கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - பைக்/கார்தமிழ்

ஆக்சஸரீஸ்

டிஜிட்டல் டயர் இன்ஃப்ளேட்டர் (Tyre Inflator Digital)

வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காக, டயர்களில் காற்று நிரப்பாமலே காலம் தள்ளுபவர் பலர். ஒவ்வொரு டயருக்கும் காற்றை நிரப்புவதற்குள் டென்ஷனில் கொதிப்பார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில் டயர் இன்ஃப்ளேட்டர்கள்தான் நம் நேரத்தை மிச்சப்படுத்தும். டியூப் மெளத்தைச் செருகி காலால் காற்றடிப்பது, மேனுவல் டயர் இன்ஃப்ளேட்டர்கள். இதில் கால்வலியோடு ஒரு டயருக்குக் காற்றடிக்க, குறைந்தது 5 நிமிடங்களாவது ஆகும். இதற்கும் எளிய ஒரு வழி வந்துவிட்டது. அதுதான், டிஜிட்டல் பவர் ஸாக்கெட் டயர் இன்ஃப்ளேட்டர்். அதாவது, உங்கள் காரில் மொபைல்போனை சார்ஜ்செய்யும் 12V பவர் ஸாக்கெட்டில் இதன் பிளக்கைச் செருகி, காரை ஆன்செய்துவிட்டால் போதும். பட்டனை ஆன் செய்து சட்டென வேலையை முடிக்கலாம். டிஜிட்டல் என்பதால், அளவும் துல்லியமாக இருக்கும். மெளத்தைச் செருகினால் டயரில் ஏற்கெனவே இருக்கும் பிரஷர், டிஸ்ப்ளேவில் தெரியும். எவ்வளவு வேண்டுமோ, அதை செட் செய்து காற்றை நிரப்பிக்கொள்ளலாம். நான்கு டயர்களுக்கும் சேர்த்து ஐந்தே நிமிடத்தில் வேலை மிக எளிதாக முடிகிறது. டயர் பஞ்சராகும் நேரத்தில், இது ஆபத்பாந்தவனாகவும் மாறுகிறது. காற்றை நிரப்பிக்கொண்டு பஞ்சர் கடைக்குப் போய் பஞ்சர் போட்டுக்கொள்ளலாம்.

ஆக்சஸரீஸ்

பைக் சன் கனோப்பி அம்ப்ரெல்லா (Sun Canopy Roof Umbrella)

இதன் பெயர், ‘ஸ்கூட்டர் சன் கனோப்பி அம்ப்ரெல்லா’. இது விண்ட் புரூஃப், வாட்டர் புரூஃப், சன் புரூஃப் என எல்லா புரூஃபையும்கொண்ட பாதுகாப்பு கவர். வெயில், மழையில் ஜாலியாக பைக் ஓட்டுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. இந்த கவரை பைக்குக்கும் நமக்கும் சேர்த்து ஃபிட் செய்துவிடவேண்டியதுதான்.  ‘தண்ணீர் உள்ளே இறங்காது. எவ்வளவு காற்று அடித்தாலும் ஸ்டேபிளாக நிற்கும். வெயில் சூடும் நம் உடம்புக்கு இறங்காது’ என்கிறது இதைக் கண்டுபிடித்த பிலிப்பைன்ஸ் நிறுவனம். ரியர்வியூ மிரர் - ரியர் சீட்டில் இதை ஃபிட் செய்துவிட்டு, குடைபோல விரித்துவிட்டு பைக்கில் பறக்கவேண்டியதுதான். குடைக்குள் மழையோ வெயிலோ அடிக்காமல் ஜாலியான பயணம் ரெடி. ஆன்லைனில் இதை  நீங்கள் ஆர்டர் செய்யலாம். ஆனால், ஆடி மாதக் காற்றுக்கு எல்லாம் இது தாங்காது. காற்று ஓட்டுகிறவரைக் கீழே தள்ளும் அபாயமும் உண்டு. வீட்டைச் சுற்றி இரண்டு தெருவுக்கு மட்டும் சும்மா ஒரு ஷோவுக்காக வேண்டுமானால் இதை வாங்கலாம்.

ஆக்சஸரீஸ்

LED ஸ்கஃப் பிளேட் (LED Scuff Plate)

கதவுகளில் பொருத்தப்படும் ஸ்கஃப் பிளேட்கள், காரை செம ஸ்டைலிஷாக மாற்றிவிடும். கார் கதவுகளின் கீழே வைக்கப்படும் இந்த வகை பிளேட்டுகள், கதவிலும் காரிலும் ஏற்படும் ஸ்கிராட்ச்களையும் தடுக்கும். அதிலும் LED ஸ்கஃப் பிளேட்டுகள், காரின் பொலிவையே மாற்றிவிடும். LED ஸ்கஃப் பிளேட்டுகளை உங்கள் காரின் பெயருடன், விரும்பிய பேக்லிட் கலரில் இரவிலும் பகலிலும் ஜொலிப்பதுபோல் பொருத்திக்கொள்ளலாம்.