Published:Updated:

நிறங்களில் உலகம்!

நிறங்களில் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
நிறங்களில் உலகம்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 7க.சத்தியசீலன்

நிறங்களில் உலகம்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 7க.சத்தியசீலன்

Published:Updated:
நிறங்களில் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
நிறங்களில் உலகம்!

நிறங்கள், தவிர்க்க முடியாத நிஜம். நம்மால் வண்ணங்களற்ற வாழ்க்கையை எண்ணிப் பார்க்க முடியாது. வண்ணங்கள், அறிவியலின் ஒரு நுண்ணியல் புலம். நாம் நிறங்களைப் புரிந்துகொள்ள விழைந்ததைவிட புறந்தள்ளியே வந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

பிறந்து கண் திறந்த நொடி முதல், வாழ்க்கையின் கடைசி நொடி வரை வண்ணங்களோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். உண்மையில் வண்ணங்கள் என்பவை பிரபஞ்சப் பொதுமொழி என்றுதான் சொல்ல வேண்டும். புவியையும் தாண்டி அண்டவெளிக் கிரகங்களைக்கூட சில சமயங்களில் அவற்றின் நிறங்களால்தான் வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொள்கிறோம்.

செவ்வாய் என்ற சிவந்த கிரகம் ஒரு நல்ல உதாரணம். அதேபோலத்தான் கடல்! அது தன்னுள் பல்வேறு நிறங்களாகக் காட்டுவது என்ன? வெவ்வேறு அளவுள்ள ஒளியின் துணுக்குகள்தான்! ஒளியில்லை என்றால், நிறமும் இல்லை. சூரிய ஒளிக்கற்றை, பல்வேறு தன்மையுள்ள பொருள்களில் பட்டுத் தெறிக்கும். தெறிக்கும் கீற்றுக்குக் குறிப்பிட்ட ஓர் அலைநீளம் இருக்கும். அதை நம் கண்கள் விதவிதமான நிறங்களாகப் பார்க்கும். நிறத்தைப் புரிந்துகொள்ளுவதென்பது ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதைப் போன்றது. அதாவது ‘பெர்செப்ஷன்’. ஆனால், நிறங்கள் வழியாகவே இயற்கை அன்னை நம்மோடு பேசுகிறாள்.

நிறங்களில் உலகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழம் பழுத்திருப்பதையும், நிலம் செழித்திருப்பதையும், கரம் உழைத்திருப்பதையும் நாம் நிறம்கொண்டே புரிந்துகொள்கிறோம். நம் அனுதின வாழ்வில் புதுப்புது நிறங்களும் அவற்றுக்கான தேவைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் சூழலில், அவற்றை சற்றே விசாலமாகப் பார்க்க முயல்வது உளவியல் பொருத்தந்தான். ‘நீல நிறம்... வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்.காரணம் ஏன் கண்ணே?’  என தன் கண்ணையே கேட்டு அதற்கு விடையையும் அறிவியல் பூர்வமாக நிறுவிய சர் சி.வி.ராமனிடமிருந்தே துவங்குவோம்.

1921-ல் சர்.சி.வி.ராமன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் செல்ல இங்கிலாந்துக்கு கப்பலில் பயணம்

நிறங்களில் உலகம்!

போனார். அந்த நேரத்தில் மத்திய தரைக்கடலின் அடர்ந்த நீலம் அவரைச் சிந்திக்கத் தூண்டியது. அங்கேயே, அப்போதே கையிலிருந்த உபகரணங்களைக் கொண்டு ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதன் விளைவுதான், ‘ராமன் விளைவு’. 1928 பிப்ரவரி 28-ல் ‘ராமன் விளைவைக்’ கண்டடைந்தார் சி.வி.ராமன். 1930-ல் அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் நாம் பெருமைப்பட வேண்டியது, அறிவியலில் நோபல் வென்ற முதல் இந்தியர் என்பதற்காக மட்டுமல்ல, அவர்தான் இயற்பியலுக்காக நோபல் விருது பெற்ற முதல் ஆசியர்.

ஜப்பான், கொரியா, சைனா ஆகிய நாடுகள் அறிவியலின் அரிச்சுவடியைப் புரட்டிக்கொண்டிருந்த காலத்தில், நாம் உலகின் உச்சக்கட்ட விருதைப் பெற்றிருப்பதற்காகப் பெருமைப்பட வேண்டும். அதேநேரம், அன்று கிளர்ந்தெழுந்த அறிவியல் புரட்சி மென்மேலும் பல்கிப் பெருகாமல் போனது ஏன் என்றும் கேள்வியெழுகிறது.

பொதுவாக, காற்று - திரவ, திடப் பொருட்கள் மிக நுண்ணிய துகள்களால் ஆனவை. சூரிய ஒளிக்கற்றை - வெள்ளொளி, ஏழு நிறங்களையும் உள்ளடக்கியது. ஒரு முக்கோணப் பெட்டகம் (PRISM) சரியான கோணத்தில் ஏழு நிறங்களையும் பிரிந்துவிடும். வானவில் என்பது மேகங்களெனும் முக்கொம்பு பெட்டகம் தரும் வர்ணவில்தானே? vibgyor என்கிற வைலெட், இண்டிகோ, ப்ளூ, க்ரீன், யெல்லோ, ஆரஞ்சு மற்றும் ரெட் ஆகிய ஏழு நிறங்கள் நம் கண்களால் காண முடிந்தவை. இவை ஒவ்வொன்றும்  வெவ்வேறு அலை நீளத்துடன் காற்றிலும் கடலிலும் நம் உடலிலும் என எல்லா வகை துகள்கள் இடையே ஊடுறுவிப் படர்கின்றன.

அலைநீளத்தைப் பொறுத்தவரை, சிகப்பு ஆகப்பெரிய அலைநீளம். நீலமோ, ஆகச்சிறிய அலைநீளத்தைக் கொண்டது. சூரிய ஒளிக்கதிர் துகள்களில் படர்ந்ததும் அவை நிறங்களை உறிஞ்சிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிறத்தை மட்டும் உமிழ்கின்றன. கடல், கலர்களைக் குடித்துவிட்டு அலைநீளம் குறைந்த நீல நிறத்தைத் துப்பிவிடுகிறது. அதை நாம் நீலக்கடலாகப் பார்க்கிறோம்.

நிறங்களில் உலகம்!

அதிகாலை நேரத்தின் செக்கர்வானம் நீண்ட அலைநீளமுள்ள சிவப்பை உமிழ்கிறது. இப்படியாக இலைகளின் பச்சை, பழங்களின், பருப்புகளின், கிழங்குகளின் மஞ்சள், ரத்தத்தின் சிகப்பு என நிறங்கள் உயிர்களின் வாழ்வாதார உணவியல், உளவியல் குறியீடுகளாக உணரப்பட்டன. மனிதன் ஒருபடி மேலே சென்று, நிறங்களை செயற்கையாக உருவாக்க முயன்றான். இந்த இயற்கையை நகலெடுக்கும் மனித முயற்சியே வடிவமைப்பின் முதல் படி (Mimicking nature). சக மனிதனை, அவன் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவன் பயன்படுத்தும் வடிவ, உருவ திறன்மைகளை மேம்படுத்த உதவும் முதன்மைக் காரணிகளில் நிறங்களும் ஒன்று.

வண்ணச் சக்கரத்தைக்கொண்டு, வண்ணங்களை மிகத் துல்லியமாகப் பகுத்து அறியலாம். இந்த ‘கலர் வீல்’, எனும் வண்ணச் சக்கரத்தின் மூலம் நிறங்களை நிறுவியவர், நியூட்டன்தான். ஆம், அதே ஆப்பிள் நியூட்டன்தான் 1666-ல் ஆரம்பித்துவைத்தார்.அன்று தொடங்கி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சக்கரத்தின்படி வண்ணங்களை மூன்று வகைப்படுத்தலாம்.

பிரைமரி கலர்ஸ் (Primary colors) என்பது சிகப்பு, மஞ்சள் மற்றும் நீலம். இந்த மூன்றிலிருந்தே மற்றவை அனைத்து வண்ணங்களும் குழைத்து எடுக்கப்படுகின்றன. ஆரஞ்சு என்கிற இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் ஊதா ஆகியவை இரண்டாம் நிலைத் திரிபு வண்ணங்கள் (secondary colors).

இப்போது மூன்றாவதாக, மூன்றாம் திரிபு நிறங்கள் (Tertiary colors) ஆறு இருக்கின்றன. இதில் ஆறு கலப்பு வண்ணங்களைக் காணலாம். அவை அடுத்தடுத்த நிறங்களை ஒன்றாகக் குழைத்து வருபவை.

மேலும், இவற்றிலிருந்து கோடிக்கணக்கான வண்ணங்களை உருவாக்க, வண்ணங்களற்ற வண்ணங்களை அறிந்துகொள்வது அவசியம். கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டும்   வண்ணங்களின் பட்டியலில் இல்லை. வெண்மையை ‘டின்ட்’ (Tint) என்பர். கறுமையை ‘ஷேட்’ (Shade) என்பர். இவ்விரண்டும் எல்லா வண்ணங்களுக்கும் பொதுவானவை. எல்லா வண்ணங்களோடும் கூடி வலுப்படுத்தும், மிருதுவாக்கும்.

கலைஞர்கள், ஓவியர்கள் கறுப்பில் உடை அணிவது வண்ணம் சாராத தன்மையை வெளிப்படுத்தத்தான். வடிவமைப்பாளர் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் அணிந்தால், மற்ற நிறங்கள் கோபிக்கும் அல்லவா?!

அதுவும் புதுப்புது நிறங்களை உருவாக்கும் கலர் டிசைனர் என்றால், அவர் பாடு திண்டாட்டம்தான்!

- வடிவமைப்போம்