Published:Updated:

ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....
ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

ஃபர்ஸ்ட் ரைடு - ஆல் நியூ ஸ்விஃப்ட்வேல்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நடக்கவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவைப் பார்க்க வருபவர்கள், தவறாது பார்க்க விரும்பும் கார், ஆல் நியூ ஸ்விஃப்ட். நம் நாட்டில் ஸ்விஃப்ட் அறிமுகமாகி 13 ஆண்டுகளாகிவிட்டன.  ஸ்விஃப்ட் இல்லாத சாலைகளையே பார்க்க முடியாது என்கிற அளவுக்கு வாடிக்கையாளர்களால் அதிகம் நேசிக்கப்படும் கார் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் வெறும் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் வெளிவந்த ஸ்விஃப்ட், 2007-ம் ஆண்டு 1.3 லிட்டர் டீசல் இன்ஜினை அறிமுகம் செய்தது. இதையடுத்து, 2010-ம் ஆண்டில் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியது. கடைசியாக, 2014-ம் ஆண்டில்கூட ஒரு சில மாற்றங்களோடு களமிறங்கியது. இப்படித் தொடர்ந்து மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கும் ஸ்விஃப்ட், மீண்டும் புது அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது அறிமுகமாகியிருக்கும் ஸ்விஃப்ட், மூன்றாம் தலைமுறை மாடல்.  முதல் பார்வையிலேயே ‘வாவ்’ என ஆச்சர்யப்பட வைத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு, சில புதிய முயற்சிகளை எடுத்திருக்கிறது மாருதி சுஸூகி.  

ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

மாருதியின் முயற்சி ஸ்விஃப்ட்டின் வடிவமைப்பில் இருந்தே துவங்குகிறது. ஃப்ளோட்டிங் ரூஃப் மற்றும் முழுக்க முழுக்கக் கறுப்பு வண்ணத்தில் இருக்கும் கிரில் ஸ்விஃப்ட்டுக்கு ட்ரெண்டிங்கான தோற்றத்தைக் கொடுக்கிறது. பின்னிருக்கைகளின் கதவுப்பிடி சற்றே மேலே நகர்ந்து C-பில்லருக்குச் சென்றுவிட்டது. அதனால் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது ‘2 டோர் லுக்’ கொண்ட கார்களைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. 

ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் நிச்சயமாக இதன் ப்ளஸ் பாயின்ட். விலை உயர்ந்த மாடல்களில் டே டைம் ரன்னிங் லைட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது பார்க்க 3 டைமென்ஷனாக இருக்கிறது. ஆனால், இரவில் இது ஒளிரும்போது கவர்ச்சியாக இல்லை. டாப் வேரியன்டுகளில் கொடுக்கப்பட்டிருப்பது 15 இன்ச் வீல்கள்தான் என்றாலும், இதில் பொருத்தப்பட்டிருப்பது 65 ப்ரோஃபைல் டயர்கள் என்பதால், பார்வைக்கு சிறியதுபோலத் தெரிகின்றன. 16 இன்ச் வீல் கொடுக்கப்பட்டிருந்தால், ஸ்விஃப்ட்டின் லெவல் உயர்ந்திருக்கும்.

 உள்ளலங்காரம்

டிசையருக்கும், ஆல் நியூ ஸ்விஃப்ட் இரண்டுக்கும் வெளித்தோற்றத்தில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், உள் அலங்காரத்தில்தான் அதிக ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது.  வித்தியாசம்..? பீஜ் மற்றும் பிளாக் என்று டூயல் டோனில் இல்லாமல் ஆல் நியூ ஸ்விஃப்ட் கேபின் முழுக்கக் கறுப்பு வண்ணமே வியாபித்திருக்கிறது. வட்ட வடிவில் இருக்கும் ஏ.சி மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் திருகுகள் பயன்படுத்த வசதியாகவும், கவனத்தை ஈர்க்கும்படியான புதிய டிசைனிலும் இருக்கின்றன. ஓட்டுநர் பக்கம் திரும்பியிருக்கும் ஓடோ மற்றும் ஸ்பீடோ மீட்டர் டிசைன்களும், கவர்ச்சியான  தோற்றத்தில் இருக்கின்றன. 

ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ வசதிகொண்ட 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விலை உயர்ந்த வேரியன்ட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.  ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட் லைட்ஸ், ரியர் வியூ கேமரா,  வாய்ஸ் கமாண்ட், கீ-லெஸ் என்ட்ரீ போன்ற வசதிகளும் விலை உயர்ந்த வேரியன்டுகளில் கொடுக்கப்பட்டிருக்
கின்றன. இருந்தாலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 2 ஏர்பேக், ABS, சீட் பெல்ட் பிரிடென்ஷனர்ஸ், ISOFIX - அதாவது குழந்தைகள் இருக்கையை மாட்டும் வசதி ஆகியவை எல்லா வேரியன்டுகளிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. க்ராஷ் டெஸ்ட் பரீட்சைக்கு உட்படுத்தினாலும் ஸ்விஃப்ட் பாஸாகிவிடும் என்று மாருதி சுஸூகி சத்தியம் செய்து சொல்கிறது.

முன்னிருக்கை இடவசதியைப் பொறுத்தவரை, டிசையரில் இருக்கும் அளவுக்கு அதே இடவசதி இதிலும் இருக்கிறது. இருக்கைகள் பெரிதாகவும் சாய்ந்துகொள்ள வசதியாகவும் இருக்கின்றன. டிரைவர் சீட்டுக்கு ஹைட் - அட்ஜஸ்ட் வசதியிருக்கிறது. அதேபோல, ஸ்டீயரிங் வீலையும் நமக்கு ஏற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், முன்னே இருக்கும் சாலை தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பின்பக்கம் இருக்கும் சாலையை அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. காரணம், அகலமான C-பில்லர். அதனால்தான் விலை குறைந்த வேரியன்டுகளிலும், ரியர் வியூ கேமராவை மாருதி கட்டாயமாகக் கொடுத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். 

ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

ஸ்விஃப்ட்டில் நீண்ட நாள்களாக இருந்த குறை... பின்னிருக்கைகளில் இடப்பற்றாக்குறை. அது ஒரு வழியாக இப்போது தீர்ந்திருக்கிறது. பின்னிருக்கைகள் தாராளமாக இருக்கின்றன.  காலை நீட்டி மடக்க முடிகிறது. தலை கூரையில் இடிக்கவில்லை. ஆனால், காரின் ஜன்னல் கண்ணாடிகள் சிறிதாக இருப்பதாலும், பின்னிருக்கைகளின் கைப்பிடி C-பில்லருக்கு மாறிவிட்டதாலும், இடம் குறுகலானது போன்ற ஃபீல் ஏற்படுகிறது.

இன்ஜின்

பழைய ஸ்விஃப்ட் காரில் இருந்த அதே 1.2 லிட்டர் K12 பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் DDiS 190 மல்டிஜெட் டீசல் இன்ஜின்கள்தான் இதிலும். ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், பெலினோ மற்றும் டிசையர் ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் ‘Heartect’ பிளாட்ஃபார்மில்தான் புதிய ஸ்விஃப்ட் தயாரிக்கப்படுகிறது.  பெட்ரோல் டீசல் வேரியன்ட்களோடு நின்றுவிடாமல், பெட்ரோல் AMT,  டீசல் AMT என்று கூடுதலாக வேறு இரண்டு வேரியன்டுகளோடும் புதிய ஸ்விஃப்ட் சந்தைக்கு வந்திருக்கிறது. CVT எனப்படும் முழுமையான ஆட்டோமேட்டிக் இதைவிட சூப்பராகத்தான் இருக்கும். AMT கார்களில், கியர் மாறும்போது பவர் டெலிவரி சில விநாடிகளுக்கு ஸ்தம்பிக்கும். பிறகு பவர் கிடைக்கும்போது சின்னதாக ஜெர்க் கொடுத்துவிட்டு வேகம் எடுக்கும் (என்றாலும் ஆரம்பகால செலெரியோவில் இருந்த AMT-ஐவிட இது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது). ஆனால், மேனுவல் கார்களை இயக்கும் அதே அளவு எரிபொருள்தான், AMT கார்களை இயக்கவும் தேவைப்படும்.

முதலில் நாம் டெஸ்ட் டிரைவ் செய்தது - பெட்ரோல் மேனுவல் காம்பினேஷன். பழைய ஸ்விஃப்ட் போலவே இது நம் சொல் பேச்சு கேட்டு இயங்கும் இன்ஜினாக இருக்கிறது. ஆக்ஸிலேட்டரை எவ்வளவு அழுத்தினாலும் இன்ஜின் அசராமல் ஈடுகொடுக்கிறது. இதோடு கியர்பாக்ஸும் இயைந்து இயங்குகிறது. AMT வேரியன்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நகருக்குள் ஓட்ட இது சுலபமானதாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் - Creep Function.  அதாவது பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில் காரை ஒரு சில அடிகள்தான் உருட்ட முடியும் என்கிறபோது, ஆக்ஸிலரேட்டர் பெடலை அழுத்த வேண்டாம். பிரேக்கில் இருந்து காலை எடுத்தாலே, தானாக கார் முன்னோக்கி நகர்கிறது. இந்த வசதி இருப்பதால், மேடான பகுதிகளில் ஏறும்போது கார் பின்னோக்கிச் செல்வதை இது ஓரளவு தடுக்கிறது.

டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட AMT, பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட AMT அளவுக்கு ஸீம்லெஸாக இல்லை. காரணம், டீசல் இன்ஜினுக்கே உரிய டர்போ லேக்கோடு சேர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. அதனால் கியர் மாறும்போது பவர் டெலிவரியில் ஒரு சில விநாடிகள் தொய்வு தெரிகிறது. பவர் கிடைக்கும்போது சின்ன ஜெர்க் தெரிகிறது. கடைசியாக மேனுவல் டீசல் வேரியன்ட். கியர் ஷிஃப்ட் ஆக்‌ஷனும் சரி, கிளட்சும் சரி... இதில் லைட்டாக இருப்பது ஆனந்த ஆச்சர்யம். பர்ஃபாமென்ஸும் நன்று.

ரைடு மற்றும் ஹேண்ட்லிங்

 சாலையில் இருக்கும் அதிர்வுகள் அனைத்தையும் இது காருக்குள் பயணிப்பவர்களுக்குக் கடத்துவதில்லை என்பது ஆறுதல். ஆம், இதன் சஸ்பென்ஷன் நன்றாகவே வேலை செய்கின்றன.  ஆனால், ஸ்டீயரிங்கில் உயிர் இல்லை. அதேபோல, அது ரிட்டர்னாவதிலும் பிரச்னை இருக்கிறது.

ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

முன்பைவிட பார்க்க அசத்தலாகவும் ஸ்போர்ட்டியாகவும் இளமை துள்ளலோடும் இருக்கிறது. பின்னிருக்கைகளும், டிக்கியும் முன்பைவிட தாராளமாக இருக்கின்றன. விலை குறைந்த வேரியன்டுகளும் மேலும் சில சிறப்பு அம்சங்களையும் கொடுக்கலாம். ஸ்டீயரிங் வீல் சில குறைகளோடு இருக்கிறது. ஆனால், ஸ்விஃப்ட் காரின் மற்ற நிறைகளோடு ஒப்பிடும் போது இந்தக் குறை தானாக மறைந்துவிடும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு