பிரீமியம் ஸ்டோரி
ஸ்டேட்டஸ் போட்டி!

டிக்கு ஒரு கார், அமாவாசைக்கு ஒரு கார் என்று அவ்வப்போது கார்களைக் களமிறக்கினாலும், ‘கொடுக்கிற காசுக்கு வொர்த்’ என்று ஒவ்வொரு வாடிக்கை யாளரையும் பேசவைக்கும் திறமை, வால்வோவுக்கு உண்டு. ஆடி மட்டும் சும்மா இல்லை. ‘ஸ்டேட்டஸ் கார்’ என்றால், சட்டென ஆடிதான் நினைவுக்கு வரும். வால்வோவில் XC60 D5 Inscription-யும், ஆடியில் புதிதாக வந்திருக்கும் Q5 காரும் எப்படி இருக்கின்றன?  

ஸ்டேட்டஸ் போட்டி!

சொகுசு, சிறப்பம்சங்கள்

வால்வோ XC60-ல் 9 இன்ச் டச் ஸ்கிரீன், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மசாஜ் வசதியோடு தேவைக்கேற்ப சூடாக்கவும் குளிர்விக்கவும் செய்யும் இருக்கைகள், டிரைவர் டிஸ்ட்ராக்ட் ஆகி விடாமல் இருக்க ஹெட்-அப் டிஸ்ப்ளே, சன்ரூஃப், 360 டிகிரி பார்க்கிங் சிஸ்டம், ரேடார் தொழில்நுட்பம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிராஃபிக் சிக்னலைப் பாதுகாப்பாகக் கடக்கவும், வாகனங்கள் நம்மை முந்திச் செல்லும்போது அறிவிக்கவும் BLIS Cross-Traffic வசதி, 15 ஸ்பீக்கர்கள் கொண்ட Bower and Wilkins சவுண்டு சிஸ்டம்... வால்வோவா.. கொக்கா! காஸ்ட்லி கார் என்பதால், டிரைவர் வைத்து ஓட்டும்போது, ஓனர்களுக்கும் பின்பக்கம் மசாஜ் சீட் கொடுத்திருக்கலாம். வால்வோவில் ஏர் சஸ்பென்ஷன் கூடுதலாக வருகிறது. இதனால் காரின் உயரம் மற்றும் சஸ்பென்ஷன் சாஃப்ட்னஸை மாற்றிக்கொள்ளலாம்.  

ஸ்டேட்டஸ் போட்டி!

வசதிகளில் வால்வோ அளவு இல்லை ஆடி. Q5-ல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, மேடுகளில் காரை நிறுத்தும் ஹில் ஹோல்ட் வசதி இருக்கிறது. ஆனால், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சிறுசு. 8.3 இன்ச்தான். அதுவும் டச் ஸ்கிரீன் இல்லை. பழைய ஆடி கார்கள்போல கன்ட்ரோல் நாப்களைத் தராமல் டிராக் பேட் தந்துள்ளது ஓகே. டூயல் டோன் லெதர் வேலைப்பாடுகளும் எலெக்ட்ரிக் ஆபரேட்டர் சீட் இருந்தாலும் வால்வோபோல் ஹீட் வசதி, மசாஜ் போன்றவை இல்லை. எந்த காரிலும் இல்லாத வயர்லெஸ் சார்ஜிங்குக்காக ஆடிக்கு சபாஷ். ஆடியில் வழக்கமான எலக்ட்ரோ மெக்கானிக்கல் சஸ்பென்ஷன்தான். வால்வோவுக்கு இணையாக ஆடி வரும் ஒரே ஏரியா - காற்றுப் பைகள். வால்வோவைப்போலவே 8 காற்றுப் பைகள்! 

ஸ்டேட்டஸ் போட்டி!

இன்ஜின் மற்றும் ஓட்டுதல் தரம்

Q5 மற்றும் XC60 ஆகிய இரண்டுமே 2.0 லிட்டர் டீசல் இன்ஜினோடு வருகின்றன. வால்வோ 233bhp பவரையும் 48kgm டார்க்கையும் தருகிறது, ஆடி வெறும் 187bhp பவரும் 40kgm டார்க்கை மட்டுமே தருகிறது. வால்வோவில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வருகிறது. ஆடியில் 7 ஸ்பீடு S-tronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கிறது. 1,990 கிலோ எடை கொண்ட ஆடியைவிட வால்வோ 111 கிலோ எடை குறைவு. இரண்டுமே 4 வீல் டிரைவ் என்பதால், சாலைகளைக் கடந்தும் ஓட்ட முடியும். ஆனால், எஸ்யூவி திறனை ஒப்பிடும்போது, ஆடியின் Quattro டிரைவ் காடுகளிலும், மேடு பள்ளங்களிலும் ஓட்ட வசதியாக உள்ளது. வால்வோவின் ஏர் சஸ்பென்ஷன் இதற்குச் சரியாக செட் ஆகவில்லை என்று சொல்கிறார்கள். ஆடியின் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் வால்வோவைவிட அருமையாக உள்ளது. இப்படி வைத்துக் கொள்ளலாம், ஆஃப் ரோடுக்கு ஆடி; ஹைவேவுக்கு வால்வோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு