Published:Updated:

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு
குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹூண்டாய் வெர்னா நியூ ஜென் (டீசல்)தமிழ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

குற்றாலம் என்றாலே ‘அருவி’யைத் தாண்டி இப்போது ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் நினைவுக்கு வருகிறார். ‘‘ஆனா, இனிமேல் குற்றாலம்னா எனக்குக் குண்டாறுதான் சார் நினைவுக்கு வரும்’’ என்றார் ராஜபிரகாஷ். பாவூர்சத்திரத்தில் நகைக்கடை வைத்திருக்கும் ராஜபிரகாஷ், ஹூண்டாய் வெறியர். ‘‘அதைவிட வெர்னா வெறியன்னு சொல்லலாம்’’ என்றார். பழைய வெர்னா, ஃப்ளூயிடிக் வெர்னா, இப்போது நியூ ஜென் வெர்னா என்று எல்லா வெர்னாக்களின் உரிமையாளர்.  

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

1. சென்னைவாசிகளோ, திருநெல்வேலிவாசிகளோ - குண்டாறுக்கு சென்டர் பாயின்ட் தென்காசிதான். தென்காசியிலோ, குற்றாலத்திலோ அறை எடுத்துத் தங்கிவிடுவது பெஸ்ட் ஆப்ஷன். தென்காசியில் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். ‘பசிக்கலை; கொஞ்சம் லேட்டா டிபன் சாப்பிட்டுக்கலாம்’ என்று காலை உணவுக்குத் தாமதித்தால், 1.30 மணிவாக்கில் நேரடியாக மதிய உணவில்தான் கை வைக்க முடியும்.

2. பண்பொழி சாலை வழியாக திருமலைக்கோயிலுக்கு வெறும் 10 கி.மீதான். லோக்கல்வாசிகளுக்கு மட்டும்தான் இந்த இடம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மைசூர், வால்பாறைபோல குட்டிக் குட்டி ஹேர்பின் பெண்டுகளுடன் மலைமீது இருக்கும் திருமலைக்கோயில், ஆன்மிகவாதிகளுக்கு அற்புதமான ஸ்பாட். இதற்கு ‘திரிகூட மலை’ என்று இன்னொரு பெயரும் உண்டு. 625 படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். இந்த மலைக் கோயிலின் ஸ்பெஷல், மாலை நேரங்களில் ‘பரான் பரான்’ என ஆளையே தூக்கி அடிக்கும் காற்று. நாம் சென்றபோது, பார்க்கிங்கில் இருந்த ஸ்கார்ப்பியோவே ஆடும் அளவுக்குக் காற்றடித்து மிரட்டியது. 

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

3. மறுபடியும் மலை இறங்கி, குற்றாலத்துக்குத் திரும்பும் பாதையில் முன்கூட்டியே வளைந்தால், கண்ணுப்புளி மெட்டு எனும் இடம் வருகிறது. இங்கேதான் குண்டாறு நீர்த்தேக்கம் இருக்கிறது. குண்டாறு அணையில் ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள் ஸ்நாக்ஸாகக் கிடைக்கும்.

4. குண்டாறு அணையின் ஆழம் 36.6 அடி என்கிறார்கள். நெல்லை மாவட்டத்திலேயே குறைந்த அளவு அடி கொண்ட ஒல்லியான அணை, குண்டாறுதான். எப்போதும் இதமான சாரலுடன் தென்றல் வருடுவது குண்டாறு அணையின் ஸ்பெஷல். சுள்ளென வெயில் அடித்தாலும் உறைக்கவில்லை.

5. குண்டாற்றில் இப்போதுதான் படகுச் சவாரி ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால், படகுச் சவாரி, தமிழக அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை என்பது வருத்தம். ‘‘பிரைவேட் போட்டிங் சார். 6 பேர் வரை எத்தனை பேர் ஏறினாலும் 300 ரூபாதான். வேணும்னா உங்களுக்காக எக்ஸ்ட்ரா ரவுண்ட் அடிக்கலாம். ஏறுங்க!’’ என்று சிங்கிளாக வந்த நபரிடம்கூட 300 ரூபாய் போட்டிங் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். எனவே, குண்டாறு போட்டிங்குக்கு கும்பலாக வருவதுதான் பெஸ்ட். 

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

6. குண்டாறு அணை வரைதான் கார்களுக்கு அனுமதி. 50 ரூபாய் கொடுத்து காரை பார்க் செய்யும்போதே, ஜீப் டிரைவர்கள் சுற்றி வளைத்துவிட்டார்கள். ‘‘சார், டாப் வரைக்கும் போகலாம். 2,500 ரூபாய் ஆகும் சார்... உங்களுக்காக 2,000 சார்’’ என்று பேரம் பேசுகிறார்கள். நாம் சென்றபோது சீஸன் டைம் இல்லை என்பதால், அவ்வளவாக ஜீப்கள் நிற்கவில்லை. இதுவே சீஸன் டைம் என்றால், ஜீப் டிரைவர்களுக்கு நிற்கக்கூட நேரம் இருக்காதாம். இந்த ஜீப் சவாரிக்கு நேரம் காலமே கிடையாது. ‘‘நைட் ரெண்டு மணிக்குக்கூட கூப்பிடலாம். ஜீப் சவாரி தயாரா இருக்கும்’’ என்றார்கள். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300)

7. நாலரை கி.மீ கடுமையான காட்டுப்பாதை வழியாகத்தான் குண்டாறு அணையின் உயரத்துக்குப் போக முடியும். ஜீப்பைத் தவிர வேறு வாகனங்களுக்கு சான்ஸே இல்லை. இந்த ஜீப் சவாரியும் தமிழ்நாடு டூரிஸம் இல்லை. தனியார் மயம். இரண்டு பேராக இருந்தாலும், எட்டுப் பேராக இருந்தாலும் 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ‘‘சில நேரங்கள்ல பட்டையெல்லாம் (லீஃப் ஸ்பிரிங்) உடைஞ்சிடும் சார். அது எங்களோட பொறுப்பு. அதுக்கெல்லாம் சேர்த்துதான் சார் காசு! நீங்களே ரோட்டைப் பாருங்க’’ என்றார் நம் ஜீப் டிரைவர் விஷ்ணு. ரோடே இல்லை; பாறைகள், குண்டும் குழியுமான மேடுகள், நடுநடுவே பயணிக்கும் ஓடைகளில் பயணம் போவது செம த்ரில்லாக இருந்தது.  

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

8.1 கி.மீ தாண்டி முதலில் வருவது நெய்யருவி. இந்தப் பகுதி வரை பொதுமக்களுக்கு நடந்துவர அனுமதி உண்டு. ஜீப்பிலும் வரலாம். 400 ரூபாய் கட்டணம். பெயருக்கு ஏற்றாற்போல், நெய்போல் அழகாகத் திரிந்து விழுகிறது நெய்யருவி. இந்தப் பகுதி வரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், இதை ‘பப்ளிக் ஃபால்ஸ்’ என்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரும் செமையாக என்ஜாய் பண்ண நெய்யருவி, அருமையான ஸ்பாட்.

9. நெய்யருவியில் ஆயில் மசாஜும் உண்டு. ‘கடிக்காத நாய் உண்டு; குடிக்காத வாய் இல்லை’ என்பதுபோல், சில சரக்கு பார்ட்டிகளையும் பார்க்க முடிந்தது. இங்கே ஒரே ஒரு வருத்தம் - தண்ணி பார்ட்டிகள் பாட்டில்களை உடைத்துப் போடுவது. ‘‘குழந்தைங்க பொம்பளைங்க வர்ற இடம். சொன்னா கேட்க மாட்றானுவ!’’ என்று திட்டியபடி பாட்டில் சிதறல்களை அள்ளிக்கொண்டிருந்தார் கடைப் பெரியவர் ஒருவர்.

10. இனிமேல் எல்லாமே தனியார்மயம். எனவே, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.  அங்கே இருக்கும் ஓர் அருவியை ‘நடிகர் அருண்பாண்டியன் அருவி’ என்று அழைக்கிறார்கள்.  ‘கோபால் அருவி’ என்றோர் இடம் வந்தது. இங்கே தங்கும் வசதியும் உண்டு. நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் கட்டணம் என்றார்கள். சமைத்துச் சாப்பிடவும் ஆப்ஷன் உண்டாம். மேலே போகப்போக போன் நெட்வொர்க் எல்லாம் துண்டிக்கப்பட்டு, மனித நடமாட்டமே இல்லாமல், தன்னந்தனிக் காட்டுக்குள் தன்னிந்தனியாய் பயணிப்பது ஜிவ்வென இருந்தது. ‘‘BSNL மட்டும் கிடைக்கும் சார்’’ என்றார் ஜீப் டிரைவர் விஷ்ணு.   

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

11. இந்தக் காட்டுப் பகுதியில் மாலை 6 மணி முதல் விலங்குகள் நடமாட்டத்தைப் பார்க்கலாம் என்றார்கள். ‘‘யானை, சிறுத்தை, காட்டுப்பன்னி எல்லாம் அசால்ட்டா திரியும். கரடி மட்டும்தான் இது வரைக்கும் பார்த்ததில்லை’’ என்றார் விஷ்ணு. செல்லும் வழியெங்கும் குஸ்காவில் பீஸ் இருப்பதுபோல், குட்டிக் குட்டியாக அருவிகள், ஓடைகள் என்று என்ஜாய் பண்ணுவதற்கு அருமையான இடம் - குண்டாறு அருவி. குற்றாலத்துக்கு வருபவர்கள், சில ஆயிரங்கள் செலவழித்துக் குண்டாறு பக்கமும் காரைத் திருப்பினால், அற்புதமான அனுபவம் காத்திருக்கும்.

ஹூண்டாய் வெர்னா நியூ ஜென் ஓகேவா?

வெர்னா, இப்போது வேற லெவல். 7" டச் ஸ்கிரீன், ஒன் டச் பவர் விண்டோ, நேவிகேஷன் சிஸ்டம், 6 காற்றுப் பைகள்... என்று மிடில் க்ளாஸ் பட்ஜெட்டில் வசதிகளைக் காட்டி இழுக்கிறது நியூ ஜென் வெர்னா. அதிலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் - இப்போது 170 மி.மீ. நான்கு பேர் பயணித்தும், சில பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் தட்டவே இல்லை. இதற்கு, பேலன்ஸ்டு ஆன சஸ்பென்ஷன் செட்-அப்பும் காரணம். மேடு பள்ளங்களுக்குத் தகுந்தாற்போல் ஜம்மென்று ஏறி இறங்குகிறது வெர்னா. ‘‘ஆடி A3 தான் பார்த்துக்கிட்டிருந்தேன். சீட் மசாஜர், சன் ரூஃப், ஸ்மார்ட் டிரங்க் முதற்கொண்டு கிட்டத்தட்ட ஆடியில் இருக்கிற எல்லா வசதிகளும் வெர்னாவிலும் இருக்கு. என்னைக் கேட்டா, ஆடி வாங்குறதுக்கு வெர்னா வாங்கலாம்னு சொல்வேன்’’ என்கிறார் ராஜபிரகாஷ். மைலேஜும் ஆவரேஜாக 16 கி.மீ தருவதாகச் சொன்னார். ஸ்டீயரிங் ஃபீட்பேக்கும், நியூ ஜென்னில் மாறியிருப்பது நன்றாகவே தெரிந்தது. டெட் பெடல் இருப்பதால், நெடுஞ்சாலையில் ரிலாக்ஸ்டாக இருந்தது. ‘‘6 கியர்கள்; 6 ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் கேமரா, ரியர் டிஸ்க் எல்லாம் ஓகே! நான்கு பக்கமும் டிஸ்க் இருந்தால், நன்றாக இருக்கும்’’ என்றும் சொன்னார் ராஜபிரகாஷ். 15 லட்ச ரூபாய்க்கு, மற்ற கார்களை ஒப்பிடும்போது - Z ஜென்காரர்களுக்கு சரியான ஆப்ஷன் வெர்னா நியூ ஜென். 

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

ஹனிமூனா? நண்பர்களுடன் ஜாலி ட்ரிப்பா?

போட்டிங் முதல் ஜீப் சவாரி வரை எல்லாமே இங்கு ஒரே கட்டணம். அதாவது, இரண்டு பேராக இருந்தாலும் சரி - எட்டுப் பேராக இருந்தாலும் சரி - போட்டிங்குக்கு 300 ரூபாய். ஜீப் சவாரிக்கு, தங்குவதற்கு எல்லாமே 2,000 ரூபாய் என்பதால், கும்பலாகச் செல்வதே குண்டாறு ட்ரிப்பில் லாபம். காதல் மனைவியுடன் தனியாகச் சென்று அதே கட்டணம் கொடுப்பது உங்கள் சாய்ஸ்.

ஜீப் சவாரி எப்படி?

சீஸன் நேரங்களில் இங்கு மொத்தம் 25 முதல் 30 ஜீப்கள் ஓடுவதாகச் சொல்கிறார்கள். எல்லாமே தனியார்மயம். கட்சிக்காரர்கள் முதல் சினிமாப் புள்ளிகள் வரை நிறைய பேர் ஜீப் உரிமையாளர்கள். ‘‘சீஸன் நேரங்கள்ல ஒரு நாளைக்கு ஒரு லீஃப் ஸ்பிரிங் மாத்துற அளவு ட்ரிப் அடிப்போம். ஒரு டயர் 2 மாசத்துக்குத்தான் வரும். சீஸன் இல்லாத நேரங்கள்ல நஷ்டம்தான்!’’ என்றார் ஒரு ஜீப் டிரைவர். 'திடும் திடும்' எனக் குறுக்கிடும் பாறைகள், குட்டி விலங்குகள், ஓடைகள் என்று ஒரு அக்மார்க் காட்டுக்குள் ஜீப் பயணம் போவது, அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். உணவு கட்டிக்கொண்டு அருவிக் குளியலை முடித்துவிட்டு, காட்டுக்குள் மதிய உணவு சாப்பிடுவதும் - அற்புதமான சுகானுபவம். ஒருவேளை - தனியார் என்பதால்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளோடு மேலே உள்ள அருவிகள் அதகளப்படாமல், இயற்கை வளத்தோடு இருக்கின்றனவோ?

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

‘ஒரே மருந்துல எல்லா நோயும் குணமாகணும்’ என்ற சினிமா காமெடிபோல், ‘‘ஒரே நாள்தான் டூர் அடிக்கணும்.... ஆனா லைஃப் புல்லா மறக்க முடியாத என்ஜாய்மென்ட்டா இருக்கணும்’’ என்று சொல்லி, அவரே குண்டாறையும் திருமலைக் கோயிலையும் தேர்ந்தெடுத்திருந்தார். பாவூர்சத்திரத்தில் இருந்து தென்காசி வந்து அங்கிருந்து திருமலைக் கோயிலில் முருகனைத் தரிசித்துவிட்டு, அப்படியே குண்டாறு ட்ரிப் அடிப்பது திட்டம்.

ஒரே நாளில் திருமலைக்கோயில், குண்டாறு என்று திட்டம் தீட்டியபடி வெர்னாவில் டூர் அற்புதமாக இருந்தது. குற்றாலம் டூரில் மெயின் அருவி, ஐந்தருவி, பாலருவி என்று வெரைட்டியாக அருவிகளில் தலை காட்டியிருப்பீர்கள். வெளியூர்வாசிகளுக்குப் பரிச்சயமாகாத சில அருவிகள் குற்றாலத்தில் உண்டு. குண்டாறு, நெய்யருவி என்று மக்கள் அதிகம் நடமாடாத அருவிகளுக்கு வெர்னாவில் ஒரு ஜாலி ட்ரிப்.

என்ன பார்க்கலாம்? தென்காசியில் இருந்து...

குற்றாலம் (6.5 கி.மீ): அருவிகள்தான் குற்றாலத்தின் ஆதாரம். பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி எதுவுமே மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்.

சின்னக் குற்றாலம் (20 கி.மீ): புளியறை வழியாகத் தெற்குமேடு என்கிற இடத்தில் இருக்கிறது சின்னக் குற்றாலம். பாதை கரடுமுரடாக இருக்கும்.

பாலருவி (30 கி.மீ) : குற்றாலத்தில் சீஸன் இல்லாதபோது, பாலருவி அற்புதமான சாய்ஸ். பால்போல விழும் பாலருவிக் குளியல் அத்தனை சுகம்.

கும்பாவுருட்டி அருவி (33.7 கி.மீ): பண்பொழி வழியாக 1 மணி நேரம் பயணித்தால், கும்பாவுருட்டி அருவி. கொன்னி ரிஸர்வ்டு ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு அருகில் அற்புதமான ஸ்பாட்.

எருமை சாடி அருவி (28 கி.மீ): மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு அருகில் உள்ள இது, தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் அருவி. காரிலேயே செல்லலாம்.

கன்னிகாம்பாறை அருவி (15 கி.மீ): கற்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள இது. உள்ளே நுழைய காட்டிலாகாவின் அனுமதி தேவை.

தென்மலை அணை (36 கி.மீ): கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசன அணை. குற்றாலத்துக்குப் பின் பக்கம் ஆரியங்காவு வழியாகச் செல்லலாம்.

செந்துருணி வனவிலங்குச் சரணாலயம் (56 கி.மீ): தென்மலையில் இருந்து 20 கி.மீ. யானை, புலி, சிறுத்தை, கரடிகள் நிறைந்த வனவிலங்குச் சரணாலயம்.

குற்றாலம் போயிருப்பீங்க... குண்டாறு போயிருக்கீங்களா? - பாவூர்சத்திரம் to குண்டாறு

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு