முதலில் டிவிஎஸ் நிறுவனத்துக்கு ஒரு பொக்கே. காரணம், என்டார்க் ஸ்கூட்டர். விற்பனைக்கு வருவதற்கு முன்பே புக்கிங் தொடங்கிய பெருமை என்டார்க்குக்கு உண்டு. இந்த நிலையில்தான் ‘என்டார்க் ஓட்ட வர்றீங்களா?’ என்று தனது தொழிற்சாலையில் டெஸ்ட் டிரைவ்வுக்கு அழைத்திருந்தது டிவிஎஸ். குதூகலமாகக் கிளம்பினேன்.

ஸ்டைல்

Stealth Aircraft எனும் அதிவேக போர் விமானம்தான் என்டார்க்கின் இன்ஸ்பிரேஷன். செம ஷார்ப் டிசைன். ஹேண்டில்பாரிலேயே இண்டிகேட்டர்கள் இருந்தன. வாவ்!

ஹெட்லைட் சாதாரண ஹாலோஜன்தான். ஆனால், DRL-ம் ‘T’ டெயில் லைட்டும் LED. இரவில் செம கிளாமராக இருக்கும். கீழே ஆங்கிரி பேர்டு புருவத்தை நினைவுபடுத்தும் இண்டிகேட்டர்கள்.

அறுங்கோண வடிவ இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர், ஃபுல் டிஜிட்டல்.

இன்ஜின்: 124.79 சிசி பவர்: 9.5bhp டார்க்: 1.07kgm கியர்பாக்ஸ்: CVT எடை: 116 கிலோ

வசதிகள்

125 செக்மென்ட்டிலேயே அதிக பூட் ஸ்பேஸ் என்டார்க்கில்தான். 22 லிட்டர். இதைத் தவிர, வேறு எங்கும் ஸ்டோரேஜ் இல்லை. உள்ளே வாட்டர் பாட்டில் வைக்க தனி இடம், LED லைட், USB சார்ஜ் போர்ட் எல்லாம் உண்டு.

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலுக்கு பெரிய லைக். ஸ்மார்ட் கனெக்ட் எனும் இந்த 5 இன்ச் ஸ்கிரீனில் மொத்தம் 55 அம்சங்கள் உள்ளன. இதில் இரண்டு மோடுகளை செட் செய்துகொள்ளலாம். ஸ்ட்ரீட் மோடில் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் கடிகாரம், ஓடோ மீட்டர், ப்யூல் இண்டிகேட்டர் போன்றவை தெரியும். ஸ்போர்ட் மோடில் கூடுதலாக லேப் டைமர், 0-60 டைமர் தெரியும். இது தவிர, 2 ட்ரிப் மீட்டர்கள். ஒன்று தூரத்தைக் காட்டும்; மற்றொன்று ஸ்கூட்டர் ரிசர்வுக்கு வந்த பிறகு எவ்வளவு தூரம் போகும் என்பதைக் காட்டும். இன்ஜின் வெப்பம், சராசரி வேகம் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்றவற்றையும் காட்டுகிறது. ஸ்கூட்டரை ப்ளூடூத் உதவியால் மொபைல் போனுடன் இணைக்கலாம். அதற்கு முன்பு நமது ஸ்மார்ட் ஃபோனில் என்டார்க் செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். இதன்மூலம் மொபைல் பேட்டரி ஸ்டேட்டஸ், சிக்னல் ஸ்டேட்டஸ், இன்கமிங் கால், மிஸ்டு கால், மெசேஜ் போன்றவற்றையும் பார்க்கலாம் ஆனால், பதிலளிக்க முடியாது. Map my India நிறுவனத்துடன் இணைந்து மேப் சேவையையும் அளிக்கிறது டிவிஎஸ். இடத்தை மொபைலில் பதிவு செய்தால், ரூட்டை ஸ்கூட்டரே காண்பிக்கும். மேலும், இந்தச் செயலியில் உள்ள அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிரவும் முடியும்.

பர்ஃபாமென்ஸ்

என்டார்க்கில் இருப்பது டிவிஎஸ்ஸின் முற்றிலும் புதிய சிங்கிள் சிலிண்டர், 124.79 சிசி, 3 வால்வ் இன்ஜின். 9.5bhp பவரும், 1.07kgm டார்க்கும் கிடைக்கிறது.

வைப்ரேஷனே தெரியவில்லை. எக்ஸாஸ்ட் சத்தமே மிரட்டலாக இருந்தது. டாப் ஸ்பீடு 97 கி.மீ வரை விரட்டினேன். இன்ஜின் படு ஸ்மூத்.

ஆக்ஸிலரேஷனைப் பொறுத்தவரை, என்டார்க் சுமார்தான். ஏப்ரிலியாவைப் போன்ற அக்ரஸிவ்வான ஆக்ஸிலரேஷன் இல்லை. ஆக்ஸிலரேட்டரை முழுவதுமாகத் திருப்பிய பிறகும் என்டார்க் பொறுமையாகத்தான் வேகமெடுத்தது. ஆனால், மிட் ரேஞ்ச் செம. 40 முதல் 70 கி.மீ வேகம் போகும் பார்ட்டிகளிடம் என்டார்க் பாஸ் மார்க் வாங்கும்!

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்

முன்பக்கம் 220 மி.மீ பெட்டல் டிஸ்க், பின்பக்கம் 130 மி.மீ டிரம். தேவையான அளவு கச்சிதமாக இருக்கிறது. முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும் பின்பக்கம் கேஸ் ஷாக் அப்சார்பரும் உள்ளது. கரடுமுரடான ட்ராக்கில் என்டார்க்கை விரட்டினேன். பின்பக்க சஸ்பென்ஷன் அதிர்வுகளை நன்றாகவே சமாளித்தது. ஆனால், முன்பக்க சஸ்பென்ஷன் நம் கைக்குக் கொஞ்சம் அதிர்வுகளைக் கடத்தியது.

12 இன்ச் ரெமோரா டயர்களும் ஓகே! க்ராஸியாவைவிட 9 கிலோவும், ஆக்ஸஸை விட 14 கிலோவும்

எடை அதிகம். (116 கிலோ). ஸ்கூட்டர் என்றாலே பெட்ரோல் டேங்க் கம்மியாதான் இருக்கணுமா? 5 லிட்டர் பெட்ரோல் டேங்க்குக்கு, மைலேஜ் அதிகமாக இருந்தால்தான் எடுபடும்.

என்டார்க், ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் இல்லை. கொஞ்சம் ஸ்போர்ட்டியான ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் என்கிறது டிவிஎஸ். ஸ்மூத்தான இன்ஜின், Smart X connect என எந்த ஸ்கூட்டரிலும் இதுவரை இல்லாத கவர்ச்சிகரமான வசதிகள், வளைவுகளில் வேகமாகப்போகும் அளவு நம்பிக்கை தரும் டயர், அதிக பவர், டார்க், பளிச்சென்ற நிறத்தில் மேட் ஃபினிஷ் என்று என்டார்க் ஒரு ப்ராக்டிக்கலான ஸ்கூட்டர் மட்டுமில்லை ஃபன்னான ஸ்கூட்டரும் கூட. நிச்சயம் இது இளசுகளுக்குப் பிடிக்கும்.