Published:Updated:

மோஜோ-வின் பட்ஜெட் மாடலைக் கொண்டுவரும் மஹிந்திரா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோஜோ-வின் பட்ஜெட் மாடலைக் கொண்டுவரும் மஹிந்திரா!
மோஜோ-வின் பட்ஜெட் மாடலைக் கொண்டுவரும் மஹிந்திரா!

மஹிந்திரா மோஜோ - ஸ்பை போட்டோராகுல் சிவகுரு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ந்து ஆண்டுக்கால டெஸ்ட்டிங்கின் பலனாக, கடந்த 2015-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த பைக் - மோஜோ. USD ஃபோர்க் - பைரலி டயர்கள் - அதிர்வுகளற்ற இன்ஜின் - வித்தியாசமான டிசைன் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருந்தாலும், மிகக் குறைவான டீலர் நெட்வொர்க் - சுமாரான ஓட்டுதல் அனுபவம் - ஏபிஎஸ் இல்லை - அதிக விலை என மைனஸ்களையும் கொண்டிருந்தது. இதன் விளைவாகவே, விற்பனையில் பலத்த ஏற்ற இறக்கங்களையே இதுவரை மோஜோ பெற்றுவந்திருக்கிறது. தற்போது பிரபலமாகி வரும் ஸ்போர்ட்ஸ் டூரர் / பவர் க்ரூஸர் செக்மென்ட்டை மனதில்வைத்து, விலை குறைவான மோஜோ UT300 பைக்கைக் களமிறக்க முடிவு செய்துள்ளது மஹிந்திரா. இதற்கு யுனிவர்சல் டூரர் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், வழக்கமான மாடலை XT300 (Xtreme Tourer) என இந்த நிறுவனம் பெயர் மாற்றம் செய்திருக்கிறது. மோஜோ UT300 பைக்கை வாங்க விரும்புபவர்கள், 5,000 ரூபாய் செலுத்தி, மஹிந்திரா டூ-வீலர் டீலர்களில் புக் செய்துகொள்ளலாம். இந்த பைக்கும், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மோஜோ-வின் பட்ஜெட் மாடலைக் கொண்டுவரும் மஹிந்திரா!

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பட்ஜெட் மோஜோவில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன. USD ஃபோர்க்குக்குப் பதிலாக டெலிஸ்கோபிக் ஃபோர்க், பைரலி டயர்களுக்குப் பதிலாக MRF டயர்கள், ஃப்யூல் இன்ஜெக்‌ஷனுக்குப் பதிலாக கார்புரேட்டர், இரட்டை எக்ஸாஸ்ட்டுக்குப் பதிலாக ஒற்றை எக்ஸாஸ்ட், காணாமல் போயிருக்கும் தங்க நிற வேலைப்பாடுகள் மற்றும் LED DRL என விலைக் குறைப்பு நடவடிக்கையில் மஹிந்திரா தெளிவாக ஈடுபட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த பைக்கை, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்  மஹிந்திரா காட்சிபடுத்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு