ஒரு சைக்கிள் இருக்கிறது. பெடல் போட்டு சாதாரண சாலைகளில் ‘விறுவிறு’வெனச் செல்கிறீர்கள். அதுவே மலைச் சாலைகளிலோ, பாலங்களிலோ ஏறும்போது என்னாகும்? மூச்சு வாங்கும். காரணம், சைக்கிளுக்கு எக்ஸ்ட்ரா இழுவைத் திறன் (டார்க்) தேவைப்படும். இறக்கங்களுக்கும் சரி; ஏற்றங்களுக்கும் சரி - இதுதான் கியர் சிஸ்டம்; ஆனால், ஏற்றங்களில் ஆற்றலைக் கூட்ட வேண்டும். மாங்கு மாங்கென்று மிதித்தால்தான் வேலைக்கு ஆகும். அப்படியென்றால், தேவையான இடங்களில் பவரையும் டார்க்கையும் அதிகரிக்க ஒரு மெக்கானிக்கல் சிஸ்டம் இருந்தால் நல்லது. அதற்குப் பெயர்தான் கியர்பாக்ஸ்.

கியர்பாக்ஸா.. அப்படினா?

மெஷினில் ஒரு பாகத்தில் இருந்து இன்னொரு பாகத்துக்கு பவரைக் கடத்துவதுதான் கியர்பாக்ஸ். சைக்கிளில் பெடல்களை அழுத்தும்போது பவர் பின் சக்கரங்களுக்குச் செல்வதுபோல், கார்களில் கிராங்க்ஷாஃப்ட்டில் (இன்ஜினிலிருந்து பவரைப் பெறும் ஆக்ஸிலுக்குப் பெயர் க்ராங்க்ஷாஃப்ட்) இருந்து டிரைவ்ஷாஃப்ட் எனும் மெஷினுக்கு அனுப்பி, வீல்களைச் சுழல வைப்பதற்குத் தேவை கியர்பாக்ஸ். கிராங்க்ஷாஃப்ட்டுக்கும் டிரைவ் ஷாஃப்ட்டுக்கும் இடையில் அமைந்து பவரை அனுப்பும் வேலை கியர்பாக்ஸினுடையது.

இப்போதுள்ள விலை உயர்ந்த கார்களில் அதிகபட்சம் 9 கியர்கள் வரை உண்டு. ‘ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’ என்பதுபோல், ஒவ்வொரு கியருக்கும் ஒவ்வொரு உருவமும் வேலையும் உண்டு. சைக்கிளில் உள்ள இரண்டு கியர் வீல்களைக் கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. பெரிய வீல் ஒருமுறை சுழல்வதற்குள், சின்ன வீல் இரண்டு முறை சுழல்வதால் ஏற்படும் ஆற்றல்தான் வீல்களை இயக்கக் காரணம். மாடர்ன் சைக்கிள்களில், அதிக கியர்வீல்கள் கொண்ட சைக்கிள்தான் இப்போதைய ஃபேவரைட். நெடுஞ்சாலைகளுக்கு, ஏற்றங்களுக்கு, ஆஃப்ரோடுக்கு என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டி காட்டும்.

காரின் இன்ஜின் நன்றாக வேலை செய்வதற்கு கியர்பாக்ஸின் பார்ட்னர்ஷிப் ரொம்ப அவசியம். கார் ஐடிலிங்கில் நிற்கும்போது, பிஸ்டன்கள் ஒரு நிமிடத்துக்கு, கிட்டத்தட்ட 1,000 தடவை மேலும் கீழுமாக இயங்கும். டேக்கோமீட்டரில் நீங்கள் பார்க்கும் 1,000 rpm இதைத்தான் குறிக்கிறது. இதற்குக் குறைவாக இருக்கும் சில வாகனங்களில் இன்ஜின் ஆஃப் ஆகிவிடும்.

ஐடிலிங்கில் இருந்து ஒரு கார் கிளம்பும்போது, காரை நகர்த்தவும் டாப் ஸ்பீடில் விரட்டவும் எக்கச்சக்க ஆற்றல் அல்லது பவர் தேவை. அந்த ஆற்றலைத் தருவதற்குத்தான் கியர்பாக்ஸ். அதாவது, வெறும் இன்ஜினை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கார் நகர்வது என்பது சாத்தியமே இல்லாத விஷயம் என்பதுதான் இதன் அர்த்தம்.

எந்த கியருக்கு எவ்வளவு வேகம்?

கார்களில் எக்கச்சக்க கியர்கள் இருப்பதால், ஒவ்வொரு கியரையும் சரியாக இயக்க வேண்டியது நம்முடைய வேலை. கியர்களைச் சரியாக ஷிஃப்ட் செய்யும் பட்சத்தில்தான் வாகனங்கள் முக்காமல் முனகாமல் இயங்குகின்றன. ஒவ்வொரு கியருக்கும் ஒவ்வொரு சுழலும் வேகம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். வாகனத்துக்குத் தரப்படும் ஆக்ஸிலரேஷனைப் பொறுத்தே உங்கள் காருக்கு பவர் கிடைத்து வாகனம் நகரும். உதாரணத்துக்கு, 5 ஃபார்வேர்டு கியர்பாக்ஸ் சிஸ்டம் கொண்ட சில கார்களில், முதல் கியரில் ஐடிலிங்கில் இருந்து 10 கி.மீ; இரண்டாவது கியரில் 10-25 கி.மீ; மூன்றாவதில் 25-40; நான்காவதில் 40-60 கி.மீ; அதற்கு மேற்பட்ட வேகம் டாப் கியருக்கானது. இது இன்ஜினுக்கு ஏற்றாற்போல் மாறுபடும்.

பவர், டார்க் மாயாஜாலம்!

ஒரே இன்ஜின்தான்; ஆனால், இதிலிருந்துதான் பவரும் டார்க்கும் மாறி மாறிக் கிடைக்கிறதே? இதை எப்போதாவது யோசித்ததுண்டா? இதில்தான் மெக்கானிசத்தின் சூட்சுமமே இருக்கிறது.

நாம் ஏற்கெனவே சொன்னபடி இரண்டு கியர்வீல்கள் இருக்கிறது. குறைவான பற்கள் கொண்ட வீல், இதை நாம் கியர் A என்று வைத்துக்கொள்வோம். அதிகமான பற்கள் கொண்ட பெரிய வீல் - கியர் B. இன்ஜினிடம் இருந்து பெறப்படும் ஆற்றல் இன்புட் ஷாஃப்ட் மூலம் கியர் A-வுக்குச் செல்கிறது. இந்த கியர் வீலிடமிருந்து பவரை வாங்கி டிரைவ் ஷாஃப்ட்டுக்குத் (வீல்களுக்கு) தருவது கியர் B. இப்போது கியர்-A, பெரிய கியரான கியர்-B-க்கு பவரை அளிக்கும்போது, பெரிய கியரால் வேகமாகச் சுழல முடியாது, இந்த நிலையில்தான் பவர், டார்க்காக மாறுகிறது.

இதுவே எதிர்ப்பதமாக மாறும்போது, டார்க்குக்குப் பதில் பவர் கிடைக்கிறது. அதாவது பெரிய கியர், சின்ன கியருக்குப் பவரைத் தரும்போது, சின்ன கியரால் வேகமாகவும் சுலபமாகவும் சுழல முடியும். இந்த ஆற்றல்தான் பவர்.

2 கிலோ எடை உள்ள மூட்டையைச் சுலபமாகவும் வேகமாகவும் நம்மால் தூக்க முடியும். அதுவே 20 கிலோ உள்ள மூட்டையை அதிக ஆற்றலைச் செலவு செய்து பொறுமையாகத் தூக்குவோம் இது டார்க். எடை அதிகரிக்க அதிகரிக்க, கொஞ்சம் பொறுமையாகத்தான் வேலை செய்ய வேண்டும். எடை அதிகமாக உள்ளதால், லோ கியருக்கு டார்க் தேவைப்படுகிறது. வேகம் அதிகரிப்பதால், வாகனத்தின் எடை குறைகிறது. அதனால், டாப் கியருக்கு பவர் தேவைப்படுகிறது.

கியர் பாக்ஸின் கூட்டாளி.. கிளட்ச்!

வெறும் கியரை மட்டும் ‘சட் சட்’ என மாற்றுவதில் பெரிய சிக்கல் இருக்கிறது. இன்ஜின் ரன்னிங்கில் இருக்கும்போது வெறுமனே கியர் மாற்றினால் இன்ஜினுக்குப் பேராபத்து நிகழ வாய்ப்புண்டு. அதற்காகத்தான் கிளட்ச் இருக்கிறது. இன்ஜினுக்குக் கிடைக்கும் இன்புட் பவர், கிளட்ச் மூலம்தான் விடுவிக்கப்படுகிறது. எனவேதான், கியர் மாற்றும்போது கிளட்ச் மிதிப்பது அவசியமாகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வாகனம் ஓடிக் கொண்டிருக்கும்போது வெறுமனே கிளட்ச்சை மிதித்து டெஸ்ட் செய்து பாருங்கள். இன்ஜினுக்கும் வாகனத்துக்கும் உண்டான தொடர்பே அற்றுப்போயிருப்பதை உணர்வீர்கள். இறக்கங்களில் இறங்கும்போது சிலர் கிளட்ச்சை மிதித்தபடி, ‘ஈஸியா இறங்குதே’ என்று ரோலர் கோஸ்டரில் இறங்குவதுபோல் ‘ஜிவ்’வென இறங்குவார்கள். இது முழுக்க புவியீர்ப்பு விசையில் மட்டும்தான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இம்மாதிரி நேரங்களில் கன்ட்ரோல் கிடைக்காது என்பதைத் தாண்டி, பல சிக்கல்கள் உண்டு. எனவே, கிளட்ச்சை மிதித்துக்கொண்டே இறங்குவது பேராபத்து.

இந்த கிளட்ச்சுக்கும் ஒரு கூட்டாளி உண்டு. அது ஃப்ளைவீல். மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இந்த ஃப்ளைவீலின் வேலை என்னவென்றால், இன்ஜினில் இருந்து கிடைக்கும் டார்க்கை கிளட்ச் டிஸ்க்குக்கு அனுப்புவது. இதுதவிர செலெக்டர் ஃபோர்க், காலர், சிங்கரனைஸர்ஸ், லே ஷாஃப்ட், அவுட்புட் ஷாஃப்ட் என்று எக்கச்சக்க கூட்டாளிகள் கியர்பாக்ஸுக்கு உண்டு.

சரியான கியர்; முறையான டிரைவிங்!

டிரைவிங் கண்டிஷனுக்குத் தகுந்தவாறு இன்ஜின் பவரை பல வழிகளில்... அதே நேரத்தில் சீராகக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கியர் மாற்றம். ஒரு கார் வேகமாகவோ - மெதுவாகவோ போகும்போது, சரியான கியரில் சென்றால் மட்டுமே எந்தத் திக்கலும் இல்லாமல் இன்ஜினில் உள்ள பிஸ்டன்கள் மேலும் கீழுமாக வேகமாக இயங்கி, ஓட்டுதலில் ஸ்மூத்னெஸ் கிடைக்கும். டாப் கியரில் போக வேண்டிய ஒரு கார், நான்காவது கியரில் செல்லும்போது கியர்வீல்களுக்கான சுழலும் தன்மையின் அளவு பாதிக்கப்படும். இன்ஜின் ‘வ்வ்ர்ர்ரூம்’ என கதறும்; ஆனால், வேகம் இருக்காது. இது கியர்பாக்ஸுக்குப் பேராபத்து. மைலேஜுக்கும் இது பெரிய எதிரி. அதேபோல், குறைந்த வேகங்களில் அதிகமான கியரில் செல்லும்போதும் இந்த ஆபத்து பொருந்தும். 30 கி.மீ வேகத்துக்கு டாப் கியரை செலெக்ட் செய்தால், இழுவைத் திறன் ‘டபடபடப’வென பம்மும். வேண்டாமே இந்த டிரைவிங் ஸ்டைல்!