Published:Updated:

பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

பதினொன்றாம் ஆண்டில் பாஹா!
பிரீமியம் ஸ்டோரி
பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

SAEINDIA BAJA 2018 - போட்டிபாலமுருகன், படங்கள்: கே.ராஜசேகரன்

பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

SAEINDIA BAJA 2018 - போட்டிபாலமுருகன், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
பதினொன்றாம் ஆண்டில் பாஹா!
பிரீமியம் ஸ்டோரி
பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

ன்ஜினீயரிங் மாணவர்களின் திருவிழாவான ‘மஹிந்திரா - எஸ்.ஏ.இ இந்தியா’ நடத்தும் ‘பாஹா’ ஏடிவி வாகனத் தயாரிப்புப் போட்டிக்கு, இது 11-வது ஆண்டு. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள பிதாம்பூர் நேஷனல் டெஸ்ட் டிராக் வளாகத்தில் (National Automotive Testing and R&D Infrastructure Project - NATRIP) கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் கோலாகலமாக நடந்தேறியது போட்டி.

பாஹா போட்டியில் கலந்துகொள்வதற்கே பல சவாலான சோதனைகள் உள்ளன. இதில் தேர்வுபெற்றால்தான், பிதாம்பூரில் நடக்கும் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும். விலை, எடை, ஸ்டீயரிங், சஸ்பென்ஷன், இன்ஜின், ஏரோடையமிக், சேஸி, பவர், டார்க், ஓட்டுதல் திறமை என இன்ஜினீயரிங் சார்ந்த பல்வேறு நுட்பங்களைக் கொண்டது இந்தப் போட்டி.

பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

கடைசி ரவுண்டான எண்ட்யூரன்ஸ் போட்டிக்கு, எலெக்ட்ரிக் வாகனமான ‘இ-பாஹா’ பிரிவில் 25 அணிகளும்  பெட்ரோல் ஏடிவியான ‘எம்-பாஹா’ பிரிவில் 86 அணிகளும் தேர்வுபெற்றன. நாடெங்கும் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரிகள் இதில் கலந்துகொண்டு பரிசு வாங்குவதை லட்சியமாகக் கொண்டுள்ளன. அதனால், போட்டி கடுமையாகவே இருக்கும். ஒவ்வொரு கல்லூரி அணிக்கும் 25 முதல் 30 பேர் வரை இருக்கிறார்கள். போட்டி நடக்கும் வளாகம் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பங்கேற்பார்கள் என்பதால், இந்தியாவின் எல்லா மொழிக் குரல்களும் ஒலித்தவாறு இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதினொன்றாம் ஆண்டில் பாஹா!

சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து போட்டியைத் துவக்கிவைத்ததும் விதவிதமாக அமைக்கப்பட்டிருந்த டிராக்குகளில் சீறிப்பறந்தன ஏடிவி வாகனங்கள். மேடு பள்ளம், பாறைகள், மணல் பாதை, சேறு நிரம்பிய பள்ளம் என எல்லாவிதமான பாதையிலும் தாக்குப்பிடித்து ஓடி லேப் டைம் எடுத்து ஜெயிக்கப் பட்டபாடு அப்பப்பா.   
 
இ-பாஹாவிலும் எம்-பாஹாவிலும் புனேவைச் சேர்ந்த இரு கல்லூரிகள் முதல் பரிசைத் தட்டிச் சென்றன. இம்முறை தமிழகக் கல்லூரிகள் பரிசுகள் ஏதும் பெறவில்லை. ஆனால், சென்னை எம்ஐடி கல்லூரி குறைந்த செலவில் வாகனம் உருவாக்கியதற்காகப் பரிசு பெற்றது ஆறுதலாக இருந்தது.