ரீட் மாடல் G310R பைக். கேடிஎம் டியூக் 390 பைக்குக்குப் போட்டியாக வரப்போகும் இது, தரம் - பர்ஃபாமென்ஸ் - ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றில் அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

*Jan-Mar Q1 I Apr-Jun Q2 I Jul-Sep Q3 I Oct-Dec Q4

பைக்ஸ் 2018

அதேர் S340 E-ஸ்கூட்டர் I அறிமுகம்: Q2 2018 I விலை: ரூ 90,000  முதல் ரூ 1 லட்சம்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அதேர் எனர்ஜி’ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம்தான் இந்த ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தயாரித்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே காட்சிப்படுத்தப்பட்ட இதன் Prototype மாடல், ஃபுல் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியின் உதவியுடன் 60 கி.மீ ரேஞ்ச் மற்றும் அதிகபட்சமாக 72 கி.மீ வேகம் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் விற்பனைக்கு வரும்போது, இந்த அளவுகளில் முன்னேற்றம் இருக்கலாம்.

பைக்ஸ் 2018

பிஎம்டபிள்யூ G310GS I அறிமுகம்: Q4 2018 I விலை: ரூ 2.5 லட்சம் முதல் ரூ 2.8 லட்சம்

G310R
பைக்கை அடிப்படையாகக் கொண்டு, இந்த அட்வென்ச்சர் பைக்கைத் தயாரித்துள்ளது பிஎம்டபிள்யூ. ஜெர்மனியில் G310GS பைக்கின் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், இதன் உற்பத்தியை டிவிஎஸ் நிறுவனம் மேற்கொள்ளப்போவது பெரிய ப்ளஸ். இதனால், G310GS பைக்கின் கூம்பு போன்ற மட்கார்டு - ரேடியேட்டர் கவர் - ஹெட்லைட் கவுல் - பெட்ரோல் டேங்க்கின் வடிவமைப்பு ஆகியவை, பிஎம்டபிள்யூவின் XL சைஸ் அட்வென்ச்சர் பைக்குகளை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கின்றன. ஆனால், மெக்கானிக்கலாக இது G310R பைக்தான் என்றாலும், G310GS பைக்கின் பொசிஷனிங்கை மனதில் வைத்து, முன்பக்கத்தில் 19 இன்ச் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சஸ்பென்ஷனின் Travel அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

பைக்ஸ் 2018

பெனெல்லி இம்பீரியல் 400 I அறிமுகம்: Q2 2018 I விலை: ரூ 2 லட்சம் முதல் ரூ 2.25 லட்சம்

EICMA 2017-ல் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக்கை, மார்ச் 2018-ல் இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளது அராய் அமைப்பு. ராயல் என்ஃபீல்டு நிறுவனத் தயாரிப்புகளுக்குப் போட்டியாகக் களமிறங்கப் போகும் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் இருப்பது 373.5சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. இது கிளாஸிக் 350 பைக்குக்குச் சமமான 19.7bhp@5,500rpm பவர் மற்றும் 2.8kgm@3,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. முன்பக்கத்தில் 19 இன்ச் ஸ்போக் வீலும், பின்பக்கத்தில் 18 இன்ச் ஸ்போக் வீலும் வழங்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக ஏபிஎஸ் இருப்பது வரவேற்கத்தக்க அம்சம். இம்பீரியல் 400 பைக்கின் சீட் உயரம் வெறும் 780மிமீதான் என்பதால், அனைத்து விதமான ரைடர்களுக்கும் இந்த பெனெல்லி பைக்கை ஓட்டுவது வசதியாக இருக்கும் என நம்பலாம். CKD முறையில் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட இதன் விலை அதிகமாக இருக்கும்.

பைக்ஸ் 2018

பெனெல்லி லியோன்சினோ I அறிமுகம்: Q1 2018 I விலை: ரூ 4.5 லட்சம் முதல் ரூ 4.75 லட்சம்

துவும் கடந்த ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில்தான் லியோன்சினோ பைக்கின் பரிசோதனைப் பணிகளைத் துவக்கியுள்ளது அராய் அமைப்பு. உலகச் சந்தைகளில் இது ஆஃப் ரோடு டயர் - ஸ்போக் வீல்களுடன் கூடிய ஸ்க்ராம்ப்ளர் வகை பைக்காக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இது வழக்கமான டயர் மற்றும் அலாய் வீல்களுடனே வெளிவர உள்ளது. லியோன்சினோ பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 499.6 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின், 49.6bhp பவர் மற்றும் 4.5kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த லிக்விட் கூல்டு - Fi இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. லியோன்சினோ பைக்கும், CKD முறையில்தான் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

பைக்ஸ் 2018

ஹீரோ எக்ஸ்-பல்ஸ் I அறிமுகம்: Q4 2018 I விலை: ரூ 90,000 முதல் ரூ 1 லட்சம்

தான் தயாரித்த இம்பல்ஸ் பைக்கின் அடுத்த தலைமுறை மாடலாக, எக்ஸ்-பல்ஸ் எனும் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது ஹீரோ. சிறப்பான தயாரிப்பாக இருந்தாலும், அட்வென்ச்சர் பைக்குக்கு ஏற்ற பவர் இல்லை என்பதே இம்பல்ஸ் பைக்கின் குறையாகச் சொல்லப்பட்டது. எனவே, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 பைக்கில் இருந்த 200சிசி இன்ஜினை, ஆஃப் ரோடு பைக்குக்கு ஏற்றபடி ரீ-டியூன் செய்து பொருத்த உள்ளது ஹீரோ. இன்ஜினுக்கு அருகே வெள்ளை நிற க்ராஷ் கார்டு மற்றும் பாஷ் ப்ளேட் இருப்பதால், இன்ஜினின் அடிப்பகுதி மற்றும் இன்ஜின் அடிபடாது என நம்பலாம். கால்களுக்குத் தேவையான சப்போர்ட்டை பெட்ரோல் டேங்க் அளிக்கும் எனலாம். டேங்க்கில் இருந்து பைக்கின் டெயில் செக்‌ஷன் வரை நீளும் சிங்கிள் பீஸ் சீட், சொகுசாக இருக்கும் என நம்பலாம். EICMA 2017-ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பைக்கில், Metzeler நிறுவனத்தின் ஆஃப் ரோடு டயர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், எக்ஸ்-பல்ஸ் பைக் விற்பனைக்கு வரும்போது, இது இல்லாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம்! அட்வென்ச்சர் பைக் என்பதால், குறைவான பாடி பேனல்களே இடம்பெற்றுள்ளன. வட்ட வடிவ LED ஹெட்லைட் இருப்பது ப்ளஸ். வழக்கமான பைக்குகளில் இருக்கும் பாகங்களே, எக்ஸ்-பல்ஸ் பைக்கில் இருப்பதால், இதன் விலை குறைவாவே நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறப்போகும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டபிறகு, வருடத்தின் இறுதிக்குள்ளாக எக்ஸ்-பல்ஸ் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

பைக்ஸ் 2018

பெனெல்லி TRK 502 I அறிமுகம்: Q1 2018 I விலை: ரூ 5.5 லட்சம் முதல் ரூ 5.75 லட்சம்

முந்தைய மாடல்களைப் போலவே, TRK 502 பைக்கையும் CKD முறையில் இந்தியாவில் தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளது பெனெல்லி. அட்வென்ன்சர் பைக் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், முதற்கட்டமாகச் சாலைப் பயன்பாட்டுக்கு ஏற்ற டயர்களுடன்கூடிய டூரர் மாடலைத்தான் இந்தியாவுக்குக் கொண்டுவர உள்ளது பெனெல்லி. லியோன்சினோவில் இருக்கும் அதே 499.6சிசி பேரலல் ட்வின் இன்ஜின் - மெக்கானிக்கல் பாகங்கள்தான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், TRK 502 பைக்கின் பொசிஷனிங்கை மனதில் வைத்து, சஸ்பென்ஷனின் Travel மற்றும் சீட் உயரம் (800மிமீ) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கவாஸாகியின் வெர்சிஸ் X-300 மற்றும் வெர்சிஸ் 650 ஆகிய பைக்குகளுடன் போட்டியிடும் TRK 502 பைக்கின் எடை, கொஞ்சம் அதிகமாக இருக்கிறது (213 கிலோ).

பைக்ஸ் 2018

ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின்ஸ் I அறிமுகம்: Q4 2018 I விலை: ரூ 3.5 முதல் ரூ 4 லட்சம்

ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்குகளை, மீண்டும் தயாரிக்கத் தொடங்கியுள்ளது ராயல் என்ஃபீல்டு. EICMA 2017-ல் காட்சிப்படுத்தப்பட்ட இன்டர்செப்டர் (டூரர்) மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி (கஃபே ரேஸர்) ஆகிய அந்த பைக்குகள், ஒரே பேரலல் ட்வின் இன்ஜின் - Double Cradle ஃப்ரேம் - சஸ்பென்ஷன் - Bybre டிஸ்க் பிரேக் அமைப்பைக்கொண்டுள்ளன. சிங்கிள் பீஸ் சீட் - க்ளிப் ஆன் ஹேண்டில்பார் - வளைவுகளுடன்கூடிய நீளமான பெட்ரோல் டேங்க் உள்ளது. இவற்றில் இருக்கும் புதிய 648சிசி, பேரலல் ட்வின், ஏர் கூல்டு, SOHC, ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின், 47bhp@7,100rpm பவர் மற்றும் 5.2kgm@4,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்ஸார்பர்களைக் கொண்டிருக்கும் இந்த இரு பைக்கிலும், ஏபிஎஸ் இருப்பது பெரிய ப்ளஸ். இந்த ஆண்டின் இறுதியில் வரப்போகும் இவை, இந்திய பைக் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

பைக்ஸ் 2018

டார்க் மோட்டார் சைக்கிள்ஸ் - T6X I அறிமுகம்: Q4 2018 I விலை: ரூ 1 லட்சம்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காட்சிப்படுத்தப் பட்டிருந்தாலும், T6X பைக்கின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் இன்னும் ஈடுபட்டு வருகிறது டார்க் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம். இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் எனத் தெரிகிறது. முதலில் சிங்கிள் சார்ஜில் 100 கி.மீ-க்கும் அதிகமான தூரம் செல்லும் எனக் கூறப்பட்ட நிலையில், இதன் ரேஞ்சில் முன்னேற்றம் இருக்கலாம்.

பைக்ஸ் 2018

டிவிஎஸ் 125சிசி ஸ்கூட்டர் I அறிமுகம்: Q1 2018 I விலை: ரூ 60,000 முதல் ரூ 70,000

டந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிராஃபைட் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு, ஒரு 125சிசி ஸ்கூட்டரைத் தயாரிக்க உள்ளது டிவிஎஸ். இதனைத் தற்போது தீவிரமாக டெஸ்ட் செய்து வரும் டிவிஎஸ், அதனை ஷார்ப்பான டிசைன் பாணியில் வடிவமைத்திருக்கிறது. எனவே, இதன் முன்பக்கம், அசப்பில் யமஹா ரே - ஹோண்டா கிரேஸியா ஆகிய ஸ்கூட்டர்களை நினைவுபடுத்துகிறது. இதில் 12 இன்ச் அலாய் வீல்களுடன், ஆப்ஷனலாக டிஸ்க் பிரேக் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் நடைபெறப்போகும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த 125சிசி ஸ்கூட்டரை, புதிய பிராண்டில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது டிவிஎஸ்.

பைக்ஸ் 2018

யமஹா 125சிசி ஸ்கூட்டர் I அறிமுகம்: Q1 2018 I விலை: ரூ 65,000 முதல் ரூ 70,000

தா
ன் உலகச் சந்தைகளில் விற்பனை செய்யும் Nozza Grande எனும் 125சிசி ஸ்கூட்டரை, இந்தியாவில் டெஸ்ட் செய்துவருகிறது யமஹா. இதில், 8.2bhp பவர் மற்றும் 0.97kgm டார்க்கை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்டட் 125சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் இது ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனுடன் வருவது சந்தேகமே. மற்றபடி இதன் தோற்றம், ரெட்ரோ பாணியிலான டிசைனைக் கொண்டிருக்கும் ஃபஸினோவின் அக்காபோலவே அமைந்திருக்கிறது.

பைக்ஸ் 2018

யமஹா YZF-R15 V3.0 I அறிமுகம்: Q1 2018 I விலை: ரூ 1.3 லட்சம் முதல் ரூ 1.5 லட்சம்

ந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் காட்சிப்படுத்தப்பட்ட YZF-R15 V3.0 பைக்கை, இந்தியாவில் விரைவில் களமிறக்க உள்ளது யமஹா. இது விலை அதிகமான YZF-R6 மற்றும் YZF-R1 ஆகிய பைக்குகளின் மினியேச்சர் போல இருப்பது பெரிய ப்ளஸ். ஆனால், இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில் இருக்கும் சில வசதிகளை, இந்தியாவுக்குக் கொண்டு வரப்போகும் மாடலில் நீக்கியுள்ளது யமஹா. அங்கே உள்ள மாடலில் USD ஃபோர்க் மற்றும் IRC டயர்கள் இருந்த நிலையில், இங்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் MRF டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அதில் ஸ்டைலான மட்கார்டு மற்றும் அலுமினியத்தால் ஆன ஃபுட் பெக்ஸ் இருந்தன. இங்கே தற்போது விற்பனையில் இருக்கும் YZF-R15 V2.0 பைக்கில் இருக்கும் அதே மட்கார்டு மற்றும் ஃபுட் பெக்ஸ்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தோனேசிய மாடலில் இருக்கும் அதே இன்ஜின்தான், இந்திய மாடலிலும் இருக்கும் என்பது ஆறுதல். இந்த 155சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின், யமஹாவின் வேரியபிள் வால்வ் ஆக்சுவேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. எனவே, இது தற்போதைய YZF-R15 V2.0 மாடலைவிட அதிகமான 19.3bhp பவர் மற்றும் 1.47kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதெல்லாம் இந்தோனேசிய மாடலுக்குப் பொருந்தும்; இந்திய மாடல் அதற்கு இணையான பவர் - டார்க் மற்றும் பர்ஃபாமென்ஸைக் கொண்டிருக்குமா என்பது விரைவில் தெரியும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு