கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

ஒப்பீடு - பர்க்மேன் vs போட்டியாளர்கள்ரஞ்சித் ரூஸோ

ஸ்கூட்டர்களில், பர்ஃபாமென்ஸில் தெறிக்கவிடும் மெகா சைஸ் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இதை மேக்ஸி ஸ்கூட்டர் செக்மென்ட் என்பார்கள். நெடுந்தூரப் பயணங்களுக்கான ஸ்கூட்டர்கள் இவை. இந்த ஐரோப்பிய ட்ரெண்டை இப்போது இந்தியாவிலும் தொடங்கிவைத்திருக்கிறது சுஸூகி. பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற பெயரில் 125சிசி மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது சுஸூகி. இந்த மேக்ஸி ஸ்கூட்டர், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா கிராஸியா, ஏப்ரில்லா SR125, சுஸூகி ஆக்ஸஸ் ஆகிய ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது... எப்படி இருக்கிறது?

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

டிசைன்

தனது பெரிய அண்ணன் பர்க்மேன் 600 ஸ்கூட்டரில் அடித்த ஜெராக்ஸ்தான் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125. முன்பக்க பெரிய ஏப்ரான், முகத்தில் காற்று அறையாமல் தடுக்கும் விண்ட் ஸ்கிரீன், சொகுசான அகலமான இருக்கை ஆகியவை ஸ்கூட்டருக்கு பிரமாண்டமான தோற்றத்தைத் தருகின்றன.

டிவிஎஸ் என்டார்க் இளைஞர்கள் வாங்கவேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. ஸ்கூட்டரின் ஏப்ரானில் இருந்து பின்பக்கம் இருக்கும் ஆஃப்டர் பர்னர் டிசைன் வரை, ஸ்போர்ட்டியாக ஆங்காங்கே வளைவு நெளிவுகளுடன் செதுக்கி இருக்கிறார்கள். பெண்களுக்கு வெஸ்பா என்றால், ஆண்களுக்கு ஏப்ரிலியா என SR125-யை அறிமுகப்படுத்தியது பியாஜியோ. ஸ்கூட்டரின் உயரமும், ஷார்ப்பான டிசைனும், முன்பக்கம் ஸ்கூட்டரின் மூக்கு மட்டும் தனியாக நீண்டு இருப்பதும் SR125 ஸ்கூட்டரை செம ஸ்போர்ட்டியாகக் காட்டுகிறது. 18 - 23 வயது இளைஞர்களுக்கு மட்டுமே பிடிக்கும் இந்த  SR125.

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

ஹோண்டாவின் வழி, வேறு வழி. டியோவின் டிசைனை இன்னும் ஸ்போர்ட்டியாக்கிக் கொடுத்துள்ளது கிராஸியாவில். எங்கு எதை வைக்கவேண்டும் என்று செதுக்கியதுபோல கிராஸியாவின் பாடி பேனல்கள் பக்கா. இளம் தலைமுறை மட்டுமல்ல; துடிப்பான குடும்பஸ்தர்களுக்கும் பிடிக்கும் டிசைனில் இருக்கிறது கிராஸியா.

மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது, ‘எனக்குத் தனி ரசிகர் கூட்டமே உண்டு’ எனத் தனியாக நிற்கிறது ஆக்ஸஸ். சாதாரண ஃபேமிலி ஸ்கூட்டர் டிசைன்தான் என்றாலும், செவ்வகத்தை நீட்டிச் செய்த ஹெட்லைட்டும், வட்டவடிவ க்ரோம் மிரர்களும் ஆக்ஸஸுக்கு வின்டேஜ் லுக் தருகின்றன. ஆக்ஸஸ் வின்டேஜ் விரும்பிகளின் டிசைன்.

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

வசதிகள்

பர்க்மேன் ஸ்கூட்டரை வசதிகளால் நிரப்பியுள்ளது சுஸூகி. ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், 4-in-1 கீ ஸ்லாட், 12 V சார்ஜிங் பாயின்ட், LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் போன்ற பிரீமியம் வசதிகள் உண்டு. 21.5 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ், பொருட்கள் வைத்துக்கொள்ள க்ளோவ் பாக்ஸ், சின்ன கப்பிஹோல் ஆகியவையும் உள்ளன.

ஸ்கூட்டர்களிலேயே அதிக வசதிகளைக்கொண்டிருக்கும் ஸ்கூட்டர் என்டார்க். ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், புளூடூத் நேவிகேஷன், LED டெயில் லைட், இன்ஜின் கில் சுவிட்ச், 22 லிட்டர் பூட் ஸ்பேஸ், பூட் லைட், USB சார்ஜர், LED DRL என பல வசதிகள் உள்ளன.. முன்பக்கம் க்ளோவ் பாக்ஸ், ப்ரீஃப்கேஸ் போன்றவை இல்லை.

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

SR125 ஸ்கூட்டரில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல்தான். LED இல்லை. வசதிகள் என்று சொல்வதற்கும் லிஸ்ட்டில் பெரிதாக எதுவும் இல்லை.

ஆக்ஸஸ் 125-யும் இதே போலத்தான். அனலாக் ஸ்பீடோ மீட்டரில் ஃபூயல் கேஜ் மற்றும் ஓடோ மீட்டருக்கு மட்டும் தனி டிஜிட்டல் டிஸ்ப்ளே இருக்கிறது. ஆக்ஸஸில் முன்பக்கம் கிளவுஸ், மொபைல் போன்றவற்றை வைக்க கப்பிஹோலும், 12V சார்ஜிங் சாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 21.8 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் இருக்கிறது. நீளமான சீட் என்பதால் இரண்டு பேர்  வசதியாக உட்கார்ந்த பிறகும் இன்னும் இடம் இருக்கிறது. 

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

LED ஹெட்லைட்டுடன் வந்த முதல் இந்திய ஸ்கூட்டர் கிராஸியாதான். டேக்கோ மீட்டருடன் வரும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எக்கோ ஸ்பீடு இண்டிகேட்டர், க்ளோவ் பாக்ஸ் மற்றும் சார்ஜர், பட்டனைத் தட்டி சீட்டைத் திறக்கும் வசதி என கிராஸியாவும் ட்ரெண்டுக்கு ஏற்ற வசதிகளைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அண்டர் சீட் ஸ்டோரேஜ் 18 லிட்டர்தான்.

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

பர்ஃபாமென்ஸ்

பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இன்னும் ரோடு டெஸ்டுக்கு வரவில்லை. அதனால், அதிக பவர் மற்றும் குறைந்த எடை இருக்கும் ஸ்கூட்டரில்  பர்ஃபாமென்ஸ் அதிகம் இருக்கும் என்கிற பழைய ஃபார்முலாவை வைத்து பர்ஃபாமென்ஸைக் கணக்கிடுவோம்.  பவர் குறைவான ஸ்கூட்டராக இருப்பது ஆக்ஸஸ்தான். ஆனால், இதன் எடை 101 கிலோதான் என்பதால் 86.1 hp/tonne பவர் எடை விகிதத்தைத் தருகிறது. இதற்கு அடுத்தபடியாக இருப்பது டிவிஎஸ் என்டார்க், 81 hp/tonne தருகிறது. பர்க்மேன் ஸ்ட்ரீட்டுக்கும் என்டார்க்குக்கும் வெறும் 0.5 hp தான் வித்தியாசம். பர்க்மேன் 80.5 hp/tonne கொடுக்கிறது. கிராஸியாவோ 79.4 hp/tonne கொடுக்கிறது. அதிக பவர் இருந்தாலும், அதிக எடையால் வெறும் 78 hp/tonne பவர்-எடை விகிதத்தை மட்டுமே தருகிறது  SR125. பர்ஃபாமென்ஸை சாலையில் டெஸ்ட் செய்து பார்த்தால், எந்த ஸ்கூட்டர் வேகமானது என்று வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.

புது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்?

பர்க்மேன் ஸ்ட்ரீட் வாங்கலாமா?

பர்க்மேன் என்பது ஒரு மாடல் இல்லை அது ஒரு குடும்பம். பர்க்மேன் குடும்பத்தில் ஏற்கெனவே இருக்கும் 200, 250, 400 மற்றும் 600சிசி ஸ்கூட்டர்களுக்கு இடையே இப்போது 125சிசி-யும் இணைந்துவிட்டது. பர்க்மேன் என்ற பெயரைச் சுமந்தாலும், இந்தப் பெரிய உருவத்துக்குள் இருப்பது என்னவோ ஆக்ஸஸ் இன்ஜின்தான். உங்களுக்கு ஆக்ஸஸ் பிடித்திருக்கிறது. ஆனால், இன்னும் அதிக வசதியாகவும், சொகுசாகவும், தனித்த டிசைனில் இருக்கும் ஸ்கூட்டர் வேண்டும் என்று ஆசைப்பட்டால் பர்க்மேனை வாங்கலாம்.