Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா

டெஸ்ட்டிங்கில் மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி!ஸ்பை படங்கள் - மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவிராகுல் சிவகுரு - படங்கள்: கார்மேகக் கண்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO - ரகசிய கேமரா

S201 என்ற குறியீட்டுப் பெயரில், ஹூண்டாய் க்ரெட்டாவுக்குப் போட்டியாக, ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்போகும் மிட் சைஸ் எஸ்யூவியை, நீண்ட நாள்களாக மஹிந்திரா நிறுவனம் டெஸ்ட் செய்துகொண்டிருப்பது தெரியும். இந்நிலையில், அதே மாடலைப் பின்பற்றி, விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாக, ஒரு காம்பேக்ட் எஸ்யூவியை மஹிந்திரா தயாரிக்கப் போவது, தற்போது தெரிய வந்துள்ளது. இது டெஸ்ட்டிங்கில் இருந்தபோது, அதனைப் படம் பிடித்திருக்கிறார், தேனியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான பி.கார்மேகக் கண்ணன். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி இருப்பது தெரிகிறது. இதற்காக, மிட் சைஸ் எஸ்யூவியில் இருந்து சுமார் 200மி.மீ-யைக் குறைத்திருக்கிறது மஹிந்திரா. என்றாலும், இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் பாடி பேனல்கள் மற்றும் கதவுகள், மிட் சைஸ் எஸ்யூவியில் இருந்தே பெறப்பட்டுள்ளன. ஆனால், பின்பக்க டெயில் கேட், டெயில் லைட், பின்பக்க பம்பர் எனப் பின்பகுதியின் வடிவமைப்பில் வித்தியாசங்களைக் காண முடிகிறது. மேலும் காம்பேக்ட் எஸ்யூவி என்பதைப் பறைசாற்றும்விதமாக, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அகலமான டயர்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் தனது புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களைப் பொருத்தும் முடிவில் மஹிந்திரா இருக்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியை, 2018-ம் ஆண்டின் பிற்பாதியில், இந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்!

அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு