காரில் பயணிக்கும்போது பெரிய சிக்கலே, பொருள்கள் வைக்க இடமில்லாமல் தவிப்பதுதான். நான்கு மீட்டருக்கு மேற்பட்ட பெரிய எஸ்யூவியாக இருக்கும்; ஆனால், காருக்குள்ளே தண்ணீர் பாட்டில் வைக்கக்கூட இட நெருக்கடியாக இருக்கும். அதிலும் பின் பக்கப் பயணிகளுக்கு ஸ்டோரேஜ் இடவசதிதான் சிம்ம சொப்பனம். ஹாயாக உட்கார்ந்து பேப்பர் படித்தபடியோ, ஃபைல்கள் பார்த்தபடியோ, லேப்டாப் ஆபரேட் செய்தபடியோ வருவது, பெரிய லக்ஸூரி கார்களுக்கு மட்டும்தான் பொருந்தும். சாதாரண மிட் சைஸ் கார்களில் பேப்பர், லேப்டாப், பாட்டில் வைக்கப் பெரிதாக இடம் இருக்காது. அதனால், சாதாரண கார்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது இந்த ஆக்சஸரீ.

விலை: ரூ.800 - ரூ.1,600 வரை

‘மல்ட்டி பாக்கெட் ஸ்டோரேஜ்’ என்ற பெயர் கொண்ட இது, ஆஃப்டர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இதை எந்த சைஸ் சீட்களில் வேண்டுமானாலும் ஃபிட் செய்துகொள்ளலாம். இதில் இரண்டு போன்கள் முதல் லேப்டாப், வாட்டர் பாட்டில்கள், பேனாக்கள், பர்ஸ், டிஷ்யூக்கள், ஐ-பேட், ஃபைல்கள் வரை பல விஷயங்களுக்கான பவுச், ஹோல்டர்கள் இருக்கின்றன. அதிக எடையைத் தாங்க வேண்டும் என்பதற்காக நல்ல தையல் வேலைப்பாடுகளுடன் லெதர் ஃபினிஷிங்கில் கிடைக்கிறது. இதில் குடை வைக்கக்கூட பவுச் உண்டு. சீட்டிலிருந்து எளிதாகக் அகற்றிக்கொள்ளும் வகையில் ஸ்ட்ராப் வசதியோடு இருக்கிறது. சாதாரண கைப்பை போல, இதை ஈஸியாக கையோடு எடுத்துச் செல்லலாம். அமேஸான் போன்ற வலைதளங்களில் இதை ஆர்டர் செய்யலாம். 800 ரூபாயில் ஆரம்பித்து, இடவசதிக்கும் தரத்துக்கும் ஏற்ப 1,600 ரூபாய் வரை இந்த மல்ட்டி பாக்கெட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.