Published:Updated:

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்
ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

ராகுல் சிவகுரு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ... இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் பங்குபெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், கிடைக்கும் வரவேற்பு என்பது, அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஹேட்ச்பேக் - செடான் - க்ராஸ்ஓவர் - எஸ்யூவி - எம்பிவி எனப் பலவகை கார்களுடன், எலெக்ட்ரிக் வாகனங்களும் இம்முறை காட்சிப்படுத்தப்பட உள்ளன.    

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

ரெனோ: தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்து வரும் நிலையில், தனது பங்குக்கு ZOE எலெக்ட்ரிக் காரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது ரெனோ. சிங்கிள் சார்ஜில் 300 கிமீ தூரம் செல்லக்கூடிய இந்தக் காரின் பேட்டரியை, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 80 சதவிகிதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். எனவே, இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, ரெனோ முடிவெடுக்கும் என நம்பலாம். இதனுடன் Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 3 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற புதிய டஸ்ட்டரை, இந்தியாவில் களமிறக்கும் முடிவில் இந்நிறுவனம் உள்ளது. இதில் எதிர்பார்த்தபடியே, டிசைன் மற்றும் கேபினில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்ஜின் ஆப்ஷனில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றே தெரிகிறது. மேலும், க்விட் தயாரிக்கப்படும் CMF ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, ஒரு 7 சீட் மாடல் மற்றும் எலெக்ட்ரிக் காரையும் தயாரிக்கும் முடிவில் ரெனோ இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

மாருதி சுஸூகி: பிராக்டிகலான கார் என்ற பெயர்பெற்ற வேகன்-ஆர் ஹேட்ச்பேக்கின் மூன்றாம் தலைமுறை மாடலை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது மாருதி சுஸூகி. இதன் டால் பாய் தோற்றம் அப்படியே தொடர்ந்தாலும், ஆங்காங்கே சில தனித்துவமான டிசைன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ‘இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்’ என்ற பெருமைக்குச் சொந்தமான ஆல்ட்டோ, முற்றிலும் புதிய அவதாரத்தில் வரவிருக்கிறது. மினி இக்னிஸ் போல இதன் டிசைன் இருப்பதால், இடவசதி அதிகரித்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் போன்ற வசதிகள் இதில் இடம்பெற்றிருக்கும். இதனுடன் ரெனோ க்விட் காருக்குப் போட்டியாக, எஸ்யூவி போன்ற டிசைன் - அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடனான ஒரு காரையும் மாருதி சுஸூகி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மூன்று கார்களிலும், அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் தொடர்கின்றன. கடந்த 2012-ல் வெளிவந்த எர்டிகா எம்பிவியின் அடுத்த தலைமுறை மாடல், ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாக உள்ளது. காரின் அளவுகளில் மாற்றம் இருப்பதால், இடவசதியில் முன்னேற்றம் இருக்கலாம். மற்றபடி அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் தொடரும் என்றாலும், தனது புதிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை, மாருதி சுஸுகி இதில் பொருத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

கியா: ஆந்திராவில் தொழிற்சாலையை நிறுவியிருக்கும் ஹூண்டாய் குழும நிறுவனமான கியா,  இந்த எக்ஸ்போவில் தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளது.  Picanto மற்றும் Rio ஹேட்ச்பேக், Stoinic மற்றும் Soul க்ராஸ்ஓவர், Sorento மற்றும் Sportage எஸ்யூவி, Optima மற்றும் Cerato செடான் ஆகிய கார்களை, இங்கே பார்ப்பதற்கான சாத்தியம் உண்டு. இவற்றில் பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக்/மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இருக்கின்றன என்பது ப்ளஸ்.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

ஹோண்டா: கடந்த ஆண்டு நடைபெற்ற ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஜாஸ் ஃபேஸ் லிஃப்ட் மாடலை, இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹோண்டா. டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் மாற்றம் இருந்தாலும், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த வித்தியாசமும் இல்லை. மேலும் மாருதி சுஸூகி டிசையருக்குப் போட்டியாக முற்றிலும் புதிய அமேஸ் காம்பேக்ட் செடானை இந்நிறுவனம் களமிறக்கும் முடிவில் இருக்கிறது. ஷார்ப் டிசைன், மாடர்ன் கேபின், அதிக வசதிகள் என முன்னேற்றம் இருந்தாலும், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. முதன்முறையாக 1.6 லிட்டர் டீசல் இன்ஜினுடன், ஐந்தாம் தலைமுறை CR-V எஸ்யூவியையும் காட்சிப்படுத்த உள்ளது ஹோண்டா. ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அதிக இடவசதி மற்றும் 7 சீட்களைக் கொண்டிருக்கும் இந்த எஸ்யூவி, அக்கார்டு ஹைபிரிட் செடானில் இருப்பதுபோன்ற கேபின் மற்றும் வசதிகளைக் கொண்டிருப்பது ப்ளஸ்.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

பிஎம்டபிள்யூ: மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் LWB காருக்குப் போட்டியாக, 6 சீரிஸ் GT காரைக் களமிறக்க உள்ளது பிஎம்டபிள்யூ. 5 சீரிஸ் செடானை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டாலும், அதிக வீல்பேஸுடன் டிசைனிலும் எகிறி அடித்திருக்கிறது 6 சீரிஸ் GT. காரின் ஏர் சஸ்பென்ஷனில் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிக்கும் வசதி இருப்பதால், இது டிரைவர் வைத்து ஓட்டுபவர்களுக்குச் சிறந்த காராக இருக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வரப்போகும் 6 சீரிஸ் GT காரை, இந்தியாவில் அசெம்பிள் செய்யும் முடிவில் இருக்கிறது பிஎம்டபிள்யூ. எனவே, போட்டி யாளர்களுடன் ஒப்பிடும்போது, அசத்தலான விலையை எதிர்பார்க்கலாம். இதனுடன் ஆடி Q5, மெர்சிடீஸ் பென்ஸ் GLC ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய X3 மற்றும் X2, X4 எஸ்யூவிகளை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ காட்சிப்படுத்த உள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, 55 கிலோ எடை குறைந்திருக்கும் X3, கேபின் தரம், இடவசதி, ஓட்டுதல் அனுபவத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதனுடன் முற்றிலும் புதிய Z4 ரோட்ஸ்டர் காரும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முந்தைய மாடலைவிட எடை குறைந்திருக்கும் நிலையில், இதில் 250bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தியுள்ளது பிஎம்டபிள்யூ.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

மெர்சிடீஸ் பென்ஸ்: ‘4 கதவுகளைக் கொண்ட கூபே’ என்ற ஸ்டைலான வடிவமைப்பை, முதல் தலைமுறை CLS கார் வாயிலாக உலகுக்குப் பறைசாற்றியது மெர்சிடீஸ் பென்ஸ்தான். இதே பாணியைப் பின்பற்றி வெளிவந்த பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் Gran Coupe மற்றும் ஆடி A7 SportBack ஆகிய கார்களுக்குப் போட்டியாக, மூன்றாம் தலைமுறை CLS காரை பென்ஸ் களமிறக்க உள்ளது. E-க்ளாஸ் செடானை அடிப்படையாகக் கொண்டு, அதே கூபே பாணியில் கார் தயாரிக்கப்பட்டாலும், இன்ஜின் - கேபின் - தொழில்நுட்பம் ஆகியவற்றை S-க்ளாஸ் செடானில் இருந்து பெற்றுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். 

அதேபோல, ‘Best Car in the World’ எனப் பலர் பிரபலப்படுத்திய, சொகுசுக்குப் பெயர்பெற்ற S-க்ளாஸ் செடானின் பேஸ்லிஃப்ட் மாடலும் காட்சிப்படுத்த உள்ளது. புதிய டிசைன், அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன், முற்றிலும் புதிய இன்ஜின்களை S-க்ளாஸ் செடானில் பொருத்தியுள்ளது பென்ஸ். அதுமட்டுமல்லாமல், E-க்ளாஸ் செடானை அடிப்படையாகக்கொண்டு, V90 க்ராஸ் கன்ட்ரி காருக்குப் போட்டியாகத் தான் தயாரித்திருக்கும் E-க்ளாஸ் All Terrain கார் மற்றும் EQ எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் ஆகியவற்றை, பென்ஸ்  அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

டாடா மோட்டார்ஸ்: தனது டாப் செல்லிங் ஹேட்ச்பேக்கான டியாகோவின் ஸ்போர்ட்ஸ் மாடலை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ். பர்ஃபாமென்ஸ் கார்களைத் தயாரிப்பதற்காக உதயமான ஜெயம் ஆட்டோமோட்டிவ் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையேயான JTS கூட்டணிதான், இந்தக் காரையும் தயாரித்திருக்கிறது. இதில், டாடா நெக்ஸானில் இருக்கும் 110bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உயரம் குறைவான சஸ்பென்ஷன், இறுக்கமான டேம்பர்கள், அதிரடியான பாடி கிட் என வழக்கமான காரிலிருந்து இதனை மாற்ற டாடா முயற்சித்திருக்கிறது.  மாருதி சுஸூகி பெலினோ RS, ஃபோக்ஸ்வாகன் போலோ GT, ஃபியட் அபார்த் புன்ட்டோ ஆகிய ஸ்போர்ட்ஸ் ஹேட்ச்பேக்குகளுக்குப் போட்டியாக, டியாகோ ஸ்போர்ட் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸானைத் தொடர்ந்து, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தயாரிக்கப்படும் L550 பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு புதிய எஸ்யூவிகளைக் களமிறக்க உள்ளது டாடா மோட்டார்ஸ். இதில் 5 சீட் மாடல், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ கேப்ச்சர் உடன் போட்டி போடுகிறது. இதுவே 7 சீட் மாடல், ஜீப் காம்பஸ் உடன் போட்டி போடுகிறது. இது இரண்டிலும் இருப்பது, ஃபியட்டின் 2.0 லிட்டர் மல்ட்டிஜெட் II டீசல் இன்ஜின்தான். என்றாலும் 5 சீட் மாடலில் இது 140bhp பவரை வெளிப்படுத்துகிறது. 7 சீட் மாடலில், இது 170bhp பவரை வெளிப்படுத்துகிறது. மேலும் 2WD மற்றும் 4WD ஆப்ஷனையும் எதிர்பார்க்கலாம். மேலும் நானோ, டியாகோ, டிகோர் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் மாடலும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

மஹிந்திரா: ஸாங்யாங் டிவோலி க்ராஸ்ஓவரை அடிப்படையாகக்கொண்டு, இரண்டு மாடல்களைக் களமிறக்க உள்ளது மஹிந்திரா. இது அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அகலமான டயர்கள், 5 சீட் மற்றும் 7 சீட் ஆப்ஷன் என இதை இந்த நிறுவனம் வித்தியாசப்படுத்தி இருக்கிறது. இதில் 5 சீட் மாடல், டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா உடன் போட்டி போடக்கூடிய காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கும். 7 சீட் மாடல், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்ட்டர் உடன் போட்டி போடக்கூடிய க்ராஸ்ஓவராக இருக்கும். இதில் முற்றிலும் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர முற்றிலும் புதிய ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் எஸ்யூவியை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது மஹிந்திரா. பீரிமியம் டிசைன், அதிகரிக்கப்பட்ட அளவுகள், குறைந்த எடை, 20 இன்ச் அலாய் வீல்கள், மென்மையான பிளாஸ்டிக் மற்றும் லெதரால் ஆன தரமான கேபின் என முன்னேறியிருக்கும் ரெக்ஸ்ட்டன், எண்டேவருடன் போட்டி போடுகிறது. இதில் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் U321 என்ற குறியீட்டுப் பெயரில், மோனோகாக் சேஸியுடன் கூடிய புதிய எம்பிவியை டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது மஹிந்திரா. ஸைலோவுக்கு மாற்றாக வரப்போகும் இது, டொயோட்டா இனோவா க்ரிஸ்டா மற்றும் டாடா ஹெக்ஸாவுக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்பட உள்ளது. 7 சீட் மற்றும் 8 சீட் ஆப்ஷன், லேட்டஸ்ட் வசதிகள் என மாடர்னாக இருக்கும் இந்த எம்பிவியில், ஸாங்யாங் உடன் தான் இணைந்து தயாரித்திருக்கும் புதிய 1.6 லிட்டர் mFalcon டீசல் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது மஹிந்திரா. இது 130bhp பவரை வெளிப்படுத்துகிறது.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

டொயோட்டா: எட்டியோஸ் செடானுக்கு மாற்றாக, வியோஸ் எனும் செடானைக் களமிறக்க உள்ளது டொயோட்டா. இந்நிறுவனத்தின் ‘Keen Look’ டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் வியோஸ், பார்க்க மினி கேம்ரி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்களுடன், தனது தயாரிப்புகளுக்கே உரித்தான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மையை சேர்த்தே, ஹோண்டா சிட்டிக்குப் போட்டியாக வியோஸ் காரைத் தயாரித்திருக்கிறது டொயோட்டா. எட்டியோஸ் செடானில் இருக்கும் அதே இன்ஜின்கள்தான் இதிலும் என்றாலும், அதிக செயல்திறனுக்காக ரீ-டியூன் செய்யப்படலாம். அதேபோல, முற்றிலும் புதிய கேம்ரி ஹைபிரிட் செடானையும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது.  அட்டகாசமான டிசைன், ஸ்டைலான கேபின் என அசத்தலாகக் காட்சியளிக்கும் கேம்ரியில், அதே 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - ஹைபிரிட் அமைப்புதான் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் ப்ராடோ எஸ்யூவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இன்ஜினில் மாற்றம் இல்லாவிட்டாலும், டிசைன் மற்றும் கேபினில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ ஒரு விறுவிறு முன்னோட்டம்

ஹூண்டாய்: அதிக விலை என்றாலும் இரண்டாம் தலைமுறை i20 மற்றும் க்ரெட்டா ஆகிய கார்கள் வெற்றி பெற்றதற்கு, அவற்றின் ஸ்டைலான டிசைன் - சிறப்பான பர்ஃபாமென்ஸ் - கேபின் தரம் - நம்பகத்தன்மை எனப் பல காரணங்கள் உண்டு. தற்போது இதன் பேஸ்லிஃப்ட் மாடல்களைக் களமிறக்க முடிவெடுத்துள்ளது ஹூண்டாய். எனவே, இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்களைப் போன்ற தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் என மாற்றம் இருந்தாலும், அதே  இன்ஜின் ஆப்ஷன்கள்தான் தொடர்கின்றன. இதனுடன் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு எக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுடன் போட்டியிடும் விதமாக, தரமான கேபின் மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் காட்சிப்படுத்த உள்ளது. இதில் i20 காரில் இருக்கும் அதே இன்ஜின்கள் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு