Published:Updated:

டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

டிசைன் உலகின் தந்தை, ரெமோ!
பிரீமியம் ஸ்டோரி
டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 3க.சத்தியசீலன்

டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 3க.சத்தியசீலன்

Published:Updated:
டிசைன் உலகின் தந்தை, ரெமோ!
பிரீமியம் ஸ்டோரி
டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

ரெமோ லூயி - ‘இண்டஸ்ட்ரியல் டிசைன் துறையின் தந்தை’ என்று போற்றப்படுபவர். வடிவமைப்பின் மூலமாக இவர் ஏற்படுத்திய அதிர்வலைகளின் தாக்கம், உலகின் மூலை முடுக்குகளில் வாழும் கடைக்கோடி மனிதர்களைக்கூட தொட்டிருக்கிறது. 1893-ல் பிறந்து 93 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

 பாராளும் மன்னர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்று கருத்தப்பட்ட வடிவமைப்புக் கலையை, ‘மக்களுக்கானது' என்று தன் செயல்திறன் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ரெமோ லூயி.

கார்கள், கப்பல்கள், இன்ஜின்கள்,  பேருந்துகள் துவங்கி, ஹேர் டிரையர், ரேடியோ, டார்ச் லைட் என்று இவர் வடிவமைத்த பொருள்களின் பட்டியல் நீளம்.

அதனால்தான் அவரை, ‘ஃபாதர் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டிசைன்', The man who designed everything, அமெரிக்க கனவுகளின் தந்தை, உலகத்தின் முதல் ஸ்டைலிஸ்ட், Father of stramlining என ஆசையோடு பல  அடைமொழிகள் கொடுத்து, உலகம் இவரைக் கொண்டாடுகிறது. 1949-ல் ‘டைம்ஸ்' இதழ், இவரது புகைப்படத்தை அட்டைப்படத்தில் பிரசுரம் செய்து சிறப்பித்தது.

டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

பல நூறு யானைகளின் பலமுள்ள ‘லோக்கோ மோட்டீவ்' என்கிற ரயில் இன்ஜினை டிசைன் செய்வது, அந்தக் காலத்தில் எளிதான விஷயம் இல்லை. டிசைன் உலகில் ஒரு மாயப்புள்ளியை எல்லோரும் தேடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் புள்ளி எளிதில் யார் கையிலும் சிக்காது. அழகியல், தொழில்நுட்பம், மக்கள் பயன்பாடு ஆகிய மூன்று வேறு வேறு காரணிகள் சந்திக்கும் அந்த மாயப் புள்ளியை இனம் காண்பதில், ரெமோ கில்லாடி.

அதற்கு, கொக்கோகோலா பாட்டில் ஓர் அருமையான உதாரணம், ரெமோ வடிவமைத்த இந்தப் பாட்டில் பல காலமாக பெரிய மாற்றங்களைச் சந்திக்காமல் அடிப்படையில் அப்படியே இருக்கிறது.

காரணம், கொக்கோகோலா பாட்டிலின் வடிவத்தை மாற்ற அந்த நிறுவனம் பலமுறை முயற்சி செய்தும் மக்கள் அதை ஏற்கவில்லை. மக்கள் கொக்கோகோலாவை அந்த பாட்டிலின் வடிவத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

காலங்கள் கடந்தும், தலைமுறைகள் கடந்தும் ஒரு வடிவம் மக்களால் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால், அதுதான் சிறந்த வடிவமைப்பு.

ரெமோ, முதன்முதலில், ‘vogue' எனும் பத்திரிகையில் படம் வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஓவியத் திறமைதான் டிசைன் உலகத்துக்கு அழைத்து வந்தது. ஓர் ஓவியனின் கண்களோடு தன்னைச் சுற்றியிருந்ததைப் பார்த்தபோது, அவருக்குள் இருந்த வடிவமைப்பாளன் வெளிப்பட்டான்.

‘பென்சில்வேனியா ரெயில் ரோடு’ எனும் ரயில் நிறுவனத்துக்காக அவர் வடிவமைத்த ரயில் இன்ஜின், பலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம் - காற்றை எளிதில் கிழித்து வேகமாக முன்னேறும் வடிவத்தை Streamline என்று சொல்வார்கள். அந்த இன்ஜின் வடிவத்தால், ரயிலின் வேகம் அதிகரித்தது; எரிபொருள் பயன்பாடு குறைவாக இருந்தது. வடிவமைப்பு என்பது அழகியலோடு நின்றுவிடுவதில்லை. அது பயன்பாடு சார்ந்தது என்பதை உலகுக்கு உணர்த்தியவர் ரெமோ. 

அமெரிக்க அதிபர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் விமானம், ஏர்ஃபோர்ஸ் ஒன். அது ஓர் அதிபரின் விமானம் மட்டுமல்ல... அவர் அலுவலகமே அதில் அடக்கம். அதிபர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, அவரது அலுவலகமே அந்த விமானத்தில்தான் இயங்கும். அதை வடிவமைத்தப் பெருமையும் ரெமோவையேச் சேரும்.

டிசைன் உலகின் தந்தை, ரெமோ!

ஒரு டிஸைனர் லோகோ மோட்டிவ் இன்ஜினை வடிவமைக்கிறபோது, அந்த இன்ஜின் தொழில்நுட்பத்தை விரைவாக அறிந்துகொள்வது அவசியம். தன் கற்பனையின் வடிவத்துக்குள் இந்த பொறியியல் சாதனங்களை உள்ளடக்கி, அவை சுலபமாக இயங்கும் வகையில் லே-அவுட்டில் (Lay out) மாற்றங்களைச் செய்ய வேண்டும்; இதைப் பொறியியல் வல்லுநர்களும் ஏற்க வேண்டும். இதில் இருந்து ஒன்று புரிகிறது. வடிவமைப்புக்கு கற்பனைத்திறன், படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றோடு, எதிர்நிலையில் உள்ளவர்களை தன் கனவின் பால் ஈர்க்கும் பேச்சாற்றாலும் (Presentation Skill) அவசியம்.

இந்த நேரத்தில் ஸ்டுடி பேக்கர் என்கிற கார் கம்பெனி பற்றி சொல்லியாக வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது, ஃபோர்டு, GM, கிரைஸ்லர் போன்ற நிறுவனங்கள், அமெரிக்க அரசின் உதவியோடு இயங்கின. இரண்டாம் உலகப் போருக்குத்  தேவையான ஆட்டோமொபைல் உபகரணங்களை அவை தயாரித்துக்கொண்டிருந்ததால், ஸ்டீல் தட்டுபாடு காரணமாக கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனர். அந்தச் சமயத்தில், மக்கள் பயன்பாட்டுக்காக ஸ்டுடி பேக்கர் நிறுவனத்துக்கு, கார் ஒன்றை வடிவமைத்தார் ரெமோ. 1953-ம் ஆண்டு, ஸ்டுடி பேக்கருக்காக ரெமோ வடிவமைத்த ‘கமெண்டர் ஸ்டார் லைன்’ எனும் கார், ஒரு மைல் கல். கார் டிசைன் வரலாற்றிலே க்ளே மாடலை சாதாரணமாகப் பயன்படுத்தி, எட்டே நாட்களில் ஃபைபரில் காரைத் தயாரித்துக் கொண்டுவந்து நிறுத்திய விதம், பலரது புருவத்தை உயர்த்தவைத்தது. அது மக்கள் பயன்பாட்டுக்கும் வந்தது. படகு தயாரிக்கப் பயன்படும் ஃபைபரில் இவர் உருவாக்கிய கார்தான் இன்றைக்கும் கார்களில் ஃபைபர் பயன்படுத்த காரணமாக இருந்துவருகிறது. இவரது திறமை புரிந்ததனால், நாசா அழைப்புவிடுக்க... அதை ஏற்று 1963 முதல் 1977 வரை நாசாவில் பணியாற்றினார். உண்மையிலே இவர் ஒரு கேம் சேஞ்சர். ஆட்டத்தின் ஓட்டத்தில் மாற்றுக் காரணியாக இவரின் டிசைன்கள் செயல்பட்டன.

பேருந்துகளும், டிரக்குகளும் கிளர்ந்தெழுந்து போக்குவரத்துத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய காலகட்டத்தில், ‘தி கேரே கவுன்ட்' கம்பெனிக்காக வடிவமைத்த பஸ், என்னைப்போல பலரின் உள்ளம் கவர்ந்த ஒன்று. மிகச் சாதாரணமாக, தட்டையாக இருக்கக்கூடிய ஒரு பேருந்தை, எந்த அளவுக்கு மிகக் கவர்ச்சியாக, ஓட்டுவதற்கு இலகுவாக, அதுபோலவே பயணிகள் மகிழத்தக்க வகையில் புது வடிவத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு, அது ஓர் உதாரணமாகத் திகழ்ந்தது. டிசைன் என்பது சிம்பிளாகவும் மினிமலாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு, இவரது பஸ் டிசைன்கள் எடுத்துக்காட்டு.

ஷெல் என்று அழைக்கக்கூடிய அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனத்துக்கு, இவர் வடிவமைத்த லோகோ இன்றளவும் ஒரு மில்லி மீட்டர்கூட மாறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமகால டிசைன் உலகம் கிராபிக் டிசைன் என்றும், ஃபேஷன் டிசைன் மற்றும் புரொடெக்ட் டிசைன் என்று பல்வேறு பிரிவுகளாக வளர்ந்திருக்கிறது. மேலும், இவற்றிலேயே identify Design, Space Design User interface, interraction design என்று போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், ரெமோ இப்படி எந்த ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் சிக்காமல், 360 டிகிரியிலும் இயங்கக்கூடிய டிசைனராக விளங்கினார்.

அதனால்தான் ஆட்டோமொபைல் டிசைனராக இருந்த அவர் ஷெல் கம்பெனியின் இலட்சினையையும் வடிவமைக்க முடிந்தது; பொறியாளர்களின் எதிர்பார்ப்புகளையும் முதலீட்டாளர்களின் கனவுகளையும் அவரால் தன் டிசைனுக்குள் கொண்டுவந்து, தன் படைப்புகளுக்கு உயிரூட்ட முடிந்தது. அதனால்தான் இவர் டிசைனர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

- வடிவமைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism