டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இம்முறையும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அடுத்த 2 ஆண்டுக்குள்

இந்திய சாலைகளில் டயர் பதிக்கப்போகும் டூ-வீலர்களை கண்டதில் நேரம் சென்றதே தெரியவில்லை. தற்போது இந்திய டூ-வீலர் சந்தை, மெல்ல ஸ்கூட்டர் மயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக சாதாரண 110சிசியில் இருந்து பிரீமியமான 125சிசிக்கு ஸ்கூட்டர் செக்மென்ட் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பஜாஜ், டிரையம்ப், கேடிஎம், ராயல் என்ஃபீல்டு எனப் பல முன்னணி டூ-வீலர் தயாரிப்பாளர்கள் இல்லாத குறையை, புதிய தயாரிப்புகள் ஓரளவு நிறைவு செய்தன.

எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் எக்ஸ்-பல்ஸ் எனும் 200சிசி அட்வென்ச்சர் பைக்கை காட்சிப்படுத்தியது ஹீரோ. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் - ஆஃப் ரோடு டயர்கள் - கச்சிதமான உயரத்தில் இருக்கும் சீட் - எதிர்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் விண்ட் ஸ்கிரீன் - உயரமான மட்கார்டு - 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என ஒரு ஆஃப் ரோடு பைக்குக்குத் தேவையான எல்லா அம்சங்களுடன் கச்சிதமாக இருக்கிறது எக்ஸ்-பல்ஸ். வட்டமான LED ஹெட்லைட், LED டெயில் லைட், க்ராஸ்பார் உடனான ஹேண்டில்பார், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என மாடர்ன் அம்சங்களுடன் க்ராஷ் கார்டு, Hand-Guard, Bash-Plate, Skid Plate எனப் பாதுகாப்பு உபகரணங்களும் இருப்பது ப்ளஸ். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 21 இன்ச் வீல் - ஏபிஎஸ் உடனான டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் - 18 இன்ச் வீல் - டிஸ்க் பிரேக் ஆகியவை, Single Downtube ஃப்ரேமில் பொருத்தப்பட்டிருக்கிறது. 14 லிட்டர் பெட்ரோல் டேங்க்கில் இருந்து நீளும் சிங்கிள் பீஸ் சீட், 825மிமீ உயரத்தில் அமைந்திருக்கிறது. எக்ஸ்ட்ரீம் 200R-ல் இருக்கும் அதே 200சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் இதிலும்.

ஹீரோ சார்பில் ஸ்கூட்டர்களும் அதகளம் பண்ணின. பழைய டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள்தான். ஆனால், இந்தியாவிலேயே முதன்முறையாக i3S தொழில்நுட்பத்துடன் வந்திருக்கின்றன இரண்டும்.
இரண்டிலுமே 8.7bhp பவர், 1.02kgm டார்க்கை வெளிப்படுத்தும் 125சிசி இன்ஜின்தான். பழைய 110சிசி மாடல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, இந்த 125சிசி மாடல்களில் (மேஸ்ட்ரோ - டிஸ்க் பிரேக், டூயட் - க்ரோம் முன்பக்கம்) சின்ன மாற்றங்களைச் செய்திருக்கிறது ஹீரோ. சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

உலகளவில் 125 முதல் 600 சிசி வரை பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களில் தான் விற்பனை செய்யும் மேக்ஸி- ஸ்கூட்டரை, இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கிறது சுஸூகி. கைனடிக் ப்ளேஸ் ஸ்கூட்டரைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் இரண்டாவது மேக்ஸி ஸ்கூட்டர், பர்க்மேன் ஸ்ட்ரீட். ஆக்சஸ் ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது பர்க்மேன் ஸ்ட்ரீட். 8.6bhp பவர் மற்றும் 1.02kgm டார்க்கை வெளிப்படுத்தும் 124சிசி இன்ஜின்தான் இதிலும். முன்பக்கத்தில் இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - டிஸ்க் பிரேக் - 12 இன்ச் வீல் மற்றும் பின்பக்கத்தில் இருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன் - டிரம் பிரேக் - 10 இன்ச் வீல் ஆகியவை ஆக்ஸஸில் இருப்பவையே! டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பல அம்சங்களை உள்ளடக்கிய சாவி துவாரம், LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், சீட்டுக்கு அடியில் Full Face ஹெல்மெட் வைப்பதற்கான ஸ்டோரேஜ் ஸ்பேஸ், முன்பக்கத்தில் 2 ஸ்டோரேஜ் பாக்ஸ், விண்ட் ஸ்க்ரீன் என சிறப்பம்சங்களில் அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறது சுஸூகி. பர்க்மேன், ஆக்ஸஸைவிட 7,000 ரூபாயாவது அதிகம் இருக்கலாம்.

பைக்கில் இன்ட்ரூடர்தான் அட்ராக்ஷன். அதே இன்ட்ரூடரில் ப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தைச் சேர்த்திருக்கிறது சுஸூகி. தோற்றத்திலோ, வசதிகளிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கார்புரேட்டரைவிட 6,000 அதிகமாக இருக்கலாம்.

சூப்பர் பைக்கையும் விடவில்லை சுஸூகி. இந்த எக்ஸ்போவில் GSX-S750-யையும் அறிமுகப்படுத்தி இருந்தது. 749சிசி, இன்லைன் 4 சிலிண்டர், DOHC இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 114bhp பவர் மற்றும் 8.1kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. டூயல் 310மிமீ முன் பக்க டிஸ்க், பின்பக்க 240மிமீ டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், 3 Stage ட்ராக்ஷன் கன்ட்ரோல் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். GSX-S1000 பைக்கை நினைவுப்படுத்தும்படியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் GSX-S750 பைக்கில், Kayaba நிறுவனத்தின் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் இருக்கிறது. ஹயபூஸா பைக்கைத் தொடர்ந்து, GSX-S750 பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்யும் முடிவில் சுஸூகி இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவாவில் 3ஜி, 4ஜி மாடலைத் தொடர்ந்து இப்போது ‘5ஜி’யும் வந்துவிட்டது. LED DRL உடனான LED ஹெட்லைட் மற்றும் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் என்று கெத்தாக இருக்கிறது ஆக்டிவா 5ஜி.

Eco மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர், பைகளை மாட்ட கொக்கி, எக்ஸாஸ்ட்டுக்கு மேலே ஸ்டீல் பிளேட், முன்பக்கத்தில் க்ரோம் வேலைப்பாடுகள் எனப் புதிய அம்சங்களும் இருக்கின்றன. 109சிசி இன்ஜினிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆக்டிவாவின் மைனஸான டெலிஸ்கோபிக் ஃபோர்க் 5ஜியில் இல்லை.

LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், உயரமான வைஸர், இன்ஜின் கவுல், வெள்ளை பேக்லிட்டுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், Twin Outlet உடன் கூடிய எக்ஸாஸ்ட், தடிமனான கிராப் ரெயில் என பந்தாவாக ஒரு பைக் ஹோண்டா ஸ்டாலில் இருந்தது. 160 சிசியில் அறிமுகமாகி இருக்கும் எக்ஸ்-பிளேடு பைக்தான் அது.

ஷார்ப்பான டிசைனைக் கொண்டிருக்கும் எக்ஸ்-ப்ளேடு, ஆங்காங்கே ஹார்னெட் பைக்கை நினைவுபடுத்துகிறது. டிஜிட்டல் மீட்டர் அதற்கான உதாரணமாக இருந்தாலும், அதில் கியர் இண்டிகேட்டர் - சர்வீஸ் இண்டிகேட்டர் - Hazard இண்டிகேட்டர் ஆகியவை கூடுதலாக இடம்பிடித்துள்ளன. இந்த பைக்கில் இருப்பது, ஹார்னெட் பைக்கில் இருக்கும் அதே 162.71சிசி இன்ஜின்தான். என்றாலும், அதைவிடக் குறைவான 14bhp பவர் மற்றும் 1.39kgm டார்க்கையே வெளிப்படுத்துகிறது. மேலும், இதன் முன்பக்கத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 80/110 R17 டயர் மற்றும் பின்பக்கத்தில் 130மிமீ டிரம் பிரேக் - மோனோஷாக் சஸ்பென்ஷன் - 100/80 R17 டயர் பொருத்தப்பட்ட எக்ஸ்-பிளேடின் விலை 90,000 ரூபாய் இருக்கும்.

‘எக்ஸ்-பிளேடு வந்தா என்ன, இதோ நானும் இருக்கேன்’ என ஹார்னெட்டின் பேஸ்லிஃப்ட் மாடலும் இருந்தது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ், LED ஹெட்லைட், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், கிராஃபிக்ஸ் எனச் சில மாற்றங்கள் தென்பட்டன. மற்றபடி பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. 2018-ம் ஆண்டுக்கான ஹார்னெட் பைக்கில் செய்யப்பட்டிருந்த அதே மாற்றங்கள்தான், 2018-ம் ஆண்டுக்கான CBR 250R பைக்கிலும் செய்யப்பட்டிருந்தது. இதில் டூயல் சேனல் ஏபிஎஸ்ஸை ஸ்டாண்டர்டாக அளித்துவிட்டது ஹோண்டா. இந்த இரு பைக்குகளின் விலை, முன்பைவிட 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும்.

இளசுகளின் செல்லமான R15-ல் இப்போது அடுத்த வெர்ஷன் வந்துவிட்டது. ஆம்! YZF-R15 V 3.0. 139 கிலோ எடையில், 1.25 லட்ச ரூபாய்க்கு (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை) விற்பனைக்கு வந்திருக்கிறது புதிய R15 V3.0. முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது, இது முறையே 6,000 ரூபாய், 3 கிலோ எடை (YZF-R15 V2.0 - 136 கிலோ) மற்றும் 9,000 ரூபாய், 5 கிலோ எடை (YZF-R15 S - 134 கிலோ) அதிகமாக இருக்கிறது. முன்பைவிட விலை மற்றும் எடை அதிகரித்துவிட்டதே எனத் தோன்றினாலும், LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் - புதிய டெல்டாபாக்ஸ் ஃப்ரேம் - கியர் இண்டிகேட்டருடன்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் - USB சார்ஜிங் என அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது யமஹா. ஆனால், சர்வதேச மாடலில் USD ஃபோர்க் இருந்த நிலையில், இந்திய மாடலில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்தான் இருக்கிறது. இந்தக் குறையை, அகலமான டயர்களைக் கொடுத்து சரிகட்டிவிட்டது யமஹா. அதற்குக் காரணமும் இருக்கிறது. ஆம், வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் - ஃபோர்ஜுடு அலுமினியம் பிஸ்டன் - அதிக கம்ப்ரஸன் ரேஷியோ (11.6:1) - லிக்விட் கூலிங் - SOHC, 4 வால்வ் - ஃப்யூல் இன்ஜெக்ஷன் - ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் புதிய 155சிசி இன்ஜின், 19.3bhp பவர் மற்றும் 1.5 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. டார்க்கில் வித்தியாசம் இல்லாவிட்டாலும், முந்தைய மாடலைவிடத் தோராயமாக 3bhp அதிக பவரைத் தருகிறது YZF-R15 V3.0.

அமெரிக்க நிறுவனமான க்ளிவ்லேண்ட் சைக்கிள்வொர்க்ஸ், இங்கே நான்கு பைக்குகளைக் காட்சிப்படுத்தியது. இந்தியச் சாலைகளுக்கு ஏற்ப பைக்குகளைத் தயாரிக்க, ஹைதராபாத்தில் இருக்கும் Laish-Madison Motor Works நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. CKD முறையில் சீனாவில் இருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, புனேவில் பைக்கை அசெம்பிள் செய்யும் முடிவில் இருக்கும் க்ளிவ்லேண்ட் சைக்கிள்வொர்க்ஸ், ஜூன் 2018-ல் முதற்கட்டமாக Misfit, Ace Cafe 250, Ace Scrambler 250, Ace Deluxe 250 என்று நான்கு பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது க்ளீவ்லேண்ட். இந்த நான்கு பைக்கிலும் இருப்பது, 15.4bhp பவர் மற்றும் 1.6kgm டார்க்கை வெளிப்படுத்தும் 229 சிசி ஏர்-கூல்டு இன்ஜின் மற்றும் 150மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்.

Misfit பைக்கின் எடை 144 கிலோ என்றால், Ace சீரிஸ் பைக்குகளின் எடை 133 கிலோ. மேலும் 229 சிசி இன்ஜின் இருந்தாலும், அதன் பவர் மற்றும் டார்க் விவரங்கள், 160சிசி பைக்குக்கு இணையாகத்தான் உள்ளன. மேலும், இந்த 4 பைக்கிலும் ஏபிஎஸ் இல்லை என்பது மைனஸ்.

வல்கேன் S, நின்ஜா H2 SX மற்றும் H2 SX-SE ஆகிய பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்தது கவாஸாகி. டாப் எண்ட் பர்ஃபாமென்ஸுக்குப் பெயர்பெற்ற H2 and H2R சூப்பர் சார்ஜ்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் நின்ஜா H2 SX மற்றும் H2 SX-SE, ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்குகள். எனவே, ஒரு டூரிங் பைக்குக்குத் தேவையான அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மிட் ரேஞ்ச் பவரைப் பெறுவதற்காக, புதிய சிலிண்டர் - பிஸ்டன் - இன்ஜின் ஹெட் - கேம் ஷாஃப்ட் - சூப்பர் சார்ஜர் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளது கவாஸாகி. ஆனால், இன்ஜின் விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், டூரிங் பைக்குக்கு ஏற்ப, பைக்கின் ஃபேரிங் - ட்ரெல்லிஸ் ஃப்ரேம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் டூரிங் ஆக்சஸரீகளும் ஒன்றுசேரும்போது, நின்ஜா H2 பைக்கைவிட 18 கிலோ மட்டுமே நின்ஜா H2 SX பைக்கின் எடை அதிகரித்திருக்கிறது. TFT LCD இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், LED கார்னரிங் லைட், கவாஸாகி லாஞ்ச் கன்ட்ரோல் மோடு (KLCM), பெரிய விண்ட் ஸ்கிரீன், ஹீட்டட் ஹேண்ட் க்ரிப்ஸ், அப்-டவுன் க்விக் ஷிஃப்டர் ஆகிய வசதிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

எலிமினேட்டர் பைக்குக்கு அடுத்தபடியாக, கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியிருக்கும் இரண்டாவது க்ரூஸர் பைக் வல்கேன் S. வேறெந்த பைக்குகளிலும் இல்லாத ஓர் அற்புதமான வசதி இதில் உண்டு. சீட், ஹேண்டில்பார், ஃபுட் பெக்ஸ், கியர் லீவர் போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ERGO-FIT சிஸ்டம் இதில் உண்டு.

நின்ஜா, வெர்சிஸ் பைக்குகளில் இருக்கும் அதே 649சிசி, பேரலல் ட்வின் இன்ஜின்தான் வல்கேனிலும். ஆனால், பவரும் டார்க்கும் குறைவு. (61bhp பவர், 6.3 kgm டார்க்) இதன் எடை 235 கிலோ. ஆனால், இதை சுலபமாகவே கையாள முடியும் என்கிறது கவாஸாகி. காரணம், குறைவான 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 705 மிமீ சீட் உயரம். முன்பக்கம் 18 இன்ச் டயர், 300 மிமீ டிஸ்க், 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் டயர், 250மிமீ டிஸ்க், மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கார்களில் மட்டுமில்லை; பைக் ஏரியாவிலும் பிஎம்டபிள்யூ கெத்து காட்டியது. ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு, டிவிஎஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் G310 R நேக்கட் பைக் மற்றும் G310 GS அட்வென்ச்சர் பைக் மிகவும் முக்கியமானவை.

இந்த இரண்டு பைக்கிலும் இருப்பது, 34bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் 4 வால்வ், லிக்விட் கூல்டு, DOHC உடனான 313சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி மற்றும் 41 மிமீ USD - மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு. முன்னே சொன்ன எல்லாம், டியூப்லர் ஸ்டீல் ஃப்ரேமில் இணைக்கப்பட்டுள்ளன.

அடுத்து G310 GS. உயரமான மட்கார்டு, ஹெட்லைட் கவுல், ஷார்ப்பான பெட்ரோல் டேங்க், இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் எல்லாமே அட்வென்ச்சர் பைக் என்பதைச் சொல்கிறது.

முன்னே சொன்ன பைக்குகளைத் தொடர்ந்து, F750 GS மற்றும் F850 GS ஆகிய அட்வென்ச்சர் பைக்குகளையும் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது பிஎம்டபிள்யூ. ஷார்ப் டிசைன், அதிக தொழில்நுட்பங்கள், புதிய மோனோகாக் ஃப்ரேம், 853 சிசி 2 சிலிண்டர் இன்ஜின் என எல்லாமே மாறியிருக்கிறது. பழசில் 798 சிசிதான்.

இரண்டிலும் ஒரே இன்ஜின்தான். பவரிலும் டார்க்கிலும் மட்டும் வித்தியாசம். F750 GS-ல் 77bhp பவர், 8.3kgm டார்க். F850 GS-ல் 85bhp பவர் மற்றும் 9.2kgm டார்க். இந்த அட்வென்ச்சர் பைக்குகளின் புதிய மோனோகாக் ஃப்ரேமில், பெட்ரோல் டேங்க் மூடி வழக்கமான இடத்துக்கு வந்துவிட்டது. முந்தைய மாடலில் பின் பக்க சீட்டுக்கு அருகே பெட்ரோல் டேங்க் மூடி இருந்தது. அதேபோல F750 GS மற்றும் F850 GS பைக்கின் பின்பக்கத்தில், இருபுறமும் இருக்கும் அலுமினிய ஸ்விங் ஆர்ம் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளன. ஆனால், முன்பக்க சஸ்பென்ஷனில்தான் வித்தியாசத்தைக் காட்டியுள்ளது பிஎம்டபிள்யூ. F750 GS பைக்கில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருந்தால், F850 GS பைக்கில் இருப்பதோ 43மிமீ USD ஃபோர்க். இந்த இரண்டு அட்வென்ச்சர் பைக்கிலும், எலெக்ட்ரானின் சஸ்பென்ஷன் அட்ஜஸ்மென்ட் (ESA), LED லைட்டிங், பலவித அம்சங்களை உள்ளடக்கிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ABS, ASC, Rain - Road ரைடிங் மோடுகள், இந்த இரு அட்வென்ச்சர் பைக்கிலும் ஸ்டாண்டர்டாக இருக்கின்றன.

டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டருக்குப் போட்டியாக, SR 125 ஸ்கூட்டரைக் களமிறக்கியுள்ளது ஏப்ரிலியா. அப்படியே SR 150 ஸ்கூட்டரின் ஜெராக்ஸ் போல் இருந்தது SR 125. இன்ஜின் மட்டும் 125 சிசி. 9.5bhp பவர் மற்றும் 0.99kgm டார்க்.

இதே ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டார்ம் 125 எனும் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ஏப்ரிலியா. 12 இன்ச் அலாய் வீல்கள், Vee நிறுவன ஆஃப் ரோடு டயர்கள், விண்ட் ஸ்கிரீன் (ஆக்சஸரீ) என்று சில வசதிகள். இவற்றுடன் SR 150 ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு, கார்பன் எனும் வேரியன்ட்டையும் வெளியிட்டது ஏப்ரிலியா. இதன் பெயருக்கு ஏற்ப, இந்த ஸ்கூட்டரின் பாடி பேனல்களில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாக அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் உண்டு. ‘என்னடா கேலரியில் ஒரே ஸ்கூட்டர்களாக இருக்கிறதே’ என நாம் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், RS 150 மற்றும் Tuono 150 எனும் பைக்குகளை இந்தியாவில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தி, பைக் ஆர்வலர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்தது ஏப்ரிலியா.

தொடர்ச்சியாக 280 சிசி க்ரூஸர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வந்த யுஎம் நிறுவனம், தற்போது 230 சிசி பைக்குகளின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. அதன் வெளிப்பாடாக Duty S மற்றும் Duty Ace ஆகிய பைக்குகளை இந்நிறுவனம் களமிறக்கியுள்ளது. ஜூலை 2018-ல் இவை ரிலீஸ் ஆகலாம். இந்த இரு பைக்கிலும் இருப்பது, 17bhp பவர், 1.7kgm டார்க்கை வெளிப்படுத்தும் 223 சிசி, ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. அதேபோல, கியர் இண்டிகேட்டருடன் கூடிய அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10 லிட்டர் பெட்ரோல் டேங்க், 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என மெக்கானிக்கலாக ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கிறது. 280 சிசி இன்ஜினுடன்கூடிய ரெனிகாடே லாஸ் வேகாஸ் எடிஷன் எனும் பைக்கையும், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யுஎம் நிறுவனம் காட்சிப்படுத்தியது.