Published:Updated:

ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!
ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!

ஃபர்ஸ்ட் டிரைவ்தமிழ்

பிரீமியம் ஸ்டோரி
ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!

னிமேல் ஹீரோவில் இருந்து எல்லாமே i3S ஸ்மார்ட் சிஸ்டத்துடன்தான் வரும் என்று ஏற்கெனவே நாம் சொன்னது உண்மையாகிவிட்டது. ஒரே நாளில் வரிசையாக மூன்று பைக்குகளை அறிமுகம் செய்து, ஹாட்ரிக் அடித்திருக்கிறது, ஹீரோ மோட்டோ கார்ப். இதை ஃபேஸ்லிஃப்ட் பைக்ஸ் என்றும் சொல்லலாம். சூப்பர் ஸ்ப்ளெண்டர், பேஸன் ப்ரோ, பேஸன் X ப்ரோ பைக்குகளை ‘மானே தேனே’ போட்டு, டிசைனை மாற்றி அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்ப்ளெண்டர் மட்டும்தான் 125 சிசி. பேஸன் பைக்குகள் இரண்டும் 110 சிசி. எல்லாவற்றுக்குமே பொதுவான விஷயம் - i3S ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம். டெல்லிப் பனியில் மூன்றையும் டெஸ்ட் டிரைவ் செய்தேன்.    

ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!


ஃபேஷனுக்காக இல்லாமல் பேஸனுக்காக வாங்கும் கம்யூட்டர்களின் ராஜா, இந்த பைக்.  இப்போதாவது வசதிகள் பக்கம் எட்டிப் பார்த்ததற்கு ஹீரோவுக்கு ஷொட்டு. அட! கம்யூட்டிங் பைக்கில் USB போர்ட்டெல்லாம் இருக்கிறது. செம! மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி, சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், ட்ரிப் மீட்டர், இப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ். கம்யூட்டர்களுக்கு ஜாலிதான்.

ஹீரோவின் புதிய 109.15 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 9.4 bhp பவரையும், 0.9 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பழைய பேஸனைவிட 12 சதவிகிதம் பவரும் டார்க்கும் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது ஹீரோ. டெல்லிச் சாலைகளில் பைக்கை விரட்டினேன். டாப் ஸ்பீடு 90 கி.மீ வரை எட்ட முடிந்தது. பிரேக்கிங்கும் அருமை. சாலையில் பழைய பேஸன் பைக் ஓட்டியவர்கள், நின்று நின்று விசாரித்தார்கள். மொத்தம் ஐந்து கலர்களில் வருகிறது பேஸன் ப்ரோ. கிராபிக்ஸே கலக்கலாக இருக்கிறது. இது கம்யூட்டர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். i3S-க்கு பட்டன் வலது பக்கம் இருக்கிறது. சிக்னலில் ஐந்து விநாடிகள் நின்றால், இன்ஜின் தானாக ஆஃப் ஆகும். கிளட்ச் பிடித்தால் மறுபடியும் இன்ஜின் ஆன் ஆகும். இது வேண்டாமென்றால், ஆஃப் செய்துவிடலாம். பழைய பைக்கைவிட மைலேஜும் ஐந்து சதவிகிதம் அதிகம் கிடைக்கும் என்கிறது ஹீரோ. அலுவலகம், வீடு என்று மரியாதையாக பைக் ஓட்டுபவர்களுக்கான அருமையான சாய்ஸ்.

ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!

சாதாரண ப்ரோ, கொஞ்சம் மிடில் ஏஜ் மக்களுக்கு என்றால், X-ப்ரோ இளைஞர்களுக்கானது என்று வைத்துக்கொள்ளலாம். மொழுக்கென இருக்கும் பேஸன் ப்ரோவை, கொஞ்சம் ஷார்ப்பாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல் டேங்க்கில், ஸ்போர்ட்டியான ஏர் ஸ்கூப் இருந்தால், பேஸன் X-ப்ரோ என்று கண்டுபிடிக்கலாம். அதை சும்மா டிசைனுக்குத்தான் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். சில செங்குத்தான வளைவுகளில் கால்களை மடித்து வளைத்துத் திருப்ப அருமையாக இருந்தது X-ப்ரோ. ஹெட்லைட்டும் டெயில் லைட்டும்கூட செம ஷார்ப். டூயல் டோன் மிரர்கள் உண்டு. மற்ற எல்லா வசதிகளும், இன்ஜினும் அப்படியே பேஸன் ப்ரோ. பேஸன் ப்ரோ பைக் வைத்திருப்பவர்கள், கொஞ்சம் பிரீமியமாக மாற நினைத்தால் X-ப்ரோ பெஸ்ட் ஆப்ஷன்.

ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்!

ம்யூட்டிங் பைக்கில் கொஞ்சம் பவர் வேண்டும் என்பவர்களுக்கான 125 சிசி பைக் இது. க்ரோம் ஃபினிஷ்டு மஃப்ளர், சைடு கவருக்கு சில்வர் ஃபினிஷ், கறுப்பு அலாய் பாகங்கள் என்று மாற்றங்கள். ஃப்யூல் டேங்க்குக்குக் கீழேகூட ஒரு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது. ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர், சீட்டுக்குக் கீழே ஸ்டோரேஜில் அதிக இடவசதி என்று வழக்கம்போல் வசதிகள். பின் பக்கம் பெரிய டயர் என்பதால், ரோடு கிரிப்பில் சூப்பர். ஒரே ஒரு விஷயம் புரியவில்லை - 110 சிசிக்கே டிஸ்க் பிரேக் கொடுத்தவர்கள், 125 சிசிக்கு டிரம்மே போதும் என்று ஏன் நினைத்துவிட்டார்கள்? 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இன்ஜின்தான் இதில் விஷயமே! புதிய 124.5 சிசி இன்ஜினில் 11.4 bhp கிடைக்கிறது. டார்க் 1.1kgm. பழசைவிட 27 சதவிகிதம் பவரும், 6 சதவிகிதம் வரை டார்க்கும் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும் என்கிறது ஹீரோ. 94 கி.மீ டாப் ஸ்பீடு என்றார்கள். 96 கி.மீ வரை பறந்தேன். ஆனால், டாப் எண்டில் லேசான திணறல் இருக்கத்தான் செய்தது. சிட்டி ரைடிங்குக்கு, சூப்பர் ஸ்ப்ளெண்டரின் டால் கியரிங் சூப்பராக இருக்கும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு