இரண்டு ஆண்டுகள்... கான்செப்ட் வடிவத்தில் இருந்து, தயாரிப்பு நிலைக்கு எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைக் கொண்டு வருவதற்கு, ஹீரோ மோட்டோகார்ப் எடுத்துக்கொண்ட காலம். இந்த இடைப்பட்ட காலத்தில், தான் ஏற்கெனவே விற்பனை செய்யும் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களைக் (ஸ்ப்ளெண்டர் i-Smart, அச்சீவர், கிளாமர், சூப்பர் ஸ்ப்ளெண்டர்) களமிறக்கியதன் காரணமாக, இந்தியாவில் ஐம்பது சதவிகிதம் டூ-வீலர் சந்தையை இந்நிறுவனம் தன்வசம் வைத்திருக்கிறது. இப்படி தொடர்ச்சியாகக் கம்யூட்டர் பிரிவிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியதால், 150சிசி-க்கும் அதிகமான பைக் பிரிவில் இருந்து ஹீரோ விலகியே இருந்தது.

ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் 2016 மிலன் மோட்டார் ஷோவில் (EICMA), நேக்கட் ஸ்ட்ரீட் வகையைச் சேர்ந்த எக்ஸ்ட்ரீம் 200S பைக்கை அறிமுகம் செய்தது. ஜெய்ப்பூரில் இருக்கும் ஹீரோவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த பைக்கை, தனது ‘புதிய ரோட்ஸ்டர் பைக்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘எக்ஸ்ட்ரீம் 200R’ எனப் பெயர் சூட்டியுள்ளது.

டிசைன் மற்றும் வசதிகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்ட்ரீம் 200S முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டபோது, அதனை சிறுத்தையை மனதில் வைத்துக்கொண்டு டிசைன் செய்திருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்திருந்தது. ஆனால், பார்வைக்கு 150சிசி எக்ஸ்ட்ரீம் பைக்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதைப் போலவே எக்ஸ்ட்ரீம் 200R இருக்கிறது. LED DRL உடனான ஹெட்லைட், LED டெயில் லைட் ஆகியவற்றை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இதைப் பற்றி அந்நிறுவனத்திடம் கேட்டபோது, ‘‘150சிசி எக்ஸ்ட்ரீம் ஷார்ப்பான டிசைன் என்றால், 200சிசி எக்ஸ்ட்ரீம் கட்டுமஸ்தான டிசைன்'' என விளக்கமளித்திருக்கிறது. சர்வீஸ் இண்டிகேட்டர் - சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டருடன் கூடிய அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் க்ளஸ்டரில், 2 ட்ரிப் மீட்டர் - கடிகாரம் - ஃப்யூல் கேஜ் ஆகியவை இருந்தாலும், கியர் இண்டிகேட்டர் இல்லை. மேலும், சிங்கிள் பீஸ் சீட், பார்க்க ஸ்ப்ளிட் சீட் போன்ற தோற்றத்தையே கொண்டிருக்கிறது. ஏர் ஸ்கூப்புடன் கூடிய 12.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் என்ன கலரில் இருக்கிறதோ, அதே கலரில் இன்ஜின் கார்டு இருப்பது அழகு. இந்நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக பின்பக்க ரேடியல் டயர், Steel Braided Brake Line எனத் தனது பைக்குகளில் பரவலாகக் காணக்கிடைக்காத வசதிகளை, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் சேர்த்திருக்கிறது ஹீரோ. ஆனால், இம்பல்ஸ் பைக்குக்கு அடுத்தபடியாக, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருப்பது ஆறுதல்.

இன்ஜின் விபரம்

200சிசி பைக் என்பதால், பஜாஜ் பல்ஸர் NS200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஆகியவைதான், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் பிரதான போட்டியாளர்கள். அச்சீவர் 150 பைக்கில் இருக்கும் 149.1சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருக்கும் புதிய ஏர் கூல்டு, 2 வால்வ், 199.6சிசி, கார்புரேட்டட் இன்ஜினைத் தயாரித்துள்ளது ஹீரோ. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் கார்புரேட்டருடன் கூட்டணி அமைத்திருக்கும் இந்த இன்ஜின், 18.1bhp@8,000rpm பவர் மற்றும் 1.71kgm@6,500rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது அச்சீவரைவிட 5bhp அதிக பவர் மற்றும் 0.43kgm டார்க் அதிகம்! அச்சீவரில் i3S சிஸ்டம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இன்ஜின் கில் ஸ்விட்ச்சைப் பொருத்தியுள்ளது ஹீரோ. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பவர் குறைவாக இருந்தாலும், எக்ஸ்ட்ரீம் 200R டார்க்கில் சமமாக இருக்கிறது. மேலும், மற்ற 200சிசி பைக்குகளைப் போலவே, அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் Counter Balancer Shaft பயன்படுத்தப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். ஆனால், போட்டியாளர்களிடம் இருக்கும் 4 வால்வ், ஆயில் கூலிங்/லிக்விட் கூலிங், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் போன்ற வசதிகள் மிஸ்ஸிங். இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் எக்ஸாஸ்ட் சத்தத்துக்காக, ஹீரோவின் பொறியாளர்கள் குழு ஸ்பெஷலாக வேலை செய்திருக்கிறது.

சஸ்பென்ஷன், டயர், பிரேக்ஸ்

167மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில், புதிய டயமண்ட் டைப் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 100/80 17 MRF ட்யூப்லெஸ் டயர் - 276மிமீ Nissin டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் - 130/70 R17 MRF ரேடியல் ட்யூப்லெஸ் டயர் - 220மிமீ Nissin டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இன்ஜின் விஷயத்தில் பின்தங்கியிருந்தாலும், இந்த ஏரியாவில் போட்டியாளர்களுக்குச் சமமான நிலையில், 146 கிலோ எடையுள்ள எக்ஸ்ட்ரீம் 200R இருக்கிறது. 152 கிலோ எடையுள்ள பல்ஸர் NS200 பைக்கைப் போலவே, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், 149 கிலோ எடையுள்ள அப்பாச்சி RTR 200 4V பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக, போட்டியாளர்களைவிடக் குறைவான எடை மற்றும்

பவர் என்பதால், சிறிய டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போதும் என நினைத்துவிட்டதோ ஹீரோ?

160சிசி - 180சிசி பைக்குகளுக்கும் போட்டியாக, அதாவது உத்தேசமாக 1 லட்ச ரூபாயில், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹீரோ. அதற்கேற்பதான், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் இன்ஜினை இந்த நிறுவனம் தயாரித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பைக்கின் டாப் ஸ்பீடான 112 கி.மீ, இதை உறுதிபடுத்துகிறது. அசத்தலான விலையில், 790 மிமீ சீட் உயரத்துடன், எளிதான ஓட்டுதலுடன் கூடிய 200சிசி பைக்காக, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை ஸ்மார்ட்டாக பொசிஷன் செய்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். எனவே, நாம் முன்பு சொன்னது போலவே, 160சிசி - 180சிசி பைக்குகளுக்கான மாற்றாக இது இருக்குமா என்பது, போகப் போகத் தெரியும். ஏனெனில், வேலைக்குச் செல்லும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்தே, 40 கி.மீ மைலேஜ் தரக்கூடிய பைக்காக, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைக் களமிறக்கியிருக்கிறது ஹீரோ. ஏப்ரல் மாதத்தில் இந்த பைக் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.