கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

``20 லட்சம் ரூபாயில் புதிய கார் ஒன்றை வாங்க முடிவெடுத்துள்ளேன். எனக்கு ஹூண்டாய் க்ரெட்டா, டொயோட்டா இனோவா க்ரிஸ்டா ஆகிய  கார்கள் பிடித்திருக்கின்றன. இரண்டில் எது சிறந்தது?’’

- செந்தில்நாதன், சென்னை.


``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு மாடல்களும், தத்தனது பிரிவில் சிறந்தவையே. 5 சீட்டர் என்றால் க்ரெட்டாவையும், 7 சீட்டர் என்றால் இனோவா க்ரிஸ்டாவையும் நீங்கள் வாங்கலாம். க்ரெட்டாவின் டாப் வேரியன்ட்டை சுமார் 18 லட்சம் ரூபாயில் வாங்கிவிடலாம். ஆனால், இனோவா க்ரிஸ்டாவின் டாப் வேரியன்ட்டின் விலை 26 லட்சம் ரூபாய்!’’

மோட்டார் கிளினிக்

``எனது பட்ஜெட் 7 லட்சம் ரூபாய். டீசல் கார்தான் வேண்டும். அது சிறப்பான சஸ்பென்ஷன், அதிக மைலேஜ், போதுமான பாதுகாப்பு வசதிகளைக்கொண்டிருப்பது அவசியம். தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.''

- எஸ். பாரதி, திருநெல்வேலி.

``உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யக்கூடிய புதிய காராக, டாடா டியாகோ இருக்கும். இதில் இருப்பது 1.1 லிட்டர் - 3 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான் என்றாலும், டிரைவிங் மோடுகளுடன்கூடிய அந்தச் சிறிய இன்ஜின்தான், போதுமான பர்ஃபாமென்ஸ் - அதிக மைலேஜுக்கு வழிவகுக்கிறது. மேலும், காரின் ஓட்டுதல் தரம் மற்றும் கட்டுமானத் தரம் மிகச்சிறப்பு. உங்கள் பட்ஜெட்டில், பாதுகாப்பு வசதிகளுடன்கூடிய டாப் மாடலையே வாங்கலாம்.''

மோட்டார் கிளினிக்

``நான் எனது தொழில் சார்ந்த தேவைகளுக்காக, 6-8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு கார் வாங்க உள்ளேன். அது 5 சீட்டராகவும், அதிக மைலேஜ் தருவதாகவும் இருப்பது அவசியம். எந்த காரை வாங்கலாம்?’’

 -எஸ். ராஜா, இமெயில்.

``பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம், 7.5 ரூபாய் மட்டுமே. எனவே, உங்கள் காரை மாதத்துக்கு 1,500 கிமீ-க்கும் அதிகமாகப் பயன்படுத்துவீர்கள் என்றால் டீசல் காரையும், இல்லையென்றால் பெட்ரோல் காரையும் வாங்கலாம். உங்கள் பட்ஜெட்டில், ஸ்விஃப்ட் நல்ல சாய்ஸாக இருக்கும். ஆனால், கார் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதை, டெஸ்ட் டிரைவ் செய்து முடிவெடுங்கள்.’’

மோட்டார் கிளினிக்

``கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹீரோ இக்னைட்டர் பைக்கைப் பயன்படுத்திவருகிறேன். புதிதாக 150சிசி பைக் வாங்க விரும்புகிறேன். அது தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்றவிதமான ஓட்டுதலைக் கொண்டிருப்பது அவசியம் (வசதியான சீட் - ஹேண்டில்பார் - சஸ்பென்ஷன்). ஹோண்டா யூனிகார்ன் 150 அல்லது பஜாஜ் பல்ஸர் 150 ஆகியவற்றில் எதை வாங்கலாம்?’’

- லக்ஷ்மணன், சென்னை.

``நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மாடல்களுமே, 150சிசி பிரிவின் பழைய மாடல்கள்தான். இருப்பினும், மக்களின் அபிமானத்தைத் தொடர்ந்து பெற்றுவருகின்றன. தற்போது 125சிசி பைக்கிலிருந்து 150சிசிக்கு மாறுபவர்களை மனதில் வைத்து, `பல்ஸர் 150 கிளாஸிக்’ எனும் மாடலைக் களமிறக்கியிருக்கிறது பஜாஜ். இது ஹோண்டா யூனிகார்ன் பைக்கைவிடக் குறைவான விலையில் கிடைக்கிறது. இத்துடன், அதிக பவர், வசதி, மைலேஜ் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.’’

மோட்டார் கிளினிக்

``நான் கடந்த 11 ஆண்டுகளாக `பஜாஜ் பல்ஸர் 150’ பைக்கைப் பயன்படுத்திவருகிறேன். இதில் ஏ.பி.எஸ் அமைப்பைப் பொருத்த முடியுமா? எவ்வளவு ரூபாய் செலவாகும்?

- பாஸ்கரன், இமெயில்.

``தற்போது கார் மற்றும் பைக்குகளில் இருக்கும் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் வகையைச் சேர்ந்தது. அதாவது, ஒவ்வொரு வீலிலும் ஒரு Wheel Speed சென்ஸார் இருக்கும். அது வீல்களின் வேகத்தைக் கவனித்து, அதற்கேற்ப பிரேக்கிங் திறனை அளிக்கும். பைக்குகளில் இருக்கும் ஏபிஎஸ் அமைப்பில், Rear Wheel Lift-off Protection வசதியும் கூடுதலாக இருக்கும். வெளி மார்க்கெட்டில் ஏபிஎஸ் கிடைக்கிறது என்றாலும், அது ஹைட்ராலிக் வகையைச் சேர்ந்தது. இது ரைடர், பிரேக் லிவரில் கொடுக்கும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீராகச் செலுத்த உதவும் கருவி, அவ்வளவே! இது ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒருவேளை வேறு பைக்கில் இருக்கும் ஏபிஎஸ் அமைப்பை உங்கள் பைக்கில் பொருத்த முடிவுசெய்தால், அதற்கு அதிக காலம் மற்றும் பணமுடன், தேர்ந்த மெக்கானிக் ஒருவரும் தேவைப்படுவர்.’’

மோட்டார் கிளினிக்

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com