உலகம் மின்மயம் நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. அதற்கேற்ப இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு என்ன பிளான் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காண்பித்துவிட்டனர். இங்கே அணிவகுப்பவை, அடுத்து வரும் ஆண்டுகளில் நம் நாட்டுச் சாலையில் பயணிக்கப்போகின்றன.

யுனைடெட் மோட்டார்ஸ் நிறுவனம், தனது முதல் மின்சார பைக்கை நடந்து முடிந்த ஆட்டோ

எக்ஸ்போவில் வைத்திருந்தது. க்ரூஸர் பைக்குகளுக்கு பெயர்பெற்ற யுஎம், அதே வரிசையில் ‘ரெனிகாடே தோர்’ என்ற பைக்கை காட்சிப்படுத்தியிருந்தது. பல நிறுவனங்கள் முதன்முதலாக மின்சார ஸ்கூட்டரை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் யுஎம், உலகின் முதல் கியர்பாக்ஸ் கொண்ட மின்சார க்ரூஸர் பைக்கை உருவாக்கியுள்ளது. ரெனிகாடே தோரில் 30Kw பவர் தரக்கூடிய மின்சார மோட்டார் உள்ளது. இதனுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டுசேர்ந்து, பெல்ட் டிரைவ் மூலம் பவரை பின்பக்க வீலுக்குக் கடத்துகிறது. பொதுவாக, மின்சார மோட்டார்களில் டார்க் அதிகம் என்பதால், இதற்கு கியர்பார்க்ஸ் தேவையில்லை. ஆனால், கியர்பாக்ஸ் வைப்பதின்மூலம் மோட்டாருக்கு சார்ஜ் தேவைப்படுவது குறையும். இதனால் அதிக தூரம் பயணிக்க முடியும் என்கிறது யுஎம். மணிக்கு 180 கி.மீ வேகம் செல்லக்கூடிய தோர், முழு சார்ஜில் 270 கி.மீ தூரம் பயணிக்கலாம். இந்த பைக்கின் பேட்டரி, லிக்விட் கூலிங் முறையில் குளிர்விக்கப்படுவதால், பேட்டரி சூடாகும் பிரச்னை இருக்காது. மேலும், 40 நிமிடத்தில் 80 சதவிகிதம் சார்ஜாகிவிடும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உண்டு. ரெனிகாடே Thor பைக்கில் TFT ஸ்கிரீன், ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த பைக்கை இந்தியாவுக்காக மாற்றியமைத்து, இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, 2020-ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளது யுஎம். தற்போது CBU முறையில் கிடைக்கும் இந்த பைக்கின் புக்கிங், ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

ஸ்கூட்டி பெப், ஸ்கூட்டி ஜெஸ்ட் என்று பெப்பியாகவும், ஜூபிட்டர், வீகோ என்று எக்ஸிகியூடிவாகவும் இருக்கும் ஸ்கூட்டர் செக்மென்ட்டை, ‘என்டார்க்’ ஸ்கூட்டர் மூலம் ஸ்போர்ட்டியான டிசைன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய வசதிகளுடன் புதிய தளத்துக்குக் கொண்டுசென்றுள்ளது டிவிஎஸ். இ-ஸ்கூட்டர் எதிர்காலத்தை மனதில் வைத்து, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பைக்குகளை வைத்திருந்த டிவிஎஸ், ‘க்ரியான்’ எனும் இ-ஸ்கூட்டரையும் காட்சிப்படுத்தியது. 12Kw பவர் கொண்ட மோட்டார், மின்சாரத்தைச் சேமித்துவைக்க மூன்று லித்தியம்-ஐயான் பேட்டரி, குவிக் சார்ஜிங் என்று அம்சங்கள் அசத்தல். 0-60 கி.மீ வேகத்தை இது 5.1 விநாடியில் கடந்துவிடும் என்று சொல்கிறது டிவிஎஸ். இந்த வேகம் 160 சிசி பைக்குக்கு இணையானது. ஒரு முழு சார்ஜில் 80 கி.மீ வரை பயணிக்கும் இந்த ஸ்கூட்டர், 60 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜாகிவிடும். இந்த ஸ்கூட்டரின் ஸ்போர்ட்டியான டிசைன், பார்த்ததும் இளசுகளுக்குப் பிடிக்கும். ஸ்கூட்டரை நெருங்கிப் பார்த்தால், மெலிதாக இருக்கும் ஹெட்லைட், காதுகள்போல பக்கவாட்டில் நீண்டிருக்கும் இன்டிகேட்டர், பெரிய TFT ஸ்கிரீன், டைமன்ட் கட் அலாய் வீல், பெரிமீட்டர் ப்ரேம் என்று ஸ்கூட்டர் செக்மென்டிலேயே இல்லாத புதிய அம்சங்களைக் குவித்துள்ளன. கம்ப்யூட்டர் நிறுவனமான இன்டெல் உடன் சேர்ந்து க்ரியானில் Cloud connectivity, ஜிபிஎஸ், 3 ரைடிங் மோடுகள், Anti-theft வசதி, பார்க்கிங் அசிஸ்ட், geofencing போன்ற நவீன வசதிகளைத் தரவுள்ளது டிவிஎஸ். ஹர்பஜன் சிங் போல் இருந்த ஸ்கூட்டர் செக்மென்டை, ‘யோ யோ’ ஹனி சிங்போல மாற்றிவிடும் போல டிவிஎஸ்.

ஜெப்பலின் பைக் மூலம் புது செக்மென்டை உருவாக்கப்போகிறது டிவிஎஸ். இந்தியாவில் முதல் ஹைப்ரிட் பைக்கை உருவாக்கப்போகிறோம் என்ற பெருமிதம் கொண்டாலும், காட்சிப்படுத்தப்பட்டது போலவே இந்த பைக் விற்பனைக்கு வருமா என்பது சந்தேகம்தான். இந்த பைக்கின் க்ரூஸர் டிசைன் படுகவர்ச்சியாக இருக்கிறது. பழைய கேடிஎம் டியூக்கில் இருப்பது போன்று வெர்டிக்கல் பொசிஷன் செய்யப்பட்ட LED ஹெட்லைட், RR310 பைக்கில் இருக்கும் அதே தங்கநிற 41மிமீ USD ஃபோர்க், ஃப்ளாட்டான ஹேண்டில் பார், அனலாக் டிஜிட்டல் மீட்டர், உயரம் குறைவான டிசைன் என்று மாடர்ன் கிளாசிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் இதன் இன்ஜின்தான். இந்த பைக்கில் இருப்பது, சிங்கிள் சிலிண்டர் 220சிசி இன்ஜின். 20bhp பவரும் 1.9kgm டார்க்கும் தரக்கூடிய இந்த இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸோடு டிவிஎஸ்ஸின் காப்புரிமை பெற்ற Integrated Starter Generator System உள்ளது. 1200 watt பவர்கொண்ட இந்த ரீ-ஜெனரேட்டர் மோட்டார், பைக்குக்கு கூடுதல் டார்க்கைத் தரும். இந்த மோட்டாரை இயக்குவதற்காக 48V லித்தியம்-அயான் பேட்டரி உள்ளது. இன்ஜின் மற்றும் மோட்டார் ஆகிய இரண்டின் பவரையும் பின்சக்கரங்களுக்குக் கடத்துவதற்கு பெல்ட் டிரைவ் உள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகம் வரை செல்லும். ஆனால், புல்லட் போல அதிரவைக்கும் சத்தம் எதிர்பார்க்கக் கூடாது. இது சைலன்ட் மோடுதான். க்ரியான் போல இந்த பைக்கிலும் க்ளவுட் கனெக்டிவிட்டி உண்டு. கூடுதல் சிறப்பம்சங்களாக கீ-லெஸ் என்ட்ரி எனும் கார்களுக்கு மட்டுமே இருக்கும் அம்சம் வரவுள்ளது. இதற்கு Bio-key என்று பெயர்வைத்துள்ளது டிவிஎஸ். கோ ப்ரோ மாதிரியான HD ஆக்ஷன் கேமராகூட இந்த பைக்கில் வரவுள்ளதாம். இப்போது இருக்கும் அனைத்து அம்சங்களுடனும், 1 முதல் 1.30 லட்சத்துக்கு குறைவான விலையில் விற்பனை செய்தால், நிச்சயம் செம ஹிட். இந்த இரண்டு மின்சார வாகனங்களோடு, எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தும் புது அப்பாச்சி RTR 200 பைக்கையும் காட்சிப்படுத்தியிருந்தது டிவிஎஸ்,

இந்திய நிறுவனமான ‘22 மோட்டார்ஸ்’ தனது முதல் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. Flow என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இ-ஸ்கூட்டரில், பாஷ் நிறுவனத்தின் 2.1Kw பவர் தரும் DC மோட்டார் உள்ளது. இந்த மோட்டாருக்கு மின்சாரம் தருவதற்காக, 32 AH லித்தியம்-அயான் பேட்டரியும் உள்ளது. பழைய நோக்கியா மொபைல்போல அகற்றி பொருத்தும் பேட்டரி என்பதால், சார்ஜ் இல்லையே என்ற கவலையே வேண்டாம். அடுத்த பேட்டரியைப் பொருத்திக்கொண்டு ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு போகலாம். ஸ்டெப்னி வீல் போல எக்ஸ்ட்ரா பேட்டரிவைக்க இந்த ஸ்கூட்டரில் தனி இடமும் உண்டு. ஒருமுறை இதன் பேட்டரியை 100 சதவிகிதம் சார்ஜ் செய்தால், 80 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் தேவை. ப்ளூடூத், வைஃபை, க்ளவுட் கனெக்டிவிட்டி, சர்வீஸ் நேரத்தை முன்பே சொல்வது, பேட்டரி எப்போது சார்ஜ் செய்ய வேண்டும், வழக்கமாகப் போகும் ரோடு கன்டிஷன் எப்படி உள்ளது, ட்ராஃபிக் எப்படி, ஸ்கூட்டரில் எந்தப் பாகம் எப்போது செயலிழக்கும் என்று பார்த்து, தானாகவே கம்பெனிக்கு ஆர்டர் செய்வது என்று ஒரு லிஸ்ட்டே வைத்துள்ளது. 1 மணி நேரத்தில் 70 சதவிகிதம் சார்ஜ் ஆகக்கூடிய குவிக் சார்ஜிங் இதன் கூடுதல் அம்சம். LED லைட்டிங், CBS, ட்யூப்லெஸ் டயர், ரிவர்ஸ் கியர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என்று கார்களுக்கே உள்ள சில வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. அட, ரிமோட்கூட இருக்கு சார்!

இந்தியாவில் மின்சார வாகனம் என்றதும் ஸ்கூட்டர்கள்தான் அதிகமாக வலம் வரத் தொடங்கின. அவ்வப்போது ‘பைக் இருக்கு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்பதுபோல சில நிறுவனங்கள் தலை காண்பித்துக்கொண்டிருக்கும் நிலையில், Emflux இந்தியாவின் முதல் அதிவேக மின்சார பைக்கை களமிறக்கியுள்ளது. Emflux-ன் முதல் பைக்கான ஒன், 0-100 கி.மீ வேகத்தை 3 விநாடிகளில் கடந்துவிடுமாம். ஒரு சார்ஜில் அதிகபட்சம் 200 கி.மீ தூரம் செல்லும் இந்த பைக், மணிக்கு 200 கி.மீ வேகத்திலும் செல்லும். இந்த பைக்குக்கு பவர் தருவது இதில் உள்ள 60Kw மோட்டார். மோட்டார் செயல்படுத்துவதற்கு சாம்சங் நிறுவனத்தின் லித்தியம்-அயான் பேட்டரி உள்ளது. எவ்வளவு கொள்ளளவு பேட்டரி என்பதை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை. 75 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீன் கன்ஸோல் உடன் வரும் இந்த பைக் ஜிபிஎஸ், connected vehicle, HD கேமரா போன்ற பல தொழில்நுட்பங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டது ப்ரோட்டோடைப் பைக். மூன்று வேரியன்டில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த பைக்கை, அடுத்த ஆண்டு சந்தைக்குக் கொண்டுவரப்போவதாகவும், ஏப்ரல் மாதமே பைக் டெலிவரி செய்யப்படும் என்றும் Emflux நிறுவனத்தின் நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

2016-ம் ஆண்டு எக்ஸ்போவிலேயே PCX ஸ்கூட்டரை காட்சிக்குவைத்திருந்தது ஹோண்டா. இன்னும் அந்த ஸ்கூட்டரே சந்தைக்கு வராத நிலையில், தற்போது புது PCX இ-ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது. பழைய PCX ஸ்கூட்டருக்கும் புதிய எலெக்ட்ரிக் PCX ஸ்கூட்டருக்கும் டிசைனில் எந்த வித்தியாசமும் இல்லை. அதே ஸ்போர்ட்டியான டிசைன், அக்ரஸிவ்வான அர்பன் ஸ்டைல். 1,923 மிமீ நீளம், 745 மிமீ அகலம், 1,107 மிமீ உயரம் என பார்க்க 400- 600 சிசி ஸ்கூட்டர்களைப்போல இருந்தாலும், இதில் இருப்பது 0.98Kw பவர் தரும் மோட்டார்தான். ஃப்ளோ ஸ்கூட்டரைப் போலவே இதிலும் அகற்றிப் பொருத்திக்கொள்ளக்கூடிய பேட்டரி உண்டு. LED ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் என்று பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருமா என்பது சந்தேகம்தான். இந்த ஆண்டு ஜப்பானில் விற்பனைக்குக் கொண்டுவரலாம் என்று முடிவெடுத்துள்ளது, ஹோண்டாவின் இருசக்கர வாகனப் பிரிவு.

டிசைன் மட்டும்தான் பழசு; ரெட்ரோ இல்ல... நாங்க மாடர்ன்’ என்று மின்சார வாகனப் புரட்சியில் பியாஜியோவும் கலந்துகொண்டுள்ளது. வெஸ்பா எலெட்ரிகா ஸ்கூட்டர்தான் பியாஜியோவின் எலெக்ட்ரிக் ஸ்டார்ட். ‘மின்சார ஸ்கூட்டர் மாடர்னாதான் இருக்கணுமா’ என்ற கேள்விக்குத் தங்களுடைய ஸ்டைலிலேயே பதில் சொல்லிவிட்டது. வெஸ்பாவின் அதே ட்ரெடிஷனல் ஸ்கூட்டர் டிசைன்தான் வெஸ்பா எலெட்ரிகா. ஆனால், சாம்பல் நிற பெயின்ட் வேலையுடன் வரும் க்ரோம் பூச்சு, இந்த ஸ்கூட்டரில் ஒரு மாடர்ன் டச். வெஸ்பா எலெட்ரிகாவில் அதிகபட்சம் 4Kw பவர் தரும் மின்சார மோட்டாரும், 4.2 kWh மின்சாரம் தரக்கூடிய பேட்டரியும் உள்ளன. 4 மணி நேரத்தில் பேட்டரி சார்ஜாகிவிடும் என்கிறார்கள். மேலும், எலெட்ரிகாவில் குறைந்த எடைகொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல்தான். ஆனால், TFT கலர் டிஸ்ப்ளே உள்ளது. இரண்டு வேரியன்டில் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வேரியன்ட் 100 கி.மீ தூரமும், எக்ஸ் வேரியன்ட் 200 கி.மீ தூரம் வரை பயணிக்கும். ஆனால், எலெட்ரிகா எக்ஸ் முழு மின்சார ஸ்கூட்டர் அல்ல. இதில் முன்சொன்ன எலெக்ட்ரிக் மோட்டாருடன் - பெட்ரோல் இன்ஜினும் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த ஆண்டே ஐரோப்பியாவில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்கூட்டர், இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.