Published:Updated:

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

>> சார்லஸ்

ரு லட்சம் பார்வையாளர்கள், மொத்தம் 1500 ஆட்டோமொபைல் ஸ்டால்கள், 50 புதிய கார் அறிமுகங்கள் என ஜனவரி 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை உலகின் உச்சபட்ச ஆட்டோமொபைல் திருவிழாவுக்குத் தயாராகிறது டெல்லி பிரகதி மைதானம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மிஸ் செய்யக் கூடாதவை... ஒரு முன்னோட்டம்!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபோர்டு

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

எஸ்யூவி காரான 'ஈக்கோ ஸ்போர்ட்’ காரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது ஃபோர்டு. ஈக்கோ ஸ்போர்ட், எண்டேவர் கார் போல மெகா சைஸ் எஸ்யூவி கிடையாது. ஃபியஸ்டா பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் சின்ன சைஸ் எஸ்யூவி ஈக்கோ ஸ்போர்ட்!  

மாருதி

'எர்டிகா’ எனும் பெயரில் சின்ன சைஸ் மல்ட்டி யுட்டிலிட்டி வாகனத்தை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி. இந்தியாவின் முதல் 'காம்பேக்ட் எம்பிவி’ என்று இதை அழைக்கிறது மாருதி. கார் மட்டும் புதுசு அல்ல. இதில் இடம் பிடிக்கப் போகும் K14 VVT இன்ஜினும் புதுசுதான். எர்டிகாவைத் தவிர, ஜப்பானில் விற்பனையாகும் சுஸ¨கியின் சோலியோ, எம்ஆர் வேகன், பேலட்டி ஆகிய சின்ன வகை கார்களையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்து 'பல்ஸ்’ பார்க்க இருக்கிறது மாருதி! 

ஹூண்டாய்

புதிய எலான்ட்ரா காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஹூண்டாய். புதிய எலான்ட்ரா, ஃப்ளூயிடிக் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களையுமே பொருத்தியிருக்கிறது ஹூண்டாய். அதேபோல், புதிய சொனாட்டா காரையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. புதிய சொனாட்டா, ஹூண்டாயின் புதிய டிசைன் தீமின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய சொனாட்டா - டொயோட்டா கேம்ரி, ஹோண்டா அகார்டு ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது! இது தவிர, 2012-ம் ஆண்டுக்கான புதிய ஐ-20 காரையும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஹூண்டாய். 

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

டாடா

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் புதிய சஃபாரியை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்துகிறது டாடா. 'சஃபாரி மெர்லின்’ எனப் பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த காருக்கு, டாடா அநேகமாக 'சஃபாரி மெரிடா’ என பெயரிடலாம். இந்த காரை மஹிந்திரா XUV காரைவிட விலை குறைந்ததாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டாடா. 

மஹிந்திரா

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியிருக்கும் மஹிந்திரா நிறுவனம், சாங்யாங் கார்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க இருக்கிறது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் சாங்யாங் கொராண்டோ, சாங்யாங் ரெக்ஸ்டன் என இரண்டு எஸ்யூவி கார்களும்தான் முக்கியமாக இடம் பிடிக்கும். அதேபோல், எலெக்ட்ரிக் கார் நிறுவனமான ரேவா நிறுவனத்தையும் வாங்கியிருக்கும் மஹிந்திரா, தனது முதல் எலெக்ட்ரிக் காரான மஹிந்திரா ரேவா NXR காரையும் காட்சிக்கு வைக்க இருக்கிறது. இதில் லித்தியம் ஐயான் பேட்டரி, லெட் ஆசிட் பேட்டரி கொண்ட இரண்டு மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. லித்தியம் ஐயான் பேட்டரி ஒரு சார்ஜில் 160 கி.மீ வரையும், லெட் ஆசிட் பேட்டரி மாடலில் ஒரு சார்ஜில் 80 கி.மீ வரையிலும் பயணிக்க முடியும் என்கிறது மஹிந்திரா - ரேவா! 

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

ஃபோக்ஸ்வாகன்

2013-ம் ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் 'அப்’ காரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இது தவிர, புதிய பீட்டில் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது ஃபோக்ஸ்வாகன் கார்களில் இடம் பிடித்திருக்கும் அத்தனை நவீன வசதிகளும் புதிய பீட்டில் காரில் இருக்கும் என்கிறது ஃபோக்ஸ்வாகன். இதில், 2 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் - இரண்டில் எந்த இன்ஜினை ஃபோக்ஸ்வாகன் பொருத்தப் போகிறது என்பதுதான் சஸ்பென்ஸ்! 

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!
டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

ஜெனரல் மோட்டார்ஸ்

சீனாவின் 'உள்ளிங்’ நிறுவனத்தை வாங்கியிருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ், டெல்லியில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட 'சன்ஷைன்’ எனும் மல்ட்டி யுட்டிலிட்டி வாகனத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. மாருதி ஈக்கோ, டாடா வென்ச்சர் கார்களுடன் போட்டி போட இருக்கிறது 'சன்ஷைன்’! 

பைக்?!

டெல்லிக்கு படையெடுக்கும் கார்கள்!

பைக் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தமுறை பெரிய அறிமுகங்கள் எதுவும் இல்லை. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ் எந்த புது பைக்கையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை. கேடிஎம் பைக்குகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. டிவிஎஸ், ஹோண்டா, ஹீரோ ஆகிய நிறுவனங்களும் சில கான்செப்ட் பைக்குகளை மட்டுமே காட்சிக்கு வைக்க இருக்கின்றன. ஹார்லி டேவிட்சன், டுகாட்டி, டிரையம்ப் ஆகிய சூப்பர் பைக் தயாரிப்பாளர்கள் தங்களது பைக்குகளைக் காட்சிக்கு வைக்க இருக்கிறார்கள்!