2 வீல் டிரைவ் என்பது சாஃப்ட்டான பயணங்களுக்கு ஓகேதான். ஆனால், க்ராஸ்ஓவர் அல்லது எஸ்யூவி என்று வரும்போது, அதுவும் மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற காஸ்ட்லி கார்களுக்கு 2 வீல் டிரைவ் அழகில்லை. அதனால்தான் GLA 220D காரில், 4 வீல் டிரைவ் ஆப்ஷனை ‘ஆஃப் ரோடு மோடு’ உடன் சேர்த்துவிட்டது பென்ஸ். ஒரு நண்பகலில் GLA 220D 4Matic கார், புனேவின் சக்கான் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக மோ.வி அலுவலகத்துக்கு வந்தது. அதில் சென்னை நகரத்துக்குள் ஒரு குட்டி ஆஃப்ரோடு மற்றும் சாஃப்ட் ரோடு பயணம் கிளம்பினேன்.

விலை: ரூ.46.84 லட்சம்

புனேவில் இருந்து கிட்டத்தட்ட 1,200 கி.மீ இதை ஓட்டி வந்த பென்ஸ் டிரைவர், எந்த அலுப்புமே இல்லாமல் அடுத்த பயணத்துக்குத் தயாராவதுதான் இதுபோன்ற கார்களின் ஃபன் டு டிரைவின் மகத்துவம். கெத்தாக உறுமியது 2.1 லிட்டர் டீசல் இன்ஜின். இதில் கியர்பாக்ஸைத் தேட வேண்டாம். பேடில் ஷிஃப்டர்கள்போல், ஸ்டீயரிங்குக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது கியர் லீவர். புதிதாக ஓட்டுபவர்கள் இண்டிகேட்டர் ஸ்டாக் என்று நினைத்துவிட வாய்ப்புண்டு. அதை கீழே தள்ளினால் டிரைவ் மோடு. மேலே ரிவர்ஸ். புஷ் செய்தால் பார்க்கிங். ரொம்ப சிம்பிளாக இருந்தது.

ஆரம்பத்திலேயே பறக்கிறது. ஆனால், கியர் மாறுவது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆளில்லாத சாலையில் செக் செய்தேன். 0-100 கி.மீ-யை 8.64 விநாடிகளில் கடந்தது GLA. 7 ஸ்பீடு ஆட்டோ கியர், சில நேரங்களில் டவுன் ஷிஃப்ட் ஆகத் தவறியதைக் கவனித்தேன். சிட்டிக்குள் வைத்து கம்ஃபர்ட் மோடை செலெக்ட் செய்தேன். டிராஃபிக்குக்கு இதுதான் சரியாக இருந்தது. ஜாலியாகவும் இருந்தது. சிட்டிக்குள் இது கிட்டத்தட்ட 13-14 கி.மீ மைலேஜ் தரலாம்.

அடுத்து ஆஃப் ரோடு. பின்னால் ‘4Matic’ என்கிற லோகோ இருந்தால்... 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் என்று அர்த்தம். கொஞ்சம் கரடுமுரடான சாலைகளில் ஓட்டிப் பார்த்தேன். ஓகே என்றுதான் தோன்றியது. ஆனால், Q3-யை ஒப்பிடும்போது, இன்னும் கொஞ்சம் கி.கிளியரன்ஸ் வேண்டும். லைட் ஆஃப் ரோடிங்குக்கு வேண்டுமானால் ஓகே! அதேநேரத்தில், மேடு பள்ளங்களை நன்றாக உள்வாங்குவது தெரிந்தது. வேகமாக வந்து கார்னரிங்கில் ‘சடேரென’ வளைத்துப் பார்த்தபோது, அவ்வளவாக பாடி ரோல் தெரியவில்லை. ஆடி Q3-ஐவிட பரவாயில்லாததுபோல் தெரிந்தது. அகலமான டயர்களும் இதற்குக் காரணம். சூப்பர்!

மற்றபடி, பில்டு குவாலிட்டியைச் சந்தேகப்பட வேண்டியதில்லை. சன் ரூஃப் இருக்கிறது. குறைந்த வெயில் நேரங்களில், ரூஃபைத் திறந்துவிட்டு, மலைப் பாதைகளில் பயணித்தால் அம்சமாக இருக்கும். இன்டீரியர் அருமை. டேஷ்போர்டு நசநசவென இல்லை. நீட் அண்டு க்ளீன்! கியர்பாக்ஸ், ஸ்டீயரிங்குக்குப் பின்னால் இருக்கிறது. பவர் விண்டோவில் இருந்து சீட் அட்ஜஸ்ட் வரை எல்லா கன்ட்ரோல்களுமே கதவில் இருக்கின்றன.

இதே GLA-வில் 200D மாடல் 2 வீல் டிரைவ் இருக்கிறது. இதன் விலை 43 லட்சம். சிட்டிக்குள் ஓட்ட, நெடுஞ்சாலையில் பறக்க இதுவே போதும். லேசாக ஆஃப் ரோடும் பண்ண வேண்டியிருக்கும் என்றால், GLA 220D 4மேட்டிக் நல்ல ஆப்ஷன்தான். இதற்கு அதைவிட 3.84 லட்சம் எக்ஸ்ட்ராவாக எடுத்து வைக்க வேண்டும்.