Published:Updated:

2012 மோட்டார் விகடன் விருதுகள்

2012 மோட்டார் விகடன் விருதுகள்

2012 மோட்டார் விகடன் விருதுகள்
2012 மோட்டார் விகடன் விருதுகள்

ந்திய ஆட்டோமொபைல் துறைக்கு, கடந்த ஆண்டில் சாதனைகளைவிட சோதனைகள்தான் அதிகம்! பொருளாதாரப் பின்னடைவு, வட்டி விகித உயர்வு, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட இயற்கைச் சீரழிவுகளால் உற்பத்தி சீர்குலைந்து, இங்கே விற்பனையைப் பாதித்தது என கடந்த ஆண்டை சோதனைக் காலம் என்று வர்ணிக்கலாம். அத்தனையையும் தாண்டி, விற்பனை ஏணியில் விறுவிறுவென ஏறிய வாகனங்கள்தான் 2012-ம் ஆண்டின் சிறந்த கார், பைக் விருதுகளுக்குத் தேர்வாகி இருக்கின்றன. 'மோட்டார் விகடன்’ வாசகர்கள் எழுதி அனுப்பிய கூப்பன்கள், மோட்டார் விகடன் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் நடத்தப்பட்ட சர்வே, மோட்டார் விகடன் நடுவர்களின் சாய்ஸ் என அனைத்துமே ஒன்றுபட்டதாக இருந்ததால், மாற்றுக் கருத்துகளுக்கு இடம் இல்லாமல், இந்த விருதுப் பட்டியல் தயாராகி இருக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 விருதுகளைச் சரியாகக் கணித்து, பரிசு பெறும் வாசகர்கள்!

பிரசாந்த் ஃபெர்னாண்டோ, தூத்துக்குடி.
பி.பரமேஸ்வரன், கோவை.
ஏ.மயில்சாமி, சூலூர்.
கே.ஹரிராம், திருப்பூர்.
எஸ்.ரமேஷ்குமார், சென்னை.

2012 மோட்டார் விகடன் விருதுகள்

ஹூண்டாய் இயான், 800 சிசி திறன் கொண்ட சின்ன கார் என்றாலும், இதன் விலை அதிகம் என்பதோடு, பின் பக்க இருக்கைகளில் இட வசதி குறைவு என்பதால், சிறந்த காருக்கான போட்டியில் இருந்து விலகி நிற்கிறது இயான். ஹோண்டா பிரியோவின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை என்பதோடு, சிறப்பம்சங்களும் குறைவு. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எட்டியோஸ் லிவா, டொயோட்டாவின் தரத்தை நிரூபிக்கும் வகையில் இல்லாதது ஏமாற்றமே! காரின் சைஸுடன் ஒப்பிடும்போது, பீட் டீசலின் விலை ரொம்ப அதிகம். விலை, பர்ஃபாமென்ஸ், மைலேஜ், குறைந்த பராமரிப்புச் செலவு என மக்கள் காராக வெற்றி பெறுகிறது மாருதி ஸ்விஃப்ட் நியூ!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

சின்ன கார்களைவிட கடந்த ஆண்டு 'மிட் சைஸ்’ கார்களின் அறிமுகம் அதிகம். நிஸான் சன்னி, ரெனோ ஃப்ளூயன்ஸ், ஃபோர்டு ஃபியஸ்டா, ஹூண்டாய் வெர்னா ஃப்ளூயிடிக், மாருதி கியாஷி, ஸ்கோடா ரேபிட் என 6 லட்சத்தில் இருந்து 18 லட்சம் ரூபாய் வரை வரிசை கட்டி கார்கள் அறிமுகமாகின. இதில் சிறந்த டிசைன், அதிக சிறப்பம்சங்கள், பெட்ரோல் - டீசல் என இரண்டிலும் இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் என மக்களின் மனங்களை வென்ற கார் ஹூண்டாய் வெர்னா ஃப்ளூயிடிக். வாசகர்களாலும், மோட்டார் விகடன் நடுவர்களாலும் சிறந்த மிட் சைஸ் காராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஹூண்டாய் வெர்னா ஃப்ளூயிடிக்!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

ஸ்யூவி மார்க்கெட்டில் கடந்த ஆண்டின் இரண்டு மிகப் பெரிய அறிமுகங்கள் மஹிந்திரா XUV 500 500 காரும், ஃபோர்ஸ் ஒன் காரும்தான். அதிக இட வசதி, போதுமான பர்ஃபாமென்ஸ், ஏராளமான சிறப்பம்சங்கள் என்பதோடு, மஹிந்திராவின் ஸ்டைலான காராக வந்து அசத்தியிருக்கிறது மஹிந்திரா XUV 500. எஸ்யூவி மார்க்கெட்டில் அறிமுகமான உடனேயே புக்கிங்குகள் குவிய ஆரம்பித்தது இந்த காரின் வெற்றிக்கு ஒரு சான்று! சிறந்த எஸ்யூவி காருக்கான போட்டியில் அசால்ட்டாக பட்டத்தை வெல்கிறது மஹிந்திரா XUV 500.

2012 மோட்டார் விகடன் விருதுகள்

வெளிநாட்டு பைக்குகள் என்றாலும், இந்தப் போட்டியில் களம் இறங்கியிருக்கும் பைக்குகள் அனைத்தும், வெளிநாட்டில் தயாராகி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனையாகும் பைக்குகள். ஹாய்சங் பைக்குகள் பர்ஃபாமென்ஸில் சிறப்பாக இருந்தாலும், பில்டு குவாலிட்டி ரொம்பவும் சுமார்! ஜப்பான் நிறுவனமான கவாஸாகியின் தரத்துக்கு, எந்த வகையிலும் கொரிய பைக்கான ஹாய்சங் தகுதி வாய்ந்தவையாக இல்லை. இதனால், சிறந்த வெளிநாட்டு பைக்காகத் தேர்வு பெறுகிறது கவாஸாகி நின்ஜா 650ஆர்.

2012 மோட்டார் விகடன் விருதுகள்

டந்த ஆண்டு, கார் விற்பனையில் மிகவும் பரபரப்பாக இருந்த நிறுவனம் ஹூண்டாய். ஆட்டோமேட்டிக் சான்டா ஃபீ, வெர்னா ஃப்ளூயிடிக், சின்ன மாற்றங்களுடன் மீண்டும் ஆக்ஸென்ட், சின்ன கார் மார்க்கெட்டில் புத்தம் புது இயான் என தொடர்ந்து கார்களை அறிமுகம் செய்துகொண்டே இருந்தது ஹூண்டாய். மேலும், இந்தியாவில் தொழிற்சாலை துவங்கி 20 லட்சம் கார்களை இங்கே மட்டும் விற்பனை செய்ததோடு, கடந்த ஆண்டு 5 லட்சம் சான்ட்ரோ கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது ஹூண்டாய்!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு கசப்பான ஆண்டு. இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்ததால், புதிய பைக்குகளின் அறிமுகமும் குறைந்தன! ஹோண்டாவிடம் இருந்து பிரிந்து விட்ட ஹீரோ, இனிதான் தன் கணக்கைத் துவங்க வேண்டும். பஜாஜ், டிவிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த ஆண்டு அடக்கியே வாசித்தன. ஹோண்டா பைக்குகளின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ராஜஸ்தான் மற்றும் பெங்களூருவில் புதிய தொழிற்சாலைகளைத் துவக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்து, சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது ஹோண்டா!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

ஹோண்டாவுடன் இருந்து கூட்டணி முறிந்து விட்டது. உடனடியாக புதிய பிராண்டை பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம். அதனால், அசத்தல் விளம்பரங்கள் மூலம் 'ஹீரோ’ எனும் பிராண்டை, குறைந்த காலகட்டத்துக்குள் மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டது 'ஹீரோ மோட்டோ கார்ப்’ நிறுவனத்தின் விளம்பரம்!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

டந்த ஆண்டின் சிறந்த ரேஸ் வீரராக கவனம் ஈர்த்தவர் சென்னையைச் சேர்ந்த ஷியாம் ஷங்கர். கடந்த ஆண்டு மட்டும் சிபிஆர் 250 ரேஸ், யமஹா ஆர்-15 ரேஸ், க்ரூப் டி- 165 சிசி என மூன்று ரேஸ் பிரிவுகளிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்தார் ஷியாம் ஷங்கர். 2005-ம் ஆண்டு முதல் தேசிய ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வரும் 26 வயதான ஷியாம் ஷங்கர், இதுவரை ஐந்து தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார்! 

2012 மோட்டார் விகடன் விருதுகள்

ர்வதேச ரேஸ் போட்டிகளில் இருந்து இந்திய அணிகள் பலவும் ஒதுங்கிக் கொண்ட நிலையில், ஆசிய பைக் ரேஸ் பந்தயத்தில் நமது தேசியக் கொடியை பறக்கவிட்ட ஒரே அணி 'மோட்டோ ரெவ் இந்தியா.’ இந்திய ரேஸ் வீரர்களான கிருஷ்ணன் ரஜினிக்கும், கௌதம் மயில்வாகனனுக்கும் சர்வதேச ரேஸில் கலந்து கொள்ள களம் அமைத்துக் கொடுத்தது இந்த அணி. சர்வதேச ரேஸ் போட்டிகளில் மட்டும் அல்லாது, இந்திய தேசிய பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பல சாம்பியன்களை உருவாக்கியது மோட்டோ ரெவ் இந்தியா அணி!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

கார்கள் வடிவமைக்கும்போது என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுமோ, அவை அத்தனையையும் தோஸ்த்தை வடிவமைக்க அசோக் லேலாண்ட் கையாண்டுள்ளது. அதுதான் எல்சிவி மார்க்கெட்டில் 'தோஸ்த்’தை ஹிட் ஆக்கியிருக்கிறது. கமர்ஷியல் வாகனங்களில் கண்டு கொள்ளாமல் விடப்படும் சொகுசு வசதிகளை, புறக்கணிக்காமல் காருக்குள் இருப்பது போன்ற சொகுசான கேபினை வடிவமைத்திருக்கிறது. அதேபோல், 1500 சிசி திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொடுத்து, பர்ஃபாமென்ஸிலும் மிரட்டியிருக்கும் 'தோஸ்த்’ வாகனம்தான் 2012-ம் ஆண்டின் சிறந்த எல்சிவி!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

 எப்போதுமே மக்களின் மனதை வென்றுவிட்ட காரில், மாற்றங்களை ஏற்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க்! மக்கள் மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே! ஆனால், அதற்கு எந்த இடமும் தராமல் பழைய காரைவிட இன்னும் பல விஷயங்களில் காரைப் பலப்படுத்தி, பழைய காரில் இருந்த நல்ல விஷயங்கள் எதையும் நீக்கிவிடாமல், ஸ்விஃப்ட்டை விற்பனை ஏணியில் விறுவிறுவென வேகம் எடுக்க வைத்திருக்கிறது மாருதி. ஸ்விஃப்ட்டின் வெற்றி, பல கார் தயாரிப்பு நிறுவனங்களில் பாடமாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மோட்டார் விகடனின் வாசகர்களாலும், நடுவர்களாலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லாமல் 2012-ம் ஆண்டின் சிறந்த காராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது மாருதி ஸ்விஃப்ட் நியூ!

2012 மோட்டார் விகடன் விருதுகள்

 இந்தியாவில் இது இளைஞர்களின் காலம். 100 சிசி பைக்குகளைவிட சூப்பர் பைக் ஸ்டைலுடன், வேகமாகப் பறக்கும் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்தால்தான் ஹிட் ஆக முடியும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்! 250 சிசி பைக் மார்க்கெட்டில் தனிக் காட்டு ராஜாவாக இருந்த கவாஸாகி நின்ஜாவுக்குப் போட்டியாக, அதேசமயம் அந்த பைக்கைவிட கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் விலை குறைவாக வந்து இளைஞர்களை ஈர்த்திருக்கிறது ஹோண்டா சிபிஆர் 250ஆர். பர்ஃபாமென்ஸில் நின்ஜாவைவிட சற்றே பின்தங்கியிருக்கிறது ஹோண்டா சிபிஆர் 250ஆர். ஆனால், மைலேஜில் வென்று விடுகிறது. டிவிஎஸ் மேக்ஸ்-4 ஆர், ஹீரோ இம்பல்ஸ், பஜாஜ் பாக்ஸர் 150 என பைக் மார்க்கெட்டில் கடந்த ஆண்டு பெரிய அறிமுகங்கள் எதுவும் இல்லை. இதனால், 2012-ம் ஆண்டின் சிறந்த பைக்காக வாசகர்களாலும், நடுவர்களாலும் அதிக வாக்குகளைப் பெற்று, சிறந்த பைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது ஹோண்டா சிபிஆர் 250ஆர்.