Published:Updated:

வெட்டலின் வணக்கம்!

வெட்டலின் வணக்கம்!

>>சார்லஸ்

 ##~##

லர்ஃபுல் திருவிழாவாக டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது FIM விருது வழங்கும் விழா! 2011-ம் ஆண்டின் ஃபார்முலா-1 ரேஸில் சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்ட்டியன் வெட்டல், வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற செபாஸ்ட்டியன் லோப், வேர்ல்டு டூரிங் பட்டம் வென்றவர்கள் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து பல ஆண்டுகளாக மொனாக்கோவில் நடைபெறும் இந்த விழா, முதன் முறையாக இடம் மாறி இந்தியாவுக்கு வந்தது. டெல்லி அருகே குர்காவுனில் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற இந்தப் பரிசளிப்பு விழா, இந்திய ஸ்டைலில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் களை கட்டியது! ரேஸ் உடையிலேயே பார்த்து சலித்துப்போன செபாஸ்ட்டியன் வெட்டல், கோட்- சூட் அணிந்தபடி காதலி ஹேனா பிராட்டருடன் அரங்கத்துக்குள் நுழைந்தார். வாசலில் 'கதகளி’ நடனக் கலைஞர் பாரம்பரிய முறையில் வெட்டலுக்கு வணக்கம் வைக்க... கொஞ்சம் 'ஜெர்க்’ ஆனவர், பின்னர் கலகலப்பாகி அந்த கலைஞருடன் சேர்ந்து அனைவருக்கும் வணக்கம் வைத்தார்!

வெட்டலின் வணக்கம்!

சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்ட்டியன் வெட்டல், இரண்டாம் இடம் பிடித்த ஜென்சன் பட்டன், மூன்றாம் இடம் பிடித்த மார்க் வெப்பர் ஆகிய மூன்று பேருக்குமே விருதுகள் வழங்கப்பட்டன. வழக்கமாக, ரேஸ் டிராக்கில் எகிறிக் குதிக்கும் வீரர்கள்... விருது விழா என்பதால், சைலன்ட்டாக சிரித்துக் கொண்டே விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  

வெட்டலின் வணக்கம்!

''இந்திய ரேஸில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதோடு, தகுதிச் சுற்றில் முதலிடம், ஒவ்வொரு லேப்பின் முடிவிலும் தொடர்ந்து முதலிடம், ஒரு லேப்பை குறைந்த நேரத்தில் கடந்தது என எல்லா சாதனைகளையுமே படைத்தேன். நான் பல சாதனைகளைப் படைத்த இந்தியாவிலேயே விருதுகள் வாங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார் செபாஸ்ட்டியன் வெட்டல்.

வெட்டலின் வணக்கம்!

இதற்கிடையே இந்த ஆண்டு 'ஃபோர்ஸ் சஹாரா இந்தியா’ அணியைத் தவிர ஃபார்முலா-1 அணிகளுக்கான வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டார்கள். இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஃபார்முலா-1 ரேஸில் லோட்டஸ் ரெனோ அணியின் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார் முன்னாள் சாம்பியன் கிமி ராய்க்கோனன்.

'ஹிஸ்பானியா’ அணியில் நரேன் கார்த்திகேயன் அல்லது கரூண் சந்தோக்குக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே!