Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோட்டார் விகடன் விருதுகள் 2018
மோட்டார் விகடன் விருதுகள் 2018

மோட்டார் விகடன் விருதுகள் 2018

பிரீமியம் ஸ்டோரி

டைத்தேர்தலைவிடவும் சிறந்த கார்/பைக்குக்கான விருதுப் போட்டி, பரபரப்பாக இருந்தது. இந்த முறையும் எத்தனை வேட்பாளர்கள்? சிறந்த காருக்கான போட்டியில் காம்பஸுக்கும் நெக்ஸானுக்கும்தான் கடுமையான போர். சிறந்த பைக்குக்கான போட்டியும் பரபரப்பாகவே இருந்தது!  ஒரே குழும நிறுவனத்தைச் சேர்ந்த பஜாஜும் கேடிஎம்மும் இதில் போட்டிப் போட்டன.  

மோட்டார் விகடன் விருதுகள் 2018

விருதுகளுக்கு வலுசேர்த்த அத்தனை வாசக நெஞ்சங்களுக்கும் நன்றி. மோட்டார் விகடன் விருதுக் குழுவின் முடிவுகளைச் சரியாகக் கணித்திருக்கும் கீழ்க்கண்ட வாசகர்களுக்குப் பரிசுகள் விரைவில் வீடு தேடி வரும்!

பரிசும் பாராட்டும் பெறும் வாசகர்கள்:


ஏ.பிரபு ஆசீர்வாதம் - சென்னை, ஏ.யுவராஜ் - காஞ்சிபுரம், பி.குமார் - சேலம், ஜி.பிரபு - விருதுநகர், எஸ்.செங்கோடன் - கரூர், மனோஜ் குமார் - மதுரை

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ஜினிகாந்த், ‘சிவாஜி’ படத்தில் நடிக்கும் வரை - சிவாஜி என்றால், அது நடிகர் திலகம்தான். அதுபோல, ‘ஜீப்’ என்றால் தார், மஹிந்திரா MM சீரிஸ் - இப்படித்தான் நம் மனதில் பதிந்திருந்தது. உண்மையிலேயே ஒரு ஜீப் இருக்கிறது. அமெரிக்க நிறுவனமான இது, கோடீஸ்வரர்களின் அடையாளம். ‘ஜீப்பெல்லாம் நாம் வாங்க முடியாது’ என்று மிடில் க்ளாஸ் மக்களால் அண்ணாந்து பார்க்கப்பட்ட ஒரு வாகனம், இப்போது நம் நாட்டில் விற்பனையில். உலகின் முதல் எஸ்யூவி-யைக் கொடுத்த ஜீப், புனேவில் உள்ள ரஞ்சன்கோன் தொழிற்சாலையில் தயாராகிகிறது. 170 bhp, 35.68 kgm டார்க் என்று 4 சிலிண்டர் இன்ஜினில் நம் இந்தியச் சாலைகளை ஜாலியாகச் சமாளிக்கிறது. 4 வீல் டிரைவ், 178 மிமீ கிளியரன்ஸ் கொண்ட ஜீப்பை நாம் கோவாவில் ஆஃப்ரோடு செய்து டெஸ்ட் எழுதியபோது, ‘ஆஃப் ரோடு ஓகே; மைலேஜ்?’ என்று வாசகர்கள் கேள்விக்குறி மெயில் அனுப்ப, அதையும் டெஸ்ட் செய்தோம். நகருக்குள் 11 கி.மீ, நெடுஞ்சாலையில் 14.2 கி.மீ என்று அதிலும் கெத்து காட்டியது காம்பஸ். ‘ஒரிஜினல் எஸ்யூவி’ என்று ஜீப் நிறுவனம் காம்பஸுக்கு விளம்பரம் செய்கிறது. இதை நாம் வழிமொழிகிறோம். 2018-ம்  ஆண்டின் ஒரிஜினல் எஸ்யூவி-யை வரவேற்கிறது மோ.வி.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

டியூக் 390 - இந்த விருதுக்குப் பொருத்தமானதுதான். ஏனெனில், இந்திய பைக்கர்களுக்கு USD ஃபோர்க் - ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - ஸ்லிப்பர் கிளட்ச் - ரேடியல் காலிப்பர் டிஸ்க் பிரேக் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை, கேடிஎம் டியூக் பைக்கையே சேரும். பைக் ஆர்வலர்களால் ‘Katoom’ எனச் செல்லமாக அழைக்கப்படும் டியூக் 390 பைக்கின் இரண்டாம் தலைமுறை மாடல் இது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், கூடுதலாக LED ஹெட்லைட்ஸ் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - UV பெயின்ட் என எகிறி அடித்து நியாயம் சேர்த்திருக்கிறது கேடிஎம். பைக்கில் BS-4 விதிகளுக்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களால், முன்பிருந்த வெடிக்கும் பர்ஃபாமென்ஸ் இப்போது இல்லைதான். ஆனால், இது ரைடருக்குக் குறையாகத் தெரியாத விதத்தில், டியூக் 390 பைக்கைத் தயாரித்திருப்பதில்தான் கேடிஎம்மின் திறமை அடங்கியிருக்கிறது. ‘தனித்துவமான பொசிஷனிங்கில் கிடைக்கும் தனித்துவமான பைக்’ என்ற பெருமை, டியூக் 390 வசம் இருக்கிறது!

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘இது என்னய்யா சோப்பு டப்பா மாதிரி’ என்றுதான் இக்னிஸைப் பார்த்ததும் ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால், மாருதி சுஸூகியின் செல்லமான டால் பாயாக மாறியிருக்கிறது இக்னிஸ். ‘க்ராஸ் ஓவரா’ என்றால், அதற்கும் தலையாட்டுகிறது இக்னிஸ். கேபின் டிசைன், சொகுசான சீட், 7 இன்ச் டச் ஸ்கிரீன், டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே என்று மாருதி வியக்க வைத்துவிட்டது. இக்னிஸில் ஜாலி ரைடிங்கும் உறுதியாகிப் போனது. காரணம் - ஸ்விஃப்ட், டிசையர், பெலினோ போன்ற பல மாருதி கார்களில் இருக்கும் 1.3 மல்ட்டி ஜெட் டீசல் இன்ஜின். பெட்ரோலும் பக்கா. மாருதியின் பிரீமியம் நெக்ஸா ஷோரூமில் விற்பனையாகி வரும் இக்னிஸ், அளவான குடும்பத்துடன் பிக்னிக் செல்ல பெஸ்ட் ஹேட்ச்பேக்காக மாறியிருக்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

சிக்னலில் 15 கார்கள் நிற்கின்றன என்றால், அதில் 6 கார்கள் டிசையராக இருக்கும். மாதம் 15,000 முதல் 20,000 கார்கள் விற்பனையாகும் ஒரே செடான், டிசையர்தான். அதேபோல், 14 வேரியன்ட்களில் விற்பனையாகும் ஒரே காரும் இதுதான். ஒரு வாடிக்கையாளர் இப்படிச் சொன்னார்: ‘‘முதல் மாத சர்வீஸ் விட்டேன். வெறும் 200 ரூபாய்தான் பில் வந்தது!’’ - இது வேறெந்த நிறுவனத்துக்கும் பொருந்தாத அம்சம். கிரில், கேபின், டிக்கி இடவசதி என்று பழைய டிசையரில் இருந்து மொத்தமாக மாறிவிட்டது புதிய டிசையர். பட்ஜெட் கார் என்பதால், சில பாதுகாப்பு விஷயங்களில் கஞ்சத்தனம் காட்டி வந்த மாருதி, புது டிசையரில் ABS, EBD, 2 காற்றுப் பைகள் என்று எல்லா வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டு ஆக்கியது இன்னும் மகிழ்ச்சி! வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், காம்பேக்ட் செடான் போட்டியில் ஜெயித்த டிசையருக்கு இந்த விருது.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘அச்சச்சோ, வெர்னா வர்றது தெரியாம வேற கார் புக் பண்ணிட்டேனே’ என்று வாடிக்கையாளர்களை புலம்பவைத்து ஜெயித்ததிலேயே வெர்னாவின் வெற்றி தெரிந்துவிட்டது. பழசு ஃப்ளூயிடிக் என்றால், இது நியூ ஜென். புதிய ஜெனரேஷனுக்கு ஏற்ப எத்தனை ஸ்டைல் வெர்னாவிடம்! வசதிகளில் ஹூண்டாயிடம் கையேந்தவே வேண்டியதில்லை. 128 bhp பவர், 26 kgm டார்க் என்று ஃப்ளூயிடிக் வெர்னாவின் டெக்னிக்கல் அம்சங்கள்தான் இதிலும். ஆனால், டார்க் வெளிப்படுவதில் ஏதோ வித்தையைக் கையாண்டு ஓட்டுதலை ஜாலியாக்கிவிட்டது ஹூண்டாய். பெட்ரோல் இன்ஜின் அத்தனை ஸ்மூத். ஹேண்ட்லிங் -  இதிலும் நிறைய முன்னேற்றம். ஹைடெக்காக ஓட்டத் துடிக்கும் எக்ஸிக்யூட்டிவ்களுக்கான பெஸ்ட் செடான் விருது வெர்னாவுக்கே.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

பென்ஸ் ஆர்வலர்களே குழம்பிவிடுவார்கள் - ‘ S க்ளாஸ் மாதிரி இருக்கே’ என்று! தோற்றத்தில் காஸ்ட்லியான S க்ளாஸுக்கு இணையாக மிரட்டல் பொலிவு E க்ளாஸில் தெரிகிறது. பழைய 350D மாடலைவிட 12 லட்ச ரூபாய் விலை குறைந்து ஆசையைத் தூண்டியது E க்ளாஸ். வாடிக்கையாளர்களை ஈர்த்த அடுத்த விஷயம் - மைலேஜ்! பழைய 2.1 லி  டீசல் இன்ஜினைவிட கணிசமான எடை குறைந்திருப்பதால், மைலேஜ் அதிகரிக்கும் என்றது பென்ஸ். அதேநேரம், பவரில் காம்ப்ரமைஸ் செய்யவில்லை. 194bhp. 0-100 கி.மீ-யை 8.1 விநாடிகளில் தொட்ட பென்ஸ் E க்ளாஸ் 220D காரின் மைலேஜ், நகரம் - 11.8 கி.மீ. ஹைவேஸ் - 15.2 கி.மீ. சிறந்த பிரீமியம் செடானுக்கு வாழ்த்துகள்!

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ரு ஸ்கூப் நியூஸின் ஆயுள் - அடுத்த ஸ்கூப் நியூஸ் வரும் வரைதான். ஸ்கூப் நியூஸான காலத்திலிருந்து விற்பனைக்கு வந்த பிறகும் பரபரப்பாகவே பேசப்பட்டது நெக்ஸான். டாடாவின் டிசைன் டீமின் உழைப்பு அப்படி. ஜாகுவார் தொழில்நுட்பம், கூபே போன்ற டிசைன் - இது எஸ்யூவியா, க்ராஸ்ஓவரா, கூபேவா என்று சந்தேகம் பலருக்கும் எழுந்தது. எல்லாவற்றுக்கான அம்சங்களும் இதில் இருக்கிறது என்று நெக்ஸானை ஓட்டச் சொன்னது டாடா. டச் ஸ்கிரீன், டிரைவிங் மோடுகள், ஏபிஎஸ், கேபினில் குடை வைக்க இடம் என்று பிராக்டிகலாக இருந்தது நெக்ஸான். ஃபியட் இன்ஜினில்தான் வரும் என்பதையும் பொய்யாக்கி, 1.5லி, 4 சிலிண்டரில், 110 bhp பவருடன் வேறு தளத்தில் இருந்தது நெக்ஸான். பெட்ரோலிலும் டர்போ சார்ஜர். இதன் மிரட்டல் டிசைனுக்காகவே பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவி விருது நெக்ஸானுக்கு.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

நீங்கள் ஸ்கோடாவின் எந்த காரையும் எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுமானம், இன்ஜின் ரிஃபைன்மென்ட், முக்கியமாக டிக்கி இடவசதி என்று எல்லாவற்றிலும் லைக் போட வைக்கும். பார்க்கவே பிரமாண்டமாக இருக்கும் கோடியாக்கும் அப்படித்தான். நம் நாட்டில் இன்ஜின் விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் 2.0லி இன்ஜினில் 150bhp பவரையும், 34kgm டார்க்கையும் கொடுத்திருக்கிறது ஸ்கோடா. இதன் 1,800 கிலோ எடைக்கு 4 லிட்டர் இன்ஜின்கூடப் பொருத்தலாம் எனும் அளவுக்குக் கட்டுமஸ்துதான் இதன் ஸ்பெஷலே! செடான் கார்களின் ஸ்டெபிலிட்டி, மோனோ காக் சேஸி, 180 டிகிரி கேமராக்கள், 4 வீல் டிரைவ் ஆப்ஷன், 9 காற்றுப் பைகள், க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங், அசத்தல் ஆஃப் ரோடிங் - இதைவிட பெஸ்ட் எஸ்யூவி-க்கு வேறென்ன வேண்டும்?

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘என்னது, கேப்ச்சர் க்ராஸ்ஓவரா’ என்கிற சந்தேகம் சிலருக்கு எழலாம். முழுமையான எஸ்யூவி என்றும் கேப்ச்சரைச் சொல்ல முடியவில்லை. சில பிளாஸ்டிக் பாகங்களின் தரத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கேப்ச்சர் சிலாகிக்கக்கூடிய கார். டஸ்ட்டரின் பிளாட்ஃபார்ம் என்கிற ஒரு சிறப்பே போதும். எஸ்யூவி இல்லை என்பதாலோ என்னவோ, 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் இல்லை. ஆனால், 13.5 லட்ச ரூபாய்க்கு ஹில்ஹோல்டு அசிஸ்ட், ABS, EBD, காற்றுப் பைகள் என்று ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் ஐந்து பேர் பயணிக்கச் சிறந்த க்ராஸ்ஓவராக களத்தில் வெல்கிறது கேப்ச்சர்.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘ஃபேஸ்லிஃப்ட் ஆகிவந்த எக்கோஸ்போர்ட்டை ஒதுக்கிவிட முடியாது. காரணம், இதன் மாற்றங்கள் அப்படி. ‘ஃபேஸ்லிஃப்ட்னா இப்படி இருக்கணும்’ என்று மிரட்டலாக வந்து நின்றிருக்கிறது எக்கோஸ்போர்ட். 3 சிலிண்டர் என்றால், அதிர்ந்து தள்ளும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், 3 சிலிண்டரைத் தனது டிரேட் மார்க் ஆக்கி, 123 bhp பவரில், டெலிவரியில் திணறல் இல்லாமல், செம ஸ்மூத்தாக இப்படி ஓர் ஓட்டுதல் அனுபவம் வேறு எந்த காரிலும் கிடைக்கவில்லை. எஸ்யூவி-யில் பெட்ரோல் மாடல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, எக்கோஸ்போர்ட்டைத் தவிர்த்து வேறு ஆப்ஷன் குறைவு. அதற்காகவே இந்த விருது.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ஸ்கோடா என்றால் கட்டுமானம்தான் என்பதைத் தாண்டி, ‘பர்ஃபாமென்ஸுக்கும் நான் இருக்கிறேன்’ என்று ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என வந்து நிற்கிறது ஆக்டேவியா RS. இந்த RS பேட்ஜுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. போகிற போக்கில் எல்லா கார்களுக்கும் இந்த RS லோகாவைத் தாரை வார்த்துவிட முடியாது. ‘ரேஸிங் ஸ்போர்ட்’ என்றால், பெயருக்கேற்ப அத்தனை ஸ்போர்ட்டியாக இருக்க வேண்டும். ஆக்டேவியா RS-ம் அப்படித்தான். 6.6 விநாடிகளில் 0-100 கி.மீ-யைத் தொடுகிறது. 230 bhp பவரில், 250 கி.மீ வேகம் வரை நாம் விரட்டி டெஸ்ட் செய்து எடுத்த முடிவு இது. ‘இதுக்கு இணையா வேற பர்ஃபாமென்ஸ் கார் இல்லையா’ என்றால், இருக்கு... ஆனால், அதற்கு RS-ஐவிட நீங்கள் இரண்டரை மடங்கு செலவழிக்க வேண்டும்.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘குடும்பத்துடன் ஆஃப் ரோடு பயணம் போனால் எப்படி இருக்கும்?’ - இது லேண்ட்ரோவர் காதுகளை எட்டிவிட்டது! புதிய டிஸ்கவரியை இறக்கிவிட்டது. 900மிமீ நீரின் ஆழத்தில் செல்லும் திறன், 283 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை ஆஃப் ரோடிங்கின் போது உதவி செய்தால்... நெடுஞ்சாலைகளில் கைகொடுப்பது இதன் சூப்பர்சார்ஜர் உடனான 3.0 லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின். 2.2 டன் எடையுள்ள டிஸ்கவரி, 0 - 100 கி.மீ வேகத்தை 7.9 விநாடிகளிலும், 0 - 150 கி.மீ வேகத்தை 15 விநாடிகளிலும் எட்டிப்பிடிக்கிறது. உறுதியான கட்டுமானத் தரம், அட்டகாசமான ஆஃப் ரோடு திறன், அதிகப்படியான சிறப்பம்சங்கள், பவர்ஃபுல்லான இன்ஜின்கள் ஆகியவை 7 சீட்களுடன் கிடைப்பதெல்லாம்... நோ சான்ஸ்!

மோட்டார் விகடன் விருதுகள் 2018

லகளவில் புகழ்பெற்ற ஒரு பைக்கின் அடுத்த தலைமுறை மாடலை வடிவமைப்பது கடினமான விஷயம். அதைச் சாதித்திருக்கிறது ட்ரையம்ப். ஆம், ‘சாலைகளிலும், ரேஸ் டிராக்கிலும் பயன்படுத்தக்கூடிய நேக்கட் ஸ்ட்ரீட் பைக் வேண்டும்’ என்பவர்களுக்கான கச்சிதமான தேர்வாக இருக்கும், இந்த ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்! பவர்ஃபுல் இன்ஜின் - பைரலி SuperCorsa டயர்கள் - பிரெம்போ M50 கேலிப்பர் - அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் - ஸ்லிப்பர் கிளட்ச் - க்விக் ஷிஃப்ட்டர் - OnBoard Computer கலர் டிஸ்ப்ளே - ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்துக்கு பல ரைடிங் மோடுகள் என லிட்டர் க்ளாஸ் சூப்பர் பைக்குகளில்  இருக்கும் வசதிகளுக்காகவே இதை டிக் அடிக்கலாம். பர்ஃபா
மென்ஸில் பின்னியெடுக்கும் பைக்குகளுக்குத்தான் இத்தனை வசதிகள் தேவை. அப்படியென்றால், இதன் 765 சிசி இன்ஜின் பர்ஃபாமென்ஸை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150சிசி பைக்காக பல்ஸர் 150 இருந்தாலும், அது ஜிக்ஸர் - ஹார்னெட் - FZ V2.0 போன்ற மாடர்ன் 160சிசி பைக்குகளுடன் போட்டியிட முடியாமல் இருந்தது. அதற்கான விடைதான் பல்ஸர் NS160. டிசைன் - பாடி பேனல்கள் - வசதிகள் - சேஸி ஆகியவை அப்படியே NS200-ன் ஜெராக்ஸ்தான்! எனவே, ஒரு பெரிய பைக்கை ஓட்டுவது போன்ற உணர்வு தானாகவே வந்துவிடுகிறது. இதற்குக் கைகொடுக்கும் விதமாக, 160சிசி பிரிவின் பவர்ஃபுல் இன்ஜினை இந்த பைக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்களிடம் இல்லாத வசதிகளான 4 வால்வ் - ஆயில் கூலர் - பெரிமீட்டர் ஃப்ரேம் ஆகியவை இருப்பதால், பர்ஃபாமென்ஸும் கையாளுமையும் சிறப்பாகவே இருக்கிறது. விலை அதிகம்தான்; ஆனால், இதை ஓட்டும்போது தெரியாது. ஜாலி ரைடிங்கும் அடிக்கலாம்; ஆபீஸுக்கும் போகலாம். அப்படிப்பட்ட எக்ஸிக்யூட்டிவ்களுக்கான சரியான சாய்ஸ் 160.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘கற்பனைக்கு எல்லை இல்லை’ என்பதை டொமினார் மூலம் நிரூபித்திருக்கிறது பஜாஜ். LED ஹெட்லைட், ஸ்லிப்பர் கிளட்ச், 4 வால்வ் லிக்விட் கூல்டு Fi இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ரேடியல் டயர்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் என வசதிகளின் பட்டியல் மீக நீளம். கேடிஎம் டியூக் 390 பைக்கின் இன்ஜின்தான் இதற்கு ஆதாரம். ‘பைக் ரொம்ப பல்க்கா இருக்கே... எப்படி ஹேண்டில் பண்றது’ என்று மலைக்க வேண்டிய அவசியமில்லை. 182 கிலோ டொமினாரைக் கச்சிதமாக வடிவமைத்த பஜாஜுக்கு பொக்கே கொடுத்தே ஆக வேண்டும். பைக்கின் சஸ்பென்ஷன் மற்றும் பெரிமீட்டர் ஃப்ரேமின் செட்-அப்பிலும்தான் இதன் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. புல்லட்டுக்குப் போட்டியாக இதை பொசிஷன் செய்த பஜாஜின் தைரியத்துக்காக இன்னொரு பொக்கே! இந்த ஆண்டின் சிறந்த பிரீமியம் பைக்காக, இந்தப் போட்டியில் ஜெயிக்கும்  டொமினாருக்கு வாழ்த்துகள்!

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ட்ஜெட் க்ரூஸர் செக்மென்ட்டில் சுஸூகியிடம் பைக்கே இல்லை என்கிற குறை இனி இல்லை. இன்ட்ரூடர்தான் இதற்குக் காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை, ‘பைக்கின் டிசைன் சரியாக இருந்தாலே, பாதி வெற்றி உறுதி’ என்பது உண்மை. இதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்த சுஸூகி, தனது கைவண்ணத்தை இன்ட்ரூடரில் நிகழ்த்திவிட்டது! பார்க்க 300-400சிசி பைக் போல இருந்தாலும், இது மெக்கானிக்கலாக பார்த்தால் அடிப்படையில் ஜிக்ஸர்தான்! ஜிக்ஸரில் ஆப்ஷனலாகக் கிடைத்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ், பின்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவற்றை இன்ட்ரூடரில் ஸ்டாண்டர்டாகச் சேர்த்திருக்கிறது சுஸூகி. இதனால், ஜிக்ஸரின் பலங்களையும் இன்ட்ரூடரில் எதிர்பார்க்கலாம். க்ரூஸர் என்றாலே அவென்ஜர்தான் என்றிருந்த நிலையில், இனிமேல் இன்ட்ரூடரையும் டிக் அடிக்கலாம் க்ரூஸர்கள். அசத்தல் டிசைனில் வந்திருக்கும் பெஸ்ட் டூரிங் பைக், இன்ட்ரூடர்தான்!

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ஸ்டைலில் எப்போதுமே காம்ப்ரமைஸ் ஆகாது யமஹா. ஆனால், ‘பவர் போதலையே’ என்று வாடிக்கையாளர்கள் குறைபட்டதை நிவர்த்தி செய்தது FZ25.  LED ஹெட்லைட் மற்றும் LED டெயில் லைட்டைத் தவிர்த்துப் பார்த்தால், அப்படியே FZ V2.0 பைக்கின் மற்றொரு மாடலோ என்பதுபோலவே இருந்தது இதன் தோற்றம். ஆனால், இதுதான் FZ ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. ஆயில் கூலருடன்கூடிய இன்ஜின், சூப்பர் ஸ்மூத். மேலும், ஒரு நேக்கட் பைக்குக்குத் தேவையான ஆரம்பகட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸில் இந்த பைக் செமையாக ஸ்கோர் செய்கிறது. கையாளுமையும் பிரேக்ஸும் அப்படியே! ‘FZ-தான் வேணும்; ஆனா பவர்ஃபுல்லா’  என்பவர்களுக்காக, ஸ்டைலில் காம்ப்ரமைஸ் செய்யாமல் வந்திருக்கும் FZ-25தான் இந்த ஆண்டின் சிறந்த வேரியன்ட்.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘இந்தியாவில் வழக்கமான டிசைன்களைக் கொண்டிருக்கும் டூ-வீலர்களைத் தயாரிக்கும் நிறுவனம்’ எனத் தன்மீது படிந்திருக்கும் இமேஜை, லிவோ - ஷைன் SP - ஹார்னெட் -  நவி - க்ளிக் ஆகியவற்றால் மெள்ளச் சரிசெய்துவரும் ஹோண்டா, அந்தப் பாதையிலேயே சென்று ஆக்ஸஸ் ஸ்கூட்டரை எதிர்கொள்ள முடிவுசெய்தது. ஹோண்டா நினைத்தபடி கிரேஸியா, ஸ்கூட்டர் செக்மென்ட்டைக் கொஞ்சம் புரட்டிப் போட்டிருக்கிறது. ஷார்ப்பான டிசைன், LED ஹெட்லைட் - டிஜிட்டல் மீட்டர் போன்ற மாடர்ன் வசதிகள், ஸ்மூத்தான இன்ஜின், ஹேண்ட்லிங், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலை என எல்லா ஏரியாக்களிலும் சொல்லி அடித்திருக்கிறது ஹோண்டா. ஆக்ஸஸுக்கு மட்டுமில்லை; ஆக்டிவாவா, டியோவா, கிரேஸியாவா என்று ஹோண்டாவுக்குள்ளேயும் போட்டியை வரவழைத்தற்காக கிரேஸியாவுக்குப் பூங்கொத்து!

மோட்டார் விகடன் விருதுகள் 2018

ங்களுக்கு ஒரு துறை புதுசு; உங்களால் எடுத்த எடுப்பிலேயே ஜெயிக்க முடியுமா? இப்படித்தான் ரெஹானா கவனம் ஈர்த்தார். கலந்துகொண்ட முதல் ரேஸிலேயே முதலாவதாக போடியம் ஏறுவதெல்லாம் மச்சம் மட்டும் இல்லை; உழைப்பின் உச்சம். அதற்குப் பிறகு ரெஹானா தொட்டது அனைத்தும் பெண் ரேஸர்கள் விட்டுச் சென்ற மிச்சம். ஹோண்டாவின் ஆஸ்தான ரேஸராகி, இப்போது ஸ்பீடு-அப் டீமுக்காக ரேஸ் ஓட்டிக்கொண்டிருக்கும் ரெஹானா - சீனா, மலேசியா, தாய்லாந்து என்று வெளிநாடுகளிலும் போடியம் ஏறி, இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டிவிட்டு வந்திருக்கிறார். ஆண்களில் சரத் மட்டுமே கலந்துகொண்டு சாதனை புரிந்த மோட்டோ ஜிபி-யில் கலந்துகொள்ள பைக் முறுக்கிக்கொண்டிருக்கும் சுத்தமான சென்னைப் பொண்ணு ரெஹானாவுக்கு, இந்த ஆண்டின் சிறந்த பைக் ரேஸர் விருதை அளிப்பதில் பெருமை கொள்கிறது மோ.வி.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

‘இந்தியாவின் டெஸ்லா' - இந்தப் பெயருக்கு நிச்சயம் மஹிந்திரா பொருத்தமான நிறுவனம்! e2O, e-Verito, e-Supra, GenZe என்று எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள். இது தவிர, எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸிங்கிலும் வெற்றியை முத்தமிட்டிருக்கிறது மஹிந்திரா. தற்போது டெட்ராய்ட்டிலும் கார் உற்பத்தியைத் தொடங்கியிருக்கும் இந்த நிறுவனம், டிரைவர் இன்றி இயங்கக்கூடிய டிராக்டர்களை, சென்னையில் இருக்கும் தனது ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்க உள்ளது. இத்தகைய வருங்காலத் தொழில்நுட்பங்களுடன் சேர்ந்து, தான் விற்பனை செய்யும் வழக்கமான கார்களிலும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறது மஹிந்திரா. அதன்படி 2017-ல் வந்தவைதான், மேம்படுத்தப்பட்ட KUV 1OO NXT, ஸ்கார்ப்பியோ. இதனுடன் TUV 300 ப்ளஸ், XUV 5OO ஃபேஸ்லிஃப்ட், இனோவாவுக்குப் போட்டியாக ஒரு எம்பிவி, டிவோலியை அடிப்படையாகக் கொண்ட க்ராஸ்ஓவர், KUV 1OO NXT காரின் எலெக்ட்ரிக் மாடல் என 2018-ம் ஆண்டுக்கான புதிய தயாரிப்புகள் தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கின்றன. இது தவிர, புத்தம் புதிய ஜாவா பைக்குகளும், விரைவில் இந்தியாவில் டயர் பதிக்க உள்ளன. 2017 முழுதும் இப்படித் தூங்காமல் உழைத்த மஹிந்திராவுக்கு, சிறந்த கார் தயாரிப்பாளர் விருது.

மோட்டார் விகடன் விருதுகள் 2018

டந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பஜாஜ் - கவாஸாகி கூட்டணி முடிவுக்கு வந்தது. தனது பைக்குகளின் விற்பனை மற்றும் சர்வீஸுக்காக, இவ்வளவு நாள்கள் பஜாஜ் நிறுவனத்தையே நம்பியிருந்த கவாஸாகிக்கு, இது நிச்சயம் இழப்புதான். ஆனால், பஜாஜிடமிருந்து பிரிந்துவந்த பிறகு, புது ரத்தம் பாய்ச்சியபடி தெம்புடன் வேலை செய்தது கவாஸாகி. குறுகிய காலத்திலேயே 22 டீலர்களை நியமித்ததுடன் நிற்காமல் Z650, வெர்சிஸ் X-300, Z900, நின்ஜா 650 என்று புதிய தயாரிப்புகளையும் வரிசை கட்டியது. 250சிசி, 300சிசி, 650சிசி, 1000சிசி (நின்ஜா மட்டும்) மாடல்களை, புனேவில் உள்ள தனது தொழிற்சாலையில் அசெம்பிளி செய்யப்படுவதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்! இது தவிர, நின்ஜா 250, நின்ஜா 400, Vulcan S, Z900RS, H2 SX என்று EICMA, டோக்கியோ மோட்டார் ஷோக்களில் வரிசையாகப் புதிய கவாஸாகி பைக்குகள் அணிவகுத்தன. கூட்டணி முறிந்தபோதும், தன்னம்பிக்கையோடு பயணத்தைத் தொடரும் கவாஸாகிக்கு வாழ்த்துகள்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு