Published:Updated:

குறைந்த விலை, பெரிய இன்ஜின், 10,000 கி.மீ சர்வீஸ்... அசத்தும் ராயல் என்ஃபீல்டு!

குறைந்த விலை, பெரிய இன்ஜின், 10,000 கி.மீ சர்வீஸ்... அசத்தும் ராயல் என்ஃபீல்டு!

நம்ப முடியாத விலையில் வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள்தான் உலகின் விலை மலிவான பேரலல் ட்வின் பைக்குகள்...

குறைந்த விலை, பெரிய இன்ஜின், 10,000 கி.மீ சர்வீஸ்... அசத்தும் ராயல் என்ஃபீல்டு!

நம்ப முடியாத விலையில் வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள்தான் உலகின் விலை மலிவான பேரலல் ட்வின் பைக்குகள்...

Published:Updated:
குறைந்த விலை, பெரிய இன்ஜின், 10,000 கி.மீ சர்வீஸ்... அசத்தும் ராயல் என்ஃபீல்டு!

ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த RE இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் GT பைக்குகளின் விற்பனை தொடங்கிவிட்டது. விலையைப் பொறுத்தவரை பெரிய இன்ஜின் கொண்ட பைக்காக இருந்தாலும் எங்களைவிட யாரும் குறைவாக விலை வைக்கமுடியாது என்று சொல்லியடிக்கிறது ராயல் என்ஃபீல்டு. இன்டர்செப்டாருக்கு 2.89 லட்சம் ரூபாய் என்றும் கான்டினென்டல் ஜிடி-க்கு 3.05 லட்சம் எனும் சென்னை ஆன்ரோடு விலையை வைத்து அசத்தியுள்ளது. இன்டர்செப்டார் சிம்பிளான ரெட்ரோ டிசைனில் அசத்துகிறது. அதைவிட 15,000 ரூபாய் கூடுதல் விலையில் வந்திருக்கும் கான்டினென்டல் GT இந்தியாவில் மறைந்து வாழும் கஃபே ரேஸர் ஸ்டைலை சாலையில் சுலபமாக பார்க்கும்படி செய்யப்போகிறது. இரண்டு பைக்குகளிலும் புதிய, விலையுயர்ந்த தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லையென்றாலும் தற்போது உலகிலேயே விலை குறைவான 650சிசி பைக்கும், பேரலல் ட்வின் பைக்கும் இவைதான்.

ஸ்டைல்

இன்டர்செப்டார் ரெட்ரோ ஸ்டைல் பைக் என்பதால் அதற்கு ஏற்ப சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார்தான். கிளாசிக் போல தட்டையாகவும் இல்லாமல், தண்டர்பேர்டு போல க்ரூஸர் டைப்பிலும் இல்லாமல் அகலம் குறைந்த flat track ஹோண்டல்பார் போல உள்ளது. பைக்கின் ரெட்ரோ ஸ்டைலுக்கு தட்டையான மெல்லிய Quilted சீட் நச்சென்ற பொருத்தம். சீட்டில் 2 பேர் வசதியாக உட்காரலாம். சொகுசான லாங் ரைடுகளுக்கு உருவாக்கப்பட்ட பைக் என்றாலும் பெரிய Heel Plate உடனான ஃபுட் பெக்ஸ் கொஞ்சம் பின்னோக்கி ஸ்போர்ட்டியாக வைக்கப்பட்டுள்ளது. World Motorcycle Test Cycle(WMTC)-படி 25.5 லிட்டர் மைலேஜ் கிடைப்பதால் 13.7 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஓகேதான். பெரிய குறை இல்லை. சஸ்பென்ஷல்களை கேப்ரியல் நிறுவனம் தயாரித்துள்ளது. 41 மி.மீ டெலஸ்கோப்பின் ஃபோர்க் முன்பக்கமும், ட்வின் கேஸ் சார்ஜிடு ஷாக் அப்சார்பர்கள் பின்பக்கமும் உள்ளன. 320 மிமீ முன் மற்றும் 240 மிமீ பின்பக்க bybre டிஸ்க் பிரேக்குகள் உண்டு. Bosch நிறுவனத்தின் ஏ.பி.எஸ் மற்றும் 18 இன்ச் Pirelli டயர்கள் இருப்பது பைக்கை கூடுதல் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

மெக்கானிக்கலாக கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 பைக்குகள் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. 2 பீஸ் ஹேண்டில்பார்; 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்; கவுல் உடனான பின்பக்க சீட்; பின்னோக்கி வைக்கப்பட்டுள்ள ஃபுட் பெக்ஸ் என சில மாற்றங்கள் உள்ளன. இரண்டு பைக்குகளின் அகலம் - உயரம் - எடையில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் உண்டு. எடையைப் பொறுத்தவரை GT 650, இன்டர்செப்டாரை (இன்டர்செப்டார் - 202 கிலோ, ஜிடி 650 - 198 கிலோ) விட 4 கிலோ குறைவு. இரண்டு பைக்குகளுமே 1,400 மிமீ வீல்பேஸ், 174 மிமீ கி.கிளியரன்ஸ் மற்றும் 804 மிமீ சீட் உயரம் கொண்டுள்ளன. 5.5 அடி உயரம் கொண்ட ரைடர்களுக்கும் பைக் செட்டாகும். ஃபிட் & ஃபினிஷ் பிரச்னையே இல்லை. கட்டுமானத் தரத்தில் இதுவரை வந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட தனித்து தெரிகிறது.

இன்ஜின்

ராயல் என்ஃபீல்டின் புதிய 648cc, பேரலல் ட்வின் இன்ஜின் வைத்து வெளிவரும் முதல் பைக் இதுதான். 47bhp பவர் மற்றும் 52Nm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 8 வால்வ், ஆயில் கூல், FI செட்டப் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் க்ளட்சும் வருகிறது. இதன் பெர்ஃபாமன்ஸ் ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கே ஷாக் கொடுக்கும் விதமாக உள்ளது. 160 கிலோ மீட்டருக்கு அதிகமான உச்சபட்ட வேகம் இருப்பதால் செம த்ரில் ரைடுக்கு உத்தரவாதம் உண்டு. 80% டார்க்கை 2,500rpm-ல் கொடுத்துவிடுவதால் 100-120 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்வதற்கு இன்ஜின் சிரமப்படவே தேவையில்லை. எக்ஸாஸ்ட் சத்தம் மட்டும் தற்போதைய ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தரலாம். ராயல் என்ஃபீல்டின் பழைய புடுபுடு சத்தம் போச்சு. அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் Counter Balancer ஷாஃப்ட் உள்ளது பைக்குக்கு பெரிய ப்ளஸ். இந்த ராயல் என்ஃபீல்டில் அதிர்வுகளை எதிர்பார்க்கமுடியாது.

ஆக்ஸசரிஸ்

இருப்பதை இருப்பது போன்ற எல்லா நாடுகளிலும் விற்பனை செய்தாலும் இந்தியாவில் மட்டும் கூடுதலாக சாரி கார்டு பொருத்தித் தருகிறார்கள். சைடு மிரர்கள் பைக்குடனே வருகிறது. இன்ஜின் கார்டு, வின்டுஷீல்டு போன்றவை ஆக்ஸசரியாக வருகின்றன. எக்ஸாஸ்ட்டை பொறுத்தவரை வெளிநாடுகளில் S&S ரெட்ரோ ஃபிட் எக்ஸாஸ்ட் வருகிறது. இந்தியாவில் அந்த எக்ஸாஸ்டுக்கு இன்னும் பர்மிட் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைக்கு ராயல் என்ஃபீல்டின் ட்வின் ஸ்டாக் எக்ஸாஸ்ட் மட்டும்தான். எதிர்காலத்தில் புது எக்ஸாஸ்ட் ஆப்ஷன்கள் வரலாம். 

சர்வீஸ்

பைக்கின் வாரன்ட்டியைப் பொறுத்தவரை 3 ஆண்டுகள், 40,000 கிலோ மீட்டர் வாரன்ட்டி தருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் 3 ஆண்டுகளுக்கு ரோடு சைடு அசிஸ்ட் தருகிறார்கள். சர்வீஸைப் பொறுத்தவரை முதல் 500 கி.மீ-யில் முதல் சர்வீஸ் முடித்தாக வேண்டும். பிறகு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு சர்வீஸ் செய்தால் போதுமானது. 1000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை இன்ஜின் ஆயில் லெவலை மட்டும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பைக்குகளை 5000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள். 

எக்ஸாஸ்ட் சத்தம் மட்டும் தற்போதைய ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்" 

விலை

கான்டினென்டல் ஜிடி 650

Standard : Black Magic/Ventura Blue - Rs. 3,05,627

Custom : DR Mayhem Grey & Black/Ice queen white - Rs.3,13,798

Special : Mister clean chrome - Rs. 3,27,416

இன்டர்செப்டார் 650

Standard : Orange crush/Mark three black/Silver spectre - Rs. 2,89,285

Custom : Ravishing Red/India baker express white & red - Rs.2,97,456

Special : Glitter and Dust chrome - Rs.3,11,075