Published:Updated:

பிராக்டிகல் பைக்!

பர்ஸ்ட் ரைடு - ஃபேஸர் 25தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் FZ பைக்குகளின் பிராக்டிகலான செமி ஃபேரிங் கொண்ட  வெர்ஷன்தான் இது. எனவே, டிசைனைத் தாண்டி, மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இருக்காது. எப்படி 150சிசி பைக்கான FZ V2.0-ல் இருந்து ஃபேஸர் 150 உருவானதோ, அதே வழியைப் பின்பற்றி FZ25 பைக்கிலிருந்து முளைத்திருக்கும் பைக்தான் ஃபேஸர்-25. ஒரு மாறுதலுக்காக, ஃபுல் ஃபேரிங்குடன் வெளிவந்திருக்கும் இந்த பைக்கில் அதன் ஃபேரிங்கைத் தாண்டி, பைக் அப்படியே FZ25-ன் ஜெராக்ஸ்தான்! எப்படி இருக்கிறது ஃபேஸர்-25? 

பிராக்டிகல் பைக்!

டிசைன்

நேக்கட் பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பைக் போல அல்லாமல், ஃபுல் ஃபேரிங்குடனே பிறந்த பைக்போல இருக்கிறது ஃபேஸர்-25. ஆனால், இது அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். FZ25 பைக்கில் இருந்த அதே LED ஹெட்லைட்தான் இங்கேயும். இருபுறமும் இருக்கும் LED DRL, இரவு நேரத்தில் பார்க்க செம ஸ்டைல். இவற்றைச் சுற்றி இருக்கும் ஃபுல் ஃபேரிங்கில், எந்த அதிர்வுகளும் இல்லை. மேலும், பைக்கின் ஒட்டுமொத்த தரம் மற்றும் ஃபிட் அண்டு ஃப்னிஷ் சிறப்பாகவே இருக்கிறது. ஃபேஸர்- 25 பைக்குக்கு வழங்கப்பட்டிருக்கும் மேட் ஃப்னிஷ் கலர்கள் தனித்துவமாக இருந்தாலும், இவை தூசு மற்றும் அழுக்கு ஆகியவற்றுக்கும் பிடித்தமானதாக இருக்கின்றன.

பிராக்டிகல் பைக்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

FZ 25 பைக்கில் இருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர், 249சிசி, ஆயில் கூல்டு, Fi இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது வெளிப்படுத்தும் 20.9bhp பவர் மற்றும் 2.0kgm டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை. FZ சீரிஸ் பைக்கின் பலமான ஸ்மூத் இன்ஜின், ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் இந்த பைக்கிலும் தொடர்கிறது. பெரிய விண்ட் ஸ்கிரீன் இருப்பதால், எதிர்காற்று முகத்தில் அறையும் என்ற பிரச்னை இல்லை. நெடுஞ்சாலைகளில் 90 கி.மீ வேகத்தில் டாப் கியரில் க்ரூஸ் செய்வது நல்ல அனுபவமாக இருப்பதுடன், ஓவர்டேக் செய்ய வேண்டுமென்றால், கியரைக் குறைக்காமல் ஆக்ஸிலரேட்டரைத் திருகினாலே போதுமானது. ஆனால், ஒரு 250சிசி பைக்குக்குத் தேவையான டாப் எண்ட் பர்ஃபாமென்ஸ் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகியவை, இல்லாதது பெரிய மைனஸ்.

ஓட்டுதல் அனுபவம்

முன்பக்கத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கத்தில் மோனோஷாக் என ஃபேஸர்-25 பைக்கிலும் அதே சஸ்பென்ஷன் தான். இது FZ25 பைக்கைப் போலவே கொஞ்சம் இறுக்கமான செட்-அப்பைக் கொண்டிருப்பதால், அதிக வேகங்களில் செல்லும்போது பைக்கின் ஓட்டுதல் தரம் அவ்வளவு செளகரியமாக இல்லை. ஆனால், இந்த செட்-அப்தான், பைக்கை விரட்டி ஓட்டுவதற்கான நம்பிக்கையை ரைடருக்குத் தருகிறது. 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்தாலும், பைக்கில் இரண்டு பேர் உட்கார்ந்து, ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறி இறங்கும்போது, பைக்கின் அடிப்பகுதி உரசுகிறது. ஃபேஸர்-25 பைக்கின் முன்பக்கத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக் - 100/80 R17 MRF ட்யூப்லெஸ் டயர், பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் - 140/70 R17 MRF ட்யூப்லெஸ் டயர் ஆகியவற்றின் செயல்திறன், மனநிறைவைத் தருகின்றன. ஏபிஎஸ் இல்லாததுதான் கொஞ்சம் நெருடல்.

பிராக்டிகல் பைக்!

FZ25 பைக்கைவிட 6 கிலோ கூடுதல் எடை இருந்தாலும், அது பைக்கை ஓட்டும்போது தெரியவில்லை. எனவே, 0 - 60 கி.மீ வேகத்தை, FZ25 போலவே ஃபேஸர்-25 பைக்கும் 3.97 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடுகிறது. நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் தினசரி பயன்படுத்தக்கூடிய பிராக்டிகலான பைக் வேண்டும் என்பவர்களுக்கு, ஃபேஸர்-25 சரியான சாய்ஸாக இருக்கும். ஸ்டைல் மற்றும் ஃபுல் ஃபேரிங் கூடுதல் போனஸ். நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான FZ25 உடன் ஒப்பிடும்போது, ஃபுல் ஃபேரிங் கொண்ட ஃபேஸர்-25 பைக்கின் விலை வெறும் 11,000 ரூபாய்தான் அதிகம் (சென்னை ஆன்ரோடு - 1.49 லட்சம்). ஆனால், ஒரு 250சிசி பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஏபிஎஸ் ஆகியவை இல்லாது குறை.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு