ஓமனில் இருந்து இந்தியா வந்தவுடன், புதிதாக கார் வாங்க தீர்மானித்திருந்தேன். அதற்கேற்ப மாருதி சுஸூகி டிசையர் AMT காரை புக் செய்தும் விட்டேன். ஆனால், அதன் வெயிட்டிங் பீரியட் அதிகமாக இருக்கிறது. எனவே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஆட்டோமேட்டிக் காரை வாங்கி, கார் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். அது மாருதி காராக இருப்பது அவசியம். அதை எங்கே வாங்குவது?

- ஆண்டனி சேவியர், இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மாருதி சுஸூகியின் வேகன்-R அல்லது செலெரியோ ஆகிய கார்கள் பொருத்தமாக இருக்கும். இதன் AMT மாடல்களைத் தேடிப் பிடிப்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், மாருதி ட்ரூவேல்யூ - மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் - ஹூண்டாய் ஹெச் ப்ராமிஸ் போன்ற கார் நிறுவனங்கள் நடத்தும் பிரத்யேகமான யூஸ்டு கார் டீலர்களிடம், உங்கள் தேவைக்கான கார் இருக்கலாம். மேலும், யூஸ்டு கார்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், சந்தையில் அதற்கேற்ப விலைக்குறைப்பு செய்யப்படும் என்பது ப்ளஸ். மாருதி சுஸூகி கார் என்பதால், சர்வீஸ் நெட்வோர்க் - ரீசேல் மதிப்பு - பராமரிப்புச் செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

நான் கடந்த 7 ஆண்டுகளாக மஹிந்திரா ஸைலோ பயன்படுத்தி வருகிறேன். தற்போது 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், 3 வரிசை இருக்கைகள் - நல்ல மைலேஜ் - குறைவான பராமரிப்புச் செலவுகள் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கார் எது?

எஸ். அர்த்தநாரி ஈஸ்வரன், இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மஹிந்திரா XUV 5OO ஏற்றதாக இருக்கும். இதில் நீங்கள் குறிப்பிட்ட 2-வது வரிசை இடவசதி, சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன், பாதுகாப்பு வசதிகள், பராமரிப்புச் செலவுகள் ஆகியவை இருக்கின்றன. ஆனால், இந்த எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை இந்த நிறுவனம் களமிறக்கும் முடிவில் இருப்பதால், நீங்கள் கொஞ்சம் காத்திருப்பது நலம். சன்ரூஃப் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தால், டாடா ஹெக்ஸாவைகூட நீங்கள் பரிசீலிக்கலாம். எனவே, இரண்டு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்து முடிவெடுங்கள்.

நான் கடந்த 5 ஆண்டுகளாக, ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். அடுத்து 80,000 ரூபாய் பட்ஜெட்டில் புதிய பைக் வாங்கும் திட்டத்தில் இருக்கிறேன். அது சிறப்பான பர்ஃபாமென்ஸ் - சொகுசான சஸ்பென்ஷன், குறைந்தபட்சம் லிட்டருக்கு 55 கி.மீ மைலேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

- கே. சந்தானம், மதுரவாயல்.

உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் சரியான சாய்ஸாக இருக்கும். இது 150சிசி செக்மென்ட்டில் இருக்கும் பழைய மாடல்களில் ஒன்று என்பதால், டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் பின்தங்கிவிடுகிறது. ஆனால், சொகுசான ஓட்டுதலைத் தரும் மோனோஷாக் சஸ்பென்ஷன், போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ், அதிக சர்வீஸ் நெட்வொர்க், நல்ல ரீ-சேல் மதிப்பு என இந்த பைக் அசத்துகிறது. யூனிகார்ன் 150 பைக்கின் எடை ஒரு குறையாக இருந்தாலும், இது பைக்கின் நிலைத்தன்மைக்கு துணைநிற்கிறது. உங்கள் பட்ஜெட்டை நீங்கள் கொஞ்சம் அதிகரித்தால், பஜாஜ் பல்ஸர் 150 பைக்கையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

ஆட்டோமேட்டிக் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். மாருதி பெலினோ, புதிய மாருதி ஸ்விஃப்ட். இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம்?

- பிரேம், மயிலாடுதுறை

பெலினோ, ஸ்விஃப்ட்: இந்த இரண்டில் இருப்பதும் ஒரே இன்ஜின்தான். பெலினோவுடன் ஒப்பிடும்போது ஸ்விஃப்ட் அமைதியாக இயங்கக்கூடியக் கார். ஆனால், நீங்கள் வாங்க விரும்புவது ஆட்டோமேட்டிக் என்பதால் பெலினோவை தேர்வு செய்யலாம். ஏனெனில் பெலினோவில் இருப்பது ஸ்மூத்தாக இயங்கக்கூடிய CVT கியர்பாக்ஸ். ஆனால், ஸ்விஃப்டில் இருப்பதோ சாதாரண AMT கியர் பாக்ஸ்.

நான் 4 மாதங்களுக்கு முன்பு, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை வாங்கினேன். அதன் அராய் மைலேஜ் 65.8 கி.மீ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், எனக்கு லிட்டருக்கு 35 கி.மீதான் மைலேஜ் கிடைக்கிறது. எனது ஸ்கூட்டரில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? மைலேஜை அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

- நவீன், இமெயில்.

அராய் அமைப்பில் நடத்தப்படும் மைலேஜ் டெஸ்ட், தங்குதடையில்லாத சூழ்நிலையில் நடைபெறுவதாகும். எனவே, அங்கு நம் ஊர்சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல், சிக்னல், மேடு பள்ளங்கள், இடர்பாடுகள் என எதுவுமே இருக்காது. அதனால், அராய் மைலேஜ் எப்போதுமே, இயல்பான மைலேஜைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். டூ-வீலர் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில், அவர்களின் அதிகாரபூர்வமான சர்வீஸ் சென்டர்களில், உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்வது நலம். மேலும், பிரேக்கின் பயன்பாட்டைக் குறைத்து, முடிந்தவரை, நகரச் சாலைகளில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்திலேயே பயணித்தால், மைலேஜை கணிசமாக அதிகரிக்க முடியும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com