பிரீமியம் ஸ்டோரி

ரு குடும்பத்தில்  சகோதரர்கள் மூன்று பேர். பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள். நிற்க வைத்தால் அடையாளம் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். Q7, Q5, Q3. இவர்கள்தான் அந்த மூவர். அந்தக் குடும்பம் ஆடி. இந்த கார்களுக்கான முக்கியமான வித்தியாசம் - நீளம்! 

புது ஆடி Q5!
புது ஆடி Q5!

ஆடியில் இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. மூன்றுமே விற்பனையில் டாப்தான். இப்போது நடு பிரதர், அதாவது Q5 - கொஞ்சம் முன்னேற்றம் கண்டு ஃபேஸ்லிஃப்ட் ஆகி வந்திருக்கிறது. பழைய Q5-வைவிட கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது. ஆனால், 70 கிலோ எடை குறைவாகி இருக்கிறது. காஸ்ட்லி காரின் சிறப்பான மைலேஜுக்காகவும், பர்ஃபா மென்ஸுக்காகவும் இந்த மாற்றங்களாம். ஆடியின் கட்டுமானம்தான் உலகறிந்ததாச்சே! Q7 தயாராகும் அதே MQB பிளாட்ஃபார்ம். ஸோ... சூப்பர் ஸ்ட்ராங் Q5.

பின் பக்கம் 35 TDI - ‘quattro’ எனும் பேட்ஜ். இது ஆடியின் ஃபேவரைட்டான ஆல் வீல் டிரைவ் சிஸ்டம். பவர் அப்படியே நான்கு வீல்களுக்கும் சமமாகக் கிடைக்கும். 190 bhp, 40 kgm டார்க் கொண்ட இந்த 4 சிலிண்டர் இன்ஜின், ஸ்மூத்தாக பவரை  டெலிவரி செய்கிறது. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இதற்குக் காரணம். 1,900 கிலோ எடை கொண்ட கார், 0-100 கி.மீ-யை 7.9 விநாடிகளில் கடக்கிறது. மிட் ரேஞ்சோ, டாப் எண்டோ -  நீங்கள் ஆடி Q சீரிஸ் கார்களை ஒரு தடவை ஓட்டிவிட்டால், வேறு கார்களை ஓட்டப் பிடிக்காது. 3 லிட்டர், V6 இன்ஜின்கூட ஆடியிடம் ஐடியா இருக்கிறது. அது நிச்சயம் இன்னும் மெர்சலாக இருக்கும். 

புது ஆடி Q5!

இத்தனைக்கும் இது பர்ஃபாமென்ஸ் காரோ, ஸ்போர்ட்ஸ் காரோ இல்லையாம். டிரைவர்ஸ் கார் என்கிறது ஆடி. இதன் ரிஃபைன்மென்ட் மேல் உள்ள நம்பிக்கையில் இப்படிச் சொல்கிறார்கள். டிரைவிங் செலெக்ட் மோடுகளைப் பொறுத்து, இதன் சஸ்பென்ஷன் டேம்ப்பிங் செட்-அப் தானாக மாறிக்கொள்ளும். அதிவேகங்களில் கிச்சென விறைப்பாகும்; நார்மல் வேகங்களில் சாஃப்ட் ஆகி சிரிக்கும். இந்த அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷனை வைத்து ஆஃப் ரோடிங், ஹைவே ரைடிங், சிட்டி டிரைவிங் என்று எல்லாவற்றிலும் அசத்தலாம். லைட் வெயிட் எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங், பெரிய 18 இன்ச் வீல்கள், இந்த ஆடிக்குப் பெரிய ப்ளஸ். 

புது ஆடி Q5!

உள்ளே... கேபின் ஏதோ காலியாக இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், வசதிகளெல்லாம் தாராளம். அதுவும் அந்த டச் ஸ்கிரீன் பிரமாதம். ஆனால், A8 அளவுக்கு இது இல்லை. நேவிகேஷன் App, டிஜிட்டல் மயமான விர்ச்சுவல் காக்பிட், டிரைவர் சீட்டுக்கு மெமரி அட்ஜஸ்ட், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் போன் சார்ஜிங் பாயின்ட், 3 ஜோன் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் கேமராக்கள் என்று வசதிகள் ஓகே! தானாக பார்க் பண்ணிக்கொள்ளும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங்தான் ஹைலட். 70 லட்ச ரூபாய்க்கு இன்னும் வசதிகள் எதிர்பார்க்கலாம். 90 லட்ச ரூபாய் Q7 காரில் இருந்து, ஒரே ஒரு விஷயத்தில் மேலே போய்விட்டது Q5. ஆம், பூட் ஸ்பேஸுக்கு அடியில் ஸ்பேர் டயர் வைத்துக்கொள்ள இடம் இருக்கிறது.

இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது, புதிய Q5 ரிலீஸ் ஆகியிருக்கலாம். மெர்சிடீஸ் GLC, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் இவோக், வால்வோ XC60, லெக்ஸஸ் NX 300H, பிஎம்டபிள்யூ X3... இவைகளெல்லாம் Q5 காருடன் செமயாக மோதப் போகின்றன. காத்திருக்கலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு